வலைப்பதிவுல எழுதறதெல்லாம் நெனச்சத அப்படியே எழுதினதா என்ன? இல்லல்ல? வடிகட்டி , அடிச்சுத் திருத்திதான எழுதிகிட்டிருக்கோம். நெனைக்கிறத அப்படியே எழுதினா எப்படி இருக்கும்? ரொம்ப கேவலமா இருக்கும்! என்னமோ மறந்துட்ட மாதிரி இருக்கே. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. ஷூ போட வேண்டியதில்ல. பர்ஸ், மொபைல், ஐடிகார்ட் எல்லாம் இருக்கு கெளம்புவோம். போக போக யோசிப்போம். இன்னைக்கு அந்தமாதிரி ஒன்னு எழுதி இந்த ப்ரூஃப் ரீடிங்க் வெங்காயமெல்லாம் பண்ணாம அப்படியே போட்டு பாப்போம்.வர வர என்ன எழுதறதுன்னு தெரியாம என்னத்தையோ எழுதிகிட்டு இருக்கிறதுக்கு நெனச்சதையே எழுதுறது நல்லதுதான். நெனச்சதையோ எழுதறதுனு முடிவு பண்ணிக்கிட்டா என்னெல்லாம் எழுதலாம்னு யோசிச்சு அத மட்டுமே மனசு நெனைக்க ஆரம்பிச்சுட்டா என்னப்பண்றது? ரொம்ப கொழம்பிட்டேன்னு நெனைக்கிறேன். மொதல்ல ஆட்டோ வருதான்னுப் பாப்போம். நெனைக்கறத எல்லாம் ஆட்டோவுல வச்சுக்குவோம். வெயில் ஆரம்பிச்சிடுச்சா? என்ன ஊரோ இது. குளிருன்னா ரொம்ப குளிருது. வெயிலடிச்சா இப்படி கொளுத்துது.ஹும் இன்னைக்கும் முன்னாடிதான் உட்காரனுமா? சரி நம்ம சைசுக்கு முன்னாடியே வசதியா உக்காந்துக்கலாம்தான். ம்ம்ம் இப்போலருந்து 'நெனைக்க' ஆரம்பிப்போம். பதிவுல எழுதனுமே. ச்சே என்னதான் அப்படி குசுகுசுன்னு பேசிகிட்டே இருப்பாங்களோ! இந்த தெலுங்குப் பொண்ணுங்க என்ன பேசினாலும் ரொமாண்டிக்கா வேற இருக்கு. குரல் காரணமா இல்ல தெலுங்கே இப்படிதானா. எல்லாப் பொண்ணுங்களுமே இப்படிதான் பேசறாங்க. ஒருவேளை நமக்குதான் வயசுக்கோளாறோ? செல்லம் நீ யூத்து இல்ல. வயசாகிடுச்சு. அத மொதல்லப் புரிஞ்சிக்கோ. சரி அப்போ தெலுங்கே இப்படித்தான்னு வச்சுக்குவோம்.சுந்தரத்தெலுங்குனு சும்மாவா சொன்னான்? ம்ம்ம் கண்ணாடில பாத்தா ஒருத்திதான் தெரியறா. ம்ம்ம் நல்லாதான் இருக்கா. டேய் இதையெல்லாம்கூட பதிவுல எழுதப்போறியா? என்ன பாத்ரூம்லையா எட்டிப் பாத்தோம்? சைட்டடிக்கிறது ஒரு தப்பா? நம்மள 'நெனைக்க' விடாம எடஞ்சல் பண்ணது இவங்க சத்தம்தான். ஹும் சரி நாம மறுபடி உருப்படியா எதாவது 'நெனைக்க' ஆரம்பிப்போம்.பதிவுல எழுதனுமே! போட்டான்யா சடன் ப்ரேக்கு. ஏற்கனவே எலும்புல தோலப்போத்திகிட்டு சுத்திகிட்டு இருக்கோம். இப்படியெல்லாம் வண்டியோட்டினா இருக்குற எலும்பும் தேஞ்சுதான் போகும். எலும்பு மஜ்ஜைதானம்னு பதிவுல யாரோ எழுதிருந்தாங்க. அப்பறம் அதுமாதிரி எலும்புதானம் தான் வாங்கனும்! ஆகா நம்ம பாட்ட போட்டுட்டானா. நாம எதாவது நெனைக்கலாம்னாதான் பாட்ட போட்டு நெனைக்கவுடாம பண்றானுங்க. சரிவிடு பாவனா செல்லம் கண்ணு முன்னாடி தெரியுதில்ல அப்பறமென்ன? ம்ம்ம் நல்லாதான் இருந்தா ஆனா கொஞ்சம் குண்டா இருந்தானு சத்தி சொன்னான். நமக்கு ஒல்லியாதான் தெரிஞ்சா. பாவிங்க அநியாயமா பாதியிலேயே கொன்னுட்டானுங்க. தெலுங்கு படத்துலையும் வர வர சோகமா முடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. ரெண்டாவது தடவை பாக்கப்போனா பாவனா சாகறதுக்கு முன்னாடி வந்துடனும். இந்த வாரம் போலாமா. ஆகா போஸ்டர் மாறியிருக்கே. அதுக்குள்ள தூக்கிட்டானுங்களா?இந்த பாட்டுக்கு தமிழ் வரி எழுதினா நல்லாதான் இருக்கும். செப்பாலனுந்தி சின்ன மாட்டைனா... ஆகநந்தி தாகநந்தி லோலோனா... இதுக்கு என்னத்த எழுதறது? தன்னான தன்ன்ன்ன தன்ன தானேனா தான னன்ன னான னன்ன னானானா... பெரிய இசை வித்துவான்...பாடிப்பாக்கறாரு நாம பாடும்போது எவ்ளோ நாராசமா இருக்கும்னு தெரியுமில்ல அப்பறம் எதுக்கு? மனசுக்குள்ளதான பாட்றோம். மனசுக்குள்ள பாடும்போது எல்லாரும் எஸ்பிபிதான். பாட்டக் கேளு பாட்டக்கேளு...கிள்ளாமல் கிள்ளும் பார்வைபார்த்தாலே வண்ணமின்னல் கொண்டகண்ணில் விழுவேனா... ஆபிஸ்ல போய் முழுபாட்டையும் கேட்டுட்டு எழுதுவோம். இதுக்காடா சம்பளம் கொடுக்கறானுங்க? எங்க கொடுக்கறானுங்க? பாதி பேங்க் லோனுக்கே போயிடுது. ஆகா பாட்ட வுட்டாச்சே. ஆட்டோவுல கேட்டுட்டே எழுதறதுக்கு நாம என்ன வாலியா பக்கெட்டா? கருமம்புடிச்சவனே உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல? இந்தப் பொண்ணு எதுக்கு கண்ணாடில நம்மளயே பாக்கறா? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா! அநேகமா நெனைக்கறோம்னு நெனச்சிக்கிட்டு தானா பேச ஆரம்பிச்சுட்டோம்னு நெனைக்கிறேன்? ம்ம்ம் ம்ம்ம் ஒன்னும் ஆகல. முடி நெறைய வளந்துடுச்சோ? இந்த வாரம் வெட்டனும். ஆபிஸ் சலூன்லயே இருவத்தஞ்சு ரூபாய்க்கு பூ மாதிரி வெட்டிவிட்றாங்கனு சத்தி சொன்னான். பூவதான் பூ மாதிரி வெட்ட முடியும். முடிய எப்படி பூ மாதிரி வெட்டுவாங்க? நம்ம முடி என்ன பூ மாதிரியா இருக்கு? மயிர் மாதிரி இருக்கு. லூசு! முடியும் மயிரும் ஒன்னுதாண்டா. முடினும் சொல்லலாம். மயிரும்னும் சொல்லலாம். நீங்க சொன்ன மாதிரியும் சொல்லலாம்ணே. இப்ப எதுக்கு செந்தில் வசனமெல்லாம்? வள்ளுவரே மயிர்னு சொல்லிருக்கார்ல கற்றது தமிழ்ல கூட வருமே. அந்த ஹீரோயின் கூட நல்லாதான் இருந்தா. நெசமாதான்
சொல்றியா? நெசமாதான் சொல்றேன். அடுத்த படத்துலயே ஜீன்ஸ்ல வந்தான்னா வேற ஹீரோயின்னு நெனச்சுதான் பாக்கப் போற அப்பறமென்ன? இந்த சத்தியெல்லாம் எப்படிதான் ஞாபகம் வச்சிக்கிறானோ. நமக்கு மட்டும் ஒரே பொண்ண வேற ட்ரஸ்ல பாத்தா அடையாளம் தெரிய மாட்டேங்குது. இந்த வீக்னஸ் எல்லாம் இப்போ ரொம்ப முக்கியமா? உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல? நான் நெனைக்க மாட்டேன்னா சொல்றேன். இந்த மனசு ஒன்னும் நெனைக்க மாட்டேங்குது. இன்னைக்கு புதன் கிழமை கூட இல்லியே எதுக்கு இப்படி பொலம்பறோம்? இந்த நெனைக்கிறத எழுதறது எல்லாம் நமக்கு ஒத்து வராது. கம்முனு எதாவது கவுஜை யோசிப்போம். அட இந்த பொண்ணு மறுபடியும் என்னையே பாக்கறா. ம்ஹும்... இது என்னவோ முள்ள போய் கால்ல ஏத்திகிட்டு 'முள்ளு குத்திடுச்சு'னு சொல்ற மாதிரி தான் இருக்கு. சரி கவுஜயாவது யோசி. வழக்கம்போல கண்ணுல இருந்தே ஆரம்பிப்போம். ஏன் கால்ல இருந்து ஆரம்பிச்சா கவுஜ வராதா? என் கண்கள், உன் கண்களின் அடிமையா என்ன? உனது பார்வைகளையும் சேர்த்து சுமக்கிறதே. அப்பறம் ஆச்சர்யக்குறி! கவித கவித, சைட்டடிக்கிறேங்கறத எப்படியெல்லாம் சொல்ற. இப்படியே எழுதிகிட்டிருந்தா அய்யனாரோ ஆசிப்போ ஒருநாள் தேடிவந்து கும்மப் போறாங்க. அது மட்டும் நிச்சயம். டேய் உருப்படியா எதாவது நெனைடா! பதிவுல எழுதனும்ல... ஆபிசே வந்தாச்சு இனிமே உருப்படியா நெனச்சு ஒன்னும் பண்ணப் போறதில்ல. இன்னைக்கும் கொஞ்சம் இண்டர்வியூ கூட்டம் வந்திருக்கு போல. ம்ம்ம் எல் கே ஜி சேர்றதுக்கு ஜனனியே ரெண்டு ஸ்கூல்ல இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டா. வாழ்க்கைல நாமளே இதுவரைக்கும் ஒரே ஒரு இண்டர்வியூதான் அட்டெண்ட் பண்ணிருக்கோம். என்ன கொடும சார் இது. நாம வேல தேடும்போதுதானா டாலர் மதிப்பு தகிடுதத்தம் போடனும்? ஒருத்தனும் கால் பண்ண மாட்டேங்கறான். முன்னவாது we will get back to you னு சொல்லுவானுங்க. இப்ப அதகூட சொல்றதில்ல. இட்லி? ஜூசே போதும். மொசம்பி சனியன் சாத்துக்குடின்னு வந்து தொலைய மாட்டேங்குது. ஒரு சாத்துக்குடி ஜூசக் குடிச்சுட்டுப் போய் நெனச்சத எல்லாம் பதிவெழுதலாம். என்னத்த நெனச்சோம். பதிவுல எழுதற மாதிரி உருப்படியா ஒன்னுமே நெனைக்கல. என்ன தலைப்பு வைக்கிறது? 'தொடர்பயணத்தின் தொடர்பறுந்த குறிப்புகள் தொடர்பான பிரதி' னு வைக்கலாமா? தலைப்ப பாத்ததும் தெறிச்சு ஓடிடுவாங்க. அய்யனார் ஜ்யோவ்ராம் சுந்தர் சுகுணா திவாகர் மாதிரி நாலு பேரு படிச்சாதான் உண்டு. இப்படியொரு மொக்கைப் பதிவ எழுதிட்டு எதாவது மொக்கத்தலைப்ப வைப்போம். அதுக்கப்புறம் படிக்கிறவங்க பாடு. நாளைக்காவது உருப்படியா எதாவது நெனைடா. வலைப்பதிவுல எழுதனும்ல!
ஐயோ தலைவரே!!!! என்ன இது??? கொஞ்சம் கூட கேப் இல்லாம ஒரே பாராவா??? தலை சுத்துது.... கொஞ்சம் மாத்திப் போடுங்க. ஒரு வேளை இப்படித்தான் இந்தப் பதிவு போடணும்னு 'நினைச்சீங்களா'?? :)))
ReplyDeleteஅப்புறம் வ.வா.சங்கம் தந்த வள்ளலே! ஆர்குட் பக்கமெல்லாம் வர்றதே இல்லையா? ஒரு பிரண்ட் ரிக்வெஸ்ட் ரொம்ப நாளா வெயிட்டிங்ல இருக்கு .. சீக்கிரம் அப்ரூவ் பண்ணுங்க :)
செல்லம் நீ யூத்து இல்ல. வயசாகிடுச்சு. அத மொதல்லப் புரிஞ்சிக்கோ.
ReplyDeleteஅப்ப ஒரு 35 இருக்குமா..!
அப்புறம் எப்படி இவ்ளோ.....பெரிய பதிவு எழுதரீங்க....
என்ன தலைப்பு வைக்கிறது? 'தொடர்பயணத்தின் தொடர்பறுந்த குறிப்புகள் தொடர்பான பிரதி' னு வைக்கலாமா? தலைப்ப பாத்ததும் தெறிச்சு ஓடிடுவாங்க. அய்யனார் ஜ்யோவ்ராம் சுந்தர் சுகுணா திவாகர் மாதிரி நாலு பேரு படிச்சாதான் உண்டு. இப்படியொரு மொக்கைப் பதிவ எழுதிட்டு எதாவது மொக்கத்தலைப்ப வைப்போம். அதுக்கப்புறம் படிக்கிறவங்க பாடு.
உண்மைதான்...
உருப்படியா நினைடா, பதிவு எழுதணும்ல என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteரொம்ப நல்லா வந்திருக்குங்க. நிறைய இது போல எழுதுங்கள் என்பது என் வேண்டுகோள்.
புலம்பலில் புரிந்தவை...இது தான் தலைப்பு... மேல படிங்க...
ReplyDeleteஆட்டோல (தமிழில என்ன??) தொத்தி போற வவ்வால் நீங்க..
குல்டி பொண்ணுங்களை நிறைய சைட் அடிச்சிட்டீங்க..
உங்களுக்கு வயசாகிடுச்ச...
தற்போதைய கனவு கன்னி,பாவனா...
மயிர் கெட்ட வார்த்த இல்ல....
\\சத்தி சொன்னான். பூவதான் பூ மாதிரி வெட்ட முடியும். முடிய எப்படி பூ மாதிரி வெட்டுவாங்க? நம்ம முடி என்ன பூ மாதிரியா இருக்கு? மயிர் மாதிரி இருக்கு. லூசு!\\
அரிப்பு கவுஜை எழுதுவது....
\\என் கண்கள், உன் கண்களின் அடிமையா என்ன? உனது பார்வைகளையும் சேர்த்து சுமக்கிறதே. அப்பறம் ஆச்சர்யக்குறி!\\
Summa Mokkai Athiruthillaa.....
ReplyDelete/ ஐயோ தலைவரே!!!! என்ன இது??? கொஞ்சம் கூட கேப் இல்லாம ஒரே பாராவா??? தலை சுத்துது.... கொஞ்சம் மாத்திப் போடுங்க. ஒரு வேளை இப்படித்தான் இந்தப் பதிவு போடணும்னு 'நினைச்சீங்களா'?? :)))/
ReplyDeleteநெனைக்கும்போது பத்திப்பிரிச்சு நெனைக்கலையே :)
/அப்புறம் வ.வா.சங்கம் தந்த வள்ளலே! ஆர்குட் பக்கமெல்லாம் வர்றதே இல்லையா? ஒரு பிரண்ட் ரிக்வெஸ்ட் ரொம்ப நாளா வெயிட்டிங்ல இருக்கு .. சீக்கிரம் அப்ரூவ் பண்ணுங்க :)/
அலுவலகத்துல ஆர்குட்டுக்கு ஆப்படிச்சுட்டாங்கப்பா. என்ன நடக்கதுன்னே கவனிக்கிறதில்ல. இந்த வாரம் பாக்கறேன்!
அதுல பாதி :)
ReplyDelete/அப்புறம் எப்படி இவ்ளோ.....பெரிய பதிவு எழுதரீங்க..../
அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம் வெட்டியா இருந்தா எவ்ளோ பெரிய பதிவும் எழுதலாம்!
/உண்மைதான்.../
நல்லா தான் மொக்கை போட்டிருக்கேன் போல!
/உருப்படியா நினைடா, பதிவு எழுதணும்ல என்ற ஒரு வரியை வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteரொம்ப நல்லா வந்திருக்குங்க./
:)நல்லா வந்திருக்கா?
/நிறைய இது போல எழுதுங்கள் என்பது என் வேண்டுகோள்./
படிக்கிறவங்களே சொல்லிட்டீங்க எனக்கென்ன பிரச்சினை ;-)
/ஆட்டோல (தமிழில என்ன??) தொத்தி போற வவ்வால் நீங்க../
ReplyDeleteதானி னு சொல்லிக்கலாம். நான் வவ்வால் இல்லப்பா அந்த பேர்ல வேற ஒரு பதிவர் இருக்கார் :)
/குல்டி பொண்ணுங்களை நிறைய சைட் அடிச்சிட்டீங்க../
அடப்பாவி.
/உங்களுக்கு வயசாகிடுச்ச.../
அடப்பாவி அடப்பாவி
/தற்போதைய கனவு கன்னி,பாவனா.../
தம்பி கதிரு காதுல விழுந்தா கொஞ்சம் வருத்தப்படுவார்!
/மயிர் கெட்ட வார்த்த இல்ல..../
ம்ம்ம்…
/அரிப்பு கவுஜை எழுதுவது..../
இதுதான எப்பவுமே பண்ணிட்டு இருக்கோம்.
சுருக்கமாக விடையளித்த உங்களுக்கு 60 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
/Summa Mokkai Athiruthillaa...../
ReplyDeleteஅதிருதா? :) கி கி கி
உண்மையிலேயே இப்படி நினைச்சதை எழுதக்கூடிய எழுத வேண்டிய இடம் http://twitter.com :)
ReplyDeleteரவி, அங்க 140 எழுத்து மட்டும் தான எழுத முடியும்?
ReplyDeleteஒரே எவருரா அதி. ஒக்க பிளைட் டிக்கட் ஹய்தராபாத்க்கோ புக் செய்ரா. மர்டர்க்கோ டைம் ஒஸ்துந்தி.
ReplyDelete140 எழுத்து தான்கிறதே சவாலே? நாள் முழுக்க சின்னச் சின்னதா எவ்வளவு வேணா எழுதலாம். யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க :) வலைப்பதிவுல எழுதணும்னு நினைச்சாலே serious ஆகிடுறோம். அங்க எந்ந அலட்டலும் தேவையில்ல. இயல்பா இருக்கலாம்.
ReplyDeleteகலக்கல்
ReplyDelete//
என்ன பாத்ரூம்லையா எட்டிப் பாத்தோம்? சைட்டடிக்கிறது ஒரு தப்பா?
//
அதானே பாத்ரூம்ல எட்டி பாக்கிறதே தப்பில்லையாம்!! (நான் சொல்லலை 3ஷா சிடி விக்கிறவன் சொல்றான்)
//'தொடர்பயணத்தின் தொடர்பறுந்த குறிப்புகள் தொடர்பான பிரதி' னு வைக்கலாமா? //
ReplyDeleteசெம நக்கல்ங்க உங்களுக்கு! நல்லாருந்துச்சி படிக்க. :)
அய்யனார் ஜ்யோவ்ராம் சுந்தர் சுகுணா திவாகர் மாதிரி நாலு பேரு படிச்சாதான் உண்டு
ReplyDeleteu can add me in the list, as i've started readin kavithai's.. then padayal (illadha kadavuluku) mudindhu vittadha.. illa rest ah..?
படிச்சு முடிக்கிறதுக்குள்ள தலைசுத்திடுச்சி. அதனால பாதி தான் படிச்சேன். மிச்சத்த அப்புறமா தலைய திருப்பிக்கிட்டு வந்து படிக்கிறேன்.
ReplyDeleteகவுஜை appadina yenna??
ReplyDelete/ஒரே எவருரா அதி. ஒக்க பிளைட் டிக்கட் ஹய்தராபாத்க்கோ புக் செய்ரா. மர்டர்க்கோ டைம் ஒஸ்துந்தி./
ReplyDeleteஏதோ தெரியாம சடன் ப்ரேக் போட்டுட்டார் அதுக்காக மர்டரெல்லாம் டூ மச் ஸ்ரீ :) உன்னோட பாசம் எனக்குத்தெரியுது. கூல் டவுன்!
/ 140 எழுத்து தான்கிறதே சவாலே? நாள் முழுக்க சின்னச் சின்னதா எவ்வளவு வேணா எழுதலாம். யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க :) வலைப்பதிவுல எழுதணும்னு நினைச்சாலே serious ஆகிடுறோம். அங்க எந்ந அலட்டலும் தேவையில்ல. இயல்பா இருக்கலாம்./
ReplyDeleteம்ம்ம்… ஃபயர் பாக்ஸ், வேர்ட்பிரஸ் க்கு அப்பறம் இப்போ ட்விட்டரா? ;)
/அதானே பாத்ரூம்ல எட்டி பாக்கிறதே தப்பில்லையாம்!! (நான் சொல்லலை 3ஷா சிடி விக்கிறவன் சொல்றான்)/
ReplyDeleteஒன்னும் சொல்றதுக்கில்ல சிவா :)
/செம நக்கல்ங்க உங்களுக்கு! நல்லாருந்துச்சி படிக்க. :)/
ReplyDelete:) உங்க அளவுக்கு இல்லனாலும், ஏதோ ஓரளவுக்கு வரும். நன்றிங்க!
/u can add me in the list, as i've started readin kavithai's.. then padayal (illadha kadavuluku) mudindhu vittadha.. illa rest ah..?/
ReplyDeleteசரி சேர்த்துடலாம் :) தினமுமா வச்சா அது படையல் இல்லையே. படையல் அப்பப்போ வரும் ;)
en appu... ipdi lam...?
ReplyDeletemoochu vidama pesurvanga sangam nu edhavadhu irundha serthundunga kavi....
ipavadhu otthukittingale... vayasahidichu nu...
idha fwd pannadhuku en desk thedi vandhu adichutu poranga makkal...
thirupthiya aiya...
irundhalum sabaash.. vaazhthukkal...
/படிச்சு முடிக்கிறதுக்குள்ள தலைசுத்திடுச்சி. அதனால பாதி தான் படிச்சேன். மிச்சத்த அப்புறமா தலைய திருப்பிக்கிட்டு வந்து படிக்கிறேன்./
ReplyDeleteகீழ இருந்து மேல படிங்க. தல எதிர் திசைல சுத்தி பழையபடி நேரா வந்துடும் :)
/கவுஜை appadina yenna??/
ReplyDeleteஅது ஒன்னுமில்ல மச்சி. பாத்தா கவிதை மாதிரி தெரியும். படிச்சா கவிதையில்லைனு புரியும். அதான் கவுஜை ;)
//
ReplyDeleteஅருட்பெருங்கோ said...
ஒன்னும் சொல்றதுக்கில்ல சிவா :)
//
அண்ணே ஒண்ணும் சொல்ல வேண்டாம் எதோ நாம நாலு பேர் குடுக்கிற ஆதரவுல அவங்க எட்டி பாத்துட்டு போட்டும் :))))))
//
ReplyDeleteMaragathavalli said...
idha fwd pannadhuku en desk thedi vandhu adichutu poranga makkal...
thirupthiya aiya...
irundhalum sabaash.. vaazhthukkal...
//
இத ஃபார்வர்ட் பண்ணீங்களா?
ஏன் இந்த கொல வெறி!?!?!?
//
ReplyDeleteஅருட்பெருங்கோ said...
அது ஒன்னுமில்ல மச்சி. பாத்தா கவிதை மாதிரி தெரியும். படிச்சா கவிதையில்லைனு புரியும். அதான் கவுஜை ;)
//
சூப்பர்........ சூப்பர் விளக்கம்!!
/en appu... ipdi lam...?
ReplyDeletemoochu vidama pesurvanga sangam nu edhavadhu irundha serthundunga kavi.... /
நான் மூச்சு விட்டுதாங்க எழுதினேன். படிக்கிறவங்கதான் மூச்சு விடாம படிக்கிறாங்க!
/ipavadhu otthukittingale... vayasahidichu nu... /
நான் அப்பப்போ பொய் சொல்லுவேன் ;)
/idha fwd pannadhuku en desk thedi vandhu adichutu poranga makkal...
thirupthiya aiya...
irundhalum sabaash.. vaazhthukkal.../
வழக்கமா என்னோட பதிவுகள மெயிலனப்புற நானே இத மட்டும் யாருக்கும் அனுப்பல! நீங்க ஏன் ரிஸ்க் எடுத்தீங்க?
/அண்ணே ஒண்ணும் சொல்ல வேண்டாம் எதோ நாம நாலு பேர் குடுக்கிற ஆதரவுல அவங்க எட்டி பாத்துட்டு போட்டும் :))))))/
ReplyDeleteதிங்கட்கிழமை காலைலயேவா? ஆணியக்கொஞ்சம் பாப்போமே!
மாப்பி ஒன்னும் சொல்ல முடியல...என்னென்னா எனக்கும் இதே நிலைமை தான்...அதனால பதிவு சூப்பர்..அடுத்த பதிவுக்கு ஜடியா கொடுத்தற்க்கு மிக்க நன்றி மாப்பி ;))
ReplyDelete\\ காயத்ரி said...
ReplyDelete//'தொடர்பயணத்தின் தொடர்பறுந்த குறிப்புகள் தொடர்பான பிரதி' னு வைக்கலாமா? //
செம நக்கல்ங்க உங்களுக்கு! நல்லாருந்துச்சி படிக்க. :)\\\
அப்போ நீங்க பதிவை படிச்சிங்க...என்ன கொடுமை அருள் இது ;))
பதிவு சூப்பரோசூப்பரு... அதுவும் அய்யனாரு டைப்ல ஒரு தலைப்பு யோசிச்சதும் சரி.. அப்படி வச்சா யாரு வருவாங்கன்ன கணிப்பும் சரி.. செம கலக்கல்... :)
ReplyDelete\\நினைக்கும்போது பத்தி பிரிச்சு நினைக்கலையே // என்னஒரு அப்பாவித்தனமான(வில்லத்தனமான) பதில்
/ சூப்பர்........ சூப்பர் விளக்கம்!!/
ReplyDeleteசரியாதானப்பா சொல்லியிருக்கேன்?
/மாப்பி ஒன்னும் சொல்ல முடியல...என்னென்னா எனக்கும் இதே நிலைமை தான்...அதனால பதிவு சூப்பர்..அடுத்த பதிவுக்கு ஜடியா கொடுத்தற்க்கு மிக்க நன்றி மாப்பி ;))/
ReplyDeleteமாப்ள, இதே நெலமைனு எத சொல்ற? அடுத்த பதிவுக்கு ஐடியாவா? நல்லா இரு ராசா. ஏற்கனவே பல பேரு கொலவெறியோட தேடிட்டு இருக்காங்க. நீயும் என்கூட சேந்துக்கறதுக்கு நன்றி :)
/செம நக்கல்ங்க உங்களுக்கு! நல்லாருந்துச்சி படிக்க. :)\\\
ReplyDeleteஅப்போ நீங்க பதிவை படிச்சிங்க...என்ன கொடுமை அருள் இது ;))/
அதுக்காகதானப்பா கடைசி வரிகள்ல இருந்து எடுத்து போட்ருக்காங்க ;)
/பதிவு சூப்பரோசூப்பரு... அதுவும் அய்யனாரு டைப்ல ஒரு தலைப்பு யோசிச்சதும் சரி.. அப்படி வச்சா யாரு வருவாங்கன்ன கணிப்பும் சரி.. செம கலக்கல்... :) /
ReplyDeleteநீங்களும் கிட்டத்தட்ட இதே மாதிரி தான எழுதுவீங்க? இந்த மாதிரி தலைப்புள்ள இடுகைகள தேடி வாசிக்கறவங்களும் இருக்காங்க தான?
\\நினைக்கும்போது பத்தி பிரிச்சு நினைக்கலையே // என்னஒரு அப்பாவித்தனமான(வில்லத்தனமான) பதில்/
அப்போ, அப்பாவியா இருக்கறது வில்லத்தனமா? என்ன கொடுமைங்க்கா இது? :)
அப்பாவித்தனம் வில்லத்தனம் இல்ல..
ReplyDeleteஅப்பாவித்தனமாவும் எடுத்துக்கலாம் இல்லன்னா.. எப்படியும் எங்கள இப்படி ஒரே பத்தியில பதிவு போட்டுப்படுத்தறதுன்னு முடிவு செய்த வில்லத்தனமாவும் எடுத்துக்கலாம்..[ஒரே பத்தியா போட்டா படிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாருக்கும்ல அத சொன்னேன்.].
ஒன்னு அடைப்புக்குள்ள இருக்கறது இல்லாட்டி வெளியே இருக்கறது .. :))
எதுக்குங்க்கா இவ்வளவு சீரியசான விளக்கம்? நான் சும்மா ஒரு சுவாரசியத்துக்குதான கேட்டேன்?
ReplyDeletehey very nice.....enjoyed....keep it up
ReplyDeleteஆனாலும் மக்கா இத படிச்சு முடிக்குறதுக்குள்ள அஞ்சு சோடா காலியாயிடுச்சுப்பா எப்படிப்பா மூச்சே வுடாம யோசிக்கிறீங்க நான் பரவாயில்ல என்கூட இருந்தவன் ஆர்வக்கோளாருல படிச்சிட்டு கோமா ஸ்டேஜுக்கு போய்ய்ட்டான், ஆஸ்பத்திரி செலவுக்கு ஐயாயிரம் அனுப்பிவைக்கவும்.
ReplyDeleteபாசக்கார பய
/hey very nice.....enjoyed....keep it up/
ReplyDeleteநன்றி ஸ்ரீ!
/ஆனாலும் மக்கா இத படிச்சு முடிக்குறதுக்குள்ள அஞ்சு சோடா காலியாயிடுச்சுப்பா எப்படிப்பா மூச்சே வுடாம யோசிக்கிறீங்க/
யோசிக்கிறப்ப எதுக்கு மூச்சு விடனும்? :)
/நான் பரவாயில்ல என்கூட இருந்தவன் ஆர்வக்கோளாருல படிச்சிட்டு கோமா ஸ்டேஜுக்கு போய்ய்ட்டான், ஆஸ்பத்திரி செலவுக்கு ஐயாயிரம் அனுப்பிவைக்கவும்.
பாசக்கார பய/
:)))