காரக்குழம்பு வைத்தால் காரமாக இருக்க வேண்டுமென்பதன் புரிதலில் உப்புமா என்றால் உப்பாக இருக்க வேண்டுமென என் அக்கா தவறாக புரிந்து கொண்ட ஒரு காலைப்பொழுதில் தட்டில் வைத்த உப்புமாவை தொடாமல், தொட்டுக்கொள்ள வைத்திருந்த சர்க்கரையை மட்டும் உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் ஜனனி. அதைக் கவனித்த அக்கா, ‘ஜனனி, இப்போ ரெண்டு பேர்ல யார் மொதல்ல சாப்பிட்றாங்கன்னு பாக்கலாம் சரியா? தட்டுல எதுவும் மிச்சம் வைக்கக் கூடாது.’ என்று சொல்லிவிட்டு அக்காவும் சாப்பிட ஆரம்பிக்க, என்ன செய்வதென்று புரியாமல் தவித்த ஜனனி, உப்புமாவை உருண்டை உருண்டையாக உருட்டி, அக்கா குனியும்போது, பக்கத்திலிருந்த நாற்காலிக்கு அடியில் உருட்டிவிட ஆரம்பித்தாள். நான்காவது உருட்டலில் இதனைக் கவனித்து விட்ட அக்கா, நாற்காலிக்கடியில் நான்கு உப்புமா உருண்டைகளைப் பார்த்ததும், ஜனனியைப் பார்த்து முறைத்தார். சற்றும் தாமதிக்காமல் ஜனனியிடமிருந்து பதில் வந்தது – ‘அம்மா, அந்த எறும்புங்க எல்லாம் பாவம்தான? அதுக்கெல்லாம் பசிக்கும் தான? அதுக்குதான் நான் உப்புமா போட்டேன்!’
*
அக்கா : ‘வெயில் காலத்துல தண்ணி ஜில்லுனு குடிக்காத பாப்பா’
ஜனனி : ‘அப்போ night காலத்துல?’
*
அக்கா : ‘துணி தேய்க்கறவங்களே ரெண்டு நாளா வரல. தொவச்ச துணியெல்லாம் அப்படியே இருக்கு’
மாமா : ‘அவங்க வரலன்னா, முன்னாடியிருக்கிற கடைல கொடுக்க வேண்டியதுதான’
ஜனனி : ‘ஐயோ, ரெண்டு பேரும் ஏன் இப்படி வம்பு பண்றீங்க? Iron box மேல தான இருக்கு. எடுத்து தேய்ங்களேன்!’
அக்காவும், மாமாவும் கப்சிப்.
*
ஜனனி : ‘மாமா, அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் தனியா கரூர்ல அம்மாச்சி வீட்டுக்கு போனேனே’
நான் : ‘அப்பறம் ஏன் அம்மாகிட்டப் போறேன்னு அடுத்த நாளே திருப்பூர் ஓடிட்ட?’
ஜனனி : ‘நான் தூங்கும்போது அம்மா காத பிடிச்சுட்டு தான தூங்குவேன்? கரூர்ல அம்மாச்சி காதுதான் இருந்தது. அதான் திருப்பூர் போயிட்டேன்’
*
அக்கா : ‘குட்டி, இவளுக்கு ஸ்கூல் லீவ் விட்டதுல இருந்த எப்போ பாத்தாலும் அந்த tom & jerry CD யே போட்டு பாத்துட்டு இருக்கா. Tom & jerry பைத்தியமாவே ஆகப்போறான்னு நெனைக்கிறேன்’
அக்காவிடமிருந்து செல்பேசியைப் பிடுங்கி ஜனனி சொன்னாள் – ‘மாமா, அம்மா எப்போ பாத்தாலும் சீரியலே பாத்துட்டு இருக்காங்க. சீரியல் பைத்தியமாவே ஆகப்போறாங்க’
*
கடந்த வாரம் குடும்பம் மொத்தமும் சென்னையில் இருந்த போது ஜனனிக்கு தூக்கம் வருகிற நேரம் மட்டும் எல்லோரும் காணாமல் போய்விடுவார்கள். பின்ன என்னங்க? கத சொன்னா தூங்கனும். திரும்ப திரும்ப கதையே கேட்டுட்டு இருந்தா? அவள கத சொல்லி தூங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்து நான் உளற ஆரம்பிச்சுட்றேன். அவளுக்கு கரடிக்கதை சொல்லிட்டே வந்து தூக்கத்துல சுந்தரா ட்ராவல்ஸ் ஓட்ட ஆரம்பிச்சுட்றேன். முதல் கத சொல்லும்போது ஒவ்வொரு வரிக்கும் ‘அப்பறம் மாமா’ ன்னு கேட்டுட்டே வருவா. கொஞ்ச நேரத்துல அது ‘அப்பறம்’ னு சுருங்கும். இன்னும் கொஞ்சம் கதை ஓட்டினோம்னா, அந்த ‘அப்பறமும்’, ‘ம்ம்ம்’ னு சின்னதாகிடும். அப்புறம் நாந்தான் கத சொல்லிட்டே இருப்பேன் அவகிட்ட இருந்து சத்தமே இருக்காது. மெதுவா அவ கைய எடுத்துட்டு, போர்வைய போத்தினதும், போர்வைய விலக்கிட்டு, காத பிடிச்சுட்டு ‘வேற கத சொல்லு மாமா’ னு மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிப்பா பாருங்க.. எனக்கு அப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சுடும். அடுத்து அவளுக்கு சொல்றதா வாக்கு கொடுத்திருக்கிற கதையோட பேரு – ‘அஞ்சு தல யான முட்டக் கத’. உங்களுக்கு யாருக்காவது இந்த கதை தெரியுமா?
//ஜனனி : ‘அப்போ night காலத்துல?’//
ReplyDeleteமாப்பி இது தான் டாப்பு :) . நானும் சின்ன புள்ளையா இருந்தப்ப இப்படித்தான் புத்திசாலியா இருந்தேனாம். அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.
அப்போ இப்போன்னு கேக்குற எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். "இப்போ அதிபுத்திசாலி ஆகிட்டேன்." (ஏய் யார்ரா அது கூட்டத்துல சிரிக்கிறது?).
//அவள கத சொல்லி தூங்க வைக்கிறதுக்குள்ள எனக்கு தூக்கம் வந்து நான் உளற ஆரம்பிச்சுட்றேன். //
ReplyDeleteமகளுக்கு படுக்கையில் கதை சொல்லப் போய் நான் உளறின நாட்கள் பல :). இப்பல்லாம் கதை சொல்வதற்குப் பதிலாக, கதை வாசிப்பதால், ஓரளவு விழிப்பாக இருக்க முடிகின்றது.
:-) Janani chooooooooo chweetttttttttttt.....!!
ReplyDelete//‘அஞ்சு தல யான முட்டக் கத’//
anna enakkum intha kathai sollunga.....!! ;-)
\\அம்மா, அந்த எறும்புங்க எல்லாம் பாவம்தான? அதுக்கெல்லாம் பசிக்கும் தான? அதுக்குதான் நான் உப்புமா போட்டேன்\\
ReplyDelete;-))))
என்னாத்த சொல்ல....அனுபவி ராசா அனுபவி ;))
@ஸ்ரீ,
ReplyDelete/மாப்பி இது தான் டாப்பு . நானும் சின்ன புள்ளையா இருந்தப்ப இப்படித்தான் புத்திசாலியா இருந்தேனாம். அம்மா அடிக்கடி சொல்லுவாங்க./
இந்த அம்மாக்களே இப்படிதாம்ப்பா நெறைய பொய் சொல்லுவாங்க ;)
/அப்போ இப்போன்னு கேக்குற எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். “இப்போ அதிபுத்திசாலி ஆகிட்டேன்.”/
நீயும் அம்மா மாதிரிதானா?
/(ஏய் யார்ரா அது கூட்டத்துல சிரிக்கிறது?)./
ப்ளீஸ் யாரும் சிரிக்காதீங்கப்பா!
/மகளுக்கு படுக்கையில் கதை சொல்லப் போய் நான் உளறின நாட்கள் பல :)./
ReplyDeleteம்ம்ம் அக்காவும் இதேதான் சொல்றாங்க ;)
/இப்பல்லாம் கதை சொல்வதற்குப் பதிலாக, கதை வாசிப்பதால், ஓரளவு விழிப்பாக இருக்க முடிகின்றது./
ம்ம்ம் தூங்க வைக்கும்போது எப்படி வாசிக்கிறது? அதனால தூங்கிட்டே சொல்ல வேண்டியாதுதான் :)
/Janani chooooooooo chweetttttttttttt..!!/
ReplyDeleteநன்றி நன்றி!
//‘அஞ்சு தல யான முட்டக் கத’//
anna enakkum intha kathai sollunga..!!
உஸ்ஸ்ஸ்ஸப்பா... இங்கயே கண்ணக்கட்டுதே!
/என்னாத்த சொல்ல.அனுபவி ராசா அனுபவி ;))/
ReplyDeleteம்ம்ம் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான. அவ வளர்ந்துட்டா அந்த குழந்தைத்தனம் போயிடும்ல? ;)
Interesting.!
ReplyDeleteஎனக்கும் அந்தக் கதை தெரியாது. சொல்லுங்களேன்.!
ஹா ஹா ஹா
ReplyDeleteகுழந்தைகளே குறும்புதான் அழகுதான். ரசித்தேன். ரசித்தேன்.
ஆரம்பவரிகள் அசத்தல்.. அப்பறம் ஜனனி எப்பவுமே அசத்தலாதான் எதயும் செய்வான்னு தான் தெரியுமே.. அயர்ன் பாக்ஸ் விசயம் சூப்பர்.
ReplyDelete:))))))
ReplyDelete/Interesting.!/
ReplyDelete:)
/எனக்கும் அந்தக் கதை தெரியாது. சொல்லுங்களேன்.!/
சுந்தர் என்ன வச்சு நீங்க எதுவும் காமெடி பண்ணலையே?
/ஹா ஹா ஹா
ReplyDeleteகுழந்தைகளே குறும்புதான் அழகுதான். ரசித்தேன். ரசித்தேன்./
நன்றிங்க தல. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க போல :) இப்போ எந்த நாட்டுல/ஊர்ல இருக்கீங்க?
/ஆரம்பவரிகள் அசத்தல்.. அப்பறம் ஜனனி எப்பவுமே அசத்தலாதான் எதயும் செய்வான்னு தான் தெரியுமே.. அயர்ன் பாக்ஸ் விசயம் சூப்பர்./
ReplyDelete:) ஜூன் மாசத்துல இருந்து பள்ளிக்கூடம் போகப்போறா. அந்த மிஸ்சுங்கள நெனச்சாதான் பாவமா இருக்கு!
சிரிப்புக்கு நன்றிங்க பொன்வண்டு ;)
ReplyDelete/
ReplyDeleteமெதுவா அவ கைய எடுத்துட்டு, போர்வைய போத்தினதும், போர்வைய விலக்கிட்டு, காத பிடிச்சுட்டு ‘வேற கத சொல்லு மாமா’ னு மறுபடியும் ஃப்ரெஷ்ஷா ஆரம்பிப்பா பாருங்க.. எனக்கு அப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சுடும்.
/
ராசா கண்ணை கட்டட்டும்!! கட்டட்டும்!!!!
நல்லா எழுதியிருக்க!
How sweet. எத்தனை வயசாகுது ஜனனிக்கு? இப்படித்தான் எங்க பையன் அவனீஷ் என் அண்ணாகிட்ட ஒரு கூத்து பண்ணான். அன்னைக்கு அமைதியான எங்க அண்ணன் அதுக்கப்பறம் பேசவே இல்லை இந்த பயகிட்ட :)
ReplyDeleteஅண்ணன் தன் புது digicamல foto எடுக்க அவனீஷ கூப்பிட்டான். அவனும் போஸ் குடுத்தான், சரியா வரலன்னு "தம்பி திரும்பி நில்லு(இன்னொரு என்பதை எங்க ஊர் slangல திரும்பின்னு சொல்வாங்க) இன்னொன்னு எடுக்கறேன்னு" சொன்னான்.உடனே அவனீஷ் திரும்பி நின்னு (right about turn) "இப்ப எடுங்க மாமா" அப்படின்னு சொன்னான். அண்ணன் stunned :) அப்போ அவனீஷ்க்கு 2 வயசு!
நன்றி
தீக்ஷண்யா
/ராசா கண்ணை கட்டட்டும்!! கட்டட்டும்!!!!/
ReplyDeleteநல்லாருய்யா!!!
/நல்லா எழுதியிருக்க!/
:)
/How sweet. எத்தனை வயசாகுது ஜனனிக்கு?/
ReplyDeleteமூனு வயசாச்சுங்க!
/இப்படித்தான் எங்க பையன் அவனீஷ் என் அண்ணாகிட்ட ஒரு கூத்து பண்ணான். அன்னைக்கு அமைதியான எங்க அண்ணன் அதுக்கப்பறம் பேசவே இல்லை இந்த பயகிட்ட
அண்ணன் தன் புது digicamல foto எடுக்க அவனீஷ கூப்பிட்டான். அவனும் போஸ் குடுத்தான், சரியா வரலன்னு “தம்பி திரும்பி நில்லு(இன்னொரு என்பதை எங்க ஊர் slangல திரும்பின்னு சொல்வாங்க) இன்னொன்னு எடுக்கறேன்னு” சொன்னான்.உடனே அவனீஷ் திரும்பி நின்னு (right about turn) “இப்ப எடுங்க மாமா” அப்படின்னு சொன்னான். அண்ணன் stunned அப்போ அவனீஷ்க்கு 2 வயசு! /
அவனீஷும் சுட்டிதான் போல :) இதெல்லாம் பதிவு பண்ணி வையுங்க வளந்தபின்னாடி படிச்சுப்பாத்தாங்கன்னா சிரிச்சுக்குவாங்க இல்ல ;)
ஜனனி பாப்பா ஒரே ஜாலி பாப்பா போல அவள எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க நான் 5தலை யானை முட்டை கதை நிறைய சொல்றேன் :)
ReplyDeleteSo Sweet....
ReplyDelete/ஜனனி பாப்பா ஒரே ஜாலி பாப்பா போல அவள எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க நான் 5தலை யானை முட்டை கதை நிறைய சொல்றேன்/
ReplyDeleteம்ம்ம் அழைச்சிட்டு வந்துட்டாப் போச்சு... ஒரு கதையெல்லாம் யோசிச்சு வச்சிட்டு கூப்பிட்டீங்கன்னா உங்க பாடு திண்டாட்டம் தான் ;) நெறைய யோசிச்சுட்டு சொல்லுங்க!
நன்றி மரகதவல்லி!
ReplyDeleteNalla irukku story telling....enga vettila kuda ithe kathai than thinamum..yen ponnukku oru periya kathaiyum apuuram athu noda kutty kathaiyum sollanum....kathai solla arambichale namma kannai kattidum...rombave sirichen..rasichen..unga janani kuttyai...
ReplyDeleteநன்றிங்க சிந்துசுபாஷ்.
ReplyDeleteஉங்க பொண்ணுக்கு ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம்னு பழக்கிட்டீங்களோ? ;)
அவங்களுக்கு கதை சொல்றத சொன்னாலே பெரிய கதையாதான் வரும்!
http://aagaayanathi.blogspot.com/2008/05/1.html - 5தலை யானை முட்டை கதை
ReplyDeletehttp://aagaayanathi.blogspot.com/2008/06/2.html- 5தலை யானை முட்டை கதை -2
ReplyDeletehttp://aagaayanathi.blogspot.com/- 5தலை யானை முட்டை கதை -3
ReplyDeleteநன்றி அண்ணா!
@சுபா,
ReplyDeleteநன்றி நன்றி நன்றி.
இனிமே தங்கச்சிங்களுக்கெல்லாம் ரோல் நம்பர்தான் கொடுத்தாகனும் போல இருக்கு ;)
கவிதையும் எழுத ஆரம்பிச்சுட்டீங்க. கலக்குங்க!
Cute janani.........
ReplyDeleteநன்றி செல்வா!
ReplyDeleteSuper
ReplyDeleteshe is cuteeeeeeeee.....
ReplyDelete