அண்மைக்காலமாக
எனக்குள்ளும் புதிய மாற்றங்கள்
தென்படத் துவங்கியிருக்கின்றன.
என்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது எனக்கேத் தெரிகிறது.
இராத்திரியின் நீளம் விளங்குகிறது.
நானும் கவுஜை ஜொள்ளுகிறேன்.
என் பிம்பம் விழுந்தே கண்ணாடிகள் உடைகின்றன.
கண்களிரண்டும் ஒளிகொள்வதாக நண்பன் சொல்கிறான்.
தலையணை நனைக்கிறேன்.
மூன்று முறை பல்துலக்குகிறேன்.
காத்திருக்கும்போது நிமிடங்கள் வருடங்களாகின்றன.
வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகின்றன.
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
தொண்டைக்கும் தலைக்கும்
உருவமில்லா உருண்டையொன்று உருளுகிறது.
உண்மையாகவே இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கிறது.
நிசப்த அலைவரிசைகளில்
எனது குரல் மட்டும் ஒலிபரப்பாகிறது மிக மிக சத்தமாக.
எனது நரம்பே நாணேற்றி எனக்குள் அம்புவிடுகிறது.
புதிய ஹார்மோன்கள் நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கின்றன.
எனினும் உதடுகள் மட்டும் சகாராவாகிறது.
வாழ்ந்துகொண்டே சாகவும் முடிகிறது.
செத்துக்கொண்டே வாழவும் முடிகிறது.
ஆம். நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்,
கண்ணாடிக் கோப்பையில் நிறைந்து கொண்டிருக்கும் இந்த மதுவை.
சியர்ஸ் :)
(கொலைவெறியோடு முறைக்காமல் இந்த மொக்கையையும் பார்த்துவிடுங்கள் ;-) )
எதுக்கும் ஒரு ஃபுல் மெடிக்கல் செக்கப் பண்ணீட்டா என்ன பிரச்சனைன்னாலும் தெரிஞ்சிருமாம்!!
ReplyDelete/எதுக்கும் ஒரு ஃபுல் மெடிக்கல் செக்கப் பண்ணீட்டா என்ன பிரச்சனைன்னாலும் தெரிஞ்சிருமாம்!!
ReplyDelete/
புரியுது தலைவா :)
//கண்ணாடிக் கோப்பையில் நிறைந்து கொண்டிருக்கும் இந்த மதுவை.
ReplyDeleteசியர்ஸ் :)//
அது...................
சரக்கு அடி.... வாழ்க்கையை கொண்டாடு.... :)
யோவ் ! யோவ் ! யோவ் ! ஏன் இந்தக் கொலவெறி.............????
ReplyDelete/அது...................
ReplyDeleteசரக்கு அடி.... வாழ்க்கையை கொண்டாடு.... :)/
தலைப்பில்லாக் கவிதைகள்ல மூனாவது கவிதையப் படிச்சிடுங்க ராம் :)
/யோவ் ! யோவ் ! யோவ் ! ஏன் இந்தக் கொலவெறி.............????/
ReplyDeleteசும்மா பொழுதுபோக்குக்குதான் :)
மாப்பி..நீ ரொம்ப நல்லவன்டா ;))
ReplyDelete\\பிரேம்குமார் said...
யோவ் ! யோவ் ! யோவ் ! ஏன் இந்தக் கொலவெறி.............????
\\
இதுல என்ன மாப்பி கொலவெறி...வார கடைசியில நடக்குறது தானே...என்ஜாய் மாப்பி ;))
/ இதுல என்ன மாப்பி கொலவெறி...வார கடைசியில நடக்குறது தானே...என்ஜாய் மாப்பி ;))/
ReplyDeleteமாப்ள, முடிவே பண்ணிட்டியா? என்னோட ஒடம்புக்கு இதெல்லாம் தாங்காதுய்யா. ஒரு மொக்கை போடலாம்னுதான் இப்படியெல்லாம்!
good, keep writting like these tension brakers:-)
ReplyDelete/good, keep writting like these tension brakers:-)/
ReplyDeleteகண்டிப்பா தொடரலாம்!!!