Monday, February 25, 2008

எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்..

‘காலைவணக்கம்’ சொல்லிக்கொண்டு வந்த மடலில்
சிரித்தபடி அமர்ந்திருந்தது ஒரு குழந்தை.

குழந்தையைப் பார்த்ததும்
பால்யம்...
பள்ளிக்கூடம்...
தமிழய்யா...
தமிழ்...
என்றும்,

தமிழை நினைத்ததும்
கவிதை...
இலக்கியம்...
திரைப்படம்...
இசை...
என்றும்,

இசையை நினைத்ததும்
இளையராஜா...
எஸ்பிபி...
எஸ்பிபி சரண்...
சென்னை 28...
என்றும்,

சென்னையை நினைத்ததும்
வெயில்...
கடல்...
கடற்கரை...
காதல்...
என்றும்,

எதை நினைத்தாலும்
எதனெதற்கோ இழுத்துச் செல்லும் மனதில்
அடுத்து
உன்னை நினைத்ததும்
நீ மட்டுமே நிறைகிறாய்!

18 comments:

  1. kaadhaluku kavidhai
    kaadhal kavidhaiku arul...

    vaazhthukkal...

    ReplyDelete
  2. கவிதை என்றது காதல் காதல் என்றதும் அருட்பெருங்கோ சரியா :)))

    ReplyDelete
  3. @அனானி,
    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஆனால் பெயரில்லாமல் ஏன் வரவேண்டும்?

    @முத்துலெட்சுமி,
    நீங்களும் கூட கலாய்க்கறீங்களே. நான் பாவம்ங்க்கா :-)

    ReplyDelete
  4. unmaithaan arutperungo..

    ontai ennumpothu...athai saarntha ellam gnapakam vara.. avalai ninaithall mattum avalae ellaam aaaka
    v

    ReplyDelete
  5. அனுபவமோ!...

    உண்மைதான், எனக்கு அனுபவம் உள்ளது..

    வாழ்த்துக்கள்.

    நன்றிகளுடன்

    ஈசுவரன்.மணி

    ReplyDelete
  6. /ontai ennumpothu...athai saarntha ellam gnapakam vara.. avalai ninaithall mattum avalae ellaam aaaka/

    கருத்துக்கு நன்றிங்க அனானி.

    ReplyDelete
  7. @ஈசுவரன் மணி,
    அனுபவம் எல்லாம் இல்லைங்க. அப்படியே யோசிக்கிறதுதான்!!!

    @ட்ரீம்ஸ்,
    நன்றிங்க ட்ரீம்ஸ்.

    ReplyDelete
  8. நல்லா இருக்குங்க அருள்..

    ReplyDelete
  9. நன்றிங்க கருணா!

    ReplyDelete
  10. அருமை...
    எதார்த்தமான வரிகள்...
    எப்போதும் போல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. கடைசில பேப்பர படிக்கவெ இல்ல போல :))

    ReplyDelete
  12. /அருமை... எதார்த்தமான வரிகள்...
    எப்போதும் போல் வாழ்த்துக்கள்/

    நன்றிங்க கோபால்!!!

    ReplyDelete
  13. /கடைசில பேப்பர படிக்கவெ இல்ல போல :))/

    என்ன சொல்ல வர்றீங்கனு புரியல பாலா!

    ReplyDelete
  14. எனக்கு பழய நினைப்புக்ள் வருகிறது....
    அருமையான கவிதை....

    வாழ்த்துக்கள்..... தொடருங்கள்.......

    ReplyDelete
  15. தொடர்ச்சியும் நடையும் அழகாய் வந்துள்ளது.
    மேலும் தொடர்க!

    ReplyDelete
  16. /எனக்கு பழய நினைப்புக்ள் வருகிறது....
    அருமையான கவிதை....

    வாழ்த்துக்கள்....தொடருங்கள்......./

    வாழ்த்துகளுக்கு நன்றிகள் தினேஷ்!

    ReplyDelete
  17. /தொடர்ச்சியும் நடையும் அழகாய் வந்துள்ளது.
    மேலும் தொடர்க!/

    நன்றிகள் girl of destiny!

    ReplyDelete