இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
எப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…
ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
*
நீ பிரிந்தபிறகும் கூட
‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
*
இதயம் லேசாக்கிய உன் நினைவெல்லாம்
இன்று சுமக்க முடியா கனமாய் மாறுவதேன்?
*
உன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்வரை
பிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!
*
முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!
*
காதல் வாரத்தின் ஐந்தாவது பகுதியும் அருமை!
ReplyDeleteநொடிக்கு ஒரு முறை நினைக்குறீங்களா :O. "Exception" வருவதற்கு அது தான் காரணம் மாமே :)
ReplyDeleteKo !! Ungaloda 2 KAVITHAI ANANTHAVIKATAN la vanthirukku... Vazhthukkal...
ReplyDeleteNambi (ursnambi@rediffmail.com)
"இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
ReplyDeleteஎப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு"
"நீ பிரியாமல் இருந்தால்…"
"முட்களை மட்டும்..."
நெஞ்சைத் தொட்டது...
"கோ" வின் கோலங்கள் தொடரட்டும்
//முட்களை மட்டும்
ReplyDeleteபூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!//
என்ன சொல்வது?முட்கள் பூக்குமா என்று கேட்பதைத் தவிர? அருமை!!
அன்புடன் அருணா
//முட்களை மட்டும்
ReplyDeleteபூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!//
ஏனப்பா ஜோகம் திடீர்னு :(
கடைசி கவிதை... டச் செய்துடீங்க ! என்னத்த சொல்ல!
ReplyDelete//நீ பிரிந்தபிறகும் கூட
ReplyDelete‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
//
//முட்களை மட்டும்
பூக்கத் தெரிந்த ரோஜாச்செடி
என் காதல்!//
கலக்கல் மாமே...:)
//*
ReplyDeleteஉன்னை நினைத்துக்கொள்ள மறக்கும்வரை
பிரிந்துவிட்டதாய் சொல்வதெல்லாம் பொய்தான்!//
இது டாப்பு:)
இறுக்கி மூடிய இமைகளுக்குள்ளும்
ReplyDeleteஎப்படியேனும் நுழைந்துவிடுகிறது உன் நினைவு!
*
எல்லா கணங்களும் உன் நினைவுதானென்று
பொய் சொல்லவில்லை. ஆனால்…
ஒரு நொடிக்கு குறைந்தது ஒரு முறையேனும்
உன்னைதான் நினைக்கிறேன்.
Unga kavithai ellame arumai ..eppadithaan ippadi yosikiringa ..matravarkal manasilum irukkum unmayin velippadu ungal kavithai ...vazhthukkal....
//நீ பிரிந்தபிறகும் கூட
ReplyDelete‘நீ பிரியாமல் இருந்தால்…’ எனத் துவங்கி
ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறது இதயம்!
//
அழகான கவிதைக்கு இந்தாங்க ஒரு பூ.
என்ன கடைசியில் முள் குத்திடுச்சு...
--------------குந்தவை-----------
@பிரேம்,
ReplyDeleteநன்றிங்க பிரேம்.
@ஸ்ரீ,
கவுஜைக்கும் ஜாவாவுக்கும் என்ன சம்பந்தம் மாப்ள?
@நம்பி,
ReplyDeleteதகவல் சொன்னதுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க நம்பி.
@கருணா,
நன்றிங்க கருணா. தொடர்கிறேன்.
@அருணா,
ReplyDeleteஎன்ன சொல்வது? ரோஜாவுக்கு பதிலாக முட்கள் மட்டுமே இருக்கின்றன அல்லது பூத்த ரோஜாவும் முள்ளாய்க் குத்துகிறது என்பதில் எதையாவது ஒன்றை சொல்லி சமாளிப்பதைத் தவிர?
நன்றிங்க அருணா.
@சிவா,
ஜொகமா ஆரம்பிச்சு ஜோகமா முடிக்கனும்ங்கறது காதல் கவிதை/கதைகளுக்கு எழுதப்படாத விதி :)
@ட்ரீம்ஸ்,
ReplyDeleteஅது நெறைய பேருக்கு பிடிச்சிருக்கே :-)
@ரசிகன்,
டாப்பான ரசனைக்கு நன்றிங்க ரசிகன்!
@ப்ரேமா,
ReplyDeleteகருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க ப்ரேமா.
@குந்தவை,
வாழ்த்துப்பூவுக்கு நன்றிங்க குந்தவை.
என்னங்க அருட்பெருங்கோ பிப் 15 க்கு சோகக் காதல் கவிதை, பிப் 14 யாராவது முடியாதுனு சொல்லிட்டாங்களா? எப்போதும் போல் கவிதை அருமை வாழ்த்துக்கள். அப்படியே என்னோட பிளாக்குக்கும் வருகை தந்து உங்க கருத்த தெரிவிங்க.
ReplyDelete