“யாருன்னே தெரியல இந்த நம்பர்ல இருந்து மிஸ்டு கால் வந்துட்டே இருக்குடா”
“ஒரு ரூபா காயின்ஸ் இருக்கா?”
“இருக்கு”
“எடுத்துட்டு வா!”
***
“ஹலோ யார் பேசறது?”
“நான் பாரதியார் பேசறேன்”
“யாரு?”
“பாரதியார் தெரியாதா? சரி அங்க திருவள்ளுவர் இருக்காரா?”
“திருவள்ளுவரா?”
“திருவள்ளுவர் இல்லையா? இந்த நம்பர் கொடுத்து கால் பண்ண சொன்னதே அவர்தாங்க…”
“அப்படிலாம் யாரும் இங்க இல்ல…”
“ஹலோ ஹலோ”
கொஞ்ச நேரம் கழித்து…
“ஹலோ யாரு?”
“நான் திருவள்ளுவர் பேசறேன்”
“என்னது?”
“திருவள்ளுவர தெரியலையா? சரி விடுங்க… என்னக் கேட்டு கொஞ்ச நேரம் முன்னாடி பாரதியார் கால் பண்ணாரா?”
“ஹலோ உங்களுக்கு இப்போ என்ன வேணும்?”
“என்ன மீட் பண்ணனும்னு பாரதியார் சொன்னார். நாந்தான் உங்க நம்பர் கொடுத்தேன். மறுபடியும் கால் பண்ணாருன்னா என்ன கி.மு 23 வது வருசத்துல வந்து மீட் பண்ண சொல்றீங்களா? ஹலோ ஹலோ…”
கொஞ்ச நேரம் கழித்து…
“ஹலோ”
“நான் பாரதியார் பேசறேன்…”
“இங்க பாரதியாரும் இல்ல திருவள்ளுவரும் இல்ல போன வைக்கிறியா இல்லையா?”
“ஹலோ… ப்ளீஸ்…ப்ளீஸ்…”
(தொடரும்)
Monday, February 18, 2008
ஹலோ யார் பேசறது? - 2
வகை :
ரணகளம்
Subscribe to:
Post Comments (Atom)
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறிங்க??? தனியா ஏதாவது பயிற்ச்சி எடுத்துட்டு வருவீங்கல?
ReplyDeleteபோன் செஞ்சு, கிரெடிட் கார்ட்ல 42,000 ரூபா பேலன்ஸ் இருக்குன்னா, 'டரியல்' ஆயிட மாட்டாங்க!!??
ReplyDeletesuperu
ReplyDelete\\தொடரும்)\\
ReplyDeleteமாப்பி இதுக்கு ஒரே முடிவே இல்லையா!!!அவ்வ்வ்வ்வவ்வ்வ்
என்னது எம்.ஜி.ஆர் செத்துட்டாரா?
ReplyDelete@கோபால்,
ReplyDeleteஇதெல்லாம் நண்பர்கள்கூட இருக்கும்போது வர்றதுதான். இந்த பாகம் என்னோட நண்பர்கள்ல ஒருத்தனோட கைவரிசை.
@வீரசுந்தர்,
அப்போ எல்லாம் இந்த கிரெடிட்கார்ட் பத்தி எங்களுக்குத் தெரியாமப் போயிடுச்சே சுந்தர் :(
@ட்ரீம்ஸ்,
ReplyDeleteபாதிக்கப்பட்டவர் இதப் படிக்காம இருக்கனும் ;-)
@கோபிநாத்,
நடந்தவரைக்கும் எழுதிட்டா முடிவு வந்துடும். பயப்பட வேணம் :-)
@ஸ்ரீ,
அப்படினு யார் சொன்னது? வதந்திகள நம்பாத…
dear arul,
ReplyDeletecall attun panavaru ana anru kadaicela, solavailla
ram
அருட்பெருங்கோவா பேசறரது?
ReplyDeleteபாரதியாரும் திருவள்ளுவரும்தான் இல்லை.
கம்பராவது இருக்காரா?
நக்கீரன் கூப்பிடுகிறார்ன்னு சொல்லும்
சகாதேவன்
@ராம்,
ReplyDeleteஅவருக்கு என்ன ஆகியிருக்கும் எங்க மேல கோபம் வந்திருக்கும்.
நீங்க எழுதுறது புரிஞ்சிக்க கஷ்டமா இருக்குங்க ராம். தயவு செஞ்சு தமிழ்ல தட்டச்சுங்க.
@சகாதேவன்,
இல்லையே நான் கம்பன் தான் பேசறேன். யாரு நக்கீரரா? நலமா இருக்கீங்களா? :-)
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறிங்க? இதுக்குனு தனியா உக்காந்து யோசிப்பீங்களா???
ReplyDeleteநல்ல கற்பனை
ReplyDeleteஹலோ.. யாரு அருட்பெருங்கோவா? நாந்தான் இளங்கோவடிகள் பேசுறேன். நானும் சீத்தலைச் சாத்தனாரும் ஔவையாரும் இன்னைக்கு ராச்சாப்பாட்டுக்கு ஒங்க வீட்டுக்குத்தான் வர்ரோம். நல்லா சமைச்சி வைங்க. வர்ட்டா... :)
ReplyDelete@நித்யா,
ReplyDeleteஎதுக்கு தனியா உக்காந்து யோசிக்கனும்? நண்பரகளோட சேர்ந்து உக்காந்தே யோசிக்கலாம் :)
@அனானி,
நன்றிங்க.
@இராகவன்,
இளங்கோவடிகளே, நாங்க வீட்ல இப்போ சமைக்க ஆரம்பிச்சது உங்களுக்கு எப்படி தெரிஞ்சது? வாங்க வாங்க சாப்பிடலாம்!!!