“என்னத்தங்க சொல்றது. இது எனக்கு வந்த சோதனையா? இல்ல படிக்கிறவங்களுக்கு வந்த சோதனையானு யோசிச்சுட்டு இருக்கேன்!”
“என்னப்பா? உன்ன மதிச்சு நட்சத்திரமாக்கியிருக்காங்க. நீ இப்படி சொல்ற”
“அய்யயோ. நான் தப்பா எதுவும் சொல்லலங்க. எப்பவும் நான் பாட்டுக்கு ஒரு ஓரமா கண்ணே, மணியே னு கவுஜ மட்டும் எழுதிகிட்டு இருந்தேன். அத மட்டும் படிக்கிறவங்கப் படிச்சுட்டுப் போயிடுவாங்க. நட்சத்திரமாகிட்டா இன்னும் கொஞ்சம் அதிகமா வந்து வாசிப்பாங்களே. இந்த வாரமும் எப்பவும் போல அன்பே, ஆருயிரே னு எழுதினா புதுசா படிக்க வர்றவங்களுக்கும் ஏமாற்றம்தான். வேற எதாவது எழுதலாம்னு பார்த்தா எனக்கு ஓரளவுக்குத் தெரிஞ்சதே அது மட்டும்தான். அதான் அப்படி சொன்னேன்”
“இந்தப் பதிவுக்கு மட்டும் “நட்சத்திர வாழ்த்துகள்” அப்படினு அதிகமா கொஞ்சம் பின்னூட்டம் வரும். அதுக்கு இத்தன பில்டப்பா? சரி அத விடு… நீ(யெல்லாம்) எதுக்கு வலைப்பதிவ ஆரம்பிச்ச?”
“இணையத்துல இலவசமா கிடைக்குதுன்னு சொன்னாங்க. சரினு ஒன்ன ஆரம்பிச்சுட்டேன் ;-) அது வந்துங்க, என்னோட கல்லூரி காலத்துல எப்பவுமே படிக்கிறதுக்கு ஏதோ ஒரு புத்தகம் (ஓசில தான்) கெடச்சுடும். படிக்க, கும்மியடிக்க னு என்ன மாதிரியே உருப்படாததுங்க எல்லாம் ஒன்னாவே சுத்துவோம். பொழுதும் போச்சு. கல்லூரி முடிச்சுட்டு வேலைல சேர்ந்தபின்னாடி ஒரு நாலு மாசம் பயிற்சின்னு சொல்லி மைசூர்ல சக்கையாப் பிழிஞ்சாங்க. அடுத்த நாலு மாசம் வேலையே கொடுக்காம கொல்ட்டி தேசத்துல சும்மா உட்கார வச்சிட்டாங்க. படிக்கிறதுக்கும் ஒன்னும் கிடைக்கல. கூடவும் நம்ம கூட்டாளிப் பயலுக ஒருத்தனும் இல்ல. சும்மா இருந்த நேரத்துல இணையத்துல மேஞ்சப்பதான் தமிழ்மணம், இ-கலப்பை எல்லாம் அறிமுகமாச்சு. ஒரு பக்கம் பதிவுகளுக்கு வாசகனா இருந்துகிட்டே, இன்னொரு பக்கம் +2 காதல், காதல் பயணம் னு கதைகள எழுதி நம்ம கூட்டாளிகளுக்கு மட்டும் மடல்ல அனுப்பிக்கிட்டு இருந்தேன். அதுல ஒரு ரணம்விரும்பி, இதையெல்லாம் வலைப்பதிவுல போட்றா மச்சான்னு உசுப்பேத்த (அவனத்தான் தேடிட்டு இருக்கீங்களா? கூட்டாளிய காட்டிக் கொடுக்கமாட்டோம்ல ;-) ) ஒரு சுபயோக சுபதினத்துல நானும் வலைப்பதிய ஆரம்பிச்சு ரெண்டு வருசம் ஓடிப்போச்சு. இதுதாங்க நான் வலைப்பதிய ஆரம்பிச்சதோட வரலாறு, புவியியல் எல்லாம்”
“அது சரி. ஒரே விசயத்த மட்டும் திரும்ப திரும்ப எழுதறயே. உனக்கே சலிக்கல?”
“என்னப் பண்றது வேற எதுவும் எழுதத் தெரியலையே :( ”
“ப்ரொஃபைல்ல உன்னோடப் படத்தப் போடாம, காதல் னு எழுதி வச்சிருக்கியே நீயென்னா லூசா?”
“கி..கி..கி… நான் வலைப்பதிவ ஆரம்பிச்சப்போ கருப்பு நிறத்துலதான் பின்னணி நிறம் வச்சிருந்தேன். அதுல என்னோட புகைப்படத்தயே போட்டிருந்தா கண்டிப்பா என் முகம் தெரிஞ்சிருக்காதுங்க. அதனாலதான் அப்போதைக்கு கருப்பு பின்னணியில வெள்ளைல எழுதியிருந்தது பிடிச்சிருந்ததால அத வச்சேன். அப்புறம் தமிழ்மணத்துல வரும்போது புகைப்படமும் தெரியுமாம்ல. சரி ‘காதல்’ னு இருந்தா நெறைய பேர் வாசிப்பாங்கனு பாத்தா அந்த வார்த்தைய பார்த்ததும் தெறிச்சு ஓடினதுதான் நெறைய பேர்னு நெனைக்கிறேன். ஆனா அந்தப் படத்துனால என்ன காதல் கவுஜன் னு கொஞ்சம் பேர் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அது வேற விசயம் ;-) ”
“இப்போ மட்டும் எதுக்கு உன்னோட புகைப்படத்த போட்டுட்டியாம்?”
“இந்த வாரம் நீ நட்சத்திரமாகிட்டதால உன்னோட வலைப்பதிவுக்கு நெறைய திருஷ்டி வர வாய்ப்பிருக்கு. அதப் போக்கனும்னா வலைப்பதிவோட மூலைல ஒரு திருஷ்டி பொம்மைய தொங்கவிடுன்னு சிவல்புரி சிங்காரம் தனி மடல்ல கேட்டுகிட்டாரு. அதான் :-) ”
“சரி சரி இந்த வாரமாவது வழக்கமாப் போட்ற மொக்க கவுஜைய விட்டுட்டு உருப்படியா எதாவது எழுது”
“உருப்படியா எழுத முயற்சி பண்றேன். ஆனா கவுஜ எழுதலன்னா எனக்கு மனசு நடுங்குமே”
“உன்னையெல்லாம் திருத்த முடியாதுடா”
“கி..கி..கி…நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே”
“கண்ணாடியப் போயிப் பாரு”
----
ஆரம்பமே படு மொக்கையா இருக்கா? அப்படின்னா இதப் பாருங்க!
அடுத்த நட்சத்திரப் பதிவு மாலை நான்கு மணிக்கு ;-)
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
//இந்தப் பதிவுக்கு மட்டும் “நட்சத்திர வாழ்த்துகள்” அப்படினு அதிகமா கொஞ்சம் பின்னூட்டம் வரும்.//
ReplyDeleteஇதோ,நம்ம பங்கைப் பிடியுங்க !
நட்சத்திர வாழ்த்துக்கள் !!
அடுத்த ஒரு வாரத்துக்குத் தமிழ்மணத்துல காதல் காய்ச்சல்தான்னு சொல்லுங்க!! வாழ்த்துக்கள் :-)
ReplyDelete“நட்சத்திர வாழ்த்துகள்”
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள் அருட்பெருங்கோ!
ReplyDeleteஅசத்தலான ஆரம்பம்.
மொக்கை ராசாவுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்.
ReplyDeleteம்.... ஆரம்பமாகட்டும் காதல் கவிதைகள்....
ReplyDeleteவாழ்த்துகள் கவிஞரே!
@மணியன்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றிங்க மணியன் சார்!!!
@சேதுக்கரசி
காதலுக்குதான் பின்னாடியே பிப்ரவரி மாசம் வருதே! இந்த வாரம் கதம்பமா இருக்கும் :)
@துளசி கோபால்
வாழ்த்துகளுக்கு நன்றிங்க டீச்சர்
@திகழ்மிளிர்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றிங்க!!!
@நாடோடி இலக்கியன்
நன்றிங்க நாடோடி இலக்கியன்.
@நந்தா
வாழ்த்துகளுக்கு நன்றிங்க முத்தராசா :)
@வெயிலான்
வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
காதல் கவிதைகள் காதல் மாதத்தோடு சேர்ந்து துவங்கும் :)
காதல் இளவரசருக்கு
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துகள்!!!!!!
அழியாத அன்புடன் நட்சத்திர வாழ்த்துகள். காதல் கவிதைகள் என்பது முதல் படிக்கட்டு. அதிலே நின்றூ கொள்வது சிலருக்கு வசதியாக இருக்கும். ஏனென்றால் நிறைய பேர் அவர்களுடன் கூட இருப்பார்கள். விழுந்தாலும் அதிகம் அடிபடாது :-). தொடர்ச்சியான வாசிப்புகள் அடுத்தடுத்த படிக்கட்டுகளை எட்டிபிடிக்க உதவியாக இருக்கும். அந்த தேடல் உங்களிடம் இருப்பது மகிழ்ச்சியே. நான் 4ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை கரூரில் இருந்தேன். அப்பா அரசு ஊழியர் என்பதால் 3 வருடத்திற்கு ஒருமுறை ஒரு ஊர். கல்லூரி படிப்பு தர்மபுரியில். கொஞ்சம் பக்கம் பக்கமாத்தான் வாழ்ந்திருக்கிறோம்:-) வாழ்த்துகள்
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!
ReplyDeleteஇந்த வாரம் உங்கள் கவிதைகளை நட்சத்திர பதிவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
வாழ்த்துக்கள் காதல் முரசு.
ReplyDeleteகவி மாலையின் மணம் ஒருவாரத்துக்கு தமிழ்மணத்தில் மணக்குமா ?
ReplyDelete:)
நட்சத்திர வாழ்த்துக்கள் மாப்பி :D
ReplyDeleteஎன்னப்பா சன் நியூஸ் மாதிரி "அடுத்த நட்சத்திரப் பதிவு மாலை நான்கு மணிக்கு" ன்னு போட்டிருக்க?
இப்போ போயிட்டு 4 மணிக்கு வரேன்
@எழில்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி எழில்.
@முத்துகுமரன்
வாசிப்புல அடுத்த படிக்கட்டுக்குப் போனாலும் எழுத்துல நானும் ரொம்பநாளா முதல் படிக்கட்டுலேயேதான் நின்னுட்டு இருக்கேங்க. இந்த பிப்ரவரி மட்டும் முதல் படிக்கட்டுல இருந்துட்டு அப்புறம் மேல வர்றேன் :-)))
இப்போதான் வலைப்பதிவுல எல்லாரும் ஒரே பக்கத்துல வந்துட்டோமே ;-)
நன்றி முத்துகுமரன்!!!
@திவ்யா
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றிங்க நட்சத்திரமே!
கவிதைகள் மட்டுமே எழுதினால் போரடிக்குமே. ஆனால் கவிதைகளும் இருக்கும்!
@ஜேகே
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா!!
@கோவி.கண்ணன்
ReplyDeleteகவி மாலையாக மட்டுமே இல்லாமல் கதம்ப மாலையாக கொடுக்க எண்ணம். மணக்குதான்னு நீங்கதான் சொல்லனும் :-)
நன்றிங்க கோவி!
@ஸ்ரீ
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா!
அடுத்தப் பதிவு எப்போன்னு ஒரு லீட் கொடுக்கலாம்னுதான். அடுத்த மொக்கைக்கு 4 மணி வரை காத்திருக்கவும்!!!
நட்சத்திர வாழ்த்துக்கள்......... ராசா சைட் பொட்டியிலே ஸ்மோக் எபக்ட்'லே ஒரு உருவம் தெரியுதே, அந்த ஹீரோ எந்த கொல்டி படத்திலே நடிக்கிறாரு??
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்..
ReplyDeleteஆமா.. நீங்க தமிழ்மணா ஸ்டார் ஆனதுலே இரூந்து தமிழ்மணத்துல ட்ராபிக் ஜேம் ஆகி, தம்ம்ழ்மணமே ஸ்தம்பிச்சு போய் சர்வர் டவ்வுன் ஆகிடுச்சாமே?
அந்த பக்கமே போஅ முடியலை.. :-P
dear arul,
ReplyDeletekandepa koduka vandea star than ungaluku,ur the right persion
ram
வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!!!
ReplyDeleteஇந்த வாரம் கலக்கல் வாரம் தான் :-)
வாழ்த்துக்கள் அருள் :))
ReplyDeleteநட்சத்திரமாய் ஒரு காதல் அட்சயம் !! :))
பொங்கட்டும் வாரம் முழுதும்.... :)))
வாழ்த்துக்கள் கவிஞரே! :)
ReplyDeleteமாப்பி நட்சத்திர வாழ்த்துக்கள்..;))
ReplyDelete\\ இராம்/Raam said...
நட்சத்திர வாழ்த்துக்கள்......... ராசா சைட் பொட்டியிலே ஸ்மோக் எபக்ட்'லே ஒரு உருவம் தெரியுதே, அந்த ஹீரோ எந்த கொல்டி படத்திலே நடிக்கிறாரு??\\
இப்பதான் கொல்டி படம் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிருக்காரு...விரைவில் நடிப்பாரு போல! ;))
aaha.. thala.. neengathaan intha vaaramaa???
ReplyDeleteellaarum ready aahunga ready aahunga...
vaazththukkal...
vaazthukal!!! so niraya kavithia vasikalam intha vaaram :-)
ReplyDeleteவாங்க காதற்கவிஞரே அருட்பெருங்கோ... இந்த வார நட்சத்திரமே...என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவர்ரப்பவே தமிழ்மணத்தை கொஞ்ச நேரம் நிப்பாட்டீட்டுதான் வந்திருக்கீங்க. ஆகையால இந்த வாரம் நெறைய பதிவுகளை எதிர்பார்க்குறோம்.
இந்த வாரம் இனிய வாரமாக அமையட்டும்.
வாருங்கள் நண்பரே = வரவு நல்வரவாகுக - நட்சத்திர வாழ்த்துகள் - தூள் கிளப்புங்க - உங்க வித்தியாசமான பூக்களில் உறங்கும் மௌனங்கள் பிடிச்சிருந்தது.
ReplyDeleteவரும்போதே அதிருதே தமிழ்மணம் .. :)
ReplyDeleteசரி சரி கவிதைக்கு அடுத்த மாசம் இருக்குன்னு சொல்லிட்டு உங்க கவிதைகளை இந்த வாரம் போடாம விட்டுராதீங்க.. கண்டிப்பா அதுவும் வேணும்.. அப்படியே ஒரு கதை யும் வேணும்.. மண்வாசனையோட...
@இராம்,
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி ராம்.
அந்த உருவத்த புகைப்படமா போட்டதுக்கே தமிழ்மணத்துக்கு ஒருநாள் சோதனை வந்திடுச்சு. இதுல ஈரோவோ நடிச்சா கொல்ட்டி தேசத்துல ஒரு கலவரமே வரலாம்… பரவால்லையா? ;-)
@மை ஃபிரண்ட்,
நன்றி தங்கச்சி.
அது ட்ராபிக் ஜாம் இல்ல போட்டோ பாம் ;-)
@ராம்,
ReplyDeleteஅன்புக்கு நன்றி ராம்.
@வெட்டிப்பயல்,
கலக்கலா னு வாரம் முடிஞ்சபின்னாடி நீங்கதான் சொல்லனும். நன்றி வெட்டி.
@நவீன் பிரகாஷ்,
ReplyDeleteநன்றிங்க நவீன். சட்டியில இருக்கிறவரை அகப்பைல வரும் :)
@கப்பி
நன்றி கப்பி!!!
@கோபிநாத்,
ReplyDeleteஆமாப்பா, நான் சூப்பரா நடிப்பேன் :-)
@ஜி,
ஆமாங்க ஜி. நானேதான். எங்க ரெடி ஆகறீங்க? ஓடறதுக்கா?
@சினேகிதி,
ReplyDeleteநன்றிங்க!!! கவிதைகளும் வாசிக்கலாம் ;-)
@ராகவன்,
மனமார்ந்த நன்றிங்க ராகவன்.
நான் இல்ல நான் இல்ல :)
இனிய வாரமா உங்களுக்கு அமையனும்னு நெனைக்கிறேன் பாப்போம்!
@சீனா
ReplyDeleteநன்றிங்க சீனா. இந்த வாரம் கவிப்பூக்களை மௌனம் கலைத்து பேச வைக்கலாம் ;-)
@முத்துலட்சுமி,
நான் என்னங்க்கா பண்ண?
கண்டிப்பா கண்டிப்பா கவிதையும் , கதையும் விட்டா அப்புறம் நான் எத எழுதப் போறேன்???
நட்சத்திர வாழ்த்துக்கள் சிவா...!!!
ReplyDelete//“இந்த வாரம் நீ நட்சத்திரமாகிட்டதால உன்னோட வலைப்பதிவுக்கு நெறைய திருஷ்டி வர வாய்ப்பிருக்கு. அதப் போக்கனும்னா வலைப்பதிவோட மூலைல ஒரு திருஷ்டி பொம்மைய தொங்கவிடுன்னு சிவல்புரி சிங்காரம் தனி மடல்ல கேட்டுகிட்டாரு. அதான் :-) ”//
ReplyDeleteஎன்னங்க இப்படி சொல்லிட்டு ஹாலிவுட் ஹீரோ போட்டோவை போட்டு வெச்சு இருக்கீங்க, அப்புறம் அந்த ஹீரோ கோச்சுக்க போறார்:)
நட்சத்திர வாழ்த்துக்கள்:)
ஆமாம் அந்த ஹாலிவுட் ஹீரோ பேரு என்னா?
ReplyDeleteடைட்டானிக் படத்துல கூட நடிச்சு இருப்பாரே அவரு போட்டோதானே அது! பேரு மறந்துடுச்சுன்னு கேட்டா இப்படியா முறைக்கிறது பிரதர்!!!
வாழ்த்துக்கள்!
ReplyDelete@செந்தழல்,
ReplyDeleteநன்றிங்க ரவி!!!
@குசும்பன்
வாழ்த்துகளுக்கு நன்றிங்க குசும்பர். அந்த ஹாலிவுட் ஹீரோ பேரு எனக்கும் தெரியாதுங்க :) இவன் அவன் இல்லை ;-)
@சர்வேசன்
நன்றிங்க !!!
ஐயா நீங்க தானா..வாங்க வாங்க..
ReplyDeleteநட்சத்திர வாழ்த்துக்கள்
@மங்கை
ReplyDeleteஎன்னையா ஐயானு கூப்பிட்டீங்க? :-)
வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
@டெல்பின்
நன்றிங்க மேடம். எப்படி இருக்கீங்க? :)
அடடா!!!!! உங்க பதிவெல்லாம் முன்னாடியே படிக்காம விட்டுட்டேனே!!!
ReplyDeleteசும்மா கலக்குறீங்க!!!
அன்புடன் அருணா
அருணா,
ReplyDeleteமுன்னாடி படிக்காம விட்டதால என்ன? இப்போ பொறுமையாப் படிங்க :)
நன்றி
லேட்டாக வாழ்த்துகள் சொல்லறேன்.
ReplyDeleteநானும் கவிதை என்றால் காததூரம் ஓடுபவள் தான்.
இந்தப் பதிவு சூப்பர். இனி தைரியமாக உங்க பதிவுகளைப் படிக்கிறேன்:)0
/லேட்டாக வாழ்த்துகள் சொல்லறேன்.
ReplyDeleteநானும் கவிதை என்றால் காததூரம் ஓடுபவள் தான்./
வாழ்த்துகளுக்கு நன்றிங்க. ஓட வைக்கிற மாதிரி கவிதையெழுத மாட்டேன். பயப்படாதீங்க ;)
/இந்தப் பதிவு சூப்பர். இனி தைரியமாக உங்க பதிவுகளைப் படிக்கிறேன்:)0/
நன்றி நன்றி!!