Monday, May 26, 2008

காதல் பார்வை

என் கண்களைக் கட்டிப்பிடித்து
உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
‘கண் கட்டி வித்தை’யா?

*

விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
இமைவாசலில் தவம் கிடக்கின்றன
நம் பார்வைகள்.

*

நீ பார்க்கும்பொழுதெல்லாம்
கண்களை மூடிக்கொள்கிறேனா?
உன் பார்வைகளை இமைக்குள் சேமிக்கிறேன்!

*

நேற்றிரவு நிலவை
நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
நிலா குளிர்ச்சியாக இருந்தது!

*

செடி நீட்டும் பூவுடன் சேர்த்து
பூ நீட்டும் செடியினையும் நேசிக்க
உன் பார்வைதான் கற்றுக் கொடுத்தது.

31 comments:

  1. kavithai vazhakkam pola nalla irunthathu....!! :-)

    //நீ பார்க்கும்பொழுதெல்லாம்
    கண்களை மூடிக்கொள்கிறேனா?//

    yen anna avlo bayammaa...?!? ;-)

    ReplyDelete
  2. //நேற்றிரவு நிலவை
    நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
    நிலா குளிர்ச்சியாக இருந்தது!
    //

    சூப்பர் :)

    ReplyDelete
  3. /kavithai vazhakkam pola nalla irunthathu/

    நன்றி! ;)

    /yen anna avlo bayammaa?!? /

    தங்கச்சீஈஈஈஈஈஈ... வேணாம். அழுதுறுவேன் :(

    ReplyDelete
  4. /சூப்பர் /

    ஆகா.. கவிஞரிடமிருந்தே வாழ்த்தா? நன்றி.நன்றி.

    ReplyDelete
  5. //என் கண்களைக் கட்டிப்பிடித்து
    உன் பார்வை செய்யும் குறும்புகள்தான்
    ‘கண் கட்டி வித்தை’யா?//

    நல்லா இருக்குங்க கவிதை...

    ReplyDelete
  6. நன்றிங்க செந்தில்!

    ReplyDelete
  7. எல்லாமே பா(ர்)வை கற்றுகொடுத்தது தானே !!

    sema sema.... ;-)

    ReplyDelete
  8. கொன்னுட்டான்யா!

    ReplyDelete
  9. நன்றிங்க ஆல்பர்ட்.

    பாவையா? பாலைங்க :)

    ReplyDelete
  10. //நேற்றிரவு நிலவை
    நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
    நிலா குளிர்ச்சியாக இருந்தது!
    //
    எனக்கு பிடித்த அருமையான வரிகள்... சூப்பர்.. உங்களது கவிதைமழை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வெங்கட்ரமணன்,

    கொன்னுட்டேனா? யார? எப்போ?

    ReplyDelete
  12. வாழ்த்துகளுக்கு நன்றிங்க அபூபக்கர்!

    ReplyDelete
  13. nice kavithai,,,,,,
    espicialy dis one very cute line...விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
    இமைவாசலில் தவம் கிடக்கின்றன
    நம் பார்வைகள்...


    pakka sir....

    ReplyDelete
  14. நேற்றிரவு நிலவை
    நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
    நிலா குளிர்ச்சியாக இருந்தது

    ReplyDelete
  15. ஒருநாள் பேசாவிட்டாலும்
    கோபிக்கிறது காதல்.
    யுகம் கடந்து பேசினாலும்
    குதூகலிக்கிறது நட்பு!

    *

    ReplyDelete
  16. ssubash12@yahoo.com - SrilankaMay 27, 2008 2:27 AM

    நந்தவனத்திleyee.. - நறுமணம்
    OOOOOO.........
    நீ இருக்கிRAயா இங்KE........

    ur poems are so nice.....and superb.....

    ever
    subash

    ReplyDelete
  17. மலர்ப்ரியன், சுபாஷ்,

    இருவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  18. //விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
    இமைவாசலில் தவம் கிடக்கின்றன
    நம் பார்வைகள்.//

    மிகவும் ரசித்தேன் அருள்......

    ReplyDelete
  19. //விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
    இமைவாசலில் தவம் கிடக்கின்றன
    நம் பார்வைகள்.//

    //நேற்றிரவு நிலவை
    நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
    நிலா குளிர்ச்சியாக இருந்தது!
    //

    அருமையான கற்பனை! அழகான வரிகள்!

    ReplyDelete
  20. VERY NICE AND GRAZY STORY DEAR ARUL

    ReplyDelete
  21. நவீன், நிர்ஷன், சின்னசாமி,

    அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  22. நேற்றிரவு நிலவை
    நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாயா?
    நிலா குளிர்ச்சியாக இருந்தது

    nice!

    ReplyDelete
  23. //விழித்ததும் முத்தமிட்டுக்கொள்ள
    இமைவாசலில் தவம் கிடக்கின்றன
    நம் பார்வைகள்.//ஒருநாள் பேசாவிட்டாலும்
    கோபிக்கிறது காதல்.
    யுகம் கடந்து பேசினாலும்
    குதூகலிக்கிறது நட்பு!நல்லா இருக்குங்க கவிதை

    அருமையான கற்பனை! அழகான வரிகள்!

    ReplyDelete
  24. அருமையான கற்பனை! அழகான வரிகள்!

    ReplyDelete
  25. Attakasam thalaiva!

    ReplyDelete
  26. ஆட்காட்டிOctober 13, 2008 2:43 PM

    அருமை.

    ReplyDelete
  27. அருமையான கற்பனை! அழகான வரிகள்!

    ReplyDelete
  28. ayyo? onnum mudiyale da maple

    ReplyDelete
  29. verry nice.............................................

    ReplyDelete
  30. kavithai superb

    nanum kavithaiyai nanraga rasithen.........

    nan azhuthu adambidikkumbothellam
    nilavai katti sooroottuval - en amma
    appothellam ninaithukolven
    nee azhuthu adambidithal eppadi
    unnaiye katti soorootamudiyum

    ----- en siru vayadhu kavithai

    ReplyDelete