Wednesday, May 24, 2006

+2 காதல் - இறுதிப் பகுதி!

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து
மாடியில் இருந்து ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்.
அவளேக் கீழே இறங்கி வந்தாள். ஆறு வருடங்களில் அவள் ரொம்பவே மாறிப் போயிருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஜீன்ஸும், ஸ்லீவ்லெஸ் சுடிதாரும் அணிந்திருந்தவளின் காதை விட அதில் தொங்கிய தோடு பெரிதாயிருந்தது.
நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க, அவளேப் பேசினாள்.

“ஏ..என்னத் தெரியலையா? நான் சாரதாப்பா…”

நான் அதிர்ச்சியை மறைத்தபடி, “தெரியாமலா….ஆனா உன்ன மறுபடி பார்ப்பேன்னு நான் எதிர்ப்பர்க்கவே இல்ல! நீ எப்படி இருக்க?”
இயல்பாகப் பேச நான் கொஞ்சம் சிரமப்பட்டேன்; ஆனால் அவள் சகஜமாகவேப் பேசினாள்.

“நான் நல்லா இருக்கேன்…நீ எப்படி இருக்க?”

“எனக்கென்ன நானும் நல்லாதான் இருக்கேன்…ஆமா நீ இப்ப எங்க இருக்க? என்னப் பண்ணிட்டு இருக்க?”

அவள் இரண்டாடுகளுக்கு முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாகவும், தற்போது சென்னையில் இருப்பதாகவும் சொன்னாள்.
நானும் ஓராண்டுக்கு முன் தான் இந்த நிறுவனத்தில் சேர்ந்ததையும் தற்போது ஹைதராபாத்தில் இருப்பதையும் சொன்னேன்.

கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தாள்.

“நல்ல வேளை, நீ அன்னைக்கு மாட்டேன்னு சொல்லிட்ட…ஒருவேளை நீயும் சரின்னு சொல்லியிருந்தா…நாம இன்னைக்கு ஓரளவுக்கு இருக்கிற இந்த நல்ல பொசிஷனுக்கு வந்திருக்க முடியுமான்னுத் தெரியல…படிக்க வேண்டிய அந்த வயசுல நான் தான் கொஞ்சம் தடுமாறிட்டேன் இல்ல!”

“உன்ன மட்டும் தப்பு சொல்லாத! யார் தான் தப்புப் பண்ணல? சரி அது முடிஞ்சு போனது அத விட்டுட்டு வேற ஏதாவதுப் பேசுவோமே..”
அவள் அதை மறுபடியும் நினைவுபடுத்துவது எனக்கு ஏனோ ஒரு குற்றவுணர்ச்சியைத்தான் தந்தது.

“இல்லப்பா நீ அப்போ மாட்டேன்னு சொன்னதும் எனக்கு உம்மேலக் கோபம்தான் வந்தது..அதான் உன்னப் பார்க்கிறதையே அவாய்ட் பண்ணிட்டேன்…அப்புறம் காலேஜ் போனதுக்கப்புறம் அடிக்கடி feel பண்ணதுண்டு..atleast உங்கிட்ட friendshipப்பாவது continue பண்ணியிருக்கலாமேன்னு…ம்ம்ம்…நீ எப்படி feel பண்ண?”

“எனக்கும் முதல்ல கஷ்டமாதான் இருந்தது..அப்புறம் புது காலேஜ் புது நண்பர்கள்னு வாழ்க்கையே மாறிடுச்சு…சரி நீ என்ன மாஸ்டரப் பார்க்க இவ்வளவு தூரம்??”
பேச்சை மாற்றினேன் நான்.

“எல்லாம் நல்ல விஷயம் தான்” என்று சொல்லிவிட்டு அதை என்னிடம் கொடுத்தாள்.
அவளுடையத் திருமண அழைப்பிதழ்.

“ஓ பொண்ணுக்குக் கல்யாணமா?? இந்தா என்னோட வாழ்த்துக்கள இப்பவே சொல்லிடறேன்..ஆமா லவ் மேரேஜ்தான?”

சிரித்துக் கொண்டே கேட்டாள், “எப்படிக் கண்டு பிடிச்ச?”
அவள் வேறொருவனைக் காதலித்திருக்கிறாள் என்பதே எனக்கு நிம்மதியாய் இருந்தது.

“அதான் பத்திரிக்கைல மாப்பிள்ளையும் உன்னோடக் கம்பெனியிலதான் வொர்க் பண்றதா போட்டிருக்கே! அங்கப் போயும் நீத் திருந்தலையா?”

“ஏ என்னக் கிண்டலா? இந்த தடவ நான் கொஞ்சம் உஷாராயிட்டேன்…எனக்குப் பிடிச்சிருந்தும் நான் எதுவும் வாயத்திறக்கல…அவரேதான் propose பண்ணார் ..நானும் ஒரு வருஷம் அலைய விட்டுதான் ok சொன்னேன்!”
அவள் இப்படிப் பேசுவது எனக்கு இன்னும் ஆச்சரியமாய் இருந்தது.

“ம்ம் வெவரம்தான்…பேர் பொருத்தம் கூட ரொம்ப அருமையா இருக்கு - சாரதா ஷங்கர்! ”

“ம்ம் ஆமா …ஆனா எங்களுக்குள்ள மொதல்லப் பொருந்திப் போன விஷயத்தக் கேட்டா நீ சிரிப்ப!”

“இல்ல..இல்ல.. சிரிக்கல.. சொல்லு”

“நாங்கக் கொஞ்சம் க்ளோஸாப் பழக ஆரம்பிச்ச சமயம் தான் அழகி படம் வந்திருந்தது…அப்போ ஒரு தடவ அந்தப் படத்தப் பத்திப் பேசிட்டு இருந்தப்பக் கொஞ்சம் எமோஷனாகி நம்மக் கதைய அவர்ட்ட சொன்னேன்….கேட்டுட்டு சிரிக்க ஆரம்பிச்சுட்டார்…அப்புறம்தான் அவர் கதைய சொன்னார்..அவரும் +2 படிக்கும்போது ஒரு பொண்ண லவ் பண்ணி அப்புறம் அந்தப் பொண்ணுகிட்ட செமத்தியா வாங்கிக்கட்டிக்கிட்டாராம்…ரெண்டு பேரும் ஒரேக் கேஸ்தான்னு சிரிச்சுக்கிட்டோம்…அப்புறம் எங்க நட்புக் காதலாகி இதோ இப்போ கல்யாணத்துல வந்து நிக்குது”

“நல்ல ஜோடிப் பொருத்தம்தான்…அப்ப ஒருத்தர ஒருத்தர் முழுசாப் புரிஞ்சிக்கிட்டீங்கன்னு சொல்லு!”

“ம்ம்..நல்லாவே! ஆமா உன்னக் கேட்க மறந்துட்டேனே நீ என்ன மாஸ்டரப் பார்க்க?”

“நானும் ஒரு கல்யாணப் பத்திரிக்கைக் கொடுக்கலாம்னுதான்!”

“ஏய் சொல்லவே இல்லப் பார்த்தியா…யார் அந்த அதிர்ஷ்டசாலி(?)”

“அட…நீ நெனைக்கிற மாதிரியில்ல…. கல்யாணம் எங்க அண்ணனுக்கு!”

“அப்ப உனக்கு ரூட் க்ளியர் ஆயிடுச்சுன்னு சொல்லு…நீயும் சீக்கிரமா ஒரு நல்லப் பொண்ணாப் பார்த்து லவ் பண்ணி lifeல செட்டில் ஆகவேண்டியதுதான…இல்ல ஏற்கனவே பொண்ணு ஏதும் மாட்டிடுச்சா???” கேட்டு விட்டு சிரித்தாள்.

“அட நானும் யாராவது மாட்டுவாங்களானு தான் பார்க்கிறேன்…ஆனா எல்லாப் பொண்ணுங்களும் புத்திசாலியாவே இருக்காங்க”, சொல்லி விட்டு நானும் சிரித்தேன்.

“ஆனா உன்ன ஒரு பொண்ணு லவ் பண்ணாலும் உடனேல்லாம் ok சொல்லக்கூடாதுப்பா… ஒரு ஆறு மாசமாவது உன்ன அலைய விட்டுதான் சொல்லனும்” மறுபடியும் சிரித்தாள்.
அதற்குள் மாஸ்டர் வந்துவிட அவரைப் பார்த்து பத்திரிக்கையைக் கொடுத்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அதன்பிறகு அவர் ட்யூஷன் எடுக்க சென்றுவிட நாங்கள் இருவரும் செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றோம்.

என்னை மறுபடியும் ஒருமுறை சந்தித்தால் என்னோடு அவள் பேசுவாள் என்று நான் நினைத்ததில்லை.
ஆனால் அவள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசியதையும், அவளுக்குப் பிடித்த மாதிரியே அவளுக்கொரு வாழ்க்கைக் கிடைத்திருப்பதையும் நினைத்துப்பார்த்தால் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருந்தது.

நான் வாழ்க்கையில் சில சமயம் நிறைய யோசித்துத் தவறான முடிவுகளை எடுத்ததுண்டு; சில சமயம் முன்பின் யோசிக்காமல் சில சரியான முடிவுகளையும் எடுத்ததுண்டு. அன்றைக்கு அவளுடையக் காதலை மறுத்தது இரண்டாவது வகை என்றே நினைக்கிறேன்.

அன்றைக்கு மதன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது : “சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”

முதல் பாதி நிறைவேறி விட்டது! இரண்டாவது பாதி?

அதுவும் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்….
அருட்பெருங்கோ.

பின்குறிப்பு :

இது முழுக்க முழுக்க உண்மைக் கதையல்ல. கொஞ்சம் உண்மையும் கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதியதே! ஒரு கதை என்ற அளவிலேயே ரசிக்கவும்.

49 comments:

  1. மதன் சொன்னது உங்கள் வாழ்க்கையிலும் பலிக்க இந்த நண்பனின் வாழ்த்துக்கள்:)

    நல்ல வாசிப்பு அனுபவம் வழங்கிய உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. Such a nice autograph.....
    Really wonderful...!

    Ramesh R

    ReplyDelete
  3. ///
    அன்றைக்கு மதன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது : “சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”
    ///

    கிடைக்கலாம் ஆனால் அவள் விரும்பியது உன்னையும், அவன் விரும்பியது அவளையும் அல்லவா? காதலுக்கு சரி என்று சொல்லியிருந்தால் வாழ்க்கை இப்படியே சென்றிருக்காதா? இதனை விட சிறப்பாக அல்லவா இருந்திருக்கும்?

    ReplyDelete
  4. வருத்தப்படாதீங்க. அதான் ஓரு மலரும் நினைவு கிடைச்சிருக்கே! இந்த சுகமான நினைவுகள் கூட யாவருக்கும் கிடைப்பதில்லை.

    உங்ககிட்ட எத்தனை கதையிருந்தாலும் இந்த காதல் கதைகள் தான் எவ்வளவு ரம்மியமா இருக்கு! நீங்கள் தான் நாயகன் என்பதானால் தானே? என்னை திரும்பி பார்த்தாள்; என்மேலும் ஒருத்தி காதல் கொண்டாள் என்ற பெருமிதம் தானே! பாருங்க எத்தனை பேரின் நினைவுகளை தாலாட்டியிருக்கீங்க!

    இன்னொருத்தி கிடைப்பாள். (சாரதா மாதிரியே வேண்டும் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.) இன்றைக்கு நீங்கள் விரும்பும் கூடுதல் தேடுதல்களுக்கான விடைகளாக கிடைப்பார் என வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  5. Kumaran,
    But the same gal loves some one else now :-), change is the permanent thing in life nu enga periya-aatha adikadi sollum.

    --
    Jagan

    ReplyDelete
  6. Oh My God...Getting goose bumps.

    //உங்கள் வாழ்க்கையிலும் பலிக்க இந்த நண்பனின் வாழ்த்துக்கள்:)//

    I second this :-) :-)

    By the way, were u able to find a house in Bang.?

    ReplyDelete
  7. டச் பண்ணிட்டப்பா.. ஒரே ஒரு வருத்தம் என்னன்னா இறுதியில் முடிக்கும்பொழுத இது உண்மைக்கதையல்ல என்று எழுதி இருந்ததுதான் உங்களுடைய எழுத்துக்களின் வெற்றி..

    இதனை படிக்கும்பொழுது அவரவர்களுக்கு அவரவர் பள்ளி கல்லூரியில் நடந்த காதல் ஞாபகத்திற்கு வந்திறுக்கும் என்பதை மறுக்க இயலாது..

    ஒரே ஃபீலிங்கா போச்சுப்பா..

    ReplyDelete
  8. Thanks for sharing your story with us.

    your writing style is quite impressive.

    ReplyDelete
  9. வாழ்க்கையில் பழைய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கலாம், ஆனால் ஒப்பிட்டு பார்க்க கூடாது...

    அழகி, ஆட்டோகிராஃப் எல்லாம் பார்க்க மட்டுமே...

    ReplyDelete
  10. அருமையான பதிவு!

    கடைசியில் ஒரு சோகம் இழையோடிருப்பதால், மனம் சற்று கனமாக இருக்கிறது.

    வாழ்க்கையில் ஒரு நல்ல துணை கிடைக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. Great Story .Keep bloging

    ReplyDelete
  12. தெரியும் தெரியும்...இதில் பெயர்களும் உண்மை
    நபர்கள்தான் மாறிவிட்டது...அதாவது
    ப்ரொபோஸ் பண்ணியது திருவாளர்..
    புத்தி சொன்னது அந்தப்பொண்னு...
    இல்லென்னா அந்த அழைப்பிதழில்
    உங்கள் பெயெர் இருந்திருக்க வேண்டும்
    பூ சுற்ற வெண்டாம்

    ReplyDelete
  13. எப்படியோ யாருக்கும் பாதிப்பில்லாமல்
    (கதை நாயக,நாயகியோடு,படித்த எங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்)கதையை நல்லபடியாக முடித்துவிட்டீர்கள்.அடுத்து ஏதாவது
    "காலேஜ் காதல்" அனுபவம் இருந்தால் எடுத்துவிடுங்கள்.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  14. மனதைத் தொடும் வகையில் அருமையான கதை. ஏதோ சொல்லத் துடிக்குது மனசு. ஆனாலும் சொல்லாமல் விடை பெறுகிறேன். பாராட்டுக்கள் அருள்.

    ReplyDelete
  15. தேவ்,

    //மதன் சொன்னது உங்கள் வாழ்க்கையிலும் பலிக்க இந்த நண்பனின் வாழ்த்துக்கள்:)

    நல்ல வாசிப்பு அனுபவம் வழங்கிய உங்களுக்கு என் பாராட்டுக்கள்.//

    நன்றி..நன்றி..(ஒன்று வாழ்த்துக்கு - மற்றொன்று பாராட்டுக்கு)

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  16. ரமேஷ்,

    //Such a nice autograph.....
    Really wonderful...!
    //

    நன்றிங்க...

    கோபாலன்,

    /Excellent story Arul./

    உங்களுக்கும் நன்றி...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  17. குமரன்,

    //கிடைக்கலாம் ஆனால் அவள் விரும்பியது உன்னையும், அவன் விரும்பியது அவளையும் அல்லவா?//

    காதல் எங்களை விரும்பவில்லை போலிருக்கு :((

    //காதலுக்கு சரி என்று சொல்லியிருந்தால் வாழ்க்கை இப்படியே சென்றிருக்காதா? இதனை விட சிறப்பாக அல்லவா இருந்திருக்கும்?//

    பின்னால் என்ன நடக்கும் என்று முன்னாலேத் தெரிவதில்லையே!!

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி குமரன்

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  18. தயா,

    /வருத்தப்படாதீங்க. அதான் ஓரு மலரும் நினைவு கிடைச்சிருக்கே! இந்த சுகமான நினைவுகள் கூட யாவருக்கும் கிடைப்பதில்லை. /

    தாலாட்டும் நினைவுகள்..

    /உங்ககிட்ட எத்தனை கதையிருந்தாலும் இந்த காதல் கதைகள் தான் எவ்வளவு ரம்மியமா இருக்கு! நீங்கள் தான் நாயகன் என்பதானால் தானே? என்னை திரும்பி பார்த்தாள்; என்மேலும் ஒருத்தி காதல் கொண்டாள் என்ற பெருமிதம் தானே! பாருங்க எத்தனை பேரின் நினைவுகளை தாலாட்டியிருக்கீங்க!
    /

    ம்ம்..உங்ககிட்ட பகிர்ந்துகிட்டதும் உண்மையிலேயே சந்தோசமாதான் இருக்கு..

    /
    இன்னொருத்தி கிடைப்பாள். (சாரதா மாதிரியே வேண்டும் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.) இன்றைக்கு நீங்கள் விரும்பும் கூடுதல் தேடுதல்களுக்கான விடைகளாக கிடைப்பார் என வாழ்த்துகிறேன்!/

    மனமார்ந்த நன்றிகள் தயா...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  19. அரவிந்தன்,

    //ஹாய் அருள், கதை(சுயசரிதை ?) நன்றாக இருந்தது.//

    நன்றிகள் அரவிந்தன்...

    //குமரன் அவர்கள் கூருவது போல் நீங்கள் சரி என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று உங்கள் கற்பனையையும் பதிக்கலாமே?//

    ம்ம்...அடுத்து ஒரு நீண்ட தொடர் எழுத கதை இருக்கு..நேரம் தான் இல்லை...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  20. நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. ஜெகன்,

    //But the same gal loves some one else now :-), change is the permanent thing in life nu enga periya-aatha adikadi sollum.//

    எங்க பெரியாத்தாவும் இததான் சொல்லுச்சு...ஆனா தமிழ்ல சொல்லுச்சு...:)

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  22. சுதர்சன்,

    //உங்கள் வாழ்க்கையிலும் பலிக்க இந்த நண்பனின் வாழ்த்துக்கள்:)//

    I second this :-) :-)

    (நன்றி)^2

    //By the way, were u able to find a house in Bang.?//

    நேத்துதாங்க ஒரு வீடு போயி பார்த்தோம்..எங்க ஊர்ல அட்வான்ஸ் கொடுக்கிற காச வாடகையாக் கேட்கிறாங்க...இங்க கொடுக்கிற அட்வான்ஸ்க்கு நம்ம ஊர்ல ஒரு வீடே கட்டிடலாம் போல இருக்கு...

    அதனால வீடெல்லாம் வேண்டாம்னு ஒரு சின்ன வீடா பார்த்து செட்டிலாகப் போறோம்..

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  23. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  24. நிலவுநண்பன்,

    //டச் பண்ணிட்டப்பா.. ஒரே ஒரு வருத்தம் என்னன்னா இறுதியில் முடிக்கும்பொழுத இது உண்மைக்கதையல்ல என்று எழுதி இருந்ததுதான் உங்களுடைய எழுத்துக்களின் வெற்றி..//
    வெற்றினு சொல்றீங்க...வருத்தம்னும் சொல்றீங்க :(

    /இதனை படிக்கும்பொழுது அவரவர்களுக்கு அவரவர் பள்ளி கல்லூரியில் நடந்த காதல் ஞாபகத்திற்கு வந்திறுக்கும் என்பதை மறுக்க இயலாது../
    யாம் பெற்ற அவஸ்தை பெறுக இத்தமிழ்மணம்..

    /ஒரே ஃபீலிங்கா போச்சுப்பா.. /
    ஹாஹா நாங்க மட்டும் மானிட்டர்ல ஃப்ளாஷ்பேக் பார்த்துக்கிட்டு ஃபீல் ஆகி உட்காந்திருப்போம்..நீங்கலாம் நிம்மதியா வேலை செய்வீங்களாக்கும்..எப்படி விட்டுடுவோம்??

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  25. பிரபுராஜா,
    /Thanks for sharing your story with us.
    your writing style is quite impressive. /

    நன்றிங்க..உங்க கருத்த சொன்னதுக்கும்,

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  26. ஆதிரை,

    /என்னே உங்கள் காதலும் அதன் முடிவும்...பின்னிட்டீங்க! நீங்களும் கூடிய சீக்கிரம் settle ஆக என் வாழ்த்துகள்! என்னதான் கற்பனை கலந்திருந்தாலும் அதை சுவைபட சொல்லியமைக்கு ஒரு ஷொட்டு!/

    வாழ்த்துக்களுக்கும், ஷொட்டுக்கும் நன்றிங்க...

    அன்புடன்,
    அருள்

    ReplyDelete
  27. உதயக்குமார்,

    /வாழ்க்கையில் பழைய நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கலாம், ஆனால் ஒப்பிட்டு பார்க்க கூடாது.../

    சரியாதான் சொன்னீங்க...

    /அழகி, ஆட்டோகிராஃப் எல்லாம் பார்க்க மட்டுமே.../
    இரண்டு படங்களுமே ஒர் ஆணின் பார்வையில் வந்தப் படங்கள் தானே!!பார்ப்பதற்குகூட விமர்சனங்கள் உண்டு!!

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  28. சுதாகர்,

    /கடைசியில் ஒரு சோகம் இழையோடிருப்பதால், மனம் சற்று கனமாக இருக்கிறது./

    சோகம் இல்லீங்களே..நடந்தவை,நடப்பவை எல்லாம் சுகமே!!

    /வாழ்க்கையில் ஒரு நல்ல துணை கிடைக்க வாழ்த்துக்கள்!/

    நன்றிங்க..

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  29. சிவஞானம்,

    /தெரியும் தெரியும்...இதில் பெயர்களும் உண்மை
    நபர்கள்தான் மாறிவிட்டது...அதாவது
    ப்ரொபோஸ் பண்ணியது திருவாளர்..
    புத்தி சொன்னது அந்தப்பொண்னு...
    இல்லென்னா அந்த அழைப்பிதழில்
    உங்கள் பெயெர் இருந்திருக்க வேண்டும்
    பூ சுற்ற வெண்டாம்/

    கதையவே உல்டா பண்ணிட்டீங்களே தல..ப்ரபோஸ் பண்ற அளவுக்கு இன்னும் தைரியம் வரலீங்க :)

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  30. துபாய்ராஜா,

    /எப்படியோ யாருக்கும் பாதிப்பில்லாமல்
    (கதை நாயக,நாயகியோடு,படித்த எங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்)கதையை நல்லபடியாக முடித்துவிட்டீர்கள்./
    முடிக்கும் போது சுபம் போட்டுதான முடிக்கனும்

    /அடுத்து ஏதாவது
    "காலேஜ் காதல்" அனுபவம் இருந்தால் எடுத்துவிடுங்கள்./
    விட்டுட்டாப் போச்சு..:)

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  31. சத்தியா,
    /ஏதோ சொல்லத் துடிக்குது மனசு. ஆனாலும் சொல்லாமல் விடை பெறுகிறேன்./

    திட்றதுன்னாலும் பொதுவிலேயேத் திட்டிடுங்க :)

    பாராட்டுக்கு நன்றிங்க சத்தியா..

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  32. இலவசம்,

    /நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்./
    ரொம்ப நன்றிங்க...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  33. கருத்து சொன்ன அனானிக்கும் எனது நன்றிகள்!!
    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  34. இரண்டு முடிவுகளை எதிர் பார்த்தேன். ஒன்று ஆட்டோகிராப் முடிவு. அ-து: "நீங்களே அவளைக் கட்டியிருக்கலாம்". அடுத்தது, சினிமாத்தன முடிவு. (ஆட்டோகிராப் முதல் பாதிகள் சினிமாத்தனமல்ல)
    சினிமாத்தன முடிவு தான் நீங்கள் தந்திருப்பது. குறையினக்க வேண்டாம். முடிவு பெரிய திறம் எண்டு சொல்ல மாட்டன். ஆனாலும் அருமையாகக் கொண்டு சென்ற கதைக்குப் பாராட்டுக்கள். தொடர்க உங்கள் எழுத்துப் பணி.
    அன்புடன்,
    ஜெயபால்

    ReplyDelete
  35. After a long time, i read a good ended, memorable love story.Your writting style is nice-srini

    ReplyDelete
  36. பெரிய வீடே கிடைக்கல! அதுக்குள்ள "சின்ன வீடா" ? ரொம்பத்தான்...

    ReplyDelete
  37. விறு விறுப்பா கொண்டுபோய் திடீருனு பொசுக்குனு முடிச்சிட்டையேப்பூ....

    முழுவது படித்து விட்டு செல்லும்போது மெல்லிய சோகம் இழையோடுவதை மறுக்க முடியாது

    பாராட்டுக்கள்

    நாகராஜ்

    ReplyDelete
  38. ஜெயபால்,

    /இரண்டு முடிவுகளை எதிர் பார்த்தேன். ஒன்று ஆட்டோகிராப் முடிவு. அ-து: "நீங்களே அவளைக் கட்டியிருக்கலாம்"./

    அதுதான் நடக்காமல் போய் விட்டதே!!

    /அடுத்தது, சினிமாத்தன முடிவு. (ஆட்டோகிராப் முதல் பாதிகள் சினிமாத்தனமல்ல)
    சினிமாத்தன முடிவு தான் நீங்கள் தந்திருப்பது. குறையினக்க வேண்டாம். முடிவு பெரிய திறம் எண்டு சொல்ல மாட்டன்./

    எனக்கும் நாடகத்தனமாகதான் தோன்றுகிறது. வேறு எப்படி முடிப்பது என்று எனக்குத் தெரியவில்லை :(

    /ஆனாலும் அருமையாகக் கொண்டு சென்ற கதைக்குப் பாராட்டுக்கள். தொடர்க உங்கள் எழுத்துப் பணி./

    நன்றி ஜெயபால்,

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  39. சீனி,

    //After a long time, i read a good ended, memorable love story.Your writting style is nice-srini//

    ரொம்ப நன்றிங்க...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  40. தயா,

    //பெரிய வீடே கிடைக்கல! அதுக்குள்ள "சின்ன வீடா" ? ரொம்பத்தான்...//

    இப்பலாம் பெரிய வீடு சுலபமா கிடைக்குதுங்க சின்ன வீடு கிடைக்கிறதுதான் கஷ்டமா இருக்கு!!

    (ஆமா நீங்க ரெண்டு அர்த்தம் வர்ற மாதிரி எதுவும் கேட்கலையே?)

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  41. குமரன்/நாகராஜ்,

    /விறு விறுப்பா கொண்டுபோய் திடீருனு பொசுக்குனு முடிச்சிட்டையேப்பூ..../

    பொதுவா காதல் கதை எல்லாமே அப்படித்தானே??

    //முழுவது படித்து விட்டு செல்லும்போது மெல்லிய சோகம் இழையோடுவதை மறுக்க முடியாது//

    ம்ம்ம்...

    //பாராட்டுக்கள்//

    நன்றிகள்!!

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  42. Ïè,

    ƒ¿—º‘à³°‘ò ŠþÌ Ä¢œ‘ ‰¹³ º±Ú€ãÉÅ º¦´³ æ´þ°ò.ù“Å,º€ÝÆ ¶€î¿½€ã Žã¿» ت§Ñè...ÿ›è mhss ‡òì ¶€î™Žþéò..µ‘—îÖÒ‘Å œ‘ÁÆ‘Ñ ÷”˜Ö..—º‘¯®› º¦™Žé ªÊõò þ°¦ ˆ™´þ°‘¥ €Ò¤œ—°ÖÒ‘Å ŠÏ Ý‘î —º‘퍑ÒÅ..

    ReplyDelete
  43. அனானி,

    தங்கள் கருத்து யுனிக்கோட் முறையில் இல்லை :((

    ReplyDelete
  44. sam pichuteenga ponga...
    che naanum tution poirundha indha maari experience edhavadhu nigalndhirukum...
    hmm.. parppom... life la ellame nadakka vendiya time la correct a nadakkum...

    ReplyDelete
  45. Good story.... I was able to visualize things as the story progresses :-)

    One thing i was not able to accept fully is that she was able to invite you for her marriage without an hesitation and you too didn't expose any issues with that.

    If a person really loved a girl/guy defnitely there will be a bit of hesitation to invite him/her. If it happens to see such a invitation defnitely the guy/gal will feel for sometime.

    This is my view, but the story was really good.

    ReplyDelete
  46. @இளையநிலா,

    சாம் னு கூப்பிட்றதப் பார்த்தா நண்பர்கள்ல ஒருத்தராத்தான் இருக்கனும். யாருப்பா நீங்க? :-)

    கதையப் படிச்சுட்டு கவலைப்படாதீங்க நண்பா... வாழ்க்கைல எல்லாம் நல்லதே நடக்கும்!!! ;-)

    ReplyDelete
  47. @பழனியப்பா மாணிக்கவாசகம்,

    உங்க கருத்துக்களைப் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க.

    ஒருத்தர் மேல உண்மையா அன்பு செலுத்தினா அவங்க மகிழ்ச்சியா இருக்கனும்னுதான் நெனைப்போமே தவிர அந்த மகிழ்ச்சிய நானேதான் தரனும்னு நெனைக்க முடியாதில்லையா? அதுமாதிரி வச்சுக்கோங்க...

    காதலிச்சவங்களுக்கு வேற ஒருத்தரோட திருமணம் நடக்கும்போது அதுக்குப் போக முடியுமா முடியாதா அப்படிங்கறது ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட இயல்ப பொருத்த விசயமும் கூட! பொதுவா ஒரு முடிவ சொல்லிட முடியாதுன்னு நெனைக்கிறேன்.

    ReplyDelete