Wednesday, January 09, 2008

மௌனம் சுமந்த மலரொன்று மடிகின்றது!

செடிகளைப் புறக்கணித்து செல்லும்
விரல்களின் பயணமொன்றை நிறுத்தி,
ரசிக்க வைத்தது,
இதுவரை பூக்காத பூஞ்செடியொன்று.

இலை கோதத் துவங்கி,
நீரூற்றவும், உரமிடவும்,
மண்பிடித்து விடவும்
பழக்கமானது விரல்களுக்கு.

விரலின் அருகாமையில் செடி சிலிர்த்துக்கொண்டும்
செடியின் ஸ்பரிசத்தில் விரல்கள் இளகிக்கொண்டும்
ஒரு புதிய பயணத்துக்கு ஆயத்தமாயின இரண்டும்.

கீழ்வானத்தில் முழுநிலவும்; மேல் வானத்தில் மஞ்சள் கதிரும் நிற்க,
தலைக்கு மேலே முழுவட்டமாய் ஒளிரும் வானவில் தோன்ற,
தரையெங்கும் நட்சத்திரங்கள் மிணுங்க,
விரல் கோதிய செடியில்
முதல் பூ பூத்தது.

‘எனக்கானப் பூவா?’ – தயங்கி தயங்கி கேட்டுவிட்ட விரலிடம்,
‘நீ மலரச் செய்த பூதான்!’ - சொல்லவிடாமல் செடியை நிலம் இறுக்கிக்கொள்ளவும்,
வேர்களில் கொஞ்சம் கண்ணீரை இறைத்தபடி பயணத்தை தொடர்ந்தது விரல்.

சுமந்த மௌனத்தின் கனம் செறிந்து
மடிந்து விழுகின்றது மலர்.
செடியின் வேர்களை இன்னும் ஆழமாய்
தன்னுள் இழுத்துக் கொண்டது நிலம்.

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

29 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்வ் பொலம்ப ஆரம்பிச்சுட்டியா??? சரி என்ன தான் சொல்ல வர நீ இப்போ :(

    ReplyDelete
  2. அருமையான தலைப்பு...அழகான வார்த்தைகள்..

    பாராட்டுகள்

    ReplyDelete
  3. கவிதை அருமை! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  4. /அவ்வ்வ்வ்வ்வ்வ் பொலம்ப ஆரம்பிச்சுட்டியா??? சரி என்ன தான் சொல்ல வர நீ இப்போ :(/

    கிகிகி… நான் சொல்ல வர்றதெல்லாம் இருக்கட்டும் மாப்பி. நீ என்ன புரிஞ்சிகிட்டனு சொல்லு :)

    ReplyDelete
  5. /அருமையான தலைப்பு...அழகான வார்த்தைகள்..

    பாராட்டுகள்/

    நன்றிங்க பாசமலர். தலைப்புக்கும், கவிதைக்கும் தூண்டுதல் சிறில் அலெக்ஸ்தான். அவருக்கு நன்றி!

    ReplyDelete
  6. /கவிதை அருமை! பாராட்டுக்கள்!!!/
    நன்றிங்க திவ்யா!!!

    ReplyDelete
  7. Dear Arul,
    I hope you will be a cricket fan.
    After finish the Second cricket test in sydney The Australian News paper had the discussion about Racicm Row.As young writers what, You & your friends think about this Isssue . If you tnterest go through the link .This is my Email maantonylv@yahoo.co.in http://blogs.news.com.au/dailytelegraph/robertcraddock

    ReplyDelete
  8. எதுக்குங்க இவ்ளோ கிலோ சோகம் :-( என் கண்ணி கண்ணீரில் மிதக்குது.

    ReplyDelete
  9. புதன் கிழமையாகிடுச்சா..சரி சரி..இது என்ன மனுசக்காதல் சொல்லிட்டு இப்ப உவமை உவமேயம் எல்லாம் வச்சு புலம்பல் கவிதையா... வித்தியாசம் காட்டறீங்க...ம்.

    ReplyDelete
  10. அழகாக அழுத்தமான சொன்ன சோகம்.. ரசிக்க தான் வைக்கிறது :)
    அருமை...

    விரல்களையும் மண் விழுங்கும் நாள் வரும் :)

    ReplyDelete
  11. கொஞ்சம் புரியக் கஷ்டமாக இருந்தாலும்,
    படிக்கும் போது ஒரு சுகமும் சோகமும் உணர முடிந்தது.....
    அருணா

    ReplyDelete
  12. புத்தாண்டில் கவிஞனின் சிந்தனைப் புது திசையில் போகிறது.. ரசிக்கும் படியான சிந்தனை...வாழ்த்துக்கள் கவிஞனே..

    ReplyDelete
  13. \\ முத்துலெட்சுமி said...
    புதன் கிழமையாகிடுச்சா..சரி சரி..\\

    மாப்பி முத்துக்கா சொல்லறதை பார்த்த புதன்கிழமையான புலம்ப ஆரம்பிச்சிடுவியோ! ? ;)

    வழக்கம் போல புலம்பல் கூட நல்லாயிருக்கு ;)

    ReplyDelete
  14. / Dear Arul,
    I hope you will be a cricket fan.
    After finish the Second cricket test in sydney The Australian News paper had the discussion about Racicm Row.As young writers what, You & your friends think about this Isssue . If you tnterest go through the link .This is my Email maantonylv@yahoo.co.in http://blogs.news.com.au/dailytelegraph/robertcraddock/

    அண்ணாச்சி,

    மன்னிக்கனும்!
    கிரிக்கெட் செய்தியெல்லாம், செய்தித்தாள்ல படிக்கிறதோட சரி. அவ்வளவுதான் நம்ம ஆர்வம். ஆனா, கண்டிப்பா இந்த சுட்டிய மற்ற நண்பர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  15. /எதுக்குங்க இவ்ளோ கிலோ சோகம் :-( என் கண்ணி கண்ணீரில் மிதக்குது./

    யதார்த்தம் இப்படித்தானே? விரல்கள் பயணிக்க முடியும். செடி, நிலத்தில் நின்றபடியேதானே இருக்கிறது?

    ReplyDelete
  16. /புதன் கிழமையாகிடுச்சா..சரி சரி..இது என்ன மனுசக்காதல் சொல்லிட்டு இப்ப உவமை உவமேயம் எல்லாம் வச்சு புலம்பல் கவிதையா... வித்தியாசம் காட்டறீங்க...ம்./

    நல்ல வேளைங்க்கா… உவமை, உவமேயம்னு நிறுத்திட்டீங்க… படிமம், குறியீடு னு எதாவது சொல்லியிருந்தீங்கன்னா இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிற கொஞ்சம் பேரும் ஓடிப் போயிருப்பாங்க :-)

    ReplyDelete
  17. /அழகாக அழுத்தமான சொன்ன சோகம்.. ரசிக்க தான் வைக்கிறது :)
    அருமை.../

    நன்றி ட்ரீம்ஸ்!!

    /விரல்களையும் மண் விழுங்கும் நாள் வரும் :)/
    :)))

    ReplyDelete
  18. /கொஞ்சம் புரியக் கஷ்டமாக இருந்தாலும்,
    படிக்கும் போது ஒரு சுகமும் சோகமும் உணர முடிந்தது.....
    அருணா/

    நன்றிங்க அருணா!!! முதல் வருகைக்கும் கருத்துக்கும்…

    ReplyDelete
  19. /புத்தாண்டில் கவிஞனின் சிந்தனைப் புது திசையில் போகிறது.. ரசிக்கும் படியான சிந்தனை...வாழ்த்துக்கள் கவிஞனே../

    மாற்றம் தானே மாறாதது? :)
    நன்றி தல!!!

    ReplyDelete
  20. /மாப்பி முத்துக்கா சொல்லறதை பார்த்த புதன்கிழமையான புலம்ப ஆரம்பிச்சிடுவியோ! ? ;)/

    ஆமா கோபி,
    புலம்பலுக்கு புதன்கிழமை ஏத்த நாளுன்னு எங்கூரு மரத்தடி ஜோசியரு சொல்லியிருக்காரு ;-)

    /வழக்கம் போல புலம்பல் கூட நல்லாயிருக்கு ;)/

    :)

    ReplyDelete
  21. //‘நீ மலரச் செய்த பூதான்!’ - சொல்லவிடாமல் செடியை நிலம் இறுக்கிக்கொள்ளவும்,
    வேர்களில் கொஞ்சம் கண்ணீரை இறைத்தபடி பயணத்தை தொடர்ந்தது விரல்//

    இனிமையான வார்த்தை பிரயோகம் :)

    ReplyDelete
  22. / இனிமையான வார்த்தை பிரயோகம் :)/

    நன்றிங்க அனுசுயா!!!

    ReplyDelete
  23. /சுமந்த மௌனத்தின் கனம் செறிந்து
    மடிந்து விழுகின்றது மலர்.
    செடியின் வேர்களை இன்னும் ஆழமாய்
    தன்னுள் இழுத்துக் கொண்டது நிலம்./

    அழகான வரிகள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. போட்டிக் கவிதைகளில் இதுதான் முதல் சோகக் கவிதை என நினைக்கிறேன். மாறுபட்ட சிந்தனை. மலரும் ஒரு நாள் மடியும். விரலும் ஒரு நாள் விழும். கற்பனைத் திறன் ( அடிப்படை - எழுதத் தூண்டிய எண்ணம் - தங்களுக்கு மட்டும் தான் தெரியும்) அருமை.

    இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  25. dear arul,
    year starting sogama, vanam vanam,

    apuram pongal, reb-day, feb-14 alam varuthu redy agunga

    ram kumar

    ReplyDelete
  26. nanbarae...
    sisuvin sparisam thota menmai...
    ungal kavidhai(???!!!)
    romba overa iruko....??!!!

    ReplyDelete
  27. /
    அழகான வரிகள்
    வாழ்த்துக்கள்/

    நன்றிங்க திகழ்மிளிர்!!!

    /போட்டிக் கவிதைகளில் இதுதான் முதல் சோகக் கவிதை என நினைக்கிறேன். மாறுபட்ட சிந்தனை. மலரும் ஒரு நாள் மடியும். விரலும் ஒரு நாள் விழும். கற்பனைத் திறன் ( அடிப்படை - எழுதத் தூண்டிய எண்ணம் - தங்களுக்கு மட்டும் தான் தெரியும்) அருமை./

    அந்த தலைப்பை உவமையாக மட்டுமே பயன்படுத்த வேண்டாமென்பதால் சோகமாக எழுதிவிட்டேன்.

    /இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துகள்/

    உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் சீனா!!!

    ReplyDelete
  28. /dear arul,
    year starting sogama, vanam vanam,

    apuram pongal, reb-day, feb-14 alam varuthu redy agunga

    ram kumar/

    சோகமும் சுகம் தான் ராம்!!!
    பொங்கலுக்கு போட்டாச்சு ;)
    பிப்-14 க்கு பொட்டுடலாம்!!!

    /nanbarae...
    sisuvin sparisam thota menmai...
    ungal kavidhai(???!!!)
    romba overa iruko....??!!!/

    ஆகா, இதுல எதுவும் உள்குத்து இல்லையே?
    இத பாராட்டாவே நெனச்சு நன்றி சொல்லிக்கிறேன்!!!

    ReplyDelete
  29. வாழ்த்துகள் அருட்பெருங்கோ. போட்டியில் இரண்டாவதாக வந்ததற்கு.

    ReplyDelete