எனக்கு என்னைப் பிடித்திருப்பதே
உனக்கு என்னைப் பிடித்திருப்பதால்தான்.
*
அந்த மூன்று வார்த்தைகளைக் கேட்டாலும்
”எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்று
வெட்கப்படுகிறவளை என்ன செய்ய?
*
கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
எனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!
*
உன் வாசனையை
என்னுடன் கூட்டிச்செல்வதற்காகவே
தினமும் உன் கைக்குட்டை வாங்கிச் செல்வேன்.
*
உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!
*
இதுவரை நீ வந்த
கனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?
*
ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.
கவிதையென்பது எழுதப்படுவதன்று
நிகழ்த்தப்படுவது என்று!
*
தூசிவிழுந்த இடக்கண்ணில்
நீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!
*
என் பிறந்தநாளுக்கு அனுப்ப
காதல் தேடும் வாழ்த்து
நீ!
*
நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ஊடலும் கூடலும் மட்டுமல்ல...
காதலில் தேடலும் சுகம்தான்!
*
//தூசிவிழுந்த இடக்கண்ணில்
ReplyDeleteநீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!//
நல்லவேல மக்கா நீங்க யாரயும் காதலிக்கல, பின்னே இப்பவே இப்படின்னா சரி யாதுக்கும் மனசுல போட்டுவச்சுக்குறேன் சாய்ந்திரம் கடற்கறைக்குபோறோம்ல ஏதாவது சிக்குதான்னுபார்ப்போம்.
காதலிக்காமல் வருத்தப்படும் வாலிபர் சங்கம், மெரினா
அருமையான கவிதைகள்!
ReplyDelete(கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
ReplyDeleteஎனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென)
Oru Kavinchan Oviyanaai uruvedukkum tharunangal alagu..Wonderful..keep it up
ஆகா...ராசா..காதல் வாழ்த்தா!!!குசும்புய்யா உனக்கு ;))
ReplyDeleteமனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி ;))
\\கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம்
ReplyDeleteஎனக்கு வருத்தமாயிருக்கிறது.
ஓவியனாய்ப் பிறக்கவில்லையென!\\
சூப்பரு ;)
அருமையான கவிதை!!!!!
ReplyDeleteஉனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!//
அருமையான வரிகள்!!!!
பிறந்த நாள் அதுவுமா சூப்பர் கவிதை!!!!!
//நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ReplyDeleteஊடலும் கூடலும் மட்டுமல்ல...
காதலில் தேடலும் சுகம்தான்!/
adada... super lines :)
nice kavidhai..
//தூசிவிழுந்த இடக்கண்ணில்
ReplyDeleteநீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!//
எனக்கு பிடித்த அருமையான வரிகள்.....
Hi Arul...
ReplyDeleteArumaiyana Kavithaigal....
Senthil
Bangalore
//இதுவரை நீ வந்த
ReplyDeleteகனவுகளையெல்லாம் சேர்த்து
ஒரே கனவாக காணும்
ஓர் இரவு கிடைக்குமா?//
எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சது.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள். இன்னிக்கும் என்னிக்கும் எப்பவும் சந்தோஷமா இருங்க!!
hi many more happy returns of the day Arul.
ReplyDeleteen kavi?
ReplyDeletekavingana imsikiradhu podadha?
oviyana vera avadhaaram edukka aasaiya?
arumaiyana varigal... vaazhthukkal
Belated birthday wishes!!!!
நான் தேடுகிறேனென்பதற்காக உடனே கிடைத்துவிடாதே.
ReplyDeleteஊடலும் கூடலும் மட்டுமல்ல...
காதலில் தேடலும் சுகம்தான்!
superb...
\நல்லவேல மக்கா நீங்க யாரயும் காதலிக்கல, பின்னே இப்பவே இப்படின்னா\
ReplyDeleteஅடப்பாவி நல்ல எண்ணம்யா!
\யாதுக்கும் மனசுல போட்டுவச்சுக்குறேன் சாய்ந்திரம் கடற்கறைக்குபோறோம்ல ஏதாவது சிக்குதான்னுபார்ப்போம்.\
வாழ்த்துகள் ;-)
\காதலிக்காமல் வருத்தப்படும் வாலிபர் சங்கம், மெரினா\
சங்கத்த மொதல்ல கலைங்கப்பா!
/அருமையான கவிதைகள்!/
ReplyDeleteநன்றிங்க வீரசுந்தர்
/Oru Kavinchan Oviyanaai uruvedukkum tharunangal alagu..Wonderful..keep it up/
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றிங்க முக்கியப்புள்ளி!
/ஆகா...ராசா..காதல் வாழ்த்தா!!!குசும்புய்யா உனக்கு ;))/
ReplyDeleteகுசும்பா? அப்படின்னா? இது கவுஜ மாப்ள ;)
/மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி ;))/
ரொம்ப ரொம்ப தாமதமான நன்றி மாப்பி! ஆணித்தொல்ல அதிகமாப்போச்சு!
/சூப்பரு ;)/
நன்றி !!!
/அருமையான வரிகள்!!!!
ReplyDeleteபிறந்த நாள் அதுவுமா சூப்பர் கவிதை!!!!!/
நன்றிங்க எழில்!!!
/nice kavidhai../
ReplyDeleteநன்றிங்க ட்ரீம்ஸ்!
/எனக்கு பிடித்த அருமையான வரிகள்...../
ReplyDelete/hi many more happy returns of the day Arul./
வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீ!
/Arumaiyana Kavithaigal..../
ReplyDeleteநன்றிங்க செந்தில்!
/எனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சது.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள். இன்னிக்கும் என்னிக்கும் எப்பவும் சந்தோஷமா இருங்க!!/
ReplyDeleteகவிதைய வாசிச்சதுக்கும், பிறந்த நாள் வாழ்த்துக்கும் நன்றிங்க காயத்ரி!!
/superb.../
ReplyDeleteநன்றி கோபால்!
\\தூசிவிழுந்த இடக்கண்ணில்
ReplyDeleteநீ ஊதிவிடுவதைக் கண்டு
பொறாமையில் மூடிக்கொள்ளும் வலக்கண்!\\
ரொம்ப அசத்தலாக இருக்கிறது இவ்வரிகள்!
Belated Birthday wishes ,
God bless you!!
///உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,
ReplyDeleteஎனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,
இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்து
ரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்!///
இது ரொம்ப பிடிச்சிருக்கு.
தேடல் நல்லாருக்கு ;-))
ReplyDeleteReally very nice thinking!!!!!!!!!!!!!1
ReplyDeleteSupreb!!!!!
Great Man!!!!!!!!!!!
/ரொம்ப அசத்தலாக இருக்கிறது இவ்வரிகள்!/
ReplyDeleteநன்றி திவ்யா!
/Belated Birthday wishes ,
God bless you!!/
இதற்கும் மனமார்ந்த நன்றிகள்
/தேடல் நல்லாருக்கு ;-))/
ReplyDeleteநன்றிங்க சகாரா!
/Really very nice thinking!!!!!!!!!!!!!1
ReplyDeleteSupreb!!!!!
Great Man!!!!!!!!!!!/
நன்றிங்க சத்யா!
/இது ரொம்ப பிடிச்சிருக்கு./
ReplyDeleteநன்றிங்க நல்லவன்!