Monday, January 21, 2008

ஒரு முட்டையின் கதை – முழு நீள மொக்கைப் பதிவு!

மொக்கைப் போட தீவிரமாக சிந்திக்க வேண்டுமென்பதால் என்னால் மொக்கை போட முடியாதெனத் தெரிந்தும் என்னை ஒரு மொக்கைப் பதிவு எழுத அழைத்திருக்கிறார் பிரேம்குமார். புதிதாக எதுவும் யோசிக்க நேரம் இல்லாததால் பொங்கல் விடுமுறையில் என் அக்காவின் மூன்று வயது மகளுக்கு சொன்ன கதையை அவள் பேச்சோடு சேர்த்து அப்படியே இங்கே.

மாமா ஒரு கத சொல்லு மாமா

உனக்கு தான் எல்லாக் கதையும் தெரியும்னு அம்மா சொல்றாங்களே.

ஐயோ கத சொன்னாதான் நான் தூங்குவேன். நீ சொல்லு மாமா.

சரி என்ன கதை சொல்லட்டும்?

முட்டக் கத சொல்லு மாமா.

முட்டக் கதையா? சரி சொல்றேன். ஒரு ஊர்ல ஒரு பாட்டியும் பேரனும் இருந்தாங்களாம். பேரன் வேலை தேடி பட்டணத்துக்குப் போறதுக்காக பாட்டிகிட்ட காசு கேட்டானாம். பாட்டிகிட்ட காசே இல்லையாம். அதனால பாட்டி ஒரு வட்டிக்கடக்காரன்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கி பேரனுக்குக் கொடுத்தாங்களாம். பட்டணத்துக்குப் போன பேரன் ரொம்ப நாளாகியும் திரும்ப வரவேயில்லையாம். காசத் திருப்பிக் கொடுக்கலன்னு வட்டிக்கடக்காரன் வந்து பாட்டிகிட்ட கேட்டானாம். பேரம் திரும்பி வந்ததும் தர்றேன்னு பாட்டி சொன்னாங்களாம்; ஆனா வட்டிக் கடக்காரான் அதுக்கு ஒத்துக்கலையாம். சீக்கிரமா பணத்த திருப்பித் தரணும்னு சொல்லி மெரட்டிட்டுப் போயிட்டானாம்.

அப்புறம் ஒரு நாளு பாட்டி, கடைல முட்ட வாங்கிட்டு வந்து அஞ்சு முட்டைல நால ஒடச்சிட்டு அஞ்சாவது முட்டைய ஒடைக்கும்போது ஒரு அழுக சத்தம் கேட்டுச்சாம். என்னான்னு பாத்தா கைல இருந்த முட்டதான் அழுதுச்சாம். “பாட்டி பாட்டி என்ன ஒடைக்காத. நான் உன் கூடவே இருக்கேன். உனக்கு எல்லா உதவியும் பண்றேன்” அப்படினு சொன்னுச்சாம். பாட்டியும் பாவம்னு அந்த முட்டைய மட்டும் ஒடைக்காம விட்டுடுச்சாம். அன்னைக்கும் அந்த வட்டிக் கடக்காரன் வந்தானாம். பாட்டிகிட்ட காசு கேட்டு மெரட்டவும், பேரன் வந்ததும் கொடுத்துட்றேன்னு பாட்டி சொன்னாங்களாம். வட்டிக்கடக்காரனுக்குக் கோபம் வந்து பாட்டிய அடிச்சுட்டுப் போயிட்டானாம். பாட்டி அழுதுட்டே இருந்தாங்களாம். முட்ட வந்து பாட்டிகிட்ட “ஏன் பாட்டி அழறீங்க”னு கேட்டுச்சாம். இந்த மாதிரி வட்டிக்கடக்காரன்கிட்ட கடன் வாங்கி பேரனுக்குக் கொடுத்தேன். பேரன் இன்னும் வரவேயில்ல. வட்டிக்கடக்காரன் காசு கேட்டு என்ன அடிச்சுட்டுப் போறான்னு சொல்லி அழுதாங்களாம். “நீங்க அழாதீங்க பாட்டி நான் போய் வட்டிக்கடக்காரன என்னானு கேட்டுட்டு வர்றே”ன்னு சொல்லிட்டு முட்ட கெளம்பிடுச்சாம் வட்டிக்கடக்காரன் வீட்டுக்கு.

முட்ட போயிகிட்டு இருந்த வழியில ஒரு சிங்கம் வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
“காசு கொடுக்க சொல்லி என்னோட பாட்டிய அந்த வட்டிக்கடக்காரன் அடிச்சு மெரட்றான். அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கப் போயிகிட்டு இருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம்.
“நானும் உன் கூட வரட்டுமா”னு சிங்கம் கேட்டுச்சாம்.
“சரி எம்பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.


கொஞ்ச தூரம் போனதும் ஒரு யானை வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
“காசு கொடுக்க சொல்லி என்னோட பாட்டிய அந்த வட்டிக்கடக்காரன் அடிச்சு மெரட்றான். அவனுக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கப் போயிகிட்டு இருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம்.
“நானும் உன் கூட வரட்டுமா”னு யானை கேட்டுச்சாம்.
“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ஒரு புலி வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
அதுக்கு முட்ட என்ன தங்கம் சொன்னுச்சு?


ம்ம்ம் அவன் காசு தர சொல்லி அடிக்கிறான்….


யாரு?


வட்டிக்கடக்காரந்தான்


யார அடிக்கிறான்?


அழுதுச்சுல்ல அந்தப் பாட்டிய…


ம்ம்ம் அப்புறம்?


அதனால அவனுக்கு பாடம் சொல்லித் தரப் போறேன்னு சொல்லுச்சாம்.


ம்ம்ம்ம் முட்ட அப்படி சொன்னதும்,
“நானும் உன் கூட வரட்டுமா”னு புலி கேட்டுச்சாம்.


“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.
இப்போ முட்ட பின்னாடி யாரெல்லாம் வர்றாங்கனு சொல்லு…


சிங்கம்ம்ம்ம்... யானை...அப்பறம் புலி

ம்ம்ம்ம்… இன்னும் கொஞ்சம் தூரம் போனதும் ஒரு கழுதை வந்துச்சாம்.
“முட்டண்ணே முட்டண்ணே எங்கப் போறீங்க”னு கேட்டுச்சாம்.
அதுக்கு முட்ட என்ன தங்கம் சொன்னுச்சு?


ம்ம்ம் பாட்டிய காசு தர சொல்லி வட்டிக்கடக்காரன் அடிக்கிறான்…. அவனுக்கு பாடம் சொல்லித் தரப் போறேன்னு சொல்லுச்சாம்.


ம்ம்ம்ம் முட்ட அப்படி சொன்னதும்,
“நானும் உங்க கூட வரட்டுமா”னு கழுதை கேட்டுச்சாம்.


“சரி நீயும் எங்க பின்னாடி வா”னு சொல்லிட்டு முட்ட நடக்க ஆரம்பிச்சுச்சாம்.
இப்போ முட்ட பின்னாடி யாரெல்லாம் வர்றாங்க?


சிங்கம்ம்ம்ம்... யானை... புலி... அப்பறம்... லயன்…


சிங்கம் தான் பாப்பா லயன்… கடசியா வந்த விலங்கு எது?


கழுதை.


ம்ம்ம் முட்ட பின்னாடி சிங்கம், யானை, புலி, கழுதை எல்லாம் போனாங்களாம்
( இன்னும்பாம்பு, தேள், பூரான் என்று கதையை நீட்டிக் கொண்டேன்)

முட்டையும் அப்பறம் எல்லா விலங்குகளும் வட்டிக்கடக்காரன் வீட்டுக்கு வரும்போது இருட்டாயிடுச்சாம். எல்லா விலங்குகளையும் ஒரு ஒரு எடத்துல போய் ஒளிஞ்சிக்க சொல்லுச்சாம் முட்டை.

சிங்கம் போய் வாசல்ல ஒளிஞ்சிக்கிச்சாம்.
யானை போய் வீட்டுக்குப் பின்னாடி ஒளிஞ்சிக்கிச்சாம்.
புலி போய் கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சிக்கிச்சாம்.
கழுதை போய் கதவுக்கு பின்னாடி ஒளிஞ்சிகிச்சாம்.
ஒலக்கை மேல பாம்பு உட்காந்துகிச்சாம்.

ஒலக்கைனா என்ன மாமா?

ஒலக்கைனா பெரிய குச்சி மாதிரி இருக்கும் பாப்பா. அம்மாச்சி வீட்ல உரல் இருந்துச்சுல்ல? அரிசிய அரைக்கனும்னா அதுல தான் அரிசியப் போட்டு ஒலக்கைல இடிப்பாங்க. பாட்டி ஊருக்குப் போகும்போது உனக்குக் காட்றேன் சரியா?

சரி மாமா.

அந்த ஒலக்கை மேல பாம்பு உட்காந்துகிச்சாம்.
கதவுக்குப் பின்னாடி கழுதை ஒளிஞ்சிகிச்சாம்.
தீப்பெட்டிகுள்ள தேள் ஒளிஞ்சிகிச்சாம்.
அடுப்புக்கு பக்கத்துல பூரான் ஒளிஞ்சிகிச்சாம்.

கட்டில்ல படுத்து வட்டிக்கடக்காரன் தூங்கிட்டு இருந்தானாம். இந்த முட்டை அவன் நெத்தி மேல ஏறி டிங்கு டிங்குனு ஆடுச்சாம். வட்டிக்கடக்காரன் முழிச்சுப் பாத்தானாம். முட்டை கீழ குதிச்சு ஆடிட்டு இருந்துச்சாம். வட்டிக்கடக்காரன் “ஏய் முட்ட. என் மேலயே வந்து குதிக்கிறியா? இப்பவே ஒன்ன ஒடைக்கப் போறேன்”னு மெரட்டுனானாம்.
“எங்க பாட்டியோட பேரன் வர்ற வரைக்கும் எங்க பாட்டிய நீ எதுவும் பண்ணக்கூடாதுனு ஒன்ன மெரட்டிட்டுப் போகதான் நான் வந்திருக்கேன்”னு முட்ட சொல்லுச்சாம். வட்டிக்கடக்காரனுக்கு கோபம் வந்து “இப்பவே உன்ன என்னப் பண்றேன் பாரு”னு சொல்லிகிட்டே கட்டில விட்டுக் கீழ எறங்குனானாம்.

கட்டிக்கு கீழ என்ன இருக்குதுனு சொன்னேன்?

புலி.

ம்ம்ம் அந்த புலி அவன் காலப் புடிச்சு கடிச்சுதாம். ஐயோ என்னமோ கடிக்குதே அத அடிக்கலாம்னு ஒலக்கைய எடுத்தானாம்.

ஒலக்கை மேல என்ன உட்காந்திருக்கு?

பாம்பு.

ம்ம்ம் அந்த பாம்பு அவன் கையிலேயே கொத்துச்சாம். ஐயோ அம்மா னு கத்திகிட்டே இருட்டா இருக்கிறதாலதான் நமக்கு ஒன்னும் தெரியல. வெளக்கப் பொருத்திப் பாக்கலாம்னு தீப்பெட்டியத் தெறந்தானாம்.

தீப்பெட்டிக்குள்ள என்ன இருக்கு?

தேளு.

ம்ம்ம் அந்த தேளும் அவன் கைலயே கொட்டுச்சாம். ஐயோ னு கத்திகிட்டே அடுப்பு நெருப்பு எடுக்கலாம்னு அடுப்புகிட்ட துழாவுனானாம்.

அடுப்புகிட்ட என்ன இருக்கு?

நெருப்பு.

அடுப்புக்குள்ள நெருப்பு இருக்குது பாப்பா. அடுப்புக்குப் பக்கத்துல எந்த விலங்கு போய் ஒளிஞ்சிகிச்சுனு சொன்னேன்?

பெருக்கான்.

அது பெருக்கான் இல்ல! பூரான். அந்த பூரானும் அவனக் கடிச்சுதாம். ஐயையோ இந்த வீட்டுக்குள்ள என்னென்னமோ புகுந்திடுச்சு. நாம கம்முனு ஒரு எடத்துல போயி ஒளிஞ்சிக்கலாம்னு சொல்லிட்டு கதவுக்குப் பின்னாடி ஒளியப் போனானாம்.

கதவுக்குப் பின்னாடி என்ன இருக்குது?

கழுதை.

ம்ம்ம்… அந்த கழுதை அவன ஓங்கி ஒரு உதை உதைச்சுதாம். வாசல்ல போய் விழுந்தானாம்.

வாசல்ல என்ன இருக்குது?

சிங்கம்.

ம்ம்ம்… சிங்கமும் அவனக் கடிச்சுதாம். அழுதுகிட்டே வீட்டுக்குப் பின்னாடி ஓடுனானாம்.

வீட்டுக்குப் பின்னாடி என்ன இருக்கு?

யானை.

ம்ம்ம்…. அந்த யானை தும்பிக்கைலையே அவனத் தூக்கிப் போட்டு மிதிக்கப் போச்சாம். அப்போ அங்க முட்டை வந்து அவன் கிட்டே “இனிமே எங்க பாட்டிய அடிப்பியா?”னு கேட்டுச்சாம். அதுக்கு அவன் “சத்தியமா இனிமே நான் பாட்டிய எதுவும் பண்ண மாட்டேன். பேரன் வந்த பின்னாடியே நான் காச வாங்கிக்கிறேன். என்ன மன்னிச்சிடுங்க”னு கெஞ்சுனானாம். முட்டையும் அவன மன்னிச்சிட்டு வந்திடுச்சாம்.

அப்பறம்?

அப்பறம்… அந்த வட்டிக்கடக்காரன் பாட்டிய அடிக்கவே இல்லையாம். பாட்டியும் முட்டையும் சந்தோசமா இருந்தாங்களாம்.

அப்பறம்?

அப்பறம் அவ்வளோதான் ஜனனி.

அந்த அனிமல்ஸ்லாம் எங்கப் போனாங்க?

அவங்களாம் காட்டுக்குப் போயிட்டாங்க…

போயி…

ஜனனி, இந்த கதை முடிஞ்சு போயிடுச்சு. அவ்வளவுதான்.

சரி மாமா. வேற கத சொல்லு மாமா.

வேற என்ன கதை?

ஹார்ஸ் கதை.

ஹார்ஸ் கதையா?

ம்ம்ம் பிங்க் கலர் ஹார்ஸ் கதை.

பிங்க் கலர் ஹார்ஸ் கதையா? அதெல்லாம் எனக்குத் தெரியாது ஜனனி.

இல்லனா ரெட் கலர் ஹார்ஸ் கதை சொல்லு மாமா.

அந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாது ஜனனி.

அப்பன்னா முட்டக் கதை சொல்லு மாமா.

இப்பதான முட்டக் கத சொன்னேன்.

பெரிய முட்டக் கத சொல்லு மாமா.

ஜனனி, மாமாவுக்குத் தெரிஞ்ச கதையெல்லாம் சொல்லிட்டேன். இனிமே நீதான் எனக்கு ஒரு கத சொல்லனும்.

(மிரட்டும் தொனியில்) வேற கத சொல்லு மாமா…

வேற கதையா? இரு சொல்றேன். ஹைதராபாத்ல உன்ன மாதிரியே ஒரு குட்டி பாப்பா இருந்துச்சு. அவங்க மாமா கிட்ட கத சொல்ல சொல்லி கேட்டுச்சாம். அவங்க மாமாவும் மூனு கத சொன்னாங்களாம். அப்பறமும் அந்த பாப்பா இன்னொரு கத சொல்லு மாமா இன்னொரு கத சொல்லு மாமா னு அடம் பண்ணிகிட்டே இருந்துச்சாம் பாரு, அந்த பாப்பாவுக்கு ஒரு அடி கொடுத்தாங்களாம் அவங்க மாமா. அந்தப் பாப்பா அதுக்கப்புறம் கதையே கேட்கலையாம். கம்முனு தூங்கிடுச்சாம்.

அப்பறம்?

அப்பறம்? கதை அவ்வளவுதான். உனக்கு இந்த கதை புரிஞ்சுதா இல்லையா ஜனனி?

புரிஞ்சுது மாமா. நீ வேற கத சொல்லு மாமா.

வேணாம் ஜனனி. அப்பறம் மாமா அழுதுடுவேன்!

-----

நான் அழைக்கும் மூவர் :

1. ஸ்ரீ
2. நாடோடி இலக்கியன்
3. தேவ்

-----

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

34 comments:

  1. நல்லா இருக்குயா நீங்க பண்றது. கிளம்பு கோடம்பாக்கம் போய் சங்கரை புடிச்சி கதை சொல்லி ஓவர் நைட்டுல பெரியாளாயிடுவோம். நல்லா கிளம்புறாங்கய்யா. கிராபிக்ஸ்க்கு கொஞ்சம் செலவாகும் அவ்ளோ தான் ஆனா படம் சூப்பர் கிட் ஐ மீன் ஹிட்டு ஹிட்டு.

    ReplyDelete
  2. அடடடா, படு மொக்கை இது ராசா

    ஆனா, கடைசியில அந்த மொக்கப் பட்டத்தை உனக்கு கொடுக்கிறதா இல்லை ஜனனி செல்லத்துக்கு கொடுக்குறதான்னு தான் தெரியல.... போட்டிப் போட்டுக்கிட்டு மொக்க போடுறாங்கய்யா........

    சரி, விதிமுறைப்படி மூனு பேர மொக்க போட அழைக்கனுமே அத மறந்தாச்சா?

    ReplyDelete
  3. ஜனனி - பேரு நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. தலைவரே, பரிசுப்பணம் வந்துச்சா?

    -சர்வேசன்.

    ReplyDelete
  5. பாதி கதை படிப்பதற்குள்....ஜனனிக்கு வரவேண்டிய தூக்கம்....எனக்கு வந்துவிட்டது!

    ReplyDelete
  6. / நல்லா இருக்குயா நீங்க பண்றது. கிளம்பு கோடம்பாக்கம் போய் சங்கரை புடிச்சி கதை சொல்லி ஓவர் நைட்டுல பெரியாளாயிடுவோம். நல்லா கிளம்புறாங்கய்யா. கிராபிக்ஸ்க்கு கொஞ்சம் செலவாகும் அவ்ளோ தான் ஆனா படம் சூப்பர் கிட் ஐ மீன் ஹிட்டு ஹிட்டு./

    இந்த கதையெல்லாம் நான் சின்னப் பையனா இருக்கும்போது எனக்கு எங்க ஊர்ல ஒருத்தர் சொன்னதுப்பா…
    சங்கர் கிட்டயா? வேணாம்ப்பா அவரு பாட்டிக்கு பதிலா ஸ்ரேயாவ நடிக்க வச்சிடுவாரு ;)

    ReplyDelete
  7. /அடடடா, படு மொக்கை இது ராசா

    ஆனா, கடைசியில அந்த மொக்கப் பட்டத்தை உனக்கு கொடுக்கிறதா இல்லை ஜனனி செல்லத்துக்கு கொடுக்குறதான்னு தான் தெரியல.... போட்டிப் போட்டுக்கிட்டு மொக்க போடுறாங்கய்யா......../

    தல, உங்கள ஒருநாள் ஜனனிக்கு கத சொல்ல சொல்லலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க? ;-)

    /சரி, விதிமுறைப்படி மூனு பேர மொக்க போட அழைக்கனுமே அத மறந்தாச்சா?/
    ஆகா மறந்துட்டேனே… இருங்க ஆளுங்களப் புடிக்கிறேன்!!!

    ReplyDelete
  8. //கட்டிக்கு கீழ என்ன இருக்குதுனு சொன்னேன்?

    புலி.
    //

    எல்லா மிருகங்களும் எங்கு ஒளிந்திருந்தன என்று சரியாக சொல்லும் அக்குழந்தைக்கு முன் தலைவணங்க வேண்டும்

    ஆர்வமா படிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு 2,3 படிச்சாலும் என்னால சரியா நினைவுல வச்சிக்க முடியல :(

    //ம்ம்ம் பிங்க் கலர் ஹார்ஸ் கதை.

    பிங்க் கலர் ஹார்ஸ் கதையா? அதெல்லாம் எனக்குத் தெரியாது ஜனனி.

    இல்லனா ரெட் கலர் ஹார்ஸ் கதை சொல்லு மாமா.

    அந்தக் கதையெல்லாம் எனக்குத் தெரியாது ஜனனி.

    அப்பன்னா முட்டக் கதை சொல்லு மாமா.
    //

    ஆனாலும் நீ பாவம்தான்யா..... பாப்பா கடைசி வரைக்கும் அசராம அடிச்சு ஆடியிருக்கா!!

    ReplyDelete
  9. /ஜனனி - பேரு நல்லா இருக்கு./

    நன்றிங்க தருமி. ஜனனிகிட்ட சொல்லிட்றேன் :)

    ReplyDelete
  10. //தல, உங்கள ஒருநாள் ஜனனிக்கு கத சொல்ல சொல்லலாம்னு இருக்கேன். என்ன சொல்றீங்க? ;-)
    //

    ராசா, இப்போ எதுக்கு இந்தக் கொலவெறி????நோ நோ நோ.........

    ReplyDelete
  11. சர்வேசன்,
    ஒரு வாரமா மடல் பாக்கல… நேத்துதான் பார்த்தேன். நேத்தே உங்களுக்கும் மடல் அனுப்பிட்டேன். (பணம் வந்துடுச்சு. நன்றி :))

    ReplyDelete
  12. /முடியல!!!/

    நாடோடி இலக்கியன்,

    படிக்கிறதுக்கே இவ்வளவு கஷ்டப் பட்றீங்களா? ;) நான் இதே கதைய 3 நாள்ல அவளுக்கு 20 தடவையாவது சொல்லியிருப்பேன் :)))

    ReplyDelete
  13. /பாதி கதை படிப்பதற்குள்....ஜனனிக்கு வரவேண்டிய தூக்கம்....எனக்கு வந்துவிட்டது!/

    அப்படியா? நீங்க தூங்கினா அப்புறம் யார் நட்சத்திர பதிவு எழுதுறது?

    ReplyDelete
  14. ரொம்ப ரசிச்சி படிச்சேன்!
    ஏன்னா நானும் ஒரு குழந்தைதான!!!

    ReplyDelete
  15. /எல்லா மிருகங்களும் எங்கு ஒளிந்திருந்தன என்று சரியாக சொல்லும் அக்குழந்தைக்கு முன் தலைவணங்க வேண்டும்

    ஆர்வமா படிக்கிறேன்னு நினைச்சுக்கிட்டு 2,3 படிச்சாலும் என்னால சரியா நினைவுல வச்சிக்க முடியல :(/

    தல,

    ஜனனிக்கு உண்மையிலேயே ஞாபகசக்தி அதிகம்!!!

    ( எனக்கும் தான்…. ஒன்னாப்புல படிச்ச ஏ, பி, சி, டி எல்லாம் இப்போ கூட கட கட னு சொல்லுவேன் ;-) )

    /ஆனாலும் நீ பாவம்தான்யா..... பாப்பா கடைசி வரைக்கும் அசராம அடிச்சு ஆடியிருக்கா!!/

    அவ அடிச்சு ஆடினத எல்லாம் தனிப்பதிவா அப்புறம் போட்றேன். அவ வளர்ந்த பின்னாடி படிச்சுப் பார்த்தா மலரும் நினைவா இருக்கும்ல :)

    /ராசா, இப்போ எதுக்கு இந்தக் கொலவெறி????நோ நோ நோ........./

    அந்த பயம் இருக்கனும்!!! (இது கூட அவளோட வசனம் தான் :))

    ReplyDelete
  16. /ரொம்ப ரசிச்சி படிச்சேன்!
    ஏன்னா நானும் ஒரு குழந்தைதான!!!/

    ரொம்ப நன்றிங்க தம்பியண்ணா :-)
    இனிமே உங்களுக்கும் தூக்கம் வரலன்னா சொல்லுங்க. ஒரு கதை எழுதிடுவோம் ;-)

    ReplyDelete
  17. எப்படியோ மாட்டிக்கிறதுக்குன்னே ஊருக்கு போறீங்க ஒவ்வொரு தடவையும்.. நீங்க சின்னதா இருந்தப்போ கேட்டகதயா அத்தனை நியாபக சக்தியா.. நான் நினைக்கிறேன் இப்படியே காதுவழியா இந்த கதை இன்னும் இன்னும் அவங்க அவங்க இட்டு கட்டி எழுதி எழுதியே பெரிசாகி இருக்கும்ன்னு.. நல்லா எழுதறீங்க மொக்கைய.. முட்டைக்கதை கிளம்பி போய் கிட்டு இருந்துச்சாம் வழியில வேற மூணு பதிவர் சேர்ந்து கிட்டாங்களாம்.. எல்லாருமா சேர்ந்து......................................

    ReplyDelete
  18. \\\வேணாம் ஜனனி. அப்பறம் மாமா அழுதுடுவேன்!\\

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...வாழ்க ஜனனி ;))

    ReplyDelete
  19. /எப்படியோ மாட்டிக்கிறதுக்குன்னே ஊருக்கு போறீங்க ஒவ்வொரு தடவையும்.. /

    குழந்தைங்ககிட்ட மாட்டிக்கிறது சுகம் தான் இல்லையா?

    /நீங்க சின்னதா இருந்தப்போ கேட்டகதயா அத்தனை நியாபக சக்தியா.. நான் நினைக்கிறேன் இப்படியே காதுவழியா இந்த கதை இன்னும் இன்னும் அவங்க அவங்க இட்டு கட்டி எழுதி எழுதியே பெரிசாகி இருக்கும்ன்னு../

    அக்கா, இதுவே சுருக்கமா சொன்னதுதான். எனக்கு சொன்னப்ப அந்த விலங்குகளும் பாட்டி வீட்டுக்கு வந்து பாட்டிக்கு வர்ற இன்னும் கொஞ்சம் பிரச்சினைகளும் இதே மாதிரி தீர்த்து வைப்பாங்க. நான் தான் சுருக்கிட்டேன் ;-)

    / நல்லா எழுதறீங்க மொக்கைய.. முட்டைக்கதை கிளம்பி போய் கிட்டு இருந்துச்சாம் வழியில வேற மூணு பதிவர் சேர்ந்து கிட்டாங்களாம்.. எல்லாருமா சேர்ந்து....................................../

    ஐ… இந்த கதை நல்லாருக்கே!!!

    ReplyDelete
  20. /\\\வேணாம் ஜனனி. அப்பறம் மாமா அழுதுடுவேன்!\\

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...வாழ்க ஜனனி ;))/

    :) எத்தன பேருப்பா கெளம்பிருக்கீங்க என்ன அழ வைக்கலாம்னு???

    ReplyDelete
  21. //அப்பறம்? கதை அவ்வளவுதான். உனக்கு இந்த கதை புரிஞ்சுதா இல்லையா ஜனனி?

    புரிஞ்சுது மாமா. நீ வேற கத சொல்லு மாமா.

    வேணாம் ஜனனி. அப்பறம் மாமா அழுதுடுவேன்!
    //
    ஜனனி... ப்ளீஸ்... நாங்களும் அழுதுவோம்.. தூங்கும்மா..

    ஏய்யா.. நல்லா இருந்தவரை யாருய்யா மொக்கைய போட சொல்லி சொன்னது....
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  22. //ஆனா, கடைசியில அந்த மொக்கப் பட்டத்தை உனக்கு கொடுக்கிறதா இல்லை ஜனனி செல்லத்துக்கு கொடுக்குறதான்னு தான் தெரியல.... போட்டிப் போட்டுக்கிட்டு மொக்க போடுறாங்கய்யா........//
    ரிப்பீட்டு...

    ReplyDelete
  23. வாங்க ட்ரீம்ஸ்,

    / ROFL/

    நான் உருண்டு பொரண்டு கதை சொல்லியிருக்கேன்… நீங்க பொரண்டு பொரண்டு சிரிக்கிறீங்களே? ;-)

    / ஜனனி... ப்ளீஸ்... நாங்களும் அழுதுவோம்.. தூங்கும்மா../

    இப்படி கெஞ்சினாலாம் அவ தூங்க மாட்டா… இன்னும் ரெண்டு கத சொன்னாதான் தூங்குவா!!!

    /ஏய்யா.. நல்லா இருந்தவரை யாருய்யா மொக்கைய போட சொல்லி சொன்னது....
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

    அண்ணன் பிரேம்குமார் அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!!!

    / //ஆனா, கடைசியில அந்த மொக்கப் பட்டத்தை உனக்கு கொடுக்கிறதா இல்லை ஜனனி செல்லத்துக்கு கொடுக்குறதான்னு தான் தெரியல.... போட்டிப் போட்டுக்கிட்டு மொக்க போடுறாங்கய்யா........//
    ரிப்பீட்டு.../

    இதெல்லாம் சுகமான மொக்கைப்பா ;-)

    ReplyDelete
  24. முட்டக்கத ரொம்ப அருமயா இருக்கு - மொக்கன்னா இது தான் மொக்க. மாமா பாவம் - குழந்த கிட்டே மட்டிக்கிட்டு முழிக்கிறாரு

    ReplyDelete
  25. இத எப்படி மொக்கைன்னு சொல்றது? இவ்ளோ அழகாக் கதை சொல்லீட்டு..மொக்கைன்னா ஒத்துக்கிருவோமா?

    அருட்பெருங்கோ.. இன்னோரு கதை சொல்லுங்க அருட்பெருங்கோ....இன்னோரு கதை... :)

    ReplyDelete
  26. dear arul,

    ungaluku inda mokiaa alutha sona p.kumar addras konjam kuduka mudeuma,

    ReplyDelete
  27. //ஏய்யா.. நல்லா இருந்தவரை யாருய்யா மொக்கைய போட சொல்லி சொன்னது....
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    //ungaluku inda mokiaa alutha sona p.kumar addras konjam kuduka mudeuma,//

    என்னமோ இவரு இதுவரைக்கும் மொக்கையே போடாத மாதிரியில்ல மக்கள் எல்லாம் கொலவெறியோட என்னைய தேடுறாங்க....

    ம்ஹீம், இது ஆவுறதில்ல... நான் தி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

    ReplyDelete
  28. / முட்டக்கத ரொம்ப அருமயா இருக்கு - மொக்கன்னா இது தான் மொக்க. மாமா பாவம் - குழந்த கிட்டே மட்டிக்கிட்டு முழிக்கிறாரு/

    அருமையா இருக்குன்னும் சொல்றீங்க, மொக்கைனும் சொல்றீங்க :) சரி அருமையான மொக்கைனு எடுத்துக்கறேன் ;-)
    கொழந்தைனா இப்படித்தான இருக்கும்!!!

    ReplyDelete
  29. /இத எப்படி மொக்கைன்னு சொல்றது? இவ்ளோ அழகாக் கதை சொல்லீட்டு..மொக்கைன்னா ஒத்துக்கிருவோமா?/

    எனக்கு இந்த கதைய சொன்னவருக்குத்தான் நன்றி சொல்லனும்!

    /அருட்பெருங்கோ.. இன்னோரு கதை சொல்லுங்க அருட்பெருங்கோ....இன்னோரு கதை... :)/

    நான் தூங்கிட்டேன் இராகவன் ;-)

    ReplyDelete
  30. /dear arul,

    ungaluku inda mokiaa alutha sona p.kumar addras konjam kuduka mudeuma,/

    நீங்க கேட்டதும் உங்களுக்குப் பின்னாடியே அவரே வந்து சமூகமளிச்சிருக்கார் பாருங்க :-)

    ReplyDelete
  31. /என்னமோ இவரு இதுவரைக்கும் மொக்கையே போடாத மாதிரியில்ல மக்கள் எல்லாம் கொலவெறியோட என்னைய தேடுறாங்க....

    ம்ஹீம், இது ஆவுறதில்ல... நான் தி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்/

    தல,

    இதுக்கெல்லாம் அசருற ஆளா நீங்க???

    ReplyDelete
  32. முட்டை கதையை இப்படியேவா விடறது.அனைவரும் அறிய www.tamigg.comல் சேர்க்கவும்

    ReplyDelete
  33. ரஜினியின் அடுத்த படத்துக்கு கதை ரெடி. ஏன்னா பாபாவிலும் பார்க்க இந்த முட்டைக்கதை நல்லா இருக்குது.

    ReplyDelete