தீப்பெட்டியென
நிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது.
*
என்னுடன் வாழாமல்
என்னில் வாழத்தான்
பிரிந்தாயா?
*
என் சொற்களுக்கும்
உன் மவுனத்திற்குமான இடைவெளியில்
புதைக்கப்பட்டது நம் காதல்.
*
உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
உன்னை மறந்து விடுகிறேன்.
*
இரவுதோறும் வரும்
பகல் கனவு நீ!
***
வெறும் உவமை மட்டுமே கவிதையாக முடியுமா? மலரைப்போன்ற முகம், இசை மாதிரி குரல், கவிதை மாதிரி பெண் – இந்த கிளிஷேக்கள் எல்லாம் சலித்துப்போனாலும் சில உவமைகள் காலம் கடந்தும் நிற்கின்றன. பொருட்களை உவமையாக காட்டுவதைக் காட்டிலும் நிகழ்வுகளை உவமையாகக் காட்டுவது கவித்துவத்தோடு இருப்பதாகப்படுகிறது.
குறுந்தொகையில் பிரிவுத்துயரைச்சொல்லும் ஒரு பாடலில் வரும் உவமை :
‘மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று அலப்பென்’
மக்கள் சென்றபிறகு முற்றத்தில் அணில் விளையாடும் தனிமை/வெறுமை நிறைந்த வீட்டைப்போல தனிமையில் வாடுவதாக தலைவி வருந்துகிறாள்.
அணில் விளையாடுவது பெரிய உவமையா? எனத் தோன்றக்கூடும். ஆனால் அணிலின் இயல்பு மக்கள் இருக்குமிடங்களில் நெருங்காமல் இருப்பதுதான். அத்தகைய அணில் முற்றத்தில் துள்ளி விளையாடுகிறது எனும்போது மக்கள் இல்லாமல் அந்த வீடு நெடுங்காலம் வெறுமையாகக் கிடக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கரூரில் நாங்கள் கடந்த ஆண்டு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த பிறகும் சில பொருட்கள் மட்டும் பழைய வீட்டிலேயேக் கிடந்தன. அடுத்து யாரும் குடி வராத அந்த அரசு குடியிருப்புக்கு ஒரு மாதம் கழித்து சென்ற போது இந்த சங்க காலத்துப் பாடலில் வரும் உவமை நிகழ்வு அங்கு கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருந்தது. சமையலறை அடுக்குகளில் பிறந்த குழந்தையின் பிஞ்சுக்கரம் போல மென்மையான கூடு கட்டிக்கொண்டு அணில்கள் விளையாடிக்கொண்டிருந்தன. எங்கள் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு அணில்களின் வீட்டை அணில்களிடமே விட்டுவிட்டுத் திரும்பினோம். அன்று, அந்த அழகான உவமை, அழகான காட்சியாகியிருந்தது.
இந்த பாடலின் ஆசிரியர் பெயர் தெரியாததால் இந்த உவமையாலேயே ‘அணிலாடு முன்றிலார்’ என அவருக்கு பெயர் வைத்துவிட்டார்கள்!
குறுந்தொகை – பாலைத்திணை – பாடல் எண் 41
காதலர் உழையர் ஆகப்பெரிது உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றிற்
புலம்பில் போலப் புல்லென்று
அலப்பென் – தோழி! – அவர் அகன்ற ஞான்றே.
- அணிலாடு முன்றிலார்
(எனக்குத் தெரிந்த) பொருள் :
காதலன் அருகிலிருக்கும்பொழுது, திருவிழா நடக்கும் ஊரைப்போல பெரிதும் மகிழ்ந்தேன். அவன் விலகிய நாளில், நெறி நிறைந்த நல்லவர் வாழும் ஊரில், மக்கள் சென்றபிறகு முற்றத்தில் அணில் விளையாடுகிற துயரமான வீட்டைப்போல தனிமையால் அழகழிந்து வாடுகிறேன்.
kavithai...and Kurunthogai paadal nalla irukku......!!
ReplyDelete//உன் நினைவு
வரும்பொழுதெல்லாம்
உன்னை மறந்து விடுகிறேன்..//
appo yaara ninaipeenga.......?!?
//இரவுதோறும் வரும்
ReplyDeleteபகல் கனவு நீ! //
ஆழம் ரசித்தேன்....... :-)
வழக்கம்போல
ReplyDeleteஒவ்வொரு வரியும் அருமை...
Senthil,
Bangalore
மாப்பி நீ சொன்ன இந்த பாட்டு நானும் ரசித்த நினைவில் இருக்கு ஒரு சில பாடல்களில் ஒன்று. சொன்னா நம்ப மாட்ட வூட்ட பாக்க ரொம்ப நாள் கழிச்சி போனா கார் குள்ள அணில் கூடு கட்டி குட்டி போட்டு இருக்கு. இப்போ எல்லா அணிலும் சகஜமா பழகுதுப்பா.
ReplyDelete//தீப்பெட்டியென
ReplyDeleteநிலையாய் உன் நினைவு.
தீக்குச்சியாய்
உரசி உரசி எரியும் மனது.//
அழகான உருவகம் அருட்பெருங்கோ
/appo yaara ninaipeenga…….?!?/
ReplyDelete'உன் நினைவு வரும்பொழுதெல்லாம்
கூடவே வருகிறது
உன்னை மறக்க வேண்டுமென்ற நினைப்பும்.'
இப்ப சரியா சொல்லிருக்கேனா? ;)
/ஆழம் ரசித்தேன்……. /
பாத்து... விழுந்துடாதீங்க!
/வழக்கம்போல
ReplyDeleteஒவ்வொரு வரியும் அருமை/
நன்றிங்க செந்தில்!
/மாப்பி நீ சொன்ன இந்த பாட்டு நானும் ரசித்த நினைவில் இருக்கு ஒரு சில பாடல்களில் ஒன்று. சொன்னா நம்ப மாட்ட வூட்ட பாக்க ரொம்ப நாள் கழிச்சி போனா கார் குள்ள அணில் கூடு கட்டி குட்டி போட்டு இருக்கு. இப்போ எல்லா அணிலும் சகஜமா பழகுதுப்பா./
ReplyDeleteம்ம்ம்... அப்போ இந்த உவமை இனிமே பொருந்தாதோ? :) சரி வேற எதாவது தேடிப்பாக்கலாம்!
/அழகான உருவகம் அருட்பெருங்கோ/
ReplyDeleteநன்றிங்க அடலேறு!
//பாத்து… விழுந்துடாதீங்க//
ReplyDeletenaan vizhala neenga yengeum vizhunthidaama paarthukoonga......!! ;-)
ஸ்ரீ,
ReplyDeleteநிஜத்துல விழுந்தாதான் அடிபடும், கனவுல விழுந்தா அடிபடுமா என்ன? ;)
// இரவுதோறும் வரும்
ReplyDeleteபகல் கனவு நீ!
//
அருமையான வரிகள்...
எப்படி......... தீப்பெட்டியை கையில்வச்சிக்கிட்டு இத வச்சு எப்படி எழுதலாம்ன்னு யோசிப்பீங்களோ.. நல்லாருக்கு..
ReplyDelete/அருமையான வரிகள்/
ReplyDeleteநன்றிங்க அபூ!
/தீப்பெட்டியை கையில்வச்சிக்கிட்டு இத வச்சு எப்படி எழுதலாம்ன்னு யோசிப்பீங்களோ.. /
:-) நான் பேனா வச்சு எழுதியே பல நாளாச்சு. தீப்பெட்டிய வச்சு எப்படிங்க்கா எழுதுறது? ;)
உன் கானல் நீraaன காதல்.........
ReplyDeleteபோதும் என்று..........
வலம் வருகிறது - என்
இதயம்...........
தோற்கப் போவது.........
தெரிந்தும்.........
UR POEMS ARE SO LOVABLE.........
Ever
Subash
நன்றிங்க சுபாஷ்.
ReplyDeleteமறுமொழியிலேயே கவிதை எழுதுறீங்களே. பதிவு எப்போ ஆரம்பிக்க போறீங்க? இல்ல ஏற்கனவே இருக்கா?
"கள்"ழுறும் கவிதை படைப்பதில்
ReplyDeleteநீங்கள் என்றும்..............
" கோ"
ஒவ்வொரு வரிகழும்
"கள்"லாருக்கு.........
Ever
Subash
( Thanks a lot for ur kind wishes )
என்ன சொல்றதுன்னே தெரியல...
ReplyDeleteரொம்ப அழகான பதிவு.
//என்னுடன் வாழாமல்
என்னில் வாழத்தான்
பிரிந்தாயா?// ---எவ்வளவு உண்மையான வார்த்தை! பிர்வுத்துயர் உணர்ந்தோர்க்கு இந்த வாக்கின் உண்மை விளங்கும்!
//பொருட்களை உவமையாக காட்டுவதைக் காட்டிலும் நிகழ்வுகளை உவமையாகக் காட்டுவது கவித்துவத்தோடு இருப்பதாகப்படுகிறது.// அதே அதே!
//அணில் விளையாடுகிற துயரமான வீட்டைப்போல தனிமையால் அழகழிந்து வாடுகிறேன்// நல்ல comparison.வெறுமை என்னும் வார்த்த்தையின் பொருள் பிரிந்த காதலில் முழுமையாக உணரப்படும்!
அருமையான வார்த்தைகளின் தேர்வுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
நன்றி
தீக்ஷண்யா
Nalla tamil, Nalla Nadai, Nalla Varthaigal ,Nalla Uvamai
ReplyDelete.
..
...
....
.....
Nalla Kavidhai
நன்றிங்க சுபாஷ்.
ReplyDelete/என்ன சொல்றதுன்னே தெரியல
ReplyDeleteரொம்ப அழகான பதிவு./
நன்றிங்க தீக்ஷண்யா.
/எவ்வளவு உண்மையான வார்த்தை! பிர்வுத்துயர் உணர்ந்தோர்க்கு இந்த வாக்கின் உண்மை விளங்கும்!/
ம்ம்ம்!
/வெறுமை என்னும் வார்த்த்தையின் பொருள் பிரிந்த காதலில் முழுமையாக உணரப்படும்!
அருமையான வார்த்தைகளின் தேர்வுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு./
மீண்டும் நன்றிகள் தீக்ஷண்யா!
'நல்ல' மறுமொழிக்கு நன்றிங்க செல்வா :)
ReplyDeleteJust now came across ur blog,seems to be of interest.my blog www.muniappanpakkangal.blogspot.com, written in spoken tamil interestingly.Go thru my website also.Feedback on ur blog soon.Dr.V.Mohan,ok.
ReplyDelete