கடந்த வாரம் நட்சத்திர வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும் வாழ்த்தியவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஒரு வாரமாய் எனது பதிவுகளை வாசித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள், மடலனுப்பியவர்கள், நேர்மையான விமர்சனம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும்… அழியாத எனது அன்பும், நன்றிகளும்!
ஒரு வாரம் தொடர்ந்து எழுதினால் அயற்சி ஏற்படுமென்பதற்கு மாறாக இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்கிற ஆவல் உண்டாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சிறுகதை எழுதப் பழக வேண்டுமென்கிற எனது ஆசை அதிகப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன். ( எனது மொக்கைகள் கவுஜை வடிவத்தில் மட்டுமல்ல கதை வடிவத்திலும் இனி உங்களை இம்சிக்கும் :) )
அனைவருக்கும் நன்றி.
***
நான் எழுதியப் பதிவுகளில் பிடித்ததொன்றைப் பற்றி பதிவிட அழைத்திருந்தார் எழில்.
எல்லாப் பதிவுகளுமே பிடித்த பதிவுகள்தாமென்றாலும், நான் எழுதிய பிற கவிதைகளின் நடையிலிருந்து மொத்தமாய் மாறுபட்டிருக்கும் இந்தக் கவிதையெனக்கு மிகவும் பிடிக்கும்.
***
இன்று தனது முதல் பிறந்துநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் என் அண்ணன் மகள் மித்ராவுக்கும் இந்தப் பதிவில் எனது வாழ்த்துகள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
இந்த வாரம் உங்களோடு இனிய வாரமாகக் கழிந்தது.
ReplyDeleteகாதற் கவிஞர் என்ற பெயருக்கு ஏற்ற வகையில் காதல் பதிவுகளை நட்சத்திர வாரத்தில் கொடுத்தமை சிறப்பு.
இன்னும் நல்ல பதிவுகளைத் தொடர்ந்து உங்கள் வலைப்பூவில் எதிர்பார்க்கிறோம்.
வாழ்க. வளர்க.
குழந்தை மித்ராவிற்கு எனது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல தமிழ்க் கடவுள் முருகன் அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க. மகிழ்வோடு வாழ்க.
ReplyDeleteமித்ராவுக்கு என்னோட வாழ்த்துக்கள்! நீங்க எப்பவுமே கவிதை நட்சத்திரம்தான்யா!
ReplyDeleteமித்ரா'கிட்டே என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொல்லிருய்யா...
ReplyDelete//நீங்க எப்பவுமே கவிதை நட்சத்திரம்தான்யா!//
விவாஜியின் கருத்துக்கு ரீப்பிட்டேய்.... :)
//ILA(a)இளா said...
ReplyDeleteமித்ராவுக்கு என்னோட வாழ்த்துக்கள்! நீங்க எப்பவுமே கவிதை நட்சத்திரம்தான்யா!///
ரிப்பீட்டேய்
நல்லா இருந்தது வாரம் முழுதும் ... நன்றி .. மண்வாசனையோடு வரும் கதைகள் ரொம்ப பிடிச்சிருக்கு.. இன்னும் நிறைய எழுதுங்க.. மித்ராக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete/கல்மனசு உனக்குன்னு கவிதையில உளிசெஞ்சு,
ReplyDeleteகண்ணாடி செலயப் போல பக்குவமா நா செதுக்க…
கல்லுக்குள்ள உம்மனசோ பூக்காதப் பூப்போல!
தானாப் பூக்குமுன்னு நாம்பாத்துபாத்து நீரூத்த,
பூக்கும்போதே வாடிப்போச்சே, நா செஞ்ச குத்தமென்ன? //
வாவ்! இந்த கவித டாப்பு!
மித்ராக்கு என் சார்பா ஒரு கட்பரீஸ் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!
ReplyDeleteஉங்கள் அண்ணன் மகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
உங்கள் மனது, அதன் காதல், காதல் கவிதை, எழுத்து நடை, நகைச்சுவையுணர்வு, இளமைக் குதூகலாம் எல்லாம் சிறப்பு
அன்புடன் புகாரி
மித்ராவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteMay God bless you Mithra!!
Divya.
குழந்தைக்கு எங்கள் வாழ்த்துகளும், அன்பும் ஆசிகளும்.
ReplyDeleteஅருமையான வாரம் ;)
ReplyDeleteமித்ராவிற்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
\\ILA(a)இளா said...
மித்ராவுக்கு என்னோட வாழ்த்துக்கள்! நீங்க எப்பவுமே கவிதை நட்சத்திரம்தான்யா!\\
ரீப்பிட்டேய்ய்ய்ய்
அருமை மகள் மித்ராவிற்கு அன்பு வாழ்த்துகள். எல்லா நலனும் பெற்று நீடு வாழ எல்லாம் வல்ல இறையின் துணை என்றும் இருக்கும்.
ReplyDeleteநல்ல நட்சத்திரப் பதிவுகளைத் பகிர்ந்தமைக்கு நன்றி. தொடர்க - நல்வாழ்த்துகள்
ReplyDeleteஒரு வாரகாலமாய் அருமையான பதிவுகள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி அருட்பெருங்கோ,
ReplyDeleteகாதலர் தினத்திற்கு பொழியவிருக்கும் கவிதை மழைக்கு இப்போதே என் வாழ்த்துகள் அருள்!
மித்ராவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்துகள்!!!
dear arul
ReplyDeleteconway my birthday wishs
ram
அருட்பெருங்கோ,
ReplyDeleteகாதலாய் அமைந்திருந்தது இந்த வாரம்.
தொடர்ச்சியாய் எழுதுங்கள்.
@ராகவன்,
ReplyDeleteஎனக்கும் இனிய வாரமாகவே கழிந்தது. காதல் பதிவுகளைத் தானே எப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த வாரம் காதலைக் குறைத்துக் கொண்டேன் என்பதுதான் உண்மை :)
வாழ்த்துகளுக்கு அன்பார்ந்த நன்றிகள். உங்கள் வாழ்த்துக்களில் மித்ராவும் வளமுடன், நலமுடன் வாழ்வாள்!
@இளா,
வாழ்த்துகளுக்கு நன்றிங்க இளா! கவுஜை னு கரைக்ட்டா சொல்லுங்க :)
@இராம்,
ReplyDeleteகண்டிப்பா சொல்லிட்றேன்!!! விவாஜி சொன்னதுல பிழையிருக்கு! ;-)
@குசும்பன்,
நன்றிங்க குசும்பன்!!!
@முத்துலெட்சுமி,
ReplyDeleteரொம்ப நன்றிங்க்கா!!! மித்ராகிட்ட சொல்லிட்றேன்…
@ட்ரீம்ஸ்,
நான் எழுதினதுலயே எனக்கு ரொம்ப பிடிச்சது அந்த கவித(?) தான்ப்பா… கேட்பரீசுக்கும் ரொம்ப நன்றிங்க :)
@புகாரி,
ReplyDeleteவாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் எனது நன்றிகள்!!!
@திவ்யா,
அப்படியே அந்த வாழ்த்துகளை மித்ராவுக்கு அனுப்பிட்றேன். நன்றிங்க!!!
@கோபிநாத்,
ReplyDeleteநன்றி கோபி. வாழ்த்து + ரிப்பீட்டு ரெண்டுக்கும் :)
@சீனா,
மித்ராவுக்கும், பதிவுகளுக்குமான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!
@நாடோடி இலக்கியன்,
ReplyDeleteஅறுவையான பதிவுகளாய் அமைந்துவிடாமல் இருந்ததில் மகிழ்ச்சியே :) ஆணி இடி இடிச்சுட்டு இருக்கு கவிதை மழையெல்லாம் வருமான்னுத் தெரியல… மித்ராகிட்ட சொல்லிட்றேன்… நன்றி!!!
@ராம்,
ரொம்ப நன்றிங்க!!! கண்டிப்பா சொல்லிட்றேன்…
@மோகன்தாஸ்,
பதிவுகளை வாசித்தமைக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் மோகன்!!!
மித்ராவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவிடுங்கள் அருள்...
ReplyDeleteஅபெகோ,
ReplyDeleteமித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
@கரூணா,
ReplyDeleteநன்றீ கருணா!!! கண்டிப்பாக உங்கள் வாழ்த்துகளைச் சொல்லி விடுகிறேன்.
@ ஹாரி,
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றீ ஹாரி!
@டெல்பின்,
பரவாயில்ல மேடம். வாழ்த்துகளுக்கு மிக்க நன்றீ!!!
‘அவளை’த்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் ;-)