Showing posts with label நொடிக் கவிதைகள். Show all posts
Showing posts with label நொடிக் கவிதைகள். Show all posts

Friday, July 06, 2007

நொடிக் கவிதைகள் - 4

ஓரு நொடிக்கவிதைகள் - 1

ஓரு நொடிக்கவிதைகள் - 2

ஓரு நொடிக்கவிதைகள் - 3



அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்…
நீ!



பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
உன் கூந்தல் சேர்ந்த
பூவும்…



உன் பெயர்
தென்பட்ட இடமெல்லாம்
தேன்பட்ட இடம்.



நீ பேசும்போது மட்டும்
என் செல்பேசி
செல்சிணுங்கி.



மழை வந்தால்
மழலையாகிறாய்.
நான் மழையாகிறேன்.



செல்லமாய் உன்னிடம் கோபிக்கலாமென்றால்
செல்லத்தை மட்டும் அனுப்பி விட்டு,
கோபம் திரும்பி விடுகிறது.



உன் உதட்டோரம் ஒட்டியிருக்கும்
ஒரு பருக்கைப் போதும்.
என் காதல் பசியாற!



வெட்கத்தோடு
நீ பேசுகையில் புரிகிறது…
தமிழ் செம்மொழிதான்!



உனைக்கண்டதும் தென்றலாய் வருடி,
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறது,
காற்று!



உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது…
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!

நொடிக்கவிதைகள் - 5

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

Friday, February 16, 2007

ஒரு நொடிக் கவிதைகள் - 1


மனதில் பூகம்பம்.
மோதியது,
ஒரு பூக் கம்பம்!

உன் பூவிதழ்.
முத்த
அழைப்பிதழ்!

ஒரு முத்தமிடு.
பயப்படாமல்...
அல்லது
பையப் படாமல்!

ஒரு போர்வை.
உள்ளே
ஒரு போர் வை!

ஏன்
காதலித்தேன்?
என்
காதலி தேன்!

ஏய் அழுகுணி
அழுகையிலும்
அழகு நீ!

திருமணம் மறுத்தாய்.
இரு மனம் அறுத்தாய்.

என் மரணம்
சாதாரணம்.
காதலின் மரணம்
மா ரணம்!

காதலி,
காதல் ஈ.
என்னைக் காதலி!

இதயத்தைக்
கிழித்தாள் ஒரு தையல்!
அவளேப் போடட்டும் 'தையல்'!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.