Friday, May 16, 2008

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 2

அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - முதல் பகுதி

மறுபடியும் இருவரும் தனியாக சந்தித்துப் பேசிய போது சொன்னாள்,

"சத்தியமா உன்னோடப் பிறந்த நாளன்னைக்கு நீ சொன்னப்போ எனக்கு உம்மேல 1% கூடக்
காதல் இல்ல, ஆனா அதுக்கப்புறம் நீ என்ன avoid பண்ணப்போ தான் நான் உன்ன ரொம்ப
மிஸ் பண்ணேன். உன்னப் பார்க்காமலே இருந்திருந்தாக் கூடப் பரவால்ல, ஆனா தினமும்
உன்னப் பார்த்தும், பேசாம இருக்கிறது எனக்கு என்னமோ மாதிரி இருந்தது.நல்லா
யோசிச்சுட்டுதான் முடிவு பண்ணியிருக்கேன், when we miss someone, we really
love them! I missed u so much!"

அவனுக்கு ஒருபக்கம் சந்தோசமாய் இருந்தாலும் ஒருபக்கம் தயக்கமாகவும் இருந்தது.
அவனுடையத் தகுதிக்கு அவள் அதிகமோ என்று யோசித்தாலும் அவளும் முழுமையாக தன்னைக்
காதலிக்கிறாள் என்பதே அவனுக்கு பெரும் தைரியத்தைக் கொடுத்தது.
அதற்குப்பிறகு இரண்டு வருடமாய் அவர்கள் ஒன்றாய் சினிமாவுக்கு சென்றதில்லை;
ஐஸ்க்ரீம் பார்லரில் மணிக்கணக்கில் பேசியதில்லை; பூங்காவில் உட்கார்ந்து
அரட்டையடித்ததில்லை, ஆனால் காதலித்தார்கள். கடைசி வருடம் முடியும்போது அவனுக்கு
சென்னையில் நல்ல வேலை கிடைத்திருந்தது. அவள் மேலேப் படிக்க பெங்களூரில் ஒரு
கல்லூரியில் சேரப் போவதாக சொல்லியிருந்தாள். கடைசி நாள் இருவரும் பிரியும்போது
அவன் கையைப் பிடித்துக் கொண்டு அவள் பேசினாள் : "அருள் நான் MBA முடிக்க
இன்னும் ரெண்டு வருஷம் ஆகும், அப்புறம் ஒரு வருஷத்துக்குள்ள எங்க வீட்ல எனக்கு
அலைன்ஸ் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க, அதுக்குள்ள நீ தான் வந்து எங்க
அப்பாகிட்டப் பேசனும்!"

"நான் வந்து பேசறதுக்கு முன்னாடி நீயும் சொல்லி வை"

"இல்ல அருள், நான் பேசற சூழ்நிலைல எங்க வீடு இல்ல, நீ தான் பேசனும்!"

"சரி விடு, அதுக்கு இன்னும் நாள் இருக்கு, டைம் வரும்போது பார்த்துக்கலாம்"
மூன்று வருடத்துக்கு முன்னால் நடந்ததையெல்லாம் அசை போட்டுக் கொண்டிருந்தான்
அருள்.

"டேய் அருள், என்னடா இந்த நேரத்துல ஃபோன் பண்ணி பாருக்கு வரச் சொல்லியிருக்க!
உனக்கு என்ன ஆச்சு???"

"மொதல்ல உட்காருடா, வினோத்" என்று சொல்லிவிட்டு, வெயிட்டரிடம் ஆர்டர்
பண்ணினான்.

"ரெண்டு 5000 பியர், teachers ஒரு ஆஃப், கிங்ஸ் ஒரு பாக்கெட்"

""டேய் என்னடா இதெல்லாம்? நீ செகண்ட் இயர்லயே தண்ணி அடிக்கிறத நிறுத்தினவன்
தான? உனக்கு இப்ப என்ன ஆச்சு?"

கேட்ட வினோத்திடம் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த கடிதத்தை எடுத்து
நீட்டினான்.
----------
அருள்,

மூனு மாசமா உங்கிட்டப் பேசாம இருக்கிறதுக்கு மொதல்ல என்ன மன்னிச்சுடு. என்னால
அதத்தவிர வேற எதுவும் பண்ண முடியல.

எனக்கு எப்படி சொல்றதுனுத் தெரியல எங்க வீட்ல எனக்கு சீரியஸா மாப்பிள்ள பார்க்க
ஆரம்பிச்சுட்டாங்க.

இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எனக்குக் கல்யாணம் பண்றதுனு முடிவு பண்ணிட்டாங்க.
எங்க அப்பாவும் அம்மாவும் என்னப் பத்தி பேசிக்கிறதப் பார்த்தா அவங்க கனவெல்லாம்
வேற மாதிரி இருக்கு. இப்பப் போய் நான் நம்ம விஷயத்த சொன்னா ஏத்துப்பாங்கங்கற
நம்பிக்கை எனக்கு சுத்தமா இல்ல!

நடக்காதத நம்பிட்டு இருக்கிறதவிட நடக்கப் போறதையே ஏத்துப்போம்னு அவங்கக் கனவையே
நிறைவேத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன்! எங்க வீட்டோட + என்னோட நிலமைய இன்னும்
விரிவா சொல்லி உன்னக் காயப்படுத்த வேணாம்னுதான் இவ்வளவு சுருக்கமா
எழுதியிருக்கேன்.

நான் சொல்றத நீ புரிஞ்சிப்பேன்னு நெனைக்கிறேன். என்ன மறந்திடுனு சொல்லல, ஆனா
என்னையே நெனச்சிட்டு இருக்க வேண்டாம்.

- இப்படிக்கு இளவரசி.

( இதப் பத்தி எதுவும் பேச என்ன நேர்ல சந்திக்க முயற்சி பண்ண வேணாம். அது என்னோட
வேதனையக் கண்டிப்பா அதிகப் படுத்தும்! )

----------

"அருள், உங்களுக்குள்ள எதுவும் பிரச்சினை இல்லியே? நல்லாத்தானப் போய்கிட்டு
இருந்தது"

"ம்ம்ம்…நல்லா தான் போயிக்கிட்டு இருந்தது…ஆனா இப்படி மொத்தமாப் போகப்போகுதுனு
அப்போத் தெரியலையே"

ஒரு பியரையும் முழுசாகக் குடித்துவிட்டு, teachersஐயும் ரெண்டு லார்ஜ்
கவிழ்த்தான்.

வெளியே வாங்கி வந்திருந்த ஊறுகாய் பாக்கெட்டைப் பல்லால் கடித்து உள்ளேப்
பிதுக்கி விட்டு, ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

அதுவரை அமைதியாய் இருந்த வினோத் புரியாமல் கேட்டான், "நீ என்னடா சொல்ற, எனக்கு
ஒன்னும் புரியல!"
"மொதல்ல இருந்தே சொல்றேண்டா! நான் தான் அவகிட்ட மொதல்ல காதலிக்கிறேன்னு
சொன்னேன். அவ அதுக்கு மறுத்துட்டதுக்கப்புறம் நான் அவகிட்டப் பேசறதயே
நிறுத்தியிருந்தேன். அப்புறம் ஆறு மாசமா அவ எங்கிட்டப் பேசறதுக்கு வந்தப்ப
எல்லாம் நான் அவகிட்டப் பேசவே இல்ல. சில சமயம் நம்ம ஃபிரெண்ட்ஸ்ங்க முன்னாடியே
அவளத் திட்டியிருக்கேன், ஆனா அவக் கண்டிப்பா என்னக் காதலிப்பான்னு ஒரு
நம்பிக்கை மட்டும் இருந்துச்சு"

"இதெல்லாமே நீ சொல்லியிருக்கியேடா , அப்புறம் அவளே வந்து உங்கிட்ட I love you
சொன்னதாக இல்ல சொன்ன"

"I love you னு சொன்னா, I will marry you னு சொல்லலையே" விரக்தியில் பேசினான்.

அதற்குள் மேலும் மூன்று லார்ஜ் இறங்கியிருந்தது.

"அவ நல்லப் பொண்ணுதாண்டா… ஆனா அவங்க அப்பாவுக்கு ரொம்ப பயப்படுவா… காலேஜ்ல
படிச்சப்பவே என்னோட வெளிய எங்கேயும் வந்ததில்ல…அவ்வளவு ஏன் காலேஜ் லைப்ரரி,
கேண்டீன விட்டு வேற எடத்துல நாங்க சந்திச்சதே இல்ல! ஒரு வேளை இந்த விஷயத்த
வீட்ல சொல்லி அவங்க அப்பா மறுத்துட்டாரோன்னும் என்னால யோசிக்க முடியல… ஏன்னா
அவங்க அப்பாகிட்ட இத சொல்ற அளவுக்கெல்லாம் அவளுக்கு தைரியம் கிடையாது!
அவருக்கேத் தெரிஞ்சு போயிதான் அவசர அவசரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு
பண்ணிட்டார்னு நெனைக்கிறேன்! கால் பண்ணாலும் போகல…நம்பர் மாட்டிட்டாப் போல… அவ
ஃப்ரெண்ட்ஸ்க்கு கால் பண்ணாலும் கால கட் பண்றாங்க!"

"சரி விடு மச்சி… உன்னக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு கொடுத்து வைக்கல"

"எப்படிடா இத்தன வருசமா உருகி உருகி காதலிச்சுட்டு இன்னொருத்தங்களக் கல்யாணம்
பண்ணிக்க முடியும்?" கண்ணீர் வந்தே விட்டது அவனுக்கு. தண்ணீர் ஊற்றி முகத்தைக்
கழுவிக்கொண்டான்.

"சாப்பிட்றது , ட்ரெஸ் பண்ணிக்கிறதுனு சின்ன விசயத்துல எல்லாம் எது புடிக்கும்
எது புடிக்காது சொல்றப் பொண்ணுங்க இந்த லைஃப் விசயத்துல மட்டும் ஏண்டா இப்படி
இருக்காங்க?"

" "

"ஏண்டா எல்லா அப்பாங்களுமே காதல எதிர்க்கறாங்க? அந்தாளு ஏண்டா கவித மாதிரி
பொண்ணப் பெத்துட்டு காதலுக்கு எதிரியா இருக்காரு?"

"மச்சிப் போதும்டா… நீ இப்போ போதைல இருக்க, நாம நாளைக்குப் பேசலாம், இப்ப
போதும் எந்திரிடாப் போகலாம்"

"நான் இப்பதாண்டாத் தெளிவா இருக்கேன். அந்தாள என்னப் பண்ணனும்னு எனக்குத்
தெரியும்டா"

அன்றைக்கு ஒருவழியாய் அவனை அவன் வீட்டுக்குக் கொண்டுபோய் சேர்த்துவிட்டான்,
வினோத்.
அதற்குப் பிறகு அருளிடம் இதைப்பற்றி அவன் எதுவும் பேசவில்லை.

அந்த வெள்ளிக்கிழமை அருள் அவனுக்கு ஃபோன் பண்ணியிருந்தான்.

"டேய் வினோத் நீ நாளைக்கு ஃப்ரியா?"

"ஏண்டா, ஒன்னும் வேலை இல்ல, சொல்லு!"

"இன்னைக்கு நைட் நாம கோயம்புத்தூர் போறோம் ரெடியா இரு, நான் வந்து உன்ன பிக்கப்
பண்ணிக்கிறேன்"

இளவரசி வீட்டுக்குத்தான் போகிறான், என்று யூகித்தாலும் எதற்காகப் போகிறான்
என்று அவனால் யோசிக்க முடியவில்லை.

அன்றைக்கு போதையில் அவன் பேசியதை நினைத்துப்பார்த்து விட்டு அவனுடன் செல்வதே
நல்லதென்று முடிவு செய்தான்.
சனிக்கிழமை காலை ஏழு மணி. கோயம்புத்தூரில் இளவரசி வீட்டின் முன் இருவரும்
நின்று கொண்டிருந்தார்கள்.

"டேய் இப்பவாது சொல்லுடா, எதுக்கு வந்திருக்கோம்னு"

"உள்ள வந்து கவனி"

அந்த பங்களாவின் உள்ளே நுழைந்தார்கள். முன்புறம் உள்ள புல்வெளியில் சேரில்
அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பவர்தான் இளவரசியின் அப்பாவாக இருக்க
வேண்டும் என்பது யாரும் சொல்லாமலே அவர்களுக்கு தெரிந்தது.

அவரை நெருங்கியதும் அருள் பேச ஆரம்பித்தான்.

"சார், மிஸ்டர் சுந்தரம்…"

"நான் தான் , உங்களுக்கு என்ன வேணும்?"

"உங்க கிட்டக் கொஞ்சம் பேசனும்"

"சொல்லுங்க" பேப்பரை மடித்து வைத்துவிட்டு, அவர்களைக் கவனித்தார்.

( அடுத்தப் பகுதி )

11 comments:

  1. ம்ம்ம் டாப் கியர்ல்ல தூக்குதுப்பா கதை காதல் முரசு கலக்குறப்பா

    ஜனவரி 09, 2007 காலை 10:28

    ReplyDelete
  2. ம்ம்..நெக்ஸ்ட்..!!

    ஜனவரி 09, 2007 காலை 10:41

    ReplyDelete
  3. அண்ணா... காதலண்ணா...

    திடீர் திருப்பங்கலெல்லாம் படு வேகமா வருது...

    அடுத்தது எப்போ?

    ஜனவரி 09, 2007 காலை 10:44

    ReplyDelete
  4. உள்ளேன் ஐயா

    ஜனவரி 09, 2007 காலை 10:51

    ReplyDelete
  5. என்னாது...நேரடி மோதலா? பார்க்கலாம்..என்னதான் நடக்குதுன்னு. சிங்கத்தோட
    குகையிலேயே போய் சந்திச்சது சிங்கத்தையா அசிங்கத்தையான்னு அடுத்த பகுதியில
    தெரிஞ்சிரும். :-)

    ஜனவரி 09, 2007 காலை 10:54

    ReplyDelete
  6. அட கதைலயும் காதல்தானா காதல் கவிஞரே???

    கலக்கறீங்க :)

    ஜனவரி 09, 2007 மாலை 6:32

    ReplyDelete
  7. ஓ!... ஆசை ஆசையாக மனதில் வளர்த்த காதல் இப்படி சோகமாப் போச்சே?

    காதலித்தவளை மறந்து வாழ்வது என்பது முடியாத காரியம் இல்லையா?

    சரி... இப்போ நேரடி மோதலுக்கு போய் விட்டீங்க. முடிவு என்ன என்று அடுத்த
    அங்கத்தில் பார்ப்போம்.

    ம்... கதை நகர்வு நன்று அருள்!

    ஜனவரி 09, 2007 மாலை 7:22

    ReplyDelete
  8. இளவரசியாக ஜெனீலியா,அருளாக பரத்,இளவரசியின் அப்பாவா நாசரா இல்லை மௌலியா??

    டாப் கிளாஸ்.அடுத்து எப்போ???

    ஜனவரி 09, 2007 இரவு 8:08

    ReplyDelete
  9. climax எப்போ???

    ஜனவரி 10, 2007 இரவு 1:42

    ReplyDelete
  10. heart touching styory my dear

    ReplyDelete