Wednesday, May 24, 2006

சொல்லாமல் செய்யும் காதல்...









எண்ணம், சொல், செயல்
மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டுமாம்.
காதலிக்காத யாரோ
சொல்லிவிட்டுப்போய்விட்டார்.

காதலிக்கிறவனுக்கு தானே
அந்த அவஸ்தை புரியும்!

நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று
தெரியாமலேக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
எந்தக் கணத்தில்
உன்னைக் காதலிக்க ஆரம்பித்தேன்?
எனக்குத் தெரியாது!

உன்னைக் காதலிக்கலாமா
என்று நினைத்தபோது,
காதலித்தால் உன்னைத்தான்
காதலிக்க வேண்டும் என்ற
எண்ணம் வந்தது எப்படி?
எனக்குத் தெரியாது!

காதலை
எண்ணத்திலும்,செயலிலும் நான் வைத்தேன்!
சொல்லில் மட்டும் நீ வையேன்!

ஆமாமடி!
காதலை நீயே சொல்லிவிடேன்!!
ப்ளீஸ்…

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ!

11 comments:

  1. /"காதலை எண்ணத்திலும்,செயலிலும்
    நான் வைத்தேன்!சொல்லில் மட்டும் நீ வையேன்!/

    காதல் கவிஞனை ஊமையாக்கும்.
    ஊமையை பாட வைக்கும்.
    உங்களை ஊமையாக்கிவிட்டது.
    அப்படிதானே அருள்!!.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  2. "காதலை
    எண்ணத்திலும்,செயலிலும் நான் வைத்தேன்!
    சொல்லில் மட்டும் நீ வையேன்!

    ஆமாமடி!
    காதலை நீயே சொல்லிவிடேன்!!
    ப்ளீஸ்…"

    ஓ!... அருள் உங்களைக் கொல்லாமல் கொல்கிறதோ காதல்? ம்... இதுவும்
    கூட ஓர் இன்ப அவஸ்ததான்.

    ம்... ஏக்கமான கவிதை நன்று.

    ReplyDelete
  3. துபாய் ராஜா...

    //காதல் கவிஞனை ஊமையாக்கும்.
    ஊமையை பாட வைக்கும்.
    உங்களை ஊமையாக்கிவிட்டது.
    அப்படிதானே அருள்!!.//

    உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமோ?? :)

    சத்தியாவின் இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்களேன்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  4. சத்தியா,

    //ஓ!... அருள் உங்களைக் கொல்லாமல் கொல்கிறதோ காதல்?//

    சொல்லியக் காதல் எல்லாம் வெல்லுதோ இல்லையோ சொல்லாதக் காதல் எல்லாமே கொல்லுமே!!

    //ம்... இதுவும்
    கூட ஓர் இன்ப அவஸ்ததான். //

    அவஸ்தையான இன்பம்னு சொல்லுங்க..

    //ம்... ஏக்கமான கவிதை நன்று. //
    நன்றிகள்..

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  5. துபாய் ராஜா...

    //காதல் கவிஞனை ஊமையாக்கும்.
    ஊமையை பாட வைக்கும்.
    உங்களை ஊமையாக்கிவிட்டது.
    அப்படிதானே அருள்!!.//

    உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமோ?? :)"//

    இன்னா அருள்!எவ்வளவு கவித்துவமா
    எழுதியிருக்கேன்!!காமெடிங்கிறீங்க!!.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  6. //இன்னா அருள்!எவ்வளவு கவித்துவமா
    எழுதியிருக்கேன்!!காமெடிங்கிறீங்க!!.//

    ஐயையோ ராஜா நீங்க தவறாப் புரிஞ்சிக்கிட்டீங்க...

    "காதல் கவிஞனை ஊமையாக்கும்."னு சொன்ன நீங்க "உங்களை ஊமையாக்கிவிட்டது."னு சொல்லி என்னையும் கவிஞர்கள் வரிசைல சேர்த்துட்டீங்களே அதனாலதான் அப்படிக் கேட்டேன்.. :))

    நீங்க எப்போ வலைப்பதியப் போறீங்க??

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. கவிதையெல்லாம் சரிதான்.

    +2 காதலின் 6-வது பகுதி எப்போது வரும்?

    ReplyDelete
  9. அதான் வந்துடுச்சேப்பா...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  10. //"ஐயையோ ராஜா நீங்க தவறாப் புரிஞ்சிக்கிட்டீங்க..."//

    ஆமா அருள்!ரெண்டு நாளா உங்க மேல கடுப்புதான்!!.என்னடா!இவரை 'கவிஞன்னு' பாராட்டினா
    நம்மளை 'காமெடியன்னு' சொல்லிட்டாரேன்னு!!.

    //"காதல் கவிஞனை ஊமையாக்கும்."னு சொன்ன நீங்க "உங்களை ஊமையாக்கிவிட்டது."னு சொல்லி என்னையும் கவிஞர்கள் வரிசைல சேர்த்துட்டீங்களே அதனாலதான் அப்படிக் கேட்டேன்.. :))"//

    நீங்க,நான் சொன்னதை புரிஞ்சுட்டு,
    தன்னடக்கத்திலே தான் அப்படி சொன்னீங்கங்கிறதை,நானும் இப்ப
    புரிஞ்சுக்கிட்டேன் அருள்!!.பதிவுகள்
    தொடரட்டும்.வாழ்த்துக்கள்!!.


    //"நீங்க எப்போ வலைப்பதியப் போறீங்க??"//

    கூடிய விரைவில்.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  11. ராஜா,

    /ஆமா அருள்!ரெண்டு நாளா உங்க மேல கடுப்புதான்!!.என்னடா!இவரை 'கவிஞன்னு' பாராட்டினா
    நம்மளை 'காமெடியன்னு' சொல்லிட்டாரேன்னு!!.
    /

    ராஜா, நான் உங்களக் காமெடியன்னு சொல்லலேங்க..என்னையேக் கிண்டல் பண்ணிக்கிட்டேன்...வேற அர்த்தம் வர்ற மாதிரி நாந்தான் சொல்லிட்டேன் போல...

    /நானும் இப்ப
    புரிஞ்சுக்கிட்டேன் அருள்!!./
    புரிந்து கொண்டமைக்கு நன்றி ராஜா...

    /கூடிய விரைவில்./

    ஆவலுடன்,
    அருள்.

    ReplyDelete