எந்த மடையனாவது திங்கட்கிழமை Physics lab exam வச்சிட்டு முந்தின சனி, ஞாயிறு எல்லாம் Industrial Visit ங்கற பேர்ல ஊர் சுத்தப் போவானா? நான் போனேங்க. என்னங்க பண்றது, அப்போ collegeல மொத வருசம் படிச்சுட்டு இருந்தோம். கிளாசுக்கு நாந்தான் ரெப்பு. (கண்டுக்காதீங்க) Industrial Visit க்கு பெங்களூர் போலாம்னு ஏற்பாடு பண்ணும்போது எந்த வாரம் போறதுன்னு ஒரு சிக்கல். அது வருசக்கடைசிங்கறதால தேர்வெல்லாம் நெருங்கிட்டு இருந்த சமயம். நாங்க போலாம்னு முடிவு பண்ணியிருந்ததுக்கு அடுத்த திங்கட்கிழமை எங்க க்ளாஸ்ல (என்னையும் சேர்த்து) ஒரு 5 பேருக்கு Physics lab final exam இருந்துது. சரி எப்படியாவது professor கிட்ட சொல்லி அத வேற நாளுக்கு மாத்திடலாம்னு முடிவு பண்ணி அவர்கிட்டவும் பேசினேன். சரி உங்க 5 பேருக்கு பதிலா வேற க்ளாஸ்ல இருந்து வேற 5 பேர செய்ய சொல்லிட்டு அவங்க செய்ய வேண்டிய அன்னைக்கு நீங்க வந்து செஞ்சுடுங்கனு சொல்லிட்டாரு. நானும் இன்னொரு க்ளாஸ் ரெப்புகிட்ட பேசி ஓக்கே வாங்கிட்டு பெங்களூர் கிளம்பிட்டோம். ஆனா பாருங்க அன்னைக்கு அந்த கிளாஸ் ரெப்பு மப்புல இருந்திருப்பான் போல…சொன்னத மறந்துட்டான்.
பெங்களூரெல்லாம் சுத்தி முடிச்சுட்டு அந்த திங்கட்கிழமை காலைல கோயம்புத்தூர் வந்து எறங்கும்போது மணி 7:30. ஹாஸ்டல் போகும்போதே மணி 8:30 நெருங்கிடுச்சு. எல்லாரும் அரக்கப் பரக்க கிளம்பி க்ளாஸுக்கு ஓட்றாங்க. யாராவது எனக்கு ப்ராக்ஸி போடுங்கடானு சொல்லிட்டு நான் ரூம்ல மல்லாக்கப் படுத்து தூங்க ஆரம்பிச்சுட்டேன். மணி ஒரு 11 இருக்கும். “ரூம் நம்பர் 111 – சிவசாம்ராஜ் – போன் “ அப்படினு மெஸ் சூப்பர்வைசர் சத்தம் போட்றார். (எனக்கு அமைஞ்ச ரூம் நம்பர் பாத்தீங்களா) எனக்கு அது வரைக்கும் போனே வந்ததில்ல. அதிசயமா இது யாரா இருக்கும்னு யோசிச்சுட்டே போய் போன எடுத்தேன்
“டேய் sam , ஹாஸ்டல்ல என்னடாப் பண்ணிட்டு இருக்க. உங்க batchக்கு இப்போ physics lab exam நடந்துட்டு இருக்கு. Professor உன்னக் கேட்டுட்டு இருக்கார். சீக்கிரம் lab க்கு போடா” – அப்படினு என்னோட பாசக்கார நண்பன் சொல்லிட்டு இருக்கும்போதே எனக்கு மண்டைக்குள்ள யாரோ ட்ரம்ஸ் வாசிக்கிற மாதிரி இருந்துது.
“மத்த நாலு பேரு போய்ட்டாங்களா” – என்ன இருந்தாலும் நாம க்ளாஸ் ரெப்பு இல்லையா.
“அவங்கலாம் பாதி experiment பண்ணிட்டாங்க, நீ மொதல்ல labக்குப் போடா” னு சொல்லி வச்சிட்டான். என்னத் தவிர எல்லாரும் வெவரமாதான் இருக்காங்க.
அவசர அவசரமா record நோட்டையும் , observation நோட்டையும் தேடியெடுத்துட்டு lab க்கு ஓடினேன்.
உள்ள நுழையும்போதே professor என்ன ஒரு மாதிரியா பார்க்க, நானும் மறுபடி என்ன ஒரு தடவ பார்த்துக்கிட்டேன்.
அப்போதான் தெரிஞ்சது மத்த எல்லாரும் காக்கி யூனிபார்ம்ல ஷூ போட்டு டக் இன் பண்ணி lab uniform ல இருக்க நான் செருப்புக்காலோட, கலர் சட்டைல நின்னுக்கிட்டு இருந்தேன். அவர்கிட்ட கொஞ்சம் பழைய வரலாறெல்லாம் சொல்லி லேட்டா வந்ததுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டு (அப்பவே நானெல்லாம் பெரிய மனுசனாக்கும்) எப்படியோ experiment செய்ய வேண்டிய எடத்துக்குப் போய்ட்டேன்.
அது என்னமோ காந்தத்த இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திருப்பி வச்சு எதோப் பண்ணுவாங்களே அந்த experiment தான் எனக்கு வந்திருக்கு. இந்த experiment இதுக்கு முன்னாடி பண்ணியிருக்கேனா இல்ல data மட்டும் மத்தவன்கிட்ட வாங்கி fill பண்ணி எஸ்கேப் ஆகியிருக்கேனானு எனக்குதெரியல. அதாவது இந்த experiment எனக்கு செய்யத் தெரியாதா இல்ல மறந்துபோயிடுச்சா அப்படிங்கறதும் எனக்குப் புரியல. சரினு பக்கத்துல இருக்கவன நோட்டம் விட்டா அவன் பாவம் ட்ரெயின்ல வரும்போது பல்லு வெளக்கிட்டு எச்சித் துப்பும்போது போட்டிருந்த கண்ணாடியையும் சேர்த்துத் துப்பிட்டான். அவனுக்கு வந்த experimentல burette ல தண்ணிய ஊத்தி என்னமோ பண்ண சொல்லியிருக்காங்க. கண்ணாடியில்லாம பாவம் தண்ணிய கீழ ஊத்திட்டு burette ல இல்லாத water levelல தேடிக்கிட்டு இருந்தான். பாவம் வெந்த கண்ல வேலப் பாய்ச்ச வேணாம்னு இன்னொரு பக்கம் திரும்பினேன்.
நான் எப்போடா திரும்புவேன்னுப் பாத்துட்டே இருந்திருப்பா போல அவ. எங்கிட்டே எதோ கேட்கத் தயங்கறாப்ல இருந்துது. இது என்னடா நமக்கு வந்த சோதனை. எதாவது சந்தேகம் கேட்டு நம்மளக் கேவலப் படுத்தப்போகுதோன்னு நெனச்சுட்டு இருந்தா பக்கத்துல professor table ல இருந்த அவளோட observation நோட்டத் தூக்கிப் போட சொல்றா. அவளுக்கு யார்கிட்ட என்னக் கேட்கனும்னு தெரிஞ்சிருக்கு…professor table பக்கமாத் திரும்பினா நான் உள்ள நுழஞ்சதுல இருந்தே என்ன ஒரு தீவிரவாதியப் பாக்குற மாதிரியே அந்த professor பாத்துட்டு இருந்திருக்கார். அவருக்கு இன்னைக்கு நல்லாப் பொழுது போகப் போகுதுனு மட்டும் எனக்கு கன்பார்ம் ஆச்சு.
சரினு பேப்பர எடுத்து எழுத ஆரம்பிப்போம்னு ஆரம்பிச்சேன். மொதல்ல Aim னு ஒன்னு எழுதனும். அது ஒன்னும் பெரிய கஷ்டமில்லனு வையுங்க. அவங்க கொடுத்த question க்கு முன்னாடி ஒரு to போட்டு எழுதிடலாம். (Find the density அப்படினு கேள்வி இருந்தா To find the density அப்படின்னு Aim எழுதனும். பாருங்க நானெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சிருக்கேன்னு L) ஒருவழியா கஷ்டப்பட்டு aim எழுதி முடிச்சதும் அப்புறம் என்னப் பண்றதுனு தெரியல. Apparatus Required அப்படினு ஒன்னு எழுதுவோம். அதாவது சமையல் குறிப்புல “தேவையான பொருட்கள்” மாதிரி. அது கிட்டத்துல காந்தம், பேனா, பென்சில், ஸ்கேல் எல்லாத்தையும் எழுதி வச்சிட்டேன். அப்புறம் Formula னு ஒன்னு எப்பவும் எழுதுவோம். அதுதான் மறந்துடுச்சு…இல்ல தெரியலன்னு நெனைக்கிறேன். Lab ல ஆரம்பத்துல இருந்தே இன்னொரு வயசான professor என்னையவே வாட்ச் பண்ணிட்டு இருந்தார். நான் திருதிருனு முழிச்சிட்டு இருந்ததப் பாத்துட்டு என் பக்கத்துல வந்தவரு என்ன formula மறந்துடுச்சானு கேட்டாரு…”ம்ம்ம்” னு வடிவேலு மாதிரி தலையாட்டுனேன். அவருக்கு என் மேல என்னப் பாசமோ பேப்பர வாங்கி formula வ அவரே எழுதுனாரு. என்ன இருந்தாலும் வயசான ஆட்களுக்கு நல்ல மனசுதான்னு நான் நெனச்சுட்டு இருக்கும்போதே படுபாவி மார்ஜின்ல “ – 5 ” னு போட்டுட்டுப் போயிட்டார். ஏற்கனவே internal la 40 க்கு என்னோட மார்க் 18 தான். நான் பாசாகனும்னா இந்த lab examல 60 க்கு 32 க்கு மேல எடுத்தாகனும் L அதுல ஒரு 5 மார்க்குக்கு அசால்ட்டா ஆப்படிச்சுட்டுப் போயிட்டார். எழுதுன aim க்கு ஒரு ரெண்டு மார்க்கு வச்சுக்கிட்டாலும் மீதி இருக்கிற 55 ல இன்னும் 30 க்கு எதாவது வழி பண்னியாகனும்.
Formula வுக்கு அடுத்தது tabular column னு ஒன்னு போட்டு அதுல கொஞ்சம் data எல்லாம் ரொப்பனும். அத experiment செஞ்சு(?) கண்டுபிடிக்கலாமா இல்ல தூரத்துல இருக்குற observation note ல இருந்து காப்பியடிச்சு எழுதிடலாமாங்கறது அடுத்த விசயம். ஆனா tabular column க்கு எத்தன column போடனும்னு தெரியாம எனக்கு விழி பிதுங்குது. அப்படியே labல இருந்த ஒவ்வொருத்தரா experiment எல்லாம் முடிச்சுட்டு viva voce (கேள்வி பதில்) section க்கு professor கிட்டப் போக ஆரம்பிச்சுட்டாங்க. சரி குத்துமதிப்பா ஒரு tabular column போட்டு வைப்போம்னு ஒரு 5 column போட்டுட்டு மொத column க்கு serial no. அப்படினு heading எல்லாம் கொடுத்தேன். ஆனா அதுக்கப்புறம் என்னப் பண்றதுன்னுத் தெரியாம நின்னுக்கிட்டு இருக்கும்போது மறுபடியும் அதே professor வந்தார். Tabular column வெறும் கோடுகளா இருக்கிறதப் பாத்ததும் அவரும் கொஞ்சம் கடுப்பாகிட்டார்னுதான் சொல்லனும். “ஏப்பா மேலதான் formula எழுதிருக்கேனே அதுல இருக்கிற parameters தான் இங்க tabular columnல வரணும்னு கூடத் தெரியாதா?” அப்படினு தலைல அடிச்சுக்கிட்டே அவரே அதையும் fill பண்ணிட்டு இருக்கும்போதே எனக்கு சந்தேகம்! போகும்போது மறக்காம மார்ஜின்ல “ – 10” னு போட்டுட்டுப் போயிட்டார். இப்போ என்னோட நெலமை ரொம்ப மோசமாச்சு மீதி இருக்கிறது 45! அதுல நான் 30 எடுத்தாகனும். இதுக்குமேலயும் கம்முனு இருந்தா அவரே வந்து experiment –ம் பண்ணிட்டு “ – 45 “ ம் போட்டுட்டுப் போயிடுவாரோனு ஒரு பயம். ரெண்டு professor -ம் viva voce ல கொஞ்சம் பிசியா இருந்த சமயத்துல observation note la இருந்து இந்த experiment க்கு உரிய data, result எல்லாத்தையும் test paper க்கு migrate பண்ணினப்பதான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாச்சு. (இந்த data migration-ன யாராவது copy னு சொல்லி கேவலப்படுத்தினா அதக் கண்டுக்காதீங்க)
அப்புறம் கொஞ்சம் நேரம் experiment செய்ற மாதிரி , கணக்குப் போடுற மாதிரி, சிந்திக்கிற மாதிரினு பல கோணங்கள்ல என்னோட நடிப்பக் காட்டிட்டு கெத்தாகப் போய் test paper நீட்டினேன். வாங்கிப் பார்த்தவர் சம்பந்தமே இல்லாமல் ஒரு கேள்வி கேட்டார் “நீ மட்டும் சட்டை போட்டிருக்கியே உன் record noteக்கு ஒன்னு வாங்கிப் போடனும்னு தோணுச்சா?” டேபிள் மேல பாத்தா என்னோட record note (ச)அட்டையில்லாம இருந்துது. “Record note க்கு cover பண்ணிட்டு வந்தாதான் உனக்கு viva voce “அப்படினு சொல்லிட்டார். என்னோட record note எடுக்கும்போது கூடவே இன்னொரு நோட்டும் அட்டையில்லாம இருந்தது. யாருதுனு பாத்தா நம்ம burette ல water level தேடிட்டு இருந்தவனோடதுதான். அவனப் பார்த்தா இன்னுமும் தேடிட்டே இருந்தான். சரி அவன் நோட்டுக்கும் அட்டையப் போட்டுடுவோம்னு அவனோடதையும் சேர்த்து எடுத்துட்டு வெளிய வந்தப்ப experiment முடிச்சுட்டு வந்து நம்ம க்ளாஸ் பொண்ணு ஒருத்தி உட்காந்திருந்தா. சரி resusability பத்தி எவ்வளவு படிச்சிருக்கோம் அதப் பயன்படுத்துவோம்னு அவளோட record அட்டைய வாங்கி அந்தப் பையன் நோட்டுக்குப் போட்டுட்டு அவளோட observation noteக்கு போட்டிருந்த அட்டைய எடுத்து என்னோட record note க்குப் போட்டேன். அவ வேற ரொம்பப் பொறுப்பா லேபில் எல்லாம் ஒட்டி பேர் எழுதியிருந்ததால வெளிப்பக்கம் உள்ள இருக்கிற மாதிரி அட்டையத் திருப்பிப் போட வேண்டியதப் போச்சு. இந்த record note –ட விட observation note கொஞ்சம் சிறுசா இருக்கும். அதனால observation note அட்டைப் போட்டதுக்கு அப்புறம்தான் என்னோட record note கொஞ்சம் கேவலமா இருந்த மாதிரி இருந்துது. இருந்தாலும் professor ஆசப்பட்டுட்டாரேனு அப்படியேக் கொண்டு போய் நீட்டினேன். அவர் வாங்கும்போதே நோட்டு தனியா அட்டை தனியாப் போயிடுச்சு. அட்டைல இருந்த லேபிள படிச்சுப் பாத்தவரு, பொண்ணுப் பேர பாத்துட்டு இன்னும் கொஞ்சம் கடுப்பாகிட்டாரு. “நீ போட்டிருக்கிறதாவது உன்னோட சட்டைதானா?” னு அவர் சீற , சீரியசாக் கேக்குறாரா நக்கலுக்கு கேக்குறாரானு அனக்குத் தெரியல. ஆனா நான் அப்போ போட்டிருந்தது ரூம்மேட்டோட சட்டைதாங்கற உண்மைய அப்போ சொன்னா அது அவர இன்னும் கடுப்பேத்துமேன்னு அந்த உண்மையக் கஷ்டப்பட்டு மறச்சுட்டேன். “இப்பவே புதுசா ஒரு கவர் வாங்கிப் போட்டு இன்னும் 15 நிமிசத்துலக் கொண்டு வந்துகொடுத்தா உனக்கு evaluation நடக்கும் இல்லனா இப்பவே ரிசல்ட் தெரிஞ்சிடும்” னு எச்சரிக்கை இல்ல இல்ல கட்டளைப் போட்டுட்டுப் போயிட்டார்.
அவசர அவசரமா college வெளிய வந்து அந்தக்கடைக்கு அட்டை வாங்கலாம்னு போகும்போதுதான் பாக்கெட்ட பாத்தேன். பர்ஸ் இல்ல. பர்ஸ் இருந்திருந்தாலும் அதுல காசு இருந்திருக்குமாங்கறதும் சந்தேகம் தான். அது லஞ்ச் டைம் ஆனதுனால எவனும் காலேஜ் உள்ள இருக்க வாய்ப்பில்ல. சரி இனிமே ஹாஸ்டல் போய் காசெடுத்துட்டு வந்து அட்டை போட்டு கொடுக்க முடியுமான்னு யோசிக்கும்போதே எனக்கு ரிசல்ட் கொஞ்சம் தெரியற மாதிரி இருந்துது. அப்போ நல்லவேளையா நம்ம நண்பன் ஒருத்தன் எதிர்ல வர அவன் பாக்கெட்ல ஒரு பத்து ரூபாய சுட்டு அட்டைய வாங்கிட்டு lab கு ஓடினேன். Lab வெளிய நின்னு அழகா அட்டையெல்லாம் போட்டு நோட்ட எடுக்கும்போது கை தவறி அது கீழ விழுந்தது. நான் நின்னுட்டு இருந்தது first floor னு நெனைக்கிறேன். Ground floor ல எலக்ட்ரிக் lab க்குள்ளப் போய் அது விழுந்துடுச்சு. கீழப் போய் அத எடுக்கும்போது அங்க ஒரு professor , தானும் ஒரு professor னு நிரூபிக்கிறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்ச சந்தோசத்துல, நின்னுக்கிட்டு இருந்தார். அவரோட அறிவுரை எல்லாத்தையும் கவனமா கா(த்)துல ஏத்திட்டு மறுபடி மேல வந்தேன். நான் வருவேன்ற நம்பிக்கை இல்லாம இருந்த professorக்கு நான் வந்ததுல ஆச்சர்யம். நோட்ட வாங்கி கவனமா அட்டையோட உள்பக்கமெல்லாம் எடுத்துப் பாத்துட்டு சரி viva voce இப்போ வச்சிக்கலாமா 2 o clock க்கு மேல வச்சிக்கலாமான்னார். தெரியாது ன்றத இப்போ சொன்னா என்ன. மதியம் ரெண்டு மணிக்கு சொன்னா என்னனு இப்பவே வச்சிக்கலாம்னு நான் சொல்லவும் 5 கேள்வி கேட்டார். “நாம வாயத்தொறந்து முட்டாள்னு நிரூபிக்கிறத விட வாய மூடிட்டே அத செய்யலாம்”ங்கற பொன்மொழி எனக்கு ரொம்பப் புடிக்கும். கேட்ட கேள்விக்கெல்லாம் மௌனமா தலையசைச்சு தெரியாதுன்னு சொன்னேன். காலைல இருந்து என்னோட நடவடிக்கையப் பாத்துட்டு இருந்தவருக்கு இது ஒன்னும் ஆச்சர்யத்தக் கொடுத்திருக்காதுதான். “ok you can go” னு சொல்லி அனுப்பிட்டார். அவசர அவசரமா ஹாஸ்டல் வந்து சாப்பிட்டுட்டு பாதியில விட்ட தூக்கத்தக் கண்டினியு பண்ண ப்போயிட்டேன். சாயுங்காலம் வந்து பசங்க எழுப்பும்போதுகூட இதெல்லாம் கனவுல நடந்த மாதிரிதான் இருந்துச்சு. அப்புறம் ஒரு டீயக் குடிச்சு தெளிவானப்பதான் நடந்ததெல்லாம் உண்மைதான்னு தோணுச்சு. ஒருத்தன் கேட்டான் “என்ன மச்சான் ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே கப்பு கன்ஃபார்மா?” எனக்கும் கிட்டத்தட்ட அப்படிதான் தோணுச்சு.
ஆனா ரிசல்ட் வந்தன்னைக்கு browsing centre ல ரிசல்ட்டப் பாத்ததும் நான் கத்தினதுதான் இந்தப் பதிவோட தலைப்பு!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
Sweet memories, interesting
ReplyDeleteகல்லூரி நாட்களுக்கு
ReplyDeleteஅழைத்துச் சென்று விட்டீர்கள் sam.
அதும் செய்முறைத் தேர்வில் மட்டும் நம் தலையெழுத்தை நாம் தான்
முடிவு செய்வோம்.....
கண்ணை மூடிக்கிட்டு எதைடா எடுப்பதனு மனசு பதரும் பாருங்க....
ம்ம் அதலாம் கடந்து
எப்படியோ முடிச்சுட்டோம்.
தூக்கம் வரும் நேரத்தில் , உங்க பதிவைப் படித்து சிரித்ததில் தூக்கமே போய்விட்டது...
ReplyDeleteகலக்கல்.....மலரும் நினைவுகள் அருள் ;))
ReplyDeleteலேய்.. காதல் மட்டும் இல்ல காமெடியும் வரும்ன்னு சொல்லவே இல்ல...
ReplyDeleteஎன் இனமடா நீ... படிச்சேன் நல்லாச் சிரிச்சேன் சூப்பர்ய்யா
எனக்கு சிரிக்கிறதா அழுகுறதான்னே தெரியலப்பா
ReplyDeleteஅருமை அருள்.... இதே அனுபவம் நானும் கண்டிருக்கிறேன்....
ReplyDelete/ Sweet memories, interesting/
ReplyDeleteஆமா மணி இப்போ sweet ஆ தான் இருக்கு... ஆனா அப்போ ஒரே sweating தான் போங்க :)
வாங்க எழில்,
ReplyDelete/ கல்லூரி நாட்களுக்கு
அழைத்துச் சென்று விட்டீர்கள் sam./
அப்போப்பா போயிட்டு வரனும்.. இல்லனா நாம கல்லூரியில படிச்சோம்ங்கறதே மறந்து போயிடும்...
/அதும் செய்முறைத் தேர்வில் மட்டும் நம் தலையெழுத்தை நாம் தான்
முடிவு செய்வோம்.....
கண்ணை மூடிக்கிட்டு எதைடா எடுப்பதனு மனசு பதரும் பாருங்க....
ம்ம் அதலாம் கடந்து
எப்படியோ முடிச்சுட்டோம்./
எப்பவுமே எங்க தலையெழுத்த, திருத்தற professor தான் முடிவு பண்ணுவார் :)
வாங்க ஜீவன்,
ReplyDelete/ தூக்கம் வரும் நேரத்தில் , உங்க பதிவைப் படித்து சிரித்ததில் தூக்கமே போய்விட்டது.../
அடப்பாவிகளா ஒரு மாணவனின் போராட்டம் உங்களுக்கு சிரிப்பா போயிடுச்சா? :)))
/ கலக்கல்.....மலரும் நினைவுகள் அருள் ;))/
ReplyDeleteகோபி, இதெல்லாம் அலறும் நினைவுகள் :)
/ லேய்.. காதல் மட்டும் இல்ல காமெடியும் வரும்ன்னு சொல்லவே இல்ல... /
ReplyDeleteதல, பாத்தியா போகிற போக்குல ஒரு உள்குத்தும் வச்சிட்டுப் போற...
/என் இனமடா நீ... படிச்சேன் நல்லாச் சிரிச்சேன் சூப்பர்ய்யா/
எல்லாம் ஒரே இனம்தான் :)))
/ காதல் பற்றி மட்டும் எழுதுங்க அருட்பெருங்கோ :(/
ReplyDeleteஅடுத்தப் பதிவு உங்களுக்காக தான் மேடம் போட்டிருக்கேன்்... :)
/ எனக்கு சிரிக்கிறதா அழுகுறதான்னே தெரியலப்பா/
ReplyDeleteஎதுக்குப்பா அழுகனும்? சிரிங்க... நல்லா சிரிங்க :)
/ அருமை அருள்.... இதே அனுபவம் நானும் கண்டிருக்கிறேன்..../
ReplyDeleteகருணா, கண்டிருக்கிறீர்களா?
நான் அனுபவிச்சேங்க :)
\\காதல் மட்டும் இல்ல காமெடியும் வரும்ன்னு சொல்லவே இல்ல... //
ReplyDeleteவழிமொழிகிறேன்.
(ரிப்பீட்டே)
பரவாயில்லையே இன்னும் அந்த செய்முறைத்தேர்வில் என்ன எல்லாம் எந்த முறைய்யில் எழுதணும்ன்னு நினைவு வச்சுருக்கீங்களே..அப்புறம்
சிரிப்போ சிரிப்பு ஒவ்வொரு இடத்தை யும் காப்பி பேஸ்ட் பண்ண முடியாததால செய்யல...அட்டகாசமாஇருக்கு.
வாங்க முத்துலட்சுமி,
ReplyDeleteமுதலில் நட்சத்திர வார பிஸியிலையும் நம்மப் பதிவெல்லாம் படிச்சுப் பின்னூட்டமிட்டதுக்கு நன்றி :)
/ \\காதல் மட்டும் இல்ல காமெடியும் வரும்ன்னு சொல்லவே இல்ல... //
வழிமொழிகிறேன்.
(ரிப்பீட்டே)/
நீங்களுமா? :)
/பரவாயில்லையே இன்னும் அந்த செய்முறைத்தேர்வில் என்ன எல்லாம் எந்த முறைய்யில் எழுதணும்ன்னு நினைவு வச்சுருக்கீங்களே..அப்புறம்
சிரிப்போ சிரிப்பு ஒவ்வொரு இடத்தை யும் காப்பி பேஸ்ட் பண்ண முடியாததால செய்யல...அட்டகாசமாஇருக்கு./
பாருங்க என்னோட அறிவுப் போராட்டம் உங்களுக்கெல்லாம் சிரிப்பா இருக்கு ;)
பின்னிட்டேள் போங்கோ!
ReplyDeleteஅருட்பெருங்கோ!!
காதல் கவிதையில் மட்டுமல்ல, காமெடியிலும் நீங்கள் பெருங்கோதான்!!
வாங்க சிநேகிதன்,
ReplyDelete/ பின்னிட்டேள் போங்கோ!
அருட்பெருங்கோ!!
காதல் கவிதையில் மட்டுமல்ல, காமெடியிலும் நீங்கள் பெருங்கோதான்!!/
நன்றிங்க :)