Sunday, May 14, 2006

யார் முதலில்?

நம் காதலை
நீ முதலில் சொல்வாய் என நானும்
நான் முதலில் சொல்வேன் என நீயும்
காத்திருக்கிறோம்.
யாரோ ஒருவர் சீக்கிரம் சொல்லுங்களேன்
எனத் தவிக்கிறது
நம் காதல்!


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

6 comments:

  1. துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
    எப்பவும் வரலாம் எவர் கண்டார்.

    அன்புடன்
    துபாய் ராஜா

    ReplyDelete
  2. துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
    தடுக்கிறது தயக்கம் ஏற்றுக் கொள்ளுவானோ என எண்ணி...

    ReplyDelete
  3. ராஜா,

    வருகைக்கு நன்றி!

    இப்போதெல்லாம் தும்முவது கூட அநாகரிகமாக அல்லவாப் பார்க்கப் படுகிறது!!

    ReplyDelete
  4. சத்தியா உங்கள் கருத்து எனக்கு சரியாகப் புரிய வில்லை...

    நான் புரிந்து கொண்டது இப்படி...

    துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
    தடுக்கிறது தயக்கம் மறுத்து விடுவாளோ என்றஞ்சி...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  5. "துடிக்கிறது இதயம் காதலில் தவித்து..
    தடுக்கிறது தயக்கம் மறுத்து விடுவாளோ என்றஞ்சி..."

    ம்...ம்... இதுவேதான். நன்றி அருள்.

    ReplyDelete
  6. காதலின் கனம் அதிகமாகும்போது,
    தயக்கம் தானே உடைபடும்!

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete