Wednesday, July 18, 2007

நிந்திக்கும் நிழல்கள்

***

நம் சந்திப்புகள்

இரவில் வேண்டாமென நிந்திக்கின்றன…
நம் நிழல்கள்!

***

கதை சொல்கிறேனென சொல்லி
நீ சொல்வதெல்லாம் கதை.
செய்வதெல்லாமோ கவிதை!

***

முகம் துடைத்த
கைக்குட்டையைத் துவைக்காதே.
அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
அழகு படிந்ததை?

***

பிடித்துவிட எத்தனிக்கையில்
மறைந்து விடுகிறது வானவில்.
கூடவே என் வானமும்.

***

என் காதல் கேள்விகளுக்கு நீயே விடை என்றிருந்தேன்.
நீயோ கேள்விகள் எதுவுமின்றி என்னிடமிருந்து,
‘விடைபெற்றாய்’!

***

களிமண்ணை சிற்பம் ஆக்கினாய்.
பிறகு ஏனோ உடைத்துப் பார்த்தாய்.
மண்ணாகவே இருந்திருக்கலாம்!

***

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

9 comments:

  1. Nalla irukku.
    Why the shadow is crying?

    ReplyDelete
  2. / Nalla irukku.
    Why the shadow is crying?/

    காதலர்கள் பகலில் சந்தித்தால் நிழல்களும் சந்தித்துக் காதலிக்க முடியுமாம். காதலர்கள் இரவில் சந்தித்தால் நிழல்கள் என்ன செய்யும்? அதனால்தான் காதலர்களை இரவில் சந்திக்க வேண்டாமெனப் புலம்புகின்றன அவர்களுடைய நிழல்கள்.

    சரிதானே என்பீ?

    ReplyDelete
  3. அழகான கவிதைகள் நண்பா :-)

    ReplyDelete
  4. / அழகான கவிதைகள் நண்பா :-)/

    நன்றி தல :)

    ReplyDelete
  5. //
    காதலர்கள் பகலில் சந்தித்தால் நிழல்களும் சந்தித்துக் காதலிக்க முடியுமாம். காதலர்கள் இரவில் சந்தித்தால் நிழல்கள் என்ன செய்யும்? அதனால்தான் காதலர்களை இரவில் சந்திக்க வேண்டாமெனப் புலம்புகின்றன அவர்களுடைய நிழல்கள்.

    சரிதானே என்பீ? //

    Yes boss, I understood that.

    What I asked was different.

    I thought, the green letters represent real & the black letters represent shadows.

    And the black letters are carrying some sadness.

    thats why I asked why the shadow is crying.

    correct me if i am wrong.

    :)

    ReplyDelete
  6. வாங்க என்பீ,

    /Yes boss, I understood that.

    What I asked was different./

    நாந்தான் உங்க கேள்விய சரியா புரிஞ்சிக்கல :)

    /I thought, the green letters represent real & the black letters represent shadows.

    And the black letters are carrying some sadness.

    thats why I asked why the shadow is crying./

    பசுமையானக் காதல் கவிதைகளுக்கு பச்சை நிறம், சோகமான காதல் கவிதைகளுக்கு கருப்பு நிறம் கொடுப்பது என்பது என்னுடைய வழக்கம் :) எப்பவும் அது தனித்தனிப் பதிவுகளில் வரும். இங்கே ஒரே பதிவில் போட்டு விட்டதால் உங்களைக் கொஞ்சம் குழப்பிவிட்டது :) காதலுக்கும் நிறம உண்டுதானே?்

    /correct me if i am wrong.

    :)/
    நீங்க சரியாதான் கேட்டிருக்கீங்க... நாந்தான் குழ(ம்)ப்பிட்டேன்... :)

    ReplyDelete
  7. / முகம் துடைத்த
    கைக்குட்டையைத் துவைக்காதே.
    அழுக்கு படிந்ததைத் துவைக்கலாம்…
    அழகு படிந்ததை?///
    சூப்பெரோ சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்.:)/

    நன்றிங்க மேடம்!!!

    ReplyDelete
  8. kathalin enthachcheyalum kavithaithakal thane kavinjare...
    nice....

    ReplyDelete