வாசிக்கப்படாத தனது கவிதையொன்றை
வாசக சந்தையில் சுமந்து திரியும் கவிஞனை,
துரத்திக்கொண்டே இருக்கின்றன...
எழுதப்படாத பல கவிதைகள்!
*
ஷேர் ஆட்டோவின் மூவர் அமரும் பின்னிருக்கையில்
பெண்கள் இருவர் அமர்ந்திருக்க,
முன்பக்கம் ஓட்டுநர் அருகே அமர்கிறேன்.
சிரித்துக் கொண்டார்கள் இருவரும்.
நான் இன்னும் பண்படவேண்டுமென
நினைத்துக்கொண்டிருக்கலாம்.
பரவாயில்லை.
இயல்பாய்ப் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போதும்
தள்ளி தள்ளி அமர்ந்து சங்கடப்படுத்துவதைக் காட்டிலும்
இது மேல்!
*
கடவுளைத் திட்டி எழுதியபோது
என்னிடம் கேட்கப்பட்டது - ‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு – ‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும் – ‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம் – ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?
*
தோட்டத்து தென்னைமரம்
இடிவிழுந்து தீப்பிடித்த நாளில்
எனக்கும் நடை முடங்கியது.
பிறகு படுக்கையே வசிப்பிடம்.
பேச்சும் குழறி பின்னொருநாள் முழுவதுமாய் ஊமை.
ஒருவாரத்தில் செவியின் மரணத்தால் உலகமே அமைதி.
எழுபது வயதில் கணவருக்கு பாரமாய் இருக்கவே பிடிக்கவில்லை.
விட்டுப் போகவும் மனமில்லாமல் கண்ணீர் விடுகிறேன்.
எதிரில் கணவரும் அழுவது தெரிகிறது.
நெடுநாள் முன்பு இதேமாதிரி
தனியே என்னை அழவைத்து விலகிய
‘அவனை’ நினைத்துப் பார்த்ததும்,
எதிரில் கணவர் அழுவது தெரி...
*
இது தலைப்பில்லாக் கவிதைகளா காதல் கலப்பில்லாக் கவிதைகளா?
ReplyDelete//வாசிக்கப்படாத தனது கவிதையொன்றை
வாசக சந்தையில் சுமந்து திரியும் கவிஞனை,
துரத்திக்கொண்டே இருக்கின்றன...
எழுதப்படாத பல கவிதைகள்!
//
நிதர்சனம் :)
//காதல் கவிதையெழுதும்போதெல்லாம் – ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
//
ஆஹா, இத்தனை நாளா உங்கள கேள்விக் கேட்டவங்க எல்லாருக்கும் சேர்த்து ஒரே பதிலா இது??
நல்ல கவிதைகள். வாழ்த்துக்கள் கோ :)
/இது தலைப்பில்லாக் கவிதைகளா காதல் கலப்பில்லாக் கவிதைகளா?/
ReplyDeleteகடைசி கவிதைல காதல் இல்லையா என்ன? ;-)
/நிதர்சனம் :)/
அதனால நீங்களும் கவிதை எழுதுங்க :)
/ஆஹா, இத்தனை நாளா உங்கள கேள்விக் கேட்டவங்க எல்லாருக்கும் சேர்த்து ஒரே பதிலா இது??/
மாசத்துக்கு ஒன்னு ரெண்டு மடலாவது இந்த கேள்வியோட வந்துடுதே :(
/நல்ல கவிதைகள். வாழ்த்துக்கள் கோ :)/
நன்றி தல!!!
வழக்கம் போல கவிதைகள் நல்லாருக்கு !! :)
ReplyDelete// பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ. //
இதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?? பதிவுகளில் தெரிவதில்லை. கூகுள் ரீடரில் மட்டும் வருது??
/வழக்கம் போல கவிதைகள் நல்லாருக்கு !! :)/
ReplyDelete:)) நன்றி.
/இதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?? பதிவுகளில் தெரிவதில்லை. கூகுள் ரீடரில் மட்டும் வருது??/
blogger -> settings -> sitefeed -> post feed footer -> இங்கு கொடுக்கப்படும் தகவல் செய்தியோடையில் மட்டும் வரும்.
//கடவுளைத் திட்டி எழுதியபோது
ReplyDeleteஎன்னிடம் கேட்கப்பட்டது - ‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு – ‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும் – ‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம் – ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?//
ithu superu :)
valakkam pola kavidhaigal kalakkal
/ithu superu :)
ReplyDeletevalakkam pola kavidhaigal kalakkal/
நன்றி ட்ரீம்ஸ்.
//வாசிக்கப்படாத தனது கவிதையொன்றை
ReplyDeleteவாசக சந்தையில் சுமந்து திரியும் கவிஞனை,
துரத்திக்கொண்டே இருக்கின்றன...
எழுதப்படாத பல கவிதைகள்!//
hats off!
great lines
அருமையான வரிகள்....அதுவும் அந்த கேள்விக்கான பதில்கள்....
ReplyDelete//
ReplyDeleteகடவுளைத் திட்டி எழுதியபோது
என்னிடம் கேட்கப்பட்டது - ‘நீ நாத்திகவாதியா?’
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு – ‘ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?’
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும் – ‘நீ தலித்தா?’
காதல் கவிதையெழுதும்போதெல்லாம் – ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?
//
நீ வெட்டியானா??????
மாப்பி இப்பிடி எல்லாம் கவிதை எழுதி ஊரை ஏமாத்த முடியாது சொல்லிபுட்டேன்.
ReplyDelete//
ReplyDeleteபிரேம்குமார் said...
//காதல் கவிதையெழுதும்போதெல்லாம் – ‘உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?’
//
ஆஹா, இத்தனை நாளா உங்கள கேள்விக் கேட்டவங்க எல்லாருக்கும் சேர்த்து ஒரே பதிலா இது??
//
ஒத்துக்கறமாதிரி இல்லிங்கோ!!
/hats off! great lines/
ReplyDeleteநன்றிங்க நவன். வருகைக்கும் பாராட்டுக்கும்.
/அருமையான வரிகள்....அதுவும் அந்த கேள்விக்கான பதில்கள்..../
ReplyDeleteநன்றிங்க பாசமலர். வலைச்சரத்துல பூப்பூவா தொடுக்கறீங்க போல :)
/நீ வெட்டியானா??????/
ReplyDeleteஆமா. இந்த கேள்விய கேட்கறவங்கதான் அடுத்த கஸ்டமர் ;-)
/மாப்பி இப்பிடி எல்லாம் கவிதை எழுதி ஊரை ஏமாத்த முடியாது சொல்லிபுட்டேன்./
இதையெல்லாம் கவிதைனு சொல்லி ஊர ஏமாத்த முடியாதுனு சொல்றீங்களா? அதுவும் சரிதான்!
/ஒத்துக்கறமாதிரி இல்லிங்கோ!!/
நீங்க ஒத்துக்கவே வேணாம். ஆணியேப் புடுங்க வேணாம் போங்க.
//
ReplyDeleteஅருட்பெருங்கோ said...
/நீ வெட்டியானா??????/
ஆமா. இந்த கேள்விய கேட்கறவங்கதான் அடுத்த கஸ்டமர் ;-)
//
அவ்வ்வ்வ்வ்
//
இதையெல்லாம் கவிதைனு சொல்லி ஊர ஏமாத்த முடியாதுனு சொல்றீங்களா?
//
அதில்லப்பா அப்ப அந்த ஹைதராபாத் அழகு சுந்தரி????
/அதில்லப்பா அப்ப அந்த ஹைதராபாத் அழகு சுந்தரி????/
ReplyDeleteயாரு இலியானாவா? அனுஷ்காவா? பேர் சொன்னாதான எனக்கும் தெரியும் ;-)
//இயல்பாய்ப் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போதும்
ReplyDeleteதள்ளி தள்ளி அமர்ந்து சங்கடப்படுத்துவதைக் காட்டிலும்
இது மேல்!//
இந்த உணர்வு எனக்கும் ஏற்பட்டதுண்டு ...
ரியலிச கவிதை
/இந்த உணர்வு எனக்கும் ஏற்பட்டதுண்டு ...
ReplyDeleteரியலிச கவிதை/
ரியலிசமோ இல்லையோ ஷேர் ஆட்டோவுல முன்னாடி தொங்கிட்டு வந்தா கொஞ்சம் வலியிசமா இருக்கு :)
//தோட்டத்து தென்னைமரம்
ReplyDeleteஇடிவிழுந்து தீப்பிடித்த நாளில்
எனக்கும் நடை முடங்கியது.
பிறகு படுக்கையே வசிப்பிடம்.
பேச்சும் குழறி பின்னொருநாள் முழுவதுமாய் ஊமை.
ஒருவாரத்தில் செவியின் மரணத்தால் உலகமே அமைதி.
எழுபது வயதில் கணவருக்கு பாரமாய் இருக்கவே பிடிக்கவில்லை.
விட்டுப் போகவும் மனமில்லாமல் கண்ணீர் விடுகிறேன்.
எதிரில் கணவரும் அழுவது தெரிகிறது.
நெடுநாள் முன்பு இதேமாதிரி
தனியே என்னை அழவைத்து விலகிய
‘அவனை’ நினைத்துப் பார்த்ததும்,
எதிரில் கணவர் அழுவது தெரி...
//
வித்தியாசமாக யோசனைகளே உங்கள் கவிதைகளின் பலம்.
அந்த "தெரி..." என்று நிறுத்தியது அருமை.
//எதிரில் கணவர் அழுவது// இது ஒருவிதமான கர்வம், தனக்காக தன் கணவர் அழுவது! இதனை உணரும் பொழுது, எதற்காக கணவர் அழுகிறாரோ அந்த துன்பம் இன்னும் சற்று நேரம் நீடிக்குமா என்ற ஆவலைத் தூண்டும்.
//நெடுநாள் முன்பு இதேமாதிரி
தனியே என்னை அழவைத்து விலகிய
‘அவனை’ நினைத்துப் பார்த்ததும்//
எனக்கு இந்த வரி ரொம்ப பிடித்தது. முடிவு நெருங்கும்போது ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிடித்த நினைவுகளை அசைபோடுவர் என்றறிவேன்..
நல்ல கவிதை.
உங்கள் கவிதை விகடனின் காதல் supplement-ல் படிக்க நேர்ந்தது.என் அம்மாவிடம் தொலைபேசியில் அழைத்து படிக்க சொன்னேன். அம்மாவிற்கும் கவிதைகள் மிகவும் பிடிக்கும், எழுதுவார்கள். ஏற்கனவே உங்கள் படைப்புகளை print out எடுத்து தந்திருக்கிறேன். இதுவும் அம்மாவிற்கு போய் சேரும்.
வாழ்த்துக்கள் அம்மாவிடமிருந்தும், என்னிடமிருந்தும்.
- தீக்ஷ்
/வித்தியாசமாக யோசனைகளே உங்கள் கவிதைகளின் பலம்.
ReplyDeleteஅந்த "தெரி..." என்று நிறுத்தியது அருமை. /
நன்றிங்க இதுவும் வேறு மாதிரி எழுதப்பட்டு அடித்துத் திருத்தி இப்படி மாறி வந்ததுதான்.
//எதிரில் கணவர் அழுவது// இது ஒருவிதமான கர்வம், தனக்காக தன் கணவர் அழுவது! இதனை உணரும் பொழுது, எதற்காக கணவர் அழுகிறாரோ அந்த துன்பம் இன்னும் சற்று நேரம் நீடிக்குமா என்ற ஆவலைத் தூண்டும்./
ஆகா இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியா தெரியுதே :)
/எனக்கு இந்த வரி ரொம்ப பிடித்தது. முடிவு நெருங்கும்போது ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிடித்த நினைவுகளை அசைபோடுவர் என்றறிவேன்..
நல்ல கவிதை./
சாகும் தருணத்தில் முதல் காதலியின் முகத்தை நினைத்துக்கொள்வேனென்று பாரதிராஜாவோ, பாலுமகேந்திராவோ
ஒரு பேட்டியில் சொன்னதாக நினைவு.
/உங்கள் கவிதை விகடனின் காதல் supplement-ல் படிக்க நேர்ந்தது./
அத கவிதைனு சொன்னதுக்கே நான் பெரிய நன்றி சொல்லனும். :)
/என் அம்மாவிடம் தொலைபேசியில் அழைத்து படிக்க சொன்னேன். அம்மாவிற்கும் கவிதைகள் மிகவும் பிடிக்கும், எழுதுவார்கள். ஏற்கனவே உங்கள் படைப்புகளை print out எடுத்து தந்திருக்கிறேன். இதுவும் அம்மாவிற்கு போய் சேரும்.
வாழ்த்துக்கள் அம்மாவிடமிருந்தும், என்னிடமிருந்தும்.
- தீக்ஷ்/
அம்மாவுக்கும் ஒரு வலைப்பதிவு துவக்கிக் கொடுத்துடுங்க. மீண்டும் எனது நன்றிகள் உங்களுக்கும் அம்மாவுக்கும்!