Wednesday, March 05, 2008

ஒன்றாகத் தந்தாய்

தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும்
தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும்
ஒன்றாகத் தந்தாய்.

பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்
உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்
ஒன்றாகத் தந்தாய்.

பார்வையற்ற கண்களின் இருமையும்
வாயில்லா இதயத்தின் வெறுமையும்
ஒன்றாகத் தந்தாய்.

இனிமைகொள்ள ஒரு நினைவும்
தனிமைகொல்ல ஒரு நினைவும்
ஒன்றாகத் தந்தாய்.

எடுத்துப்போன இதயத்தை மட்டும் ஏன்
இரண்டாகத் தந்தாய்?

17 comments:

  1. Please add a line before the message that comes in the RSS. It appears as if it were a part of your kavithai :-)

    ReplyDelete
  2. //இனிமைகொள்ள ஒரு நினைவும்
    தனிமைகொல்ல ஒரு நினைவும்//

    அருமையான வரிகள்...
    இல்லை புலம்பல்....

    ReplyDelete
  3. \\தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும்
    தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும்
    ஒன்றாகத் தந்தாய்.//

    அருமை அருமை. ..
    இரண்டாய் தந்தாய் உடைத்து தந்ததைகுறிப்பிடுவதாக தெரிகிறது.
    அட்டகாசம்.. ஒன்று இரண்டு கணக்கும் அருமை..

    ReplyDelete
  4. /Please add a line before the message that comes in the RSS. It appears as if it were a part of your kavithai :-)/

    தகவலுக்கு நன்றி ப்ரகாஷ். சரி பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. /அருமையான வரிகள்...
    இல்லை புலம்பல்..../

    :) நன்றி மெய்புங்காடன்.

    ReplyDelete
  6. /அருமை அருமை. ..
    இரண்டாய் தந்தாய் உடைத்து தந்ததைகுறிப்பிடுவதாக தெரிகிறது.
    அட்டகாசம்.. ஒன்று இரண்டு கணக்கும் அருமை../

    நன்றிங்க்கா. உடைத்து/கிழித்து னு வச்சுக்கலாம்.

    ReplyDelete
  7. நல்ல உணர்வு பிரவாகம் நண்பரே,


    சேர்ந்த காதலைவிட உடைந்த காதல்தான் உன்னதமானது - இதை நான் சொல்லவில்லை
    கவி சாம்ராட் தாகூர் சொல்கிறார்.

    தாஜ்மகால் கட்டி முடித்த அந்நாளில் ஷாஜகான் கூட மும்தாஜின் மரணத்திற்காக மகிழ்ந்திருப்பானோ,
    ஒருவேளை ஒன்றாயிருந்திருந்தால் ஒன்பதாயிரம் பிரச்சனைகளில் அவர்களின் காதலும் ஒன்றாகி இருந்திருக்கும்.

    வாழ்த்துகள்
    சுமி

    ReplyDelete
  8. /நல்ல உணர்வு பிரவாகம் நண்பரே,


    சேர்ந்த காதலைவிட உடைந்த காதல்தான் உன்னதமானது - இதை நான் சொல்லவில்லை
    கவி சாம்ராட் தாகூர் சொல்கிறார்.

    தாஜ்மகால் கட்டி முடித்த அந்நாளில் ஷாஜகான் கூட மும்தாஜின் மரணத்திற்காக மகிழ்ந்திருப்பானோ,
    ஒருவேளை ஒன்றாயிருந்திருந்தால் ஒன்பதாயிரம் பிரச்சனைகளில் அவர்களின் காதலும் ஒன்றாகி இருந்திருக்கும்./

    இருந்திருக்கலாம் என்று மட்டும்தான் சொல்ல முடியும் இல்லையா?:)

    /வாழ்த்துகள்
    சுமி/
    மிக்க நன்றி சுமி!

    ReplyDelete
  9. //எடுத்துப்போன இதயத்தை மட்டும் ஏன்
    இரண்டாகத் தந்தாய்?
    /

    நல்லா கேட்டீங்க டீடெய்ல :)
    கவிதை nice :)

    ReplyDelete
  10. /நல்லா கேட்டீங்க டீடெய்ல :)
    கவிதை nice :)/

    கவிதையெழுத எதுவும் தோணலைனா இப்படியெதாவது யோசிக்க வேண்டியதுதான் ;). நன்றி ட்ரீம்ஸ்.

    ReplyDelete
  11. //இனிமைகொள்ள ஒரு நினைவும்
    தனிமைகொல்ல ஒரு நினைவும்
    ஒன்றாகத் தந்தாய்.//

    உண்மையான வார்த்தைகள்!! நல்லா இருக்குங்க!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  12. /உண்மையான வார்த்தைகள்!! நல்லா இருக்குங்க!
    அன்புடன் அருணா/

    நன்றிங்க அருணா.

    ReplyDelete
  13. //பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்
    உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்
    ஒன்றாகத் தந்தாய்.//

    நின்று நிதானித்து பல முறை படித்து உள்வாங்கிய வரிகள்!! அர்த்தமுள்ளவை!!

    வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!

    முகவைத்தமிழன்

    ReplyDelete
  14. மெல்லிய சோகம்...நல்லாயிருக்கு.


    ஆனாலும் ஒரு கேள்வி மாப்பி உனக்கு என்ன ஆச்சு!!?

    ReplyDelete
  15. /நின்று நிதானித்து பல முறை படித்து உள்வாங்கிய வரிகள்!! அர்த்தமுள்ளவை!!

    வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!
    /

    வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க முகவைத்தமிழன்.

    ReplyDelete
  16. /மெல்லிய சோகம்...நல்லாயிருக்கு./

    நன்றி கோபி.

    /ஆனாலும் ஒரு கேள்வி மாப்பி உனக்கு என்ன ஆச்சு!!?/

    என்னப்பா திடீர்னு இப்படி ஒரு கேள்வி? :)

    ReplyDelete
  17. ம்

    ஓகே

    //
    சேர்ந்த காதலைவிட உடைந்த காதல்தான் உன்னதமானது - இதை நான் சொல்லவில்லை
    கவி சாம்ராட் தாகூர் சொல்கிறார்.

    தாஜ்மகால் கட்டி முடித்த அந்நாளில் ஷாஜகான் கூட மும்தாஜின் மரணத்திற்காக மகிழ்ந்திருப்பானோ,
    ஒருவேளை ஒன்றாயிருந்திருந்தால் ஒன்பதாயிரம் பிரச்சனைகளில் அவர்களின் காதலும் ஒன்றாகி இருந்திருக்கும்.
    //

    இதுவும் சரிதான்!!

    ReplyDelete