ஓரு நொடிக்கவிதைகள் - 2
ஓரு நொடிக்கவிதைகள் - 3
அகத்தின் அழகு முகத்திலாம்.
கண்ணாடியில் முகம் பார்த்தால்…
நீ!
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.
உன் கூந்தல் சேர்ந்த
பூவும்…
உன் பெயர்
தென்பட்ட இடமெல்லாம்
தேன்பட்ட இடம்.
நீ பேசும்போது மட்டும்
என் செல்பேசி
செல்சிணுங்கி.
மழை வந்தால்
மழலையாகிறாய்.
நான் மழையாகிறேன்.
செல்லமாய் உன்னிடம் கோபிக்கலாமென்றால்
செல்லத்தை மட்டும் அனுப்பி விட்டு,
கோபம் திரும்பி விடுகிறது.
உன் உதட்டோரம் ஒட்டியிருக்கும்
ஒரு பருக்கைப் போதும்.
என் காதல் பசியாற!
வெட்கத்தோடு
நீ பேசுகையில் புரிகிறது…
தமிழ் செம்மொழிதான்!
உனைக்கண்டதும் தென்றலாய் வருடி,
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறது,
காற்று!
உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது…
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!
நொடிக்கவிதைகள் - 5
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
சில கவிதைகள் புன்னகை பூக்க வைக்கின்றன.. சிலக் கவிதைகள் இன்னும் நல்லா எழுதியிருக்கலாமோ என எண்ண வைக்கின்றன.. எப்படியோ காதல் முரசு.. உன் ஒரு நொடிக் கவிதைகளுக்கு நான் ரசிகன்ய்யா... தொடரட்டும்
ReplyDeleteஎப்படி
ReplyDeleteஉங்களால் மட்டும் முடிகிறது...
"செல்லமாய் உன்னிடம் கோபிக்கலாமென்றால்
செல்லத்தை மட்டும் அனுப்பி விட்டு,
கோபம் திரும்பி விடுகிறது".
"உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது…
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!"
"உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஇடையில் வந்து போகிறது…
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!"
ரொம்ப அழகு இது.
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா. ஆனா இது தான் நிதர்சனம். இப்போவெல்லாம் மக்கள் செல்பேசியும் கையுமாக தான் எப்போதும் தென்படுகிறார்கள். அப்படி என்னதான் பேசுவாய்ங்களோ?
அருமை
ReplyDelete/சில கவிதைகள் புன்னகை பூக்க வைக்கின்றன.. /
ReplyDeleteஅதெல்லாம் தானா வந்ததா இருக்கும்...
/சிலக் கவிதைகள் இன்னும் நல்லா எழுதியிருக்கலாமோ என எண்ண வைக்கின்றன.. /
அதெல்லாம் நானா எழுதினதா இருக்கும் :)
/எப்படியோ காதல் முரசு.. உன் ஒரு நொடிக் கவிதைகளுக்கு நான் ரசிகன்ய்யா... தொடரட்டும்/
சரிங்க தல... உங்க வாழ்த்துக்களோடு தொடர வேண்டியதுதான்...
வாங்க எழில்,
ReplyDelete/ எப்படி
உங்களால் மட்டும் முடிகிறது.../
இதை விட அழகானக் காதல் கவிதைகள் தமிழ்மனத்துல நிறையவே இருக்குங்க...
வருகைக்கு நன்றி :)
வாங்க பிரேம்,
ReplyDelete/ "உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது…
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!"
ரொம்ப அழகு இது./
நன்றி தல :)
/எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா. ஆனா இது தான் நிதர்சனம். இப்போவெல்லாம் மக்கள் செல்பேசியும் கையுமாக தான் எப்போதும் தென்படுகிறார்கள். அப்படி என்னதான் பேசுவாய்ங்களோ?/
இது உங்ககிட்ட நாங்க கேட்க வேண்டிய கேள்வி :)
/ அருமை/
ReplyDeleteநன்றி ப்ரியன் :)
Some are very good as others said. Wish to read more. Read 8 things about you. Felt i was there and watching the debating competition...cd feel the happiness in the end.
ReplyDeleteவாங்க ப்ரியசகி,
ReplyDelete/Some are very good as others said. Wish to read more. Read 8 things about you. Felt i was there and watching the debating competition...cd feel the happiness in the end./
நன்றிங்க... மத்ததையும் படிச்சுட்டு சொல்லுங்க.
இத இத இதைத் தாங்க எதிர்பார்த்தேன்!! மேற்கோள் காட்ட நினைச்ச கவிதை எல்லாம் மத்தவங்களே போட்டுட்டாங்க.. நல்லாருக்கு அருள்!
ReplyDeleteஅருமை கவிஞரே! :)
ReplyDeleteஇந்த அலை இப்போதைக்கு ஓய்வது போல தெரிவதில்லை.
ReplyDeleteகலக்கி எடுத்திருக்கீங்க. டேவ் சொன்னது போல ஒரு சில கொஞம் சுமாரா இருக்கு. அதுக்குக் காரணம் அருட்பெருங்கோ கவிதைன்ன உடனே இந்த கமல், மணிரத்னம் படம் மாதிரி ஒரு எதிர்பார்ப்பு வந்துடுது அதான். ஆனா இதுல இருக்கிற பல கவிதைகளை அடிச்சுக்க முடியாது.
குறிப்பா கடைசி ஒண்ணு. காதல் வந்தா எல்லாமே மறந்து போகும்கறதை அவ்வளவு அழகா சொல்லீயிருக்கீங்க.
தொடரட்டும் காதல்(அருட்பெருங்கோ) ராஜ்ஜியம்
வாங்க காயத்ரி,
ReplyDelete/ இத இத இதைத் தாங்க எதிர்பார்த்தேன்!! மேற்கோள் காட்ட நினைச்ச கவிதை எல்லாம் மத்தவங்களே போட்டுட்டாங்க.. நல்லாருக்கு அருள்!/
ம்ம்ம் ஒரே மாதிரியும் தொடர்ந்து எழுதினால் சலித்து விடுமே (எனக்கல்ல, படிக்கிறவர்களுக்கு)..
நன்றிங்க...
வாங்க மேடம்,
ReplyDelete/ மழை வந்தால்
மழலையாகிறாய்.
நான் மழையாகிறேன்////
எப்படி அருட்பெருங்கோ இப்படி எழுத முடிகிறது??/
இங்க ஹைதராபாத்ல செம மழைங்க... அதான் :)
/ அருமை கவிஞரே! :)/
ReplyDeleteநன்றிங்க கப்பியண்ணா ;)
வாங்க நந்தா,
ReplyDelete/ இந்த அலை இப்போதைக்கு ஓய்வது போல தெரிவதில்லை./
பொழுது போகனுமே :)
/கலக்கி எடுத்திருக்கீங்க. டேவ் சொன்னது போல ஒரு சில கொஞம் சுமாரா இருக்கு. அதுக்குக் காரணம் அருட்பெருங்கோ கவிதைன்ன உடனே இந்த கமல், மணிரத்னம் படம் மாதிரி ஒரு எதிர்பார்ப்பு வந்துடுது அதான். ஆனா இதுல இருக்கிற பல கவிதைகளை அடிச்சுக்க முடியாது./
ஏன், ஏன் நந்தா ஏன்? ஏன் உங்களுக்கு இவ்வளவுப் பாசம்? ;)
/குறிப்பா கடைசி ஒண்ணு. காதல் வந்தா எல்லாமே மறந்து போகும்கறதை அவ்வளவு அழகா சொல்லீயிருக்கீங்க.
தொடரட்டும் காதல்(அருட்பெருங்கோ) ராஜ்ஜியம்/
ம்ம்ம்... பெரிய்ய்ய்ய நன்றிங்க வாழ்த்து மழைக்கு :)