Wednesday, February 27, 2008

மரண விளையாட்டு

குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி,
உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.
சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான்.
இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை
என்னைக் கொன்றுவிட்டு
சலனமேயில்லாமல்
என்னருகிலேயே படுத்துறங்குகிறது உன் நினைவு.
மறுபடியும் உயிரூட்டி
மரண விளையாட்டு விளையாட!

*

நம் காதலின்
மிக நீண்ட உரையாடல்
உனது மௌனம்.

*

அழகான கவிதையாய்
நுழைந்தவள்
கனமான கவிதையை
விட்டுச் செல்கிறாய்

*

நீ. நான். காதல்.
முக்கோண விளையாட்டில்
எப்போதும் தோற்கிறோம்
நானும் காதலும்.

*

நாளை முதல்
உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது.

27 comments:

  1. அன்பர் அருட்பெருங்கோ...

    நினைவுகளை நீங்கள் உவமைப்படுத்தி வடித்தெடுத்திருக்கும் பாங்கு மிக மிக அற்புதம். ஆயினும் அது பதுங்கிப் பதுங்கி வருவதே அதன் கொடூர முகத்திற்குச் சான்று.

    அழகிய வரிகளும், வலிகளுமாக பக்கம் விரிவடைகிறது...

    நன்றி

    அன்பு நித்யகுமாரன்

    ReplyDelete
  2. நித்யகுமாரன்,

    பதுங்குதல் கொடூரத்தன்மையில் மட்டுமல்ல பயத்திலும் சில சமயம் நிகழ்கிறது இல்லையா?

    வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  3. pulavare...
    arumaiyaana va(li)rigal...
    vaazhthukkal....

    ReplyDelete
  4. ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது.

    chhaaa chaaaa enna thathuvam..

    thathuvam ental vayathakavillai entu sandaikku vareenga..

    muthaippaai ovvoru kavithaiyilum oru nach...

    ReplyDelete
  5. மாப்பீஸ் கடைசி ரெண்டும் சூப்பரப்பு.

    ReplyDelete
  6. கவிதைகள் நல்லா இருக்கு.

    அருட்பெருங்கோ ! உங்க பதிவுகள் கூகுள் ரீடரில் ஒரு பாரா மட்டுமே தெரிகிறது. முதலில் ஒழுங்காகத் தெரிந்ததே? Feed Settings மாற்றினீர்களா? திரும்பவும் Feed Settings - FULL என்று மாற்றினால கூகுள் ரீடரிலேயே வாசித்துக் கொள்ள முடியும். சீக்கிரம் மாற்றவும். :)

    ReplyDelete
  7. /pulavare... arumaiyaana va(li)rigal...vaazhthukkal..../

    புலவரேவா? அப்போ புலவர்கள என்னனு சொல்லுவீங்க? ;-) வாழ்த்துக்கு நன்றிகள்!

    ReplyDelete
  8. /chhaaa chaaaa enna thathuvam..
    thathuvam ental vayathakavillai entu sandaikku vareenga..
    muthaippaai ovvoru kavithaiyilum oru nach.../

    சரி விடுங்க தத்துவம்னே வச்சுக்குவோம். எதுக்கு சண்ட :)

    ReplyDelete
  9. /மாப்பீஸ் கடைசி ரெண்டும் சூப்பரப்பு./

    நன்றி ஸ்ரீ!

    ReplyDelete
  10. /கவிதைகள் நல்லா இருக்கு./
    நன்றிங்க பொன்வண்டு!

    /அருட்பெருங்கோ ! உங்க பதிவுகள் கூகுள் ரீடரில் ஒரு பாரா மட்டுமே தெரிகிறது. முதலில் ஒழுங்காகத் தெரிந்ததே? Feed Settings மாற்றினீர்களா? திரும்பவும் Feed Settings - FULL என்று மாற்றினால கூகுள் ரீடரிலேயே வாசித்துக் கொள்ள முடியும். சீக்கிரம் மாற்றவும். :)/

    மாற்றப்பட்டுவிட்டது :)

    ReplyDelete
  11. ## உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
    பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.##

    இந்த காதலுக்கு 'குருர காதல்' என்று பெயரிடலாம்....

    அருள் 'மானே, தேனே' காதலை விட்டு
    உக்கிர காதலுக்கு மாறிட்டீங்க!!

    ReplyDelete
  12. //நீ. நான். காதல்.
    முக்கோண விளையாட்டில்
    எப்போதும் தோற்கிறோம்
    நானும் காதலும்.//

    enna aachu kaadhal soga keethama maariduchu :)

    oru naal jeyikka en valthukkal!

    ReplyDelete
  13. முதலும்,கடைசியும் நல்லாயிருக்கு மாப்பி ;)

    ReplyDelete
  14. Ungal kavithai arumai...
    Antha valiyai unara mudinthathu..
    Yendralum antha valiyilum oru sugam parithavippu therigirathu... Aval Oru naal varuval...
    Vande theeruval...
    Yen vazhthukal..

    ReplyDelete
  15. அப்போ புலவர்கள என்னனு சொல்லுவீங்க?

    avarkalai SATHIYAMA NIJA PUZAVARKAL ENPOM

    ReplyDelete
  16. YAENUNGA thaanaa varukira pattatthai vaithukollamal yean
    intha argument..

    ReplyDelete
  17. @மெய் புங்காடன்,

    /இந்த காதலுக்கு 'குருர காதல்' என்று பெயரிடலாம்....

    அருள் 'மானே, தேனே' காதலை விட்டு உக்கிர காதலுக்கு மாறிட்டீங்க!!/

    வித்தியாசமா ஒரு கவிதை எழுத விடமாட்டீங்க போல இருக்கே ;-)

    ReplyDelete
  18. /enna aachu kaadhal soga keethama maariduchu :)
    oru naal jeyikka en valthukkal!/

    ஆகா முடிவே பண்ணிட்டீங்களா ட்ரீம்ஸ்? எல்லா உணர்வையும் கவிதையாக்கிப் பார்க்கலாம்னுதான் இப்படியெல்லாம்!

    ReplyDelete
  19. /முதலும்,கடைசியும் நல்லாயிருக்கு மாப்பி ;)/

    நன்றி கோபி!!

    ReplyDelete
  20. /Ungal kavithai arumai...
    Antha valiyai unara mudinthathu..
    Yendralum antha valiyilum oru sugam parithavippu therigirathu... /

    நன்றிங்க!

    /Aval Oru naal varuval...
    Vande theeruval...
    Yen vazhthukal../

    ஏன் இப்படியெல்லாம் நீங்களா ஒரு முடிவுக்கு வந்துட்றீங்க?

    ReplyDelete
  21. /avarkalai SATHIYAMA NIJA PUZAVARKAL ENPOM/

    புலவர்கள்னாலே பொய் சொல்லுவாங்களே :)

    /YAENUNGA thaanaa varukira pattatthai vaithukollamal yean
    intha argument../

    அதுக்கெல்லாம் தகுதி வேணுமுங்க!

    ReplyDelete
  22. உங்கள் கற்பனையும் அதை பிரதிபலிக்கிற கவிதைகளும் மிகமிக அருமை...

    தினேஷ்

    ReplyDelete
  23. நீ. நான். காதல்.
    முக்கோண விளையாட்டில்
    எப்போதும் தோற்கிறோம்
    நானும் காதலும்

    அருமை :))))

    ReplyDelete
  24. நண்பர் அருட்பெருங்கோ அவர்களுக்கு,
    நெடு நாட்கள் உங்கள் வலைப்பூவை என்னால் பார்க்கமுடியவில்லை. This page does not exist என்று சொல்லும். நேரடியாக தட்டினாலோ, அல்லது தேன்கூட்டிலிருந்தோ தட்டினாலும் இதே பிழை. ஏன் என்று புரியவில்லை. இன்று என் goodluck போலும், கிடைத்துவிட்டது என் கணினிக்கு உங்கள் பக்கம்!!!


    இனி comments...

    //நாளை முதல்
    உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
    ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது// எத்தனை அழகான வரிகள். எவ்வளவு உண்மை.

    எங்கோ படித்தது ...
    What we have once enjoyed we can never lose. All that we love deeply becomes a part of us. Helen Keller

    நன்றி,
    தீக்ஷண்யா.

    ReplyDelete
  25. /உங்கள் கற்பனையும் அதை பிரதிபலிக்கிற கவிதைகளும் மிகமிக அருமை...

    தினேஷ்/

    மிக்க நன்றி தினேஷ்!

    ReplyDelete
  26. /நீ. நான். காதல்.
    முக்கோண விளையாட்டில்
    எப்போதும் தோற்கிறோம்
    நானும் காதலும்

    அருமை :))))/

    நன்றி கோபால்.

    ReplyDelete
  27. /நண்பர் அருட்பெருங்கோ அவர்களுக்கு,
    நெடு நாட்கள் உங்கள் வலைப்பூவை என்னால் பார்க்கமுடியவில்லை. This page does not exist என்று சொல்லும். நேரடியாக தட்டினாலோ, அல்லது தேன்கூட்டிலிருந்தோ தட்டினாலும் இதே பிழை. ஏன் என்று புரியவில்லை. இன்று என் goodluck போலும், கிடைத்துவிட்டது என் கணினிக்கு உங்கள் பக்கம்!!!/

    அருட்பெருங்கோ அவர்களுக்கா? :)

    என்ன பிழையென்று எனக்கும் புரியவில்லை. எனது செய்தியோடையை ( http://feeds.feedburner.com/arutperungo) கூகிள் ரீடரிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ இணைத்துக்கொண்டு வலைப்பதிவு பக்கம் வராமலே கூட படித்துக்கொள்ளலாம் ;)

    ///நாளை முதல்
    உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
    ஆனால் எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’ இருக்கிறது// எத்தனை அழகான வரிகள். எவ்வளவு உண்மை.

    எங்கோ படித்தது ...
    What we have once enjoyed we can never lose. All that we love deeply becomes a part of us. Helen Keller

    நன்றி,
    தீக்ஷண்யா.
    /

    ம்ம்ம் உண்மைதான். ஹெலென் கெல்லரும் சரியாதான் சொல்லியிருக்காரு...

    நன்றிங்க தீக்ஷண்யா!

    ReplyDelete