Monday, March 03, 2008

எழுதுவதையும் வாசிப்பதையும் நிறுத்தி..

கடலினும் ஆழமானக் காதலுடன்
கடற்கரையில் காத்திருக்கத் துவங்குகிறாள் காதலியொருத்தி.

அவள் பார்த்தால் நெருங்குவதும் முறைத்தால் விலகுவதுமாய்
அலைந்து கொண்டிருந்தது கடல்.

நிலையாக நின்ற பாதத்தை நிலம் முத்தமிடத் துவங்கவும்
அங்குமிங்கும் நடக்கத் துவங்குகிறாள்.

நடக்கும் பாதம் உண்டாக்கிய காதல் ஓவியங்களை
கடலுக்குக் கடத்துறது அவளுக்குத் தெரியாமல் வந்த அலை.

காற்றுக்கும் யாரோ தூதனுப்ப தென்றல் உடையில் அதுவும் வந்து விட
தேவதையின் சிறகென தென்றலில் பறக்கும் துப்பட்டாவை அவள் இழுத்து நிறுத்தும் வேளையில்
தேவதைகள் ஏமாந்து போகின்றன.

ஒளிர்வதற்கு போட்டிவந்ததும் சூரியன் ஒளிந்துகொள்ள
உலகத்தின் ஒளிக்கு நிலவை அழைப்பதா இவளே போதுமா என்று குழம்புகிறது வானம்.

இவையெதனையும் கண்டுகொள்ளாமல்
எந்த கணத்திலும் பதுங்குதல் பாய்தல் என இரண்டுக்கும் தயாரான பார்வையை
கண்களில் ஒளித்துக்கொண்டு காதலனை மட்டுமே தேடுகின்றன அவள் கண்கள்.

தொலைவில் வரும் காதலன் கண்களைக் கண்டதும்
கண்களால் வல்லின சண்டையொன்று முடித்தவள்,
நெருங்கியதும் காற்றுக்கும் வலிக்காமல்
மெல்லின மொழியொன்றில் சொற்களை உச்சரிக்கத் துவங்குகிறாள்.

இப்பொழுது
எழுதுவதையும் வாசிப்பதையும் நிறுத்தி,
இமைகளை மூடிக்கொண்டால்…
காதலி தெரிகிறாள்!

14 comments:

  1. அருள்,

    உங்க பதிவுகளை தொடர்ந்து படிச்சா, நானும் காதல்ல விழுந்திருவேன் போலிருக்கு.

    ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  2. \\தொலைவில் வரும் காதலன் கண்களைக் கண்டதும்
    கண்களால் வல்லின சண்டையொன்று முடித்தவள்,
    நெருங்கியதும் காற்றுக்கும் வலிக்காமல்
    மெல்லின மொழியொன்றில் சொற்களை உச்சரிக்கத் துவங்குகிறாள்.\

    காதலியின் 'காத்திருப்பின்' கோபத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்:))


    \\நடக்கும் பாதம் உண்டாக்கிய காதல் ஓவியங்களை
    கடலுக்குக் கடத்துறது அவளுக்குத் தெரியாமல் வந்த அலை.\\

    அவளது பாதத்தடஙக்ள் ஓவியமா???? அழகான கற்பனை!!

    ReplyDelete
  3. //அவள் பார்த்தால் நெருங்குவதும் முறைத்தால் விலகுவதுமாய்
    அலைந்து கொண்டிருந்தது கடல். //

    சிரிக்கத் தூண்டும் நல்ல கற்பனை


    //ஒளிர்வதற்கு போட்டிவந்ததும் சூரியன் ஒளிந்துகொள்ள
    உலகத்தின் ஒளிக்கு நிலவை அழைப்பதா இவளே போதுமா என்று குழம்புகிறது
    வானம். //

    மிகவும் ரசித்தேன்

    //தொலைவில் வரும் காதலன் கண்களைக் கண்டதும்
    கண்களால் வல்லின சண்டையொன்று முடித்தவள்,
    நெருங்கியதும் காற்றுக்கும் வலிக்காமல்
    மெல்லின மொழியொன்றில் சொற்களை உச்சரிக்கத் துவங்குகிறாள்.//

    "கண்களால் வல்லின சண்டை , காற்றுக்கும் வலிக்காத
    மெல்லின மொழி " இரண்டு வேறுபாடான சொல்லை மிகவும் அருமையாக கவிதை ஆக்கி இருக்கிறீர்கள்!!!!!!!

    அன்புடன்
    குகன்

    ReplyDelete
  4. /உங்க பதிவுகளை தொடர்ந்து படிச்சா, நானும் காதல்ல விழுந்திருவேன் போலிருக்கு.

    ரொம்ப நல்லாருக்கு./

    :) கருத்துக்கு நன்றிங்க ஹாரி.

    ReplyDelete
  5. /காதலியின் 'காத்திருப்பின்' கோபத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்:))

    அவளது பாதத்தடஙக்ள் ஓவியமா???? அழகான கற்பனை!!/

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ப்ரவீனா.

    ReplyDelete
  6. /சிரிக்கத் தூண்டும் நல்ல கற்பனை / :)))

    /மிகவும் ரசித்தேன்

    "கண்களால் வல்லின சண்டை , காற்றுக்கும் வலிக்காத
    மெல்லின மொழி " இரண்டு வேறுபாடான சொல்லை மிகவும் அருமையாக கவிதை ஆக்கி இருக்கிறீர்கள்!!!!!!!
    /

    ரசித்து வாசித்தமைக்கு நன்றிங்க குகன்!

    ReplyDelete
  7. Another best :-)

    >ஒளிர்வதற்கு போட்டிவந்ததும் சூரியன் ஒளிந்துகொள்ள
    >உலகத்தின் ஒளிக்கு நிலவை அழைப்பதா இவளே போதுமா என்று குழம்புகிறது வானம்.

    "உலகத்தின் ஒளிக்கு இன்னொரு நிலவை அழைப்பதா என்று குழம்புகிறது வானம்" - இது இன்னும் நல்லா இருந்து இருக்குமோ?

    ReplyDelete
  8. /Another best :-)/

    நன்றிங்க ப்ரகாஷ்.

    /"உலகத்தின் ஒளிக்கு இன்னொரு நிலவை அழைப்பதா என்று குழம்புகிறது வானம்" - இது இன்னும் நல்லா இருந்து இருக்குமோ?/

    நீர் கவிஞர்!!! :)

    ReplyDelete
  9. //உங்க பதிவுகளை தொடர்ந்து படிச்சா, நானும் காதல்ல விழுந்திருவேன் போலிருக்கு. //

    ;) இதை விட பெரிய அங்கீகாரம் என்ன வேணும்... so repeatu!

    ReplyDelete
  10. ரசித்தேன் மாப்பி ;))


    \\ Dreamzz said...
    //உங்க பதிவுகளை தொடர்ந்து படிச்சா, நானும் காதல்ல விழுந்திருவேன் போலிருக்கு. //

    ;) இதை விட பெரிய அங்கீகாரம் என்ன வேணும்... so repeatu!\\

    ஆகா..நானும் ஒரு ரீப்பிட்டேய் போட்டுகிறேன் ;)

    ReplyDelete
  11. /;) இதை விட பெரிய அங்கீகாரம் என்ன வேணும்... so repeatu!/

    ஆகா நீங்க காதலிக்கிறதுக்கு கூட நான் தான் காரணம்னு சொல்லுவீங்க போல இருக்கே :)

    ReplyDelete
  12. /ரசித்தேன் மாப்பி ;))/

    நன்றி கோபி!


    \;) இதை விட பெரிய அங்கீகாரம் என்ன வேணும்... so repeatu!\\

    ஆகா..நானும் ஒரு ரீப்பிட்டேய் போட்டுகிறேன் ;)/

    நீயுமாப்பா? நல்லா இருங்க :)

    ReplyDelete
  13. நன்றிங்க அன்பின் மொழி!

    ReplyDelete