Monday, May 05, 2008

காதல் (திங்)கள் (குரல் பதிவு)

நீ நினைக்கிறேன்.


நான் பேசுகிறாய்.


நமக்குள் காதல் வராமல்


என்ன செய்யும்?


 


*


 


பூக்களற்ற தீவுகளுக்கு


மணம்வீசப் பயணிக்கிறது.


உன் கூந்தலிலிருந்து


பிரிந்த இழையொன்று.


 


*


 


நேரில் கோபித்துக்கொண்டு


கனவில் வந்து கொஞ்சும்


மக்கு நீ!


 


*


 


குடையின்றி நீ வருகையில்


வெயிலுக்கும் மழைக்கும் சண்டை!


 


*


 


நீ நிலாச்சோறுண்ணும்


பௌர்ணமி இரவுகளில்


காதல் கள்ளுண்ணும்


நிலா!


 


இசையுடன் கேட்க : (நன்றி ஜோஷ்வா ஸ்ரீதர் ;))


[audio:kaadhal_thingal_arutperungo.mp3]

26 comments:

  1. //நீ நினைக்கிறேன்.

    நான் பேசுகிறாய்.

    நமக்குள் காதல் வராமல்

    என்ன செய்யும்?//
    :-)koonutteenga......!!
    first puriyala..... :-)
    ippo purinjathu....!!

    ReplyDelete
  2. //இழையொன்று//

    இழையா??? இலையா???


    இல்ல இதழா???

    ReplyDelete
  3. நன்றி ஸ்ரீ.

    இழை - thread/fibre!
    ஒரு முடிய குறிப்பிட்டேன்.

    ReplyDelete
  4. அடடா மாப்பி அட்டகாசம். இதை நீ பாட்டா பாடி இருந்தா நல்லா இருந்திருக்குமே! என்ன நான் சொல்றது ;)

    ReplyDelete
  5. எதுக்கு மாப்ள? இப்பவே மக்கள் பயந்து போயிருக்காங்க. இன்னும் வேற கொடும படுத்தனுமா? ;)

    ReplyDelete
  6. நல்ல கற்பனை.
    நல்ல கவிதைகள்.
    ஆனால், உங்கள் கவிதைகளில் தபூ சங்கரின் தாக்கம் நிறைய உள்ளதே?
    ஏன்? தவிர்க்கலாமே!!

    ReplyDelete
  7. ஆஷா பீட்டர்,

    நன்றிங்க. காதல் கவிதையெழதும்போது தபூசங்கர் தாக்கம் இல்லாம இருக்குமா?

    மாத்திக்கப் பாக்கறேன்!!

    ReplyDelete
  8. Good words...

    :)))))))



    Senthil,
    Bangalore

    ReplyDelete
  9. நன்றிங்க செந்தில்!

    ReplyDelete
  10. கலக்கற மாப்ள

    ReplyDelete
  11. கவிதை வழக்கம்போல அருமை.. குரல் என்னவோ ரொம்ப தயக்கமா இருக்கு..

    ReplyDelete
  12. அடலேறு, நன்றிங்க!

    முத்தக்கா, நன்றி! ம்ம்ம் நண்பர்களும்கூட அதான் சொன்னாங்க...குரல் நடுங்குதுன்னு... இதுக்கெல்லாம் பயிற்சி வேணும் போல :)

    ReplyDelete
  13. Unga kavidhaigal, kadhai ellam romba nalla iruku

    Romba Nalla yosikareenga, Innum Nalla Yosikka Vazhthukal

    ReplyDelete
  14. வாசிப்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க செல்வா!

    ReplyDelete
  15. kavidhai ellame superb........really i enjoyed a lot........i expect more

    ReplyDelete
  16. again superb....

    how does it possible a.perungo?

    all are supebs...

    unmelaye kalakurenge arutpesungo...

    ReplyDelete
  17. மஞ்சு, மஸ்தான்,

    இருவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  18. இனி பகலில் முத்தமிடாதே.
    நிழல்கள் வெட்கப்படுகின்றன.

    *

    nalla karppanai

    பூக்களற்ற தீவுகளுக்கு

    மணம்வீசப் பயணிக்கிறது.

    உன் கூந்தலிலிருந்து

    பிரிந்த இழையொன்று.
    sathiyama konittinga... oh my god wat a imagination...ethanai oru naesam..

    ReplyDelete
  19. //நீ நினைக்கிறேன்.

    நான் பேசுகிறாய்.

    நமக்குள் காதல் வராமல்

    என்ன செய்யும்?//

    - arrambame asaththal, konjam confiuse irundhathu..but suuuuuuuuuuuper........

    ReplyDelete
  20. Kavithayil, kaathalai katchithamaai kakki irukkureergal :)
    athanai arumai...

    ReplyDelete
  21. பொன்னக், ரீகன், கலை,

    மூவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  22. hmmm...:) naan ninaithadhai neengal pesi irukkireergal...:) padikkum bozhudhu zha na mattum parthirukkalame...? matra badi kavidhai arumai.... ungal kural (enakku bojanam kidaikka vittaalum parava illai...!? ;)) inimai...!:)

    ReplyDelete
  23. அழகான மயிலறகால் மனதுக்கு மிக பிடித்தவர் வருடும் சுகமாய் இதமான வரிகள் வாழ்த்துக்கள் பெருங்கோ அவர்களே

    ReplyDelete