பார்வைகளை எனக்களித்துவிட்டு
வெறும் கண்களை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வான்?
*
எப்பொழுதும் கண்களையேப் பார்க்கிறானே
என்னைக் காதலிக்கிறானா?
கண்ணைக் காதலிக்கிறானா?
*
தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.
*
ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?
*
என்ன சொன்னாலும் தலையாட்டுகிறவனை சீண்டுவதற்காகவே
‘சண்டை போடலாமா?’ என்று கேட்டால்…
‘சண்டையெல்லாம் கூடாது’ என்று சண்டைக்கு வராமல்
அதற்கும் ‘சரி’யென்று தலையாட்டுகிறவனிடம் எப்படி சண்டை போட?
kavithai arumai anna. migavum rasithen
ReplyDeletenatpodu
nivisha
நன்றிங்க நிவிஷா.
ReplyDelete//‘சண்டை போடலாமா?’ என்று கேட்டால்…
ReplyDelete‘சண்டையெல்லாம் கூடாது’ என்று சண்டைக்கு வராமல்
அதற்கும் ‘சரி’யென்று தலையாட்டுகிறவனிடம் எப்படி சண்டை போட?//
அடடா சண்டையே இல்லாமல் காதலா?? ரொம்ப போரடிக்குமே!நன்றாக இருந்தது!
அன்புடன் அருணா
:)) ரசித்தேன் சிரித்தேன்..
ReplyDelete\\ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
ReplyDeleteஎன்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?\\
சூப்பரு ;)
காதல் சொட்டுது !
ReplyDeleteennanga adutha sidela irunthu paakka start panni irukkeengala kaathalai. kalakkunga Arutperungo.
ReplyDeleteகவிதை கலக்கலாய் இருக்குங்க:)
ReplyDeleteகவிதைகள் ரசித்து படிக்கும்படி இருக்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்களுடன்,
தினேஷ்
ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
ReplyDeleteஎன்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?
யாரு கேட்டாங்க???? :)))))
/அடடா சண்டையே இல்லாமல் காதலா?? ரொம்ப போரடிக்குமே!நன்றாக இருந்தது!
ReplyDeleteஅன்புடன் அருணா/
அதெல்லாம் காதலிக்கிறவங்க யோசிக்கட்டும். கவிதையெழுதுறதோட நம்ம வேலை முடிஞ்சது! :) நன்றிங்க அருணா.
/:)) ரசித்தேன் சிரித்தேன்../
ReplyDeleteரசிச்சு சிரிச்சீங்களா? நான் கவுஜையெழுதினா அது ஜோக் மாதிரியாகிடுச்சா :-)))
நன்றிங்க்கா!
/சூப்பரு ;)/
ReplyDeleteநன்றி கோபி!
/காதல் சொட்டுது !/
நன்றி வீரசுந்தர்!
/ennanga adutha sidela irunthu paakka start panni irukkeengala kaathalai. kalakkunga Arutperungo./
ReplyDeleteஆமாங்க. ஒரே மாதிரி எழுதினா எனக்கும் போரடிக்குமே! நன்றிங்க தோழி.
/கவிதை கலக்கலாய் இருக்குங்க:)/
ரொம்ப நன்றிங்க ரசிகன்!
//ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
ReplyDeleteஎன்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?//
:))))
முத்தக்கடன் மிக அருமை அருள் !
:))
super pulavare!!!
ReplyDelete/கவிதைகள் ரசித்து படிக்கும்படி இருக்கிறது...
ReplyDeleteவாழ்த்துக்களுடன்,
தினேஷ்/
வாழ்த்துகளுக்கு நன்றிங்க தினேஷ்!
/ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
ReplyDeleteஎன்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?
யாரு கேட்டாங்க???? :)))))/
யாரும் இல்ல கோபால். அதான் வருத்தமா இருக்கு ;-)))
/:))))
ReplyDeleteமுத்தக்கடன் மிக அருமை அருள் !
:))/
முத்தம்னு ஒரு சத்தம் கேட்டதும் முத்தக்கவிஞர் ஓடிவந்துட்டார் :) நன்றிங்க நவீன்.
/super pulavare!!!/
ReplyDeleteநன்றிங்க மரகதவள்ளி.
அழகான கவிதை...மிகவும் ரசித்தேன்!!
ReplyDelete\ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?\\
முத்த கடன்...மொத்தமாய் அழகு!
\\மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.\\
சூப்பரான வரிகள் இவை:))
பாஸ்!
ReplyDeleteசெய்தியோடையை முழுமையாக்கியிருப்பதற்கு நன்றி!
மற்றபடி கவிதைகள் எல்லாம் பட்டாசா இருக்கு! அதுவும் அந்த "சண்டை போட வா" கவிதை (முந்தைய பதிவில்) அமர்க்களம்! வழ்த்துக்கள்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
/முத்த கடன்...மொத்தமாய் அழகு!
ReplyDeleteசூப்பரான வரிகள் இவை:))/
நன்றிகள் ப்ரவீனா!
/பாஸ்!
ReplyDeleteசெய்தியோடையை முழுமையாக்கியிருப்பதற்கு நன்றி!/
செய்தியோடையிலேயும் ஓரளவுக்கு விளம்பரங்கள இணைக்க முடியும்னு தெரிஞ்சது. அதனால முழுமையாக்கிட்டேன் :)
/மற்றபடி கவிதைகள் எல்லாம் பட்டாசா இருக்கு! அதுவும் அந்த "சண்டை போட வா" கவிதை (முந்தைய பதிவில்) அமர்க்களம்! வழ்த்துக்கள்!
அன்புடன்
வெங்கட்ரமணன்/
நன்றிங்க வெங்கட்ரமணன். அது முந்தைய பதிவு இல்ல. இதே பதிவுதான் :)
i think tis s first of its kind from u (தலைவனுக்கு, தலைவி தூது விடுதல்).
ReplyDeletemy wishes for ur initiative. keep it up.
சூப்பர்ப்!
ReplyDelete//
ReplyDeleteVeerasundar said...
காதல் சொட்டுது !
//
அருள் கீழ ஒரு பக்கிட்டு வெச்சி பிடிங்க!!!!!!!!!
//
ReplyDeleteஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?
//
எனி ஹெல்ப் ரெகொயர்ட்????
/i think tis s first of its kind from u (தலைவனுக்கு, தலைவி தூது விடுதல்).
ReplyDeletemy wishes for ur initiative. keep it up./
காதல் கூடம் பதிவுகளில் இரண்டு கவிதைகள் வரும். ஒன்று தலைவன் சொல்லுவது போல. மற்றொன்று தலைவி சொல்லுவது போல. முழுவதுமாய் இப்படி எழுதியது இதுதான் முதல்முறை. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க செந்தில்மோகன்.
/சூப்பர்ப்!/
ReplyDeleteநன்றிங்க சிவா.
/அருள் கீழ ஒரு பக்கிட்டு வெச்சி பிடிங்க!!!!!!!!!/
இதயத்ததான பக்கெட்டுனு சொல்றீங்க. அது காலியாவேதான் இருக்கு :)
/எனி ஹெல்ப் ரெகொயர்ட்????/
எனக்கு எதுவும் வேணாம் சிவா. உங்க வீட்ல சொல்லி சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க ;-)
//
ReplyDeleteஅருட்பெருங்கோ said...
/எனி ஹெல்ப் ரெகொயர்ட்????/
எனக்கு எதுவும் வேணாம் சிவா. உங்க வீட்ல சொல்லி சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க ;-)
/
யாருக்கோ நான் சொன்னது எனக்கு ரிவர்ஸ் அடிக்கிதே!!!
உங்களுக்குதான் சொன்னேனா இல்ல நவீன் ப்ரகாஷ்க்கான்னு ஞாபகம் இல்லை!!
சிவா, இப்படிதான் எல்லாரையும் கலாய்ச்சிட்டு இருக்கீங்களா?
ReplyDeleteஎத்தன பேருப்பா கெளம்பியிருக்கீங்க? :)