Friday, July 13, 2007

மின்னல்சரம்

இருள் கவிந்த ஒரு மாலைநேரம்.
உன் வருகையை
ஊருக்கே சொல்லிக்கொண்டு
மணக்கிறது உன் கூந்தலின் மல்லிகை.

என்ன மல்லிகையோ…
உன் புன்னகையைப் போல
ஒளிரத்தெரியவில்லை.

மணக்கும் மல்லிகை
கூடவே கொஞ்சம் ஒளிர்ந்தால்
எப்படி இருக்குமென
உனக்கொரு ஏக்கம்.

அதற்காகவே,
ஒரு மழைக்காலம் முழுவதுமாய் சேகரித்த
மின்னல்களை ஒடித்து
மல்லிகையோடு மல்லிகையாய்
சரம் தொடுத்தேன்.

மீண்டும் ஒரு மாலைநேரத்தில்
உன் கூந்தலில் சூடிக்கொள்ள
உன் கண்களைப் பொத்திவிட்டு
மின்னல்சரத்தை நான் நீட்ட…
நீ கண் திறந்தாய்.

உன் கண்களை
நேர்கொண்டு பார்க்க முடியாமல்
சரசரவென சரிந்து விழுந்தன…
சரமாய்த் தொடுத்திருந்த
அத்தனை மின்னல்களும்!

“ம்ஹும்… இப்போ எதுக்கு வழவழனு அளந்துட்டு இருக்க… சின்னதா சொல்லத் தெரியாதா?”

“ம்ம்ம்…சரி”

உன் பார்வை பட்டதில்
குருடாகிப் போனது
மின்னல்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

9 comments:

  1. உங்களின் அனைத்து கவிதைகளையும் விரும்பி படிப்பேன்.. தொடர்ந்து காதலியுங்கள் நண்பா..

    ReplyDelete
  2. /*உன் பார்வை பட்டதில்
    குருடாகிப் போனது
    மின்னல்!*/

    அருமை அருட்பெருங்கோ

    ReplyDelete
  3. //*உன் பார்வை பட்டதில்
    குருடாகிப் போனது
    மின்னல்!*/

    அருமை அருட்பெருங்கோ//

    repeatu !!!

    ReplyDelete
  4. நன்றி!!!நன்றி!!!நன்றி!!!

    காதலித்துக்கொண்டே இருங்கள்!!
    இப்படிக்கு
    காதல்....

    ReplyDelete
  5. / உங்களின் அனைத்து கவிதைகளையும் விரும்பி படிப்பேன்.. தொடர்ந்து காதலியுங்கள் நண்பா../

    நன்றி ஜீவா,

    தொடர்ந்து கவிதையெழுதுங்கள்னு சொன்னாக்கூட அதுல கொஞ்சம் அர்த்தம் இருக்கும் :)

    ReplyDelete
  6. / /*உன் பார்வை பட்டதில்
    குருடாகிப் போனது
    மின்னல்!*/

    அருமை அருட்பெருங்கோ/

    நன்றி ப்ரியன்!!!

    ReplyDelete
  7. / //*உன் பார்வை பட்டதில்
    குருடாகிப் போனது
    மின்னல்!*/

    அருமை அருட்பெருங்கோ//

    repeatu !!!/

    நன்றி தல!!!

    ReplyDelete
  8. வாங்க சிநேகிதன்,

    / நன்றி!!!நன்றி!!!நன்றி!!!/

    ரிப்பீட்டே

    /காதலித்துக்கொண்டே இருங்கள்!!
    இப்படிக்கு
    காதல்..../

    எல்லாருமே ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல :)

    ReplyDelete
  9. / உன் கண்களை
    நேர்கொண்டு பார்க்க முடியாமல்
    சரசரவென சரிந்து விழுந்தன…
    ////


    உன் பார்வை பட்டதில்
    குருடாகிப் போனது
    மின்னல்!
    சூப்பெரோ சூப்பர்./

    நன்றிங்க delphine!!! (தமிழ்ல எப்படி உச்சரிக்கிறதுனு தெரியலைங்க மேடம் :))

    ReplyDelete