Friday, February 01, 2008

மரமெல்லாம் மரம் மட்டுமல்ல!




நின்றபடி தென்னை.
நீள்வதும், குறைவதும், மறைவதுமாய்
அலைந்தபடியே அதன் நிழல்.

*
வான்தொடும் பிரயத்தனத்துடன்
வளர்ந்த ஆலஞ்செடி,
மரமானதும் மண்தொடவே விழைகிறது
விழுதுகளால்.

*

கோவிலில் இருப்பது சாமிமரமாம்…
சின்னத்தாயி தூக்குப்போட்டது பேய்மரமாம்…
இரண்டுமே வேம்புதான்!

*

பள்ளிநடுவில்
நிழல் பரப்பும் பெரும்விருட்சம்,
ஆணியால் கீறியவர் பெயரெல்லாம்
அடிமரத்தில் சுமந்து நிற்கிறது.
நட்டவர் பெயரை
எங்கு சுமந்திருக்கும்?

*

“அம்புடன் வருகிறார்கள்; பறந்து செல்”
தன் கிளையில் கூடுகட்டிய பறவையைத் தப்புவித்தது மரம்.
இப்பொழுது கோடரியுடன் வருகிறார்கள்.
மரத்திடம் பறவை என்ன சொல்லும்?

*

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

23 comments:

  1. எல்லாம் மரந்தான்.
    எல்லாமே மறந்தான்.

    ReplyDelete
  2. dear arul,

    good romba nala eruthathu, nanaum romba nala kakuran pathil ila un pathevugal alam oru book podunganu

    ram

    ReplyDelete
  3. மர்க்கவிதைஸ் நல்லா இருக்குது. பட் அரச மரம் இருக்கு. இருக்கா? அது இருக்கு ஆனா அரசி மரம் ஏன் இல்லை? இருக்கு ஆனா இல்லை கன்பீசன் ஆப் இந்தியா :)

    ReplyDelete
  4. இது கவிதையா??என்பது பற்றித் ஆயும் அறிவில்லை.
    ஆனால் உங்கள் ஆழமான பார்வையை ரசித்தேன்.

    ReplyDelete
  5. // பள்ளிநடுவில்
    நிழல் பரப்பும் பெரும்விருட்சம்,
    ஆணியால் கீறியவர் பெயரெல்லாம்
    அடிமரத்தில் சுமந்து நிற்கிறது.
    நட்டவர் பெயரை
    எங்கு சுமந்திருக்கும்? //

    எல்லாமே நல்லா இருக்கு .. மேலே இருக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு!!

    ReplyDelete
  6. நட்சத்திர வாழ்த்துகள் அருள்.

    ReplyDelete
  7. அருமை திரு. அருள்..

    உங்கள் நட்சத்திரப்பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது. தொடருங்கள்..

    ReplyDelete
  8. /நின்றபடி தென்னை.
    நீள்வதும், குறைவதும், மறைவதுமாய்
    அலைந்தபடியே அதன் நிழல்.
    //
    aarambame amarkalam..

    //ஆணியால் கீறியவர் பெயரெல்லாம்
    அடிமரத்தில் சுமந்து நிற்கிறது.
    நட்டவர் பெயரை
    எங்கு சுமந்திருக்கும்?/
    ithu superu!

    ReplyDelete
  9. அருமை..ரசித்தேன் ;))

    \\ஸ்ரீ said...
    மர்க்கவிதைஸ் நல்லா இருக்குது. பட் அரச மரம் இருக்கு. இருக்கா? அது இருக்கு ஆனா அரசி மரம் ஏன் இல்லை? இருக்கு ஆனா இல்லை கன்பீசன் ஆப் இந்தியா :)\\

    ஸ்ரீ என்ன ஆச்சு..இந்த காதல் மாதம் தொடங்கினாலே இந்த கவிஞர்களுக்கு ஒரே கன்பீசன் தான் ;))

    ReplyDelete
  10. கலக்கலாக இருக்கு.

    ReplyDelete
  11. இரண்டுமே வேம்பு தான்

    நட்டவர் பெயரை எங்கு சுமந்திருக்கும்

    மரத்திடம் பறவை என்ன சொல்லும்

    அருமை அருமை - ஆதங்கப் படத்தான் முடியும் - இக்கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடித்தான் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  12. கவிதைகள் மிகவும் அருமை!!!!!

    கடைசி இரண்டு கவிதைகள் ரொம்ப அழகு

    வாழ்த்துகள் அருள்!!!!!

    ReplyDelete
  13. // கோவிலில் இருப்பது சாமிமரமாம்…
    சின்னத்தாயி தூக்குப்போட்டது பேய்மரமாம்…
    இரண்டுமே வேம்புதான்!//

    காதல் கவிதையை படிக்கலாம் என்று வந்தேன் நல்ல சிந்தனை படித்துவிட்டு போகிறேன்...

    தினேஷ்

    ReplyDelete
  14. @ஜேகே,

    நன்றி ஜேகே. ஆனால் இங்கு மரம் என்று குறிப்பிடப்படுவன மரம் மட்டுமல்ல…

    @ராம்,

    நன்றிங்க… அந்த அளவுக்கு இன்னும் எழுதலப்பா!

    @ஸ்ரீ,

    நன்றி மாப்ஸ். அரச மரமும் ஒற்றை அன்றிலா இருக்கலாம் ;-)

    @யோகன்,

    வருகைக்கும், ரசித்தமைக்கும் நன்றிங்க!!!

    @பொன்வண்டு,

    நன்றிங்க பொன்வண்டு!!!

    @ஜெஸிலா,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ஜெஸிலா!

    @கையேடு,

    ரொம்ப நன்றிங்க கையேடு!!!

    @ட்ரீம்ஸ்,

    தொடரும் கருத்துகளுக்கு ரொம்ப நன்றிங்க!!!

    @முத்துலெட்சுமி,

    நன்றிங்க்கா!!!

    @கோபி,

    நன்றி மாப்ஸ். குழப்பத்துக்கு ஏதாவது மருந்திருந்தா ஸ்ரீக்கு சொல்லுங்க :-)

    @செல்லம்மாள் செந்தில் நாதன்,
    நன்றிங்க!!! உங்களுடைய முயற்சிகளும், உதவிகளும் தொடர எனது வாழ்த்துகள்!!!

    @கோவி,
    நன்றிங்க!!!

    @சீனா,
    ஆமாங்க சீனா. மனம் மட்டும் தான் அலைந்து கொண்டிருக்கிறது!

    @எழில்,
    நன்றிங்க எழில்!!!

    @தினேஷ்,
    காதலும் நல்ல சிந்தனை தான் தினேஷ் :-) வருகைக்கு நன்றி!!!

    யாருமே அந்த போட்டோவப் பத்தி கேட்கவேயில்லையே ;-)))

    ReplyDelete
  15. அருமையான சிந்தனைத் துளிகள்.

    ஆசையால் நட்டவர் பெயரை உயிரில் சுமக்கும் மரம்.

    ஆனியால் தொட்டவர் பெயரைக் கட்டையில்தானே சுமக்கிறது. பொருத்தமே.

    எல்லாமே நல்லாயிருந்தது. முந்தி...எழுதுற ஆசைக்கு நீர் ஊத்துன ஆரம்ப காலத்துல இந்த மாதிரி பூக்கவிதையெல்லாம் எழுதுனேன். அது நினைவுக்கு வருது.

    ReplyDelete
  16. /அருமையான சிந்தனைத் துளிகள்./

    நன்றிங்க ராகவன்!

    /ஆசையால் நட்டவர் பெயரை உயிரில் சுமக்கும் மரம்.

    ஆனியால் தொட்டவர் பெயரைக் கட்டையில்தானே சுமக்கிறது./

    மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்!

    /எல்லாமே நல்லாயிருந்தது. முந்தி...எழுதுற ஆசைக்கு நீர் ஊத்துன ஆரம்ப காலத்துல இந்த மாதிரி பூக்கவிதையெல்லாம் எழுதுனேன். அது நினைவுக்கு வருது./

    ம்ம்ம் உங்க வலைப்பூவுல இருக்கா?

    ReplyDelete
  17. நட்சத்திர வாழ்த்துகள்

    ReplyDelete
  18. நன்றிங்க அய்யனார்!

    ReplyDelete
  19. /அட்டகாசம்.. :))/

    நன்றி மாப்ஸ்!!

    ReplyDelete
  20. ரொம்ப அழகான / வித்தியாசமான கவிதைகள் கோ. வாழ்த்துக்கள்

    //யாருமே அந்த போட்டோவப் பத்தி கேட்கவேயில்லையே ;-)))//

    சரி, நான் கேக்குறேன். இத எடுத்த ஒளி ஓவியர் யார் ??? ;-)

    ReplyDelete