Wednesday, January 30, 2008

ஜனனி.. ஜனனி..

என்னுடைய தீபாவளிப் பதிவுகளைப் படித்துவிட்டு “நீங்க எழுதற கவிதைகளவிட கவித்துவமானது, ஒரு குழந்தை, அதுவும் பெண்குழந்தை வளர்வதை அருகிலிருந்து ரசிப்பது” அப்படின்னு ஒரு தோழி சொன்னாங்க. உண்மைதான். குழந்தைகளின் குறும்பும், ரகளையும் அருகிலிருந்து அனுபவிப்பதைவிட சுகமானது வேறென்ன? ஊரிலிருக்கும் சொற்ப நாட்களில் அக்கா மகள் ஜனனியின் குறும்புகளை வீடியோ/புகைப்படங்களாக எடுத்துவைத்தாலும், எழுத்தில் கொஞ்சம் பதிவுசெய்துகொண்டால், பின்னால் வாசிக்க அவளுக்கொரு மலரும் நினைவாக இருக்கட்டுமென்று இந்தப்பதிவு!

நான் : ஜனனி தமிழ் படிக்கலாமா?
ஜனனி : நீ சொல்லிக் குடு மாமா (புத்தகத்தோடு வருகிறாள்)
நான் : அ – அம்மா
ஜனனி : நல்லா சொல்லிக் குடு மாமா
நான் : நல்லாதான பாப்பா சொல்லிக் குடுக்குறேன்? அ – அம்மா (நன்றாக இடைவெளிவிட்டு சொல்கிறேன்)
ஜனனி : அப்படி இல்ல மாமா …. அ for அம்மா

(a for apple சொல்லிக் கொடுத்தபின்னாடி தமிழ் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் )

***

முதல் நாள் pre kg வகுப்புக்கு போய்வந்தவளிடம்
அக்கா : பாப்பா உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?
ஜனனி : ம்ம்ம் நல்லாருக்கும்மா… லேடர் வச்ச சறுக்கல் எல்லாம் இருக்கும்மா
அக்கா : மிஸ்ச புடிச்சிருக்கா? மிஸ் கிட்ட நல்லாப் பேசினியா?
ஜனனி : அந்த மிஸ் நல்லாவே இல்லம்மா
அக்கா : என்னது நல்லாவே இல்லையா?
ஜனனி : வயசான மிஸ்சா இருக்காங்கம்மா…

(அடிப்பாவி)

***

அக்கா : ஊஞ்சல்ல இருந்து எறங்கு, இது என் தம்பி எனக்கு வாங்கிட்டு வந்தது.
ஜனனி : இது எங்க மாமா எனக்கு வாங்கிட்டு வந்தது போம்மா
அக்கா: எனக்குதான் என் தம்பி வாங்கிக் கொடுத்தான்.எறங்குறயா இல்லையா?
ஜனை : உனக்கு வேணும்னா உங்க மாமாகிட்ட போய் வாங்கிக்க போம்மா

(அதற்கு மேல் என்னப் பேச?)

***

டாம் அண்ட் ஜெர்ரி பார்த்துக்கொண்டு இருக்கும்போது,
நான் : ஜனனி, அந்த வெள்ளப் பூனை உன்ன மாதிரியே இருக்குல்ல?
ஜனனி : ம்ம்ம்….நீதான் அந்த கருப்புப் பூனை.
அக்கா : (கோபத்துடன்) ஏய், யாரடி கருப்புனு கிண்டல் பண்ற?
ஜனனி : (கூலாக, டிவியில் இருந்து முகத்தைத் திருப்பாமல்) உங்க தம்பியதாம்மா!

(கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதுன்னா இது தானா?)

***

அவள் அடம்பண்ணிய ஒரு சமயத்தில், அவளை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு,
நான் : சரி ஜனனி, நான் ஹைதராபாத் கிளம்பறேன். அப்புறம் பாக்கலாம்.
ஜனனி : ச்சும்மா இது பண்ணாத மாமா
நான் : எது பண்றேன்?
ஜனனி: பந்தாதான்!

(எத்தன தடவ பல்பு வாங்கினாலும் எனக்கும் புரியவே மாட்டேங்குது)

***

அவளுக்கு முடி வெட்டப் போன சலூனில்,
முடிவெட்டுபவர் : எந்த மாதிரிங்க வெட்டலாம்
நான் பதில் சொல்வதற்கு முன்பே,
ஜனனி : எனக்கு நீளமா வளர்ற மாதிரி வெட்டி விடுங்க
முடிவெட்டுபவர் : ???

அங்கே தலைக்கு ‘டை’யடித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து,
ஜனனி : மாமா, அந்தத் தாத்தா தலைலேயே ட்ராயிங் வரையறாங்க (சிரித்துக்கொள்கிறாள்)
தலைக்கு ‘டை’யடித்துக் கொள்பவரும் கஷ்டப்பட்டு சிரித்துக்கொண்டார்.

***

அவளுக்கு ஒரு சிறிய குடை வாங்கிக் கொடுத்து,
நான் : தினமும் இத ஸ்கூலுக்கு எடுத்துப் போயிட்டு, வரும்போது மழை பேஞ்சுதுன்னா பிடிச்சுக்கனும் சரியா?
ஜனனி : அம்ப்ரல்லா எடுத்துட்டுப் போனா மிஸ் திட்டுவாங்க மாமா. நான் எடுத்துட்டுப் போக மாட்டேன். அம்மாதான் கொண்டு வரனும்.
நான் : மழ பேஞ்சா மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டுதான் பாப்பா வருவாங்க. அதனால உன்னலாம் திட்டமாட்டாங்க.
ஜனனி : மிஸ்செல்லாம் அம்ப்ரல்லா எடுத்துட்டு வரமாட்டாங்க!
நான் : அப்பறம் எப்படி வருவாங்க?
ஜனனி : புடவ கட்டிட்டு வருவாங்க!

(கேள்வி தப்பா? பதில் தப்பா?)

***

அக்கா : நேஷனல் பேர்ட் என்ன?
ஜனனி : பீக்காக்
அக்கா : நேஷனல் ஃப்ளவர் என்ன?
ஜனனி : ( முழிக்கிறாள் )
அக்கா : ப்ளவர் னா என்ன?
ஜனனி : பூ
அக்கா: ம்ம்ம் நேஷனல் ஃப்ளவர் என்ன?
ஜனனி : அத்திப்பூக்கள்

(சன்டிவி சீரியல் வாழ்க)

***

கண்கொட்டாமல் கோலங்கள் சீரியலைப் பார்த்துக்கொண்டிருந்தவளிடம்,
நான் : என்னக்கா இப்படி பாத்துகிட்டு இருக்கா?
அக்கா : அவதான் பொறந்ததுல இருந்து என்கூட சேர்ந்து பாக்கறாளே…
நான் : ஜனனி, அவன் யாரு?
ஜனனி : அவந்தான் ஆதி. அவன் கெட்டவன். எல்லாரையும் மெரட்டிட்டே இருப்பான்.
நான் : இது யாரு?
ஜனனி: அவந்தான் தொல்காப்பியன். அவன் நல்லவன். எப்பவும் உண்மையேதான் பேசுவான்.

(கவனிக்கும் திறனை வளர்க்கிறதா? இல்லை டிவிக்கு அடிமையாக்குகிறதா இந்த சீரியல்)

***

பள்ளி விட்டு வரும்போது,
ஜனனி : ம்மா உன்னையும் தாத்தா வந்து ஸ்கூல்ல விடுவாங்களா? அம்மாச்சி வந்து கூட்டிட்டு வந்தாங்களா?
அக்கா : இல்ல பாப்பா நான்லாம் தனியாதான் போயிட்டு வந்தேன்.
ஜனனி : யாருமே உன் கூட வரலியாம்மா? தனியாவேதான் போனியா? (கண் கலங்குகிறது)
அக்கா : ஆமாப் பாப்பா.
ஜனனி : சரிம்மா. நீ பாப்பாவா ஆகி ஸ்கூலுக்குப் போ, நான் பெருசா, அம்மா ஆகி உன்ன வந்து ஸ்கூல்ல கூட்டிட்டு வர்றேன்.

(உட்காந்து யோசிப்பாளோ?)

***

திருப்பூரில் இருந்து கரூர் கிளம்பும்போது,
அக்கா : உன்னோட ட்ரஸ் எல்லாம் எடுத்து பைல வை பாப்பா.
ஜனனி : (அவசரமாக ஒரு பொம்மைத் துப்பாக்கியை எடுத்து உள்ளே வைக்கிறாள்)
அக்கா : இத எதுக்குடி எடுத்து வைக்கிற?
ஜனனி : ரவுடிங்க வந்தா நான் உன்னக் காப்பாத்தனும்ல?

(தமிழ் சினிமா வாழ்க)

***

பள்ளியில் சேர்ந்த முதல் வாரத்தின் ஒரு நாளில்…
மிஸ் : எல்லாரும் டைரி கொண்டு வந்து வைங்க!
ஜனனியைத் தவிர எல்லோரும் வைக்கிறார்கள்.
மிஸ் : எல்லாரும் வச்சாச்சா? இன்னும் யாரோ ஒருத்தங்க வைக்கலியே? யாரது.
ஜனனி : மெதுவாக எழூந்து போய் டைரியை நீட்டுகிறாள்.
மிஸ் : இவ்வளவு நேரம் கேட்டேன்ல… ஏன் வந்து வைக்கல?
ஜனனி (அக்காவிடம் சொல்வது போலவே) : அதான் இப்போ கொண்டு வந்து தர்றேன்ல?
மிஸ் : என்னது?
ஜனனி : (பவ்யமாக) அதான் இப்போ தர்றேன் இல்லைங் மிஸ்?

( மிஸ்சும் சிரித்து விட்டாராம்)



அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

35 comments:

  1. என்னோடதுதான் முதல் கமெண்ட்டா?

    ReplyDelete
  2. ஜனனி பத்தி ஒன்னும் சொல்லாம போயிட்டன்ல??

    Very Sweet!

    ReplyDelete
  3. அருமை, உங்க அன்பு ஜனனிக்காக ஒரு பாட்டு பதிவு போட்டிருக்கேன் பாருங்க ஜனனி Janani

    ReplyDelete
  4. கலக்கல்! பல இடங்களில் சிரித்து மகிழ்ந்தேன் :-)

    ReplyDelete
  5. குழந்தைகளின் அறியாமை கலந்த அறிவே...அழகுதாங்க.!

    அதுவும்...ஜனனி..அறிவும்.அழகும்!

    நல்ல பதிவு.!

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவைங்கோவ்வ். அம்மணிக்கு ஊரு கோயமுத்தூருங்களா?

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா

    குழந்தைகளே குறும்புதான் அழகுதான். ரசித்தேன். ரசித்தேன்.

    ReplyDelete
  8. ஒவ்வொரு உரையாடலையும் படிக்கும்போது வாய்விட்டு சிரிச்சேன்!!! ரொம்ப குறும்பு, கெட்டித்தனம்...எல்லாமே சேர்ந்த கலவையா ஜனனி!!! கடைசில ஸ்லைட் ஷோவில் இருக்கும் படங்கள் அருமை. எவ்வளவு பாவனைகள்!!! படம் எடுத்தவங்களையும் பாராட்டி ஆகணும்... நிச்சயமா பொறுமை தேவை. மொத்தத்தில் அழகு!!!!!!!

    ReplyDelete
  9. மாப்பி குட்டி கலக்குறப்பா...;)))

    ReplyDelete
  10. சூப்பர்.. இது படிக்கும்போது என் தங்கச்சி வீட்டுல பண்ணிட்டிருக்கிற கூத்தெல்லாம் ஞாபகம் வருது. :-)

    ReplyDelete
  11. பப்பராசி போட்டோ காரங்க மாதிரி விடாம போட்டோ எடுத்து தள்ளி இருக்கீங்க போலயே.. :)
    அம்மா நீ பாப்பாவாகி ஸ்கூலுக்குபோ '' இருக்கே இதான் பொண் குழந்தையோட அன்பு இருக்கே சில சமயம் தாங்கமுடியாத அளவு அழுகைவரும் அளவுக்கு அன்பு செலுத்துவாங்க..

    ReplyDelete
  12. jaani jaani yes paapa...
    enna vittudu vittudu janani paappa...


    indha indha cadburys jananiku :)

    ReplyDelete
  13. ஜனனிக்கு இதை விட நல்ல தாய்மாமன் பரிசு இருக்க முடியாது!!!

    ReplyDelete
  14. dear arul,

    kandepa oru nal etha paru paperla varum athavathu oru sathanaku....valthukal


    with love
    ram

    ReplyDelete
  15. ஜனனி கில்லாடி யா :-) அந்தமாதிரி இருக்கு கடி கடி யா !! என் அக்காக்கும் 2 வாலுகள் இருக்குதுகள் அய்யோ அதுகளட்ட வாய குடுத்தா இப்பிடித்தான்.

    ReplyDelete
  16. ச்ச்ச்சோ ஸ்வீட்... சீக்கிரமா பதிவெழுத சொல்லிக் கொடுங்க :))

    குழந்தைகள் என்றாலே ஜாலி தான். எங்க சொந்தத்திலும் இப்படி ஒரு சுட்டி உள்ளது. :))

    ReplyDelete
  17. @ஹாரி,
    நீங்கதான்ப்பா முதல் கமெண்ட்! ஜனனிகிட்ட சொல்லிட்றேன்!!

    @கப்பி,
    அந்த புன்னகைக்கு என்ன அர்த்தம் :)

    ReplyDelete
  18. @இம்சை,
    ரொம்ப நன்றிங்க. ஆனா இங்க யூ ட்யூப் திறக்க முடியாது :(

    @சேதுக்கரசி,
    நன்றிங்க. சிரித்து மகிழதான் இந்தப்பதிவு :)

    ReplyDelete
  19. @சுரேகா,
    அறியாமை கலந்த அறிவு! அழகாச் சொன்னீங்க!
    நன்றிங்க சுரேகா!

    @இளா,
    நன்றிங்க இளா! கோயம்புத்தூர் இல்லைங்க… கரூர்!!! இப்போ திருப்பூர்ல இருக்கிறதால கொங்குத் தமிழ் ஒட்டிகிச்சு போல :)

    ReplyDelete
  20. @ராகவன்,
    குறும்பெல்லாம் எல்லை மீறிப் போக ஆரம்பிச்சிடுச்சு ராகவன். இப்போலாம் முடியல :(

    @தயா,
    எல்லாம் கலந்த கலவைதாங்க. அடக்க முடியாது. படம் எல்லாம் அப்படி அப்படியே சுட்டுத் தள்ளியாச்சு :)

    ReplyDelete
  21. @கோபி,
    ம்ம்ம்… அப்பப்போ நம்மளயே கலங்க வச்சிடுவா!!!

    @ மைஃப்ரெண்ட்,
    அந்த லூட்டியையும் பதிவாக்குங்க :)

    ReplyDelete
  22. @முத்துலெட்சுமி,
    பப்பராசினா என்னங்க்கா? அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்? :)

    @ட்ரீம்ஸ்,
    ரைம்ஸ்க்கும், சாக்லேட்டுக்கும் நன்றி ட்ரீம்ஸ்.

    ReplyDelete
  23. @நாடோடி இலக்கியன்,
    இதெல்லாம் போதும்னு சொல்லிடுவாங்களா குழந்தைங்க? அவங்களுக்கு தேவையானத கேட்டு வாங்கிக்குவாங்க :-)

    @ராம்,
    அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க!!!

    ReplyDelete
  24. @சினேகிதி,
    இப்போலாம் நம்மளவிட வாண்டுகளுக்குதான் நெறைய தெரிஞ்சிருக்குங்க… நாமதான் கத்துக்க வேண்டியிருக்கு!

    @பொன்வண்டு,
    பதிவா??? நான் எழுதறதே வீட்டுக்குத் தெரியாது பாஸ் :)
    வீட்டுக்கு வீடு லூட்டிதான்!!!

    ReplyDelete
  25. யார் சொன்னது
    தேவதைகள் சொர்க்க்த்தில்தான் இருக்குமென்று?

    எங்கெல்லாம் குழந்தைகள் இருக்கின்றனரோ....
    அவையெல்லாம் சொர்க்கம்தான்

    என் கண்களைக் காணவில்லை,...

    கொஞ்சம் திருப்பித் தரச் சொல்லுங்களேன்
    ஜனனியை

    ReplyDelete
  26. நல்ல பதிவு..பின் ஒரு நாள் ஜனனி இதை நன்கு ரசிக்கப் போகிறாள்..

    ReplyDelete
  27. நல்ல சிரிப்புகள் - நல்ல படங்கள் - நல்வாழ்த்துகள் ஜனனிக்கு

    ReplyDelete
  28. என்னப்பா என்ன எழுதினாலும் கலக்குறீங்க!!!!!இவ்வளவு நாளா எப்பிடி கண்ல படாம தப்பிச்சீங்க???
    அன்புடன் அருணா

    ReplyDelete
  29. @சுமி,
    நன்றாக சொன்னீங்க சுமி. குழந்தைகளுடன் இருக்குமிடமெல்லாமே சொர்க்கம்தான்!!!

    திருப்பித்தந்துடுவாங்க… அவ நல்ல பொண்ணு :)

    @பாசமலர்,
    நன்றிங்க. அந்த நம்பிக்கைல எழுதிருக்கேன். படிச்சுட்டு என்ன மாமா இப்படி மொக்க போட்டிருக்கீங்கன்னு அவ சொல்லாம இருந்தா சரி :-)

    @சீனா,
    அன்புக்கு மிக்க நன்றிங்க சீனா!!!

    @அருணா,
    இந்தப் பதிவுல கலக்கியிருக்கிறது எல்லாம் ஜனனிதாங்க. நம்ம வேலை டைப்படிச்சது மட்டும் தான!!!

    ReplyDelete
  30. ஜனனிக்கும் அவள் அன்பு மாமாவுக்கும் என் இனிய வாழ்த்துகள்.

    இந்த அருமை எப்பவும் நிலைத்து இருக்கணும்.
    அருள், அன்பு பெருகட்டும்.

    ReplyDelete
  31. வல்லிசிம்ஹன் has left a new comment on your post "ஜனனி.. ஜனனி..":

    சொல்ல விட்டுப் போச்சு.
    ஜனனி சூப்பர் மாடல் போஸ் கொடுத்து ,நீங்களும் அசத்திட்டீங்க.!!

    ReplyDelete
  32. அன்பான வாழ்த்துகளுக்கு நன்றிங்க வல்லிசிம்ஹன்!!!

    போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறதுக்கெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவா வேணும்?

    ReplyDelete
  33. //எழுத்தில் கொஞ்சம் பதிவுசெய்துகொண்டால், பின்னால் வாசிக்க அவளுக்கொரு மலரும் நினைவாக இருக்கட்டுமென்று இந்தப்பதிவு!//

    அற்புதமான முயற்சி. தொடர்ந்து பதிவு செய்யுங்கள். ஜனனி ரொம்பவே கொடுத்த வைத்த குட்டி பாப்பா தான். :)

    ReplyDelete
  34. சூப்பரு...... நிறைய இடங்களிலே சிரிச்சிட்டே திரும்ப திரும்ப படிச்சேன்.... :)

    ReplyDelete