Tuesday, May 13, 2008

காதலும் கோபமும்

உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்


கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.


மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்


உன் வெட்கத்தைப் போலன்றி


சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது


உன் கோபம்.


 


அந்த ஒரு நொடி


என் காதல் காயப்படுவதெல்லாம்


உன் கோபங்களுக்கு புரிவதில்லை.


 


ஆனாலென்ன?


மழையாக விழுந்தாலும்


வெள்ளமாக அடித்தாலும்


கடலாக அணைத்தாலும்


நிலத்துக்கு நீர் நீர் தான்!




ஊடலில் பிரிந்தாலும்


பேசாமல் மௌனித்தாலும்


கோபமாக முறைத்தாலும்


எனக்கு நீ நீ தான்!


 


துயரம் தானென்றாலும்


உன் கோபங்களை வரவேற்க


என் கோபங்களுக்கு என்றும் அனுமதியில்லை.


 


ஒரு மௌனம்


ஒரு மன்னிப்பு


ஒரு சின்னக் காதல்


எப்பொழுதும் இவை மட்டுமே


என்னிடமிருந்து எட்டிப்பார்க்கும்.


 


கோபங்கள் களையப்பட்டு


நிர்வாணமான உன் மனம்


காதலையணிந்து கொண்டு கெஞ்சும் :


‘இனிமே கோபமாப் பேச மாட்டேண்டா’


 


அடிப்போடி…


உனக்கிருக்கும் காதலுக்கு


நீ இன்னும் நூறு மடங்கு கோபிக்கலாம்!

35 comments:

  1. :-) very nice poems....!!

    ReplyDelete
  2. // மழையாக விழுந்தாலும்
    வெள்ளமாக அடித்தாலும்
    கடலாக அணைத்தாலும்
    நிலத்துக்கு நீர் நீர் தான்! //

    நீர் நீர் தான்!

    ReplyDelete
  3. /very nice poems….!!/

    poems ஆ??
    மேல இருக்கிறது ஒரே ஒரு கவிதைதான? :(

    ReplyDelete
  4. oh appadiya...?!?
    thani thaniya ezhuthi irunthathaala vera vera poemnu ninaichitten....!!
    ;-)

    anyway nalla irunthathu......!! :-)

    ReplyDelete
  5. """அந்த ஒரு நொடி
    என் காதல் காயப்படுவதெல்லாம்
    உன் கோபங்களுக்கு புரிவதில்லை."""

    முடியல.....

    கவிதையில் காதல் பிச்சிக்கிட்டு அடிக்கிது.

    ReplyDelete
  6. ராம்பிரசாத்,

    நன்றி.

    ஸ்ரீ,

    :) ரொம்ப நன்றி. :-)

    ReplyDelete
  7. ஆகா, அந்த ஸ்ரீ க்கு பதில் சொல்றதுக்குள்ள நீ வந்துட்டியா மாப்ள...

    யாராவது ஒருத்தங்க பேர மாத்துங்கப்பா!

    அது சரி, காதல் பிச்சிக்கிட்டு அடிக்குதுனு சொல்லிட்டியே... காதல் பிச்சிக்காம அடிச்சாதான நல்லாருக்கும்? ;-)

    ReplyDelete
  8. ஹா ஹா மாப்பி. நானே பேர மாத்திடுறேன் ;)

    ReplyDelete
  9. //////மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்

    உன் வெட்கத்தைப் போலன்றி

    சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது

    உன் கோபம்.///////

    வெட்கமும் கோபமும் ஒரு வித்தியாசமான நண்பர்கள். உங்கள் கவிதையில் ஒரு நாயகியின் சித்திரம் மனதினுள் வடிவாகி உணர்வுகளை தொட்டு சென்றன.

    ReplyDelete
  10. அருள்,
    உங்கள் கவிதை நல்லா இருக்கு.

    //ஒரு மௌனம்
    ஒரு மன்னிப்பு
    ஒரு சின்னக் காதல்
    எப்பொழுதும் இவை மட்டுமே
    என்னிடமிருந்து எட்டிப்பார்க்கும். //
    இதே போல் எல்லோரும் இருந்தால் உலகில் சண்டை சச்சரவே இருக்காது. :)

    ReplyDelete
  11. //என் கோபங்ளுக்கு என்றும் அனுமதியில்லை.//

    இந்த வரியில் 'க' மிஸ்ஸிங்.
    கோபங்களுக்கு என்று இருக்க வேண்டும்.
    மாத்திடுங்க பாஸ்.

    ReplyDelete
  12. ஸ்ரீ, நன்றி ;)

    சாய்ராம்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  13. கருத்துக்கு நன்றிங்க ஆஷா.

    தவறை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. மாத்திட்டேன்!

    ReplyDelete
  14. //உன்னில் வெட்கம் ஒளிந்திருக்கும் இடத்திலெல்லாம்
    கோபமும் சேர்ந்தே ஒளிந்திருக்கிறது.
    மெதுமெதுவாய் வந்து சட்டென மறையும்
    உன் வெட்கத்தைப் போலன்றி
    சட்டென வந்து மெதுமெதுவாய்த்தான் மறைகிறது
    உன் கோபம்.//


    உண்மையான வரிகள்...
    அருமையான கவிதை.....


    Senthil,
    Bangalore

    ReplyDelete
  15. /உண்மையான வரிகள்…
    அருமையான கவிதை…../

    நன்றிங்க செந்தில்...தொடரும் வாசிப்புக்கும், கருத்துக்கும்!

    ReplyDelete
  16. துயரம் தானென்றாலும்

    உன் கோபங்களை வரவேற்க

    என் கோபங்களுக்கு என்றும் அனுமதியில்லை//
    ரொம்ப அடக்கமானவராக்கும் அருட்பெருங்கோ.. கோபம் வருமா எதுக்காவது

    ReplyDelete
  17. ஆமாங்க்கா... ரொம்ப அடக்கமானவன்... அன்புக்கு மட்டும் ;)

    கோபமும் வரும், ஆனா உடனே போயிடும் :)

    ReplyDelete
  18. திகழ்மிளிர்May 13, 2008 10:45 PM

    /அந்த ஒரு நொடி

    என் காதல் காயப்படுவதெல்லாம்

    உன் கோபங்களுக்கு புரிவதில்லை.



    ஆனாலென்ன?

    மழையாக விழுந்தாலும்

    வெள்ளமாக அடித்தாலும்

    கடலாக அணைத்தாலும்

    நிலத்துக்கு நீர் நீர் தான்!


    ஊடலில் பிரிந்தாலும்

    பேசாமல் மௌனித்தாலும்

    கோபமாக முறைத்தாலும்

    எனக்கு நீ நீ தான்!/

    அழகான வரிகள்

    ReplyDelete
  19. நன்றிங்க திகழ்மிளிர்!

    ReplyDelete
  20. கோபத்தைக் கூட இப்பிடிக் குளிர்விப்பாக எப்பிடி இவ்வ்ளோ அழகாக எழுத முடிந்தது?
    அழகு....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  21. அருணா, கோபம் இருக்கிறவரைதான் கோபமா இருக்கும், கோபம் தீர்ந்ததும், அட இதுக்கா கோப்பட்டோம்னு தோனுமில்லையா? அதுமாதிரிதான் ;)

    ReplyDelete
  22. Simply superb... i liked it very much....

    ReplyDelete
  23. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சிலம்பு செல்வி.

    ReplyDelete
  24. ssubash12@yahoo.com - SrilankaMay 15, 2008 5:56 AM

    நீ பேசும் போது -நான்
    காதுகளலும் -
    சுவாசிக்kiren

    VERY NICE POEMS

    Ever
    Subash

    ReplyDelete
  25. Sir,
    Nalla kavithihal,unga websitea pathi kelvi patten,but epo than pakuren.Nalla erukku

    ReplyDelete
  26. நீங்களும் நல்லாவே கவிதையெழுதுறீங்களே சுபாஷ். அப்புறமென்ன ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சுடுங்க!

    ReplyDelete
  27. @ஜெயந்தி,

    சாரா???? பேர் சொன்னா போதும்ங்க! வாழ்த்துகளுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  28. Devathikaluku kobamthane azhagu, anaal antha kobamum udane marainduvidum indha kavidhaiyai parthu. arumai.

    ReplyDelete
  29. // மழையாக விழுந்தாலும்
    வெள்ளமாக அடித்தாலும்
    கடலாக அணைத்தாலும்
    நிலத்துக்கு நீர் நீர் தான்! //

    நீர் நீர் தான்!

    Sooper Sam..kalakureenga..keep them flowing

    ReplyDelete
  30. Romba Nalla Kavithai, Very Nice, Epdi ipdi Yosikareenga

    ReplyDelete
  31. கார்த்திக், ஜேப்பி, செல்வா, லக்ஷ்மணராஜா,

    அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  32. Kadhalum kovamum kavithai superb.....kovam irunthal than kadhalum irukkum...arputhamana varthaigalal oru muthusarathai kavithai korthu irukinga...keep it up

    ReplyDelete
  33. நன்றிங்க சிந்துசுபாஷ்!

    ReplyDelete