Tuesday, February 26, 2008

இருக்கும் வரை..

நடந்து வந்து வீட்டுக்குமுன் படுத்துவிட்ட ஓவியம்போல
பக்கத்துவிட்டுப் பெண் தீட்டிவைத்த வாசல்கோலம்
மாலை வெயில் பட்டு மினுங்கிக் கொண்டிருக்கிறது.

எதிரில் வீடு கட்டுவதற்காய்க் குவித்து வைத்த ஆற்றுமணலில்
மணல்வீடு கட்டும் சிறுமிகளின் கைகளில் வழிந்துகொண்டிருக்கிறது
அடுத்த சிறுமியின் வீட்டுக்கான மணலும் அன்பும்.

போலிஸ்காரர்வீட்டின் வாசல்படியில் அமர்ந்துகொண்டு
கதைபேசும் நான்கைந்து கிழவிகளின் சிரிப்பில்
கடந்தகாலத்துக்கு நடைபோடுகிறதிந்த தெரு.

சுற்றுச்சுவரின்மீது எட்டிப்பார்த்து கீழே தொங்கும் பூஞ்செடி
கூந்தலிலெல்லாம் பூக்கள் சூடிக்கொண்டு மணப்பெண்ணென
தெருவையே வெட்கம் சுமந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

சற்றுநேரத்தில் வரப்போகிற
...தண்ணீர்லாரியினால் அழியக்கூடுமந்த கோலம்.
...மேஸ்திரியாள் துரத்தியதும் மணல்வீடுகள் மறுபடியும் வீட்டுமணலாகும்.
...போலிஸ்காரரால் நிகழ்காலத்துக்கு திரும்பிவிடும் தெரு.
...விபூதிக்காரரின் விரல்கள் கிள்ளி பூவிழந்து விதவையாகும் பூஞ்செடி.

அதனாலென்ன?
இருக்கும்வரை பார்த்துக்கொள்ளலாம்.
இல்லாது போனதும் நினைத்துக்கொள்ளலாம்.

25 comments:

  1. அருளிடமிருந்து காதல் இல்லாத கவிதை,ஆனாலும் இதுவும் அருமை!

    ReplyDelete
  2. காதல் தவிர்த்தும் கவிதையெழுதிப் பார்க்கும் எனது முயற்சிதான் இது.
    நன்றிங்க நாடோடி இலக்கியன்!

    ReplyDelete
  3. ம் நல்ல முயற்சி .. ஆனா இன்னும் ஒரு முறை மாற்றி எழுதப்பட்டிருந்தால் இன்னமும் நல்லா வந்திருக்குமோன்னு தோணுது..

    ReplyDelete
  4. ஆமாங்க்கா… மறுபடி படிச்சுப் பார்த்தா வார்த்தைகள் கொஞ்சம் கரடுமுரடா இருக்கிற மாதிரி இருக்கு :)

    ReplyDelete
  5. //...மேஸ்திரியாள் துரத்தியதும் மணல்வீடுகள் மறுபடியும் வீட்டுமணலாகும்.//

    அருமையன வரிகள், சிறந்த கற்பனை.

    ஆனால் கவிதைக்கான ஏதோ ஒன்று குறைகிறது...

    ReplyDelete
  6. அருள்!
    உங்க புகழ் வெகுவேகமா பரவியிட்டிருக்கு! உங்க "திருச்சி காதலும் சென்னை காதலும்" எனக்கு மூணு இடத்துலருந்து (மூணும் வெவெவ்வேறு வட்டம்!) Fwd வந்திருக்கு! ஒரு சின்ன விண்ணப்பம். சமீபத்திலே வலைப்பதிவை மாத்தியிருப்பீங்க போல. செய்தியோடையில் முழு இடுகையும் தெரிய மாட்டேங்குது. சரி பண்ணியிடறீங்களா?

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

    ReplyDelete
  7. //ஆனா இன்னும் ஒரு முறை மாற்றி எழுதப்பட்டிருந்தால் இன்னமும் நல்லா வந்திருக்குமோன்னு தோணுது..//

    இதே எண்ணம்தான் எனக்கும்!,

    கொஞ்சம் சிறுசிறு மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்,மற்றபடி சொல்ல வந்த விஷயம் தெளிவா இருக்கு.

    ReplyDelete
  8. / அருமையன வரிகள், சிறந்த கற்பனை.
    ஆனால் கவிதைக்கான ஏதோ ஒன்று குறைகிறது.../

    நன்றிங்க சின்னக்கவுண்டர். அதுதான் என்னனு நானும் யோசிக்கிறேன் :) இன்னும் எளிமையான/சரளமான வார்த்தைகளைப் போட்டிருக்கனும்னு தோணுது!

    ReplyDelete
  9. /அருள்!
    உங்க புகழ் வெகுவேகமா பரவியிட்டிருக்கு! உங்க "திருச்சி காதலும் சென்னை காதலும்" எனக்கு மூணு இடத்துலருந்து (மூணும் வெவெவ்வேறு வட்டம்!) Fwd வந்திருக்கு! /

    போட்டிவைத்த சர்வேசனுக்கும் வாக்களித்தவர்களுக்கும் தான் நன்றி சொல்லனும் :-)

    /ஒரு சின்ன விண்ணப்பம். சமீபத்திலே வலைப்பதிவை மாத்தியிருப்பீங்க போல. செய்தியோடையில் முழு இடுகையும் தெரிய மாட்டேங்குது. சரி பண்ணியிடறீங்களா?

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!/

    ஆமாங்க. வலைப்பதிவுல விளம்பரமெல்லாம் போட்டிருக்கோமேனுதான் செய்தியோடைல கை வச்சேன். மாத்தனும்னு கேட்கறீங்க. மாத்திடலாம் :-)
    நன்றிங்க வெங்கட்ரமணன்.

    ReplyDelete
  10. /இதே எண்ணம்தான் எனக்கும்!,
    கொஞ்சம் சிறுசிறு மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்,மற்றபடி சொல்ல வந்த விஷயம் தெளிவா இருக்கு./

    நன்றிங்க நாடோடி! காதல் இல்லாம கவிதையெழுதும்போதுதான் மக்கள் குறையிருந்தா குறிப்பிட்டு சொல்றாங்க. காதல் கவிதை எழுதினா யாருமே குறை சொல்றதில்ல ;-) இனிமே காதல் கவிதைகள குறைச்சுக்கனும் :-)

    ReplyDelete
  11. அதனாலென்ன?
    இருக்கும்வரை பார்த்துக்கொள்ளலாம்.
    இல்லாது போனதும் நினைத்துக்கொள்ளலாம்.

    inthuthan....vaazhkkaiyin vottam
    vunmai nilaiyum kooda..
    oru thathuvatthai saatharanamaga soliviteerkal

    ReplyDelete
  12. /inthuthan....vaazhkkaiyin vottam
    vunmai nilaiyum kooda..
    oru thathuvatthai saatharanamaga soliviteerkal/

    தத்துவமா? தத்துவம் பேசற அளவுக்கு எனக்கு இன்னும் வயசாகலைங்க :-)

    ReplyDelete
  13. Vivekanandarai konjam ninaivooti paarunga...

    vasu enna vayasunga...arivu../aupavam

    ReplyDelete
  14. ஓஹோ இப்போ இப்படியும் கிளம்பிட்டீங்களா? நடக்கட்டும் நடக்கட்டும் சூப்பர்

    ReplyDelete
  15. அனானி,
    விவேகானந்தர் எல்லாம் எதுக்கு இப்போ இழுக்கறீங்க? அவரு பாட்டுக்கு இருக்கட்டும்.

    ட்ரீம்ஸ்,
    நன்றி தல!

    ஸ்ரீ,
    எல்லா மாதிரியும் கொடுமப் படுத்துவோம்ல ;-)

    ReplyDelete
  16. கவிதை அருமை...
    என்னங்க அருட்பெருங்கோ காதல் என்ன ஆச்சு?
    காதல விட்டுடாதிங்க...

    ReplyDelete
  17. சூப்பர் மாப்பி...ரசித்தேன் ;)

    ReplyDelete
  18. unga kavithai ku azhagae saadharana vaarthaigal dhaan... (unga kaadhal kavithaigal edhuvumae kavidhai thuvama ila... pakathu veetu paiyan solra maadhiri irukum... idhu apdi ila...)
    arul oda touch ila....
    adhaan missing nu ninaikiren...
    solli irukira visayam nalla irukku...
    pudhu muyarchi...
    vaazhthukkal....

    ReplyDelete
  19. /கவிதை அருமை...
    என்னங்க அருட்பெருங்கோ காதல் என்ன ஆச்சு? காதல விட்டுடாதிங்க.../

    நன்றிங்க கோபால். காதலுக்குதான் அடுத்த பதிவு போட்டுட்டேனே!

    ReplyDelete
  20. /சூப்பர் மாப்பி...ரசித்தேன் ;)/

    நன்றி கோபி!!!

    ReplyDelete
  21. /unga kavithai ku azhagae saadharana vaarthaigal dhaan... (unga kaadhal kavithaigal edhuvumae kavidhai thuvama ila... pakathu veetu paiyan solra maadhiri irukum... idhu apdi ila...)/

    :-)))

    /arul oda touch ila....
    adhaan missing nu ninaikiren...
    solli irukira visayam nalla irukku...
    pudhu muyarchi...
    vaazhthukkal..../

    கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  22. நண்பரே அட்ருட்பெருங்கோ, காதல் என்பது இன்றைய காலகட்டத்தில் படிப்பதற்கு மட்டுமே நன்றாக இனிக்கிறது. ஆனால் இன்றைய இளைஞர்களின் காதல், வாலிபக்கோளாறினால் 90% காமத்தை நோக்கியே பயணிக்கிறது. ஆதலால் உங்கள் கவிதை விதையை காதல் காட்டில் விதைக்காமல்,உண்மையான வாழ்க்கையின் தோட்டத்தில் விதைப்பீர் என வேண்டுகிறேன். என்றென்றும்
    அன்புடன்
    தமிழன்பன்

    ReplyDelete
  23. உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள் தமிழன்பன்!!!

    ReplyDelete
  24. அன்பரே அருட்பெருங்கோ,
    வரிகள் அணைத்திலும் நல்ல
    வாசணைகளைப் பூசியுள்ளீர்கள் போலும்,
    அருமையாண வர்ணணை. அதில் கவிதையோடு சேர்ந்து உங்கள் கற்பணையும் மணக்கிறது. வாழ்த்துக்கள்.
    கொஞ்சம் , கொஞ்சம் அல்ல நிறையவே.... அம்மா மற்றும் அப்பாவைப் பற்றியும் எழுதலாமே........
    என் நீண்ட நாள் ஆசையை உங்களிடம்
    வேண்டுகோலாய் வைக்கிறேன்,
    நிறைவேற்றுவீரா..........


    புவணாவின் முருகன்,
    சஞ்சுவின் அப்பா.

    ReplyDelete