துயரங்களால் துவண்டு கிடக்கிறேன்.
சாய்ந்து கொள்ள ஒரு தோள் நோக்கி,
என் தேடல் தொடங்குகிறது.
அம்மா வருகிறாள்.
அவளுக்கே இதயம் பலவீனம்.
சாய்ந்து கொள்ள மனமில்லாமல் நடக்கிறேன்.
நண்பன் வருகிறான்.
மணமான மகிழ்ச்சியோடு.
சாயாமல் நடக்கிறேன்.
காதலி வருகிறாள்.
கையில் திருமண அழைப்பிதழோடு.
விழுந்து விடாமல் நடக்கிறேன்.
வழக்கம்போல
தூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை.
(முந்தைய பதிவின் தாக்கத்தில்)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
// வழக்கம்போல
ReplyDeleteதூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை.//
தனிமை என்ற பெயரில்
இறைவன்
தனிமையைப்போல இதமான மன ஆறுதலை இவ்வுலகில் யாராலும் தந்துவிடமுடிவதில்லை. நல்ல கவிதை. தொடருங்கள்.
ReplyDeleteநல்ல கவிதை அருள் ;)))
ReplyDeleteமுந்தைய பதிவை படிக்க முடியவில்லை ;(
Arutperungo vazakkam pola kalaitinga!!!
ReplyDeleteThanimai yai vendum anaivarum athu kidaithapin athanai verukkavum seikirarkal!!!
வாங்க ராகவன்,
ReplyDelete/தனிமை என்ற பெயரில்
இறைவன்/
இறைவன் என்ற பெயரில் உங்களுக்கும்,
தனிமை என்ற பெயரில் எனக்கும். :)
/ தனிமையைப்போல இதமான மன ஆறுதலை இவ்வுலகில் யாராலும் தந்துவிடமுடிவதில்லை./
ReplyDeleteஉண்மைதான் நளாயினி. சில நேரங்களில் தனிமை கொடுமையாக இருந்தாலும் பல நேரங்களில் அது நிம்மதியானது.
/நல்ல கவிதை. தொடருங்கள்./
வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க!!!
/ நல்ல கவிதை அருள் ;)))/
ReplyDeleteநன்றி கோபி!!!
/முந்தைய பதிவை படிக்க முடியவில்லை ;(/
லிங்க் வேலை செய்ய வில்லையோ? பார்க்கிறேன்..
/ Arutperungo vazakkam pola kalaitinga!!!
ReplyDeleteThanimai yai vendum anaivarum athu kidaithapin athanai verukkavum seikirarkal!!!/
நன்றிகள்!!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்!
அதுசரி என் பதிவுக்கும் அனானியாக வரவேண்டிய அவசியம் என்னனு எனக்குப் புரியல... பெயரோடு வரலாமே நண்பரே?
அய்யயோ அருள்.. அழகா காதல் கவிதை எழுதுவீங்களே? ஏன் நீங்களும் தனிமை.. சோகம் னு? இது சரியில்ல..
ReplyDelete//நன்றிகள்!!
ReplyDeleteஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்!
அதுசரி என் பதிவுக்கும் அனானியாக வரவேண்டிய அவசியம் என்னனு எனக்குப் புரியல... பெயரோடு வரலாமே நண்பரே? //
Wen i was abt to leave unga kavithai a pathen.. athan apdie anony comment a potiten.. Am juz a reader here no way related n blogging.Ungaloda neria kavithaikala padichirken!!
Good work buddy.. take care..
நல்லாருக்கு கவிதை ...
ReplyDeleteஆமா முந்தைய பதிவு தலைப்பு என்ன?
ஐந்து அழகும் பேரழகுமா..
இப்படி பி.கு எழுதினா மண்டைய குடையுதே?
வாங்க காயத்ரி,
ReplyDelete/ அய்யயோ அருள்.. அழகா காதல் கவிதை எழுதுவீங்களே? ஏன் நீங்களும் தனிமை.. சோகம் னு? இது சரியில்ல../
ஏன் சோகம் , தனிமையெல்லாம் உங்க டிப்பார்மெண்ட்டா? :)
/Wen i was abt to leave unga kavithai a pathen.. athan apdie anony comment a potiten.. Am juz a reader here no way related n blogging.Ungaloda neria kavithaikala padichirken!!
ReplyDeleteGood work buddy.. take care../
மறுபடியும் நீங்க வந்து பதில் சொன்னதே பெரிய விசயம் :) நன்றிங்க...
வாங்க முத்துலட்சுமி,
ReplyDelete/ நல்லாருக்கு கவிதை ...
ஆமா முந்தைய பதிவு தலைப்பு என்ன?
ஐந்து அழகும் பேரழகுமா..
இப்படி பி.கு எழுதினா மண்டைய குடையுதே?/
அந்த பதிவுதாங்க...
அழகான விசயங்கள் எல்லாமே நம்மள கைவிடும்போதும் நமக்கு துணையா இருக்கிறது தனிமை மட்டும்தான் னு சொல்ல வந்தேன் :)
//வழக்கம்போல
ReplyDeleteதூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை//
அருமை.... கலக்கிட்டீங்க..
/அருமை.... கலக்கிட்டீங்க../
ReplyDeleteநன்றிங்க ஜி!!!
ம்ம்ம்... அருமை ...
ReplyDelete//வழக்கம்போல
ReplyDeleteதூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை
//
தனிமையுடனான நட்பு அழகாய் இருக்கிறது
/ ம்ம்ம்... அருமை .../
ReplyDeleteநன்றிங்க சுந்தர்!!!
வாங்க கவிநிலா,
ReplyDelete/தனிமையுடனான நட்பு அழகாய் இருக்கிறது/
நட்பே அழகான விசயம்தான். எப்போதும் நம்மை விட்டுப் பிரியாத ஒருவரின் நட்பு கண்டிப்பாக அழகாகத்தான் இருக்க முடியும்.