Wednesday, January 09, 2008

நான் பிடித்ததில் எனக்குப் பிடித்தது

2007 இல் நான் பிடித்த படங்களில் எனக்குப் பிடித்த ஒன்றை பதிவிட்டு அதனைப் பற்றி சில வரிகள் எழுத சொல்லி சர்வேசன் அழைப்பு விடுத்ததால் இந்தப் பதிவு.

புகைப்படமெடுப்பதை கலையாக செய்யும் கலைஞனல்ல நான். நிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ளும் வசதிக்காகவே கடந்த ஆண்டு ஒரு படப்பொட்டி வாங்கியிருந்தேன். “புது சட்டில போட்டா, நாயி ஏழு ஆப்ப கழி திங்குமாம்” – இப்படி ஒரு சொலவடை எங்களூரில் உண்டு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. வாங்கிய புதுசில் படப்பொட்டியைத் தூக்கிக் கொண்டு கண்ணில் படுவதையெல்லாம் சுட்டுக் கொண்டிருந்தேன். பார்க்கும்போது அழகாய்த் தெரிந்தவையெல்லாம் படத்தில் அழகாய் வரவில்லை. சில காட்சிகள் நேரில் பார்த்ததை விடவும் படத்தில் அழகாய் இருப்பதாய்த் தோன்றின. படமெடுப்பது ஒரு கலை. படமெடுத்தே அதனைக் கற்றுக்கொள்வதென ;) முடிவெடுத்து எப்படி விழுந்தாலும் படமெடுப்பது என சுட்டுத் தள்ளிக் கொண்டு இருந்தேன். அப்புறம் ஆர்வமில்லாமல் படப்பொட்டியை ஊரிலேயே விட்டாயிற்று.

கடந்த ஆண்டு முன் திட்டமெதுவுமில்லாமல் கங்கைகொண்டசோழபுரத்திற்கு சென்றபொழுதொன்றில் எடுக்கப்பட்டது இந்தப்படம். கோயில் வளாகத்தின் மையத்தில் இருந்த ஒரு கோபுரத்தையும், அதற்கு சற்றுத் தள்ளியிருந்த ஒரு கோபுரத்தையும் ஒரே கட்டடமாகப் படத்தில் காட்டலாம் என முயற்சி செய்து எடுத்தப் படம். படம் கொஞ்சம் சாய்வாகவும், தென்னங்கீற்றுகள் கொஞ்சமாய் மறைத்தபடி இருந்தபோதும் எடுத்தப் படங்களிலேயே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களும் பார்த்து சொல்லுங்கள் எப்படி இருக்கிறதென்று.



இந்த கோயிலின் மேலும் சில படங்களைக் காண
இங்கே செல்லவும்.

நான் அழைக்கும் மூவர் :

1. பிரபாகரன்
2. விழியன்
3. இளவஞ்சி


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

6 comments:

  1. வாவ். நல்லா இருக்கு படம்.

    கங்கை கொண்ட சோழபுரத்தை பார்க்கும் ஆவல் கூடுது.

    பி.கு: கேட்டதை ஈ.மடலில் அனுப்புங்கோ :)

    ReplyDelete
  2. /வாவ். நல்லா இருக்கு படம்./

    நெசமாத்தான் சொல்றீங்களா? :)

    /கங்கை கொண்ட சோழபுரத்தை பார்க்கும் ஆவல் கூடுது./

    கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம்ங்க!!!

    /பி.கு: கேட்டதை ஈ.மடலில் அனுப்புங்கோ :)/

    அனுப்பிட்டேங்க!!!

    ReplyDelete
  3. படம் நல்லாயிருக்கு மாப்பி ;))

    ReplyDelete
  4. dear arul,

    ok
    wow!
    good
    superbu
    keep it up


    ram kumar

    ReplyDelete
  5. ட்ரீம்ஸ், கோபி, ராம்,

    ரொம்ப நன்றிங்க மக்கா!!!

    ReplyDelete