Monday, February 14, 2011

காதல் எழுதிய கவிதைகள்

காதல் எழுதிய கவிதைகள் (அ) கவிதை எழுதிய காதல்

*

நீ இயல்பாகத்தான் பேசுகிறாய்.
எனக்குத்தான் உன்னிடம் பேசுவதே
இயல்பாகி விட்டது.

*

எல்லா மொழியிலும்
எனக்கு காதலைக் குறிக்கும் ஒரு சொல்
உனது பெயர்.

*

உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும்
நீ தன்னை ஒரு முறை சுற்றி வந்ததாய் பெருமைப்படுகிறது
சூரியன்.

*

உனது அக்கறையை அனுபவிக்கவேனும்
இன்னும் சிலநாள் நீடிக்கட்டும்
எனது காய்ச்சல்.

*

நீ பரிசளித்த விலையுயர்ந்த உடையினும்
எனக்குப் பிடித்த நிறத்துக்காக நீ செலவழித்த
மூன்று நாள் தேடலில் ஒளிந்திருக்கிறது காதல்.

*

நீ பார்த்து பார்த்து
உன்னிலும் அழகாகிறது
உன் வீட்டுக் கண்ணாடி.

*

'பார்க்காமலே காதலிக்கிறப் பழக்கம் மீன்களுக்குண்டு' என்கிறேன்.
'உண்மையாகவா?' என கண்களை உருட்டுகிறாய்.
சந்திக்காத காதல் மீன்கள் இரண்டும் ஒன்றுபோல உருள்கின்றன.

*

குளிரோ வெப்பமோ
குறைக்கிற ரகசியம் கற்றிருக்கிறது
உன் முத்தம்.

*

இசையென வழிகிறது.
வீணை நரம்புகளும் உனது விரல் நரம்புகளும்
காதலில் பதிக்கிற முத்தங்கள்.

*

எத்தனை கவிதையெழுதியென்ன?
பிடித்திருக்கிறதென நீ சொல்லப்போகிற ஒன்றிரண்டைத் தவிர
மற்றவை எல்லாம் தற்கொலை செய்துகொள்ளப்போகின்றன!

69 comments:

  1. வாய்ப்பே இல்லைங்க .. எப்படித்தான் எழுதுறீங்களோ ?
    எனக்கு என்ன கமெண்ட் எழுதுரதுனே தெரியலை?
    ஹய்யோ .. அவ்ளோ நல்லா இருக்கு ...

    ReplyDelete
  2. super arutperungo.... liked and loved verymuch...

    ReplyDelete
  3. நன்றி செல்வக்குமார். காதலர் நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. எத்தனை கவிதையெழுதியென்ன?
    பிடித்திருக்கிறதென நீ சொல்லப்போகிற ஒன்றிரண்டைத் தவிர
    மற்றவை எல்லாம் தற்கொலை செய்துகொள்ளப்போகின்றன!

    அழகிய வரிகள் அருட்பெருங்கோ ..

    ReplyDelete
  5. wow superb lines................

    ReplyDelete
  6. கவிதையில் நனைந்து காதல் இனிக்கிறதா ?
    காதலில் நனைந்ததால் கவிதை இனிக்கிறதா..?
    எப்படியோ. ...
    இனிய காதலர் தின வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  7. அத்தனை கவிதைகளும் கரும்பாய் இனித்தது
    காதல் தேவதை குடிகொண்டிருக்கும் இடம் இது..

    ReplyDelete
  8. vaav very nice all poets. by saravanan.

    ReplyDelete
  9. இனிப்பான வாழ்த்துகளுக்கு நன்றிங்க கவிதைரசிகை!

    ReplyDelete
  10. நன்றிங்க வசந்த்.. உங்க பதிவையும் வாசிச்சேன்.. :) நல்லாருக்கு!!

    ReplyDelete
  11. Nanbarae vanakkam,
    anaithu kavithaikalumae arumai.......

    ReplyDelete
  12. அருமை ! வாழ்த்துக்கள் !.

    ReplyDelete
  13. Super yaar. Es specially the last one

    ReplyDelete
  14. Really gud............... rompa alugu

    ReplyDelete
  15. Really very very wonderful... ungaladu kavithaigalai paditha pinbu than kadhalikkamal irupadu evvalavu periya kuttram endru unarginern..

    ReplyDelete
  16. Very very cute kavitahaikal...

    ReplyDelete
  17. very excellent kavithai

    ReplyDelete
  18. no words to tell .. al r amazin

    ReplyDelete
  19. Good. cute.................

    ReplyDelete
  20. very nice
    keep it up...........
    u have good future

    ReplyDelete
  21. பார்க்காமலே காதலிக்கிற பழக்கம் மீன்களக்க உண்டென்கிறேன்.
    உண்மையாகவா........................................................ nice thoughts, nice words. I love that. Write more. we need ur poem. wish u all the best.

    ReplyDelete
  22. sparking prasanthJune 17, 2011 1:14 AM

    This is awesome

    ReplyDelete
  23. no chance to say

    what a line ya!

    ReplyDelete
  24. UR HEADING IS SO GOOD UR POEM IS SO CUTE

    ReplyDelete
  25. En unarvin maru piravi

    ReplyDelete
  26. very supper. love is very intrasting cract.

    ReplyDelete
  27. no words to explain ..yena kavithai da ...

    ReplyDelete
  28. chanceless!really u r great

    ReplyDelete
  29. kalakitenke ponka, but your name kavithaiya kaname

    ReplyDelete
  30. very, nice and simplyfy

    ReplyDelete
  31. sir very good sir enakku rombea pudichchirunthathu athuvum one line

    ReplyDelete
  32. KamalrajsundaramJanuary 28, 2012 9:34 PM

    supper.i expecting more

    ReplyDelete
  33. this is very nice.

    ReplyDelete
  34. Samraj94@gmail.comFebruary 25, 2012 11:48 PM

    very nice avery one lick i think

    ReplyDelete
  35. very nice ungal kavithaiai patithavudan thaan kathalikka aasai padukiren

    ReplyDelete
  36. very nice kavithaigal read after remember my old feelings

    ReplyDelete
  37. nice kavithikal

    ReplyDelete
  38. hai and this is abi u get asuper creative mind .......wish u all the best

    ReplyDelete
  39. very nice feeling of love.

    ReplyDelete
  40. hi guys this is monisha i like it very much i also felt in that...........

    ReplyDelete