Tuesday, May 23, 2006

+2 காதல்- 5

+2 காதல் பகுதி ஒன்று இரண்டு மூன்று நான்கு

படித்ததும் மெதுவாக நிமிர்ந்து அவளை பயத்தோடு பார்த்தேன். “என்னப் பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்று குனிந்து கொண்டே சொன்னாள். அப்போது என் இரண்டு தொடைகளும் நடுங்குவது எனக்குப் புதிதாய் இருந்தது.

மெல்ல எச்சிலை விழுங்கிவிட்டு சொன்னேன் : “இல்ல சாரதா எனக்கு பயமா இருக்கு..நாம வயசுக்கு மீறி யோசிக்கிறோம்னு நெனைக்கிறேன். எனக்கும் உன்னப் பிடிச்சிருக்குதான்…நான் இல்லனு சொல்லல…. ஆனா இந்த வயசுல இவள மாதிரி ஒரு wife வரணும்னு யோசிக்கலாமேத் தவிர இவளே எனக்கு wife-aa வரணும்னு முடிவெடுக்க தகுதியிருக்கான்னுத் தெரியல..இது இன்னும் ஒரு அஞ்சாறு வருஷம் கழிச்சு நடந்திருந்தா நானும் கண்டிப்பா சரின்னு சொல்லியிருப்பேன்..நமக்கெல்லாம் கல்யாணத்தப் பத்தி யோசிக்கவே இன்னும் எட்டு, பத்து வருஷத்துக்கு மேல இருக்கு..அதுக்குள்ள உனக்கும் என்ன வேணா நடக்கலாம்..எனக்கும் என்ன வேணா நடக்கலாம்..அதனால வேண்டாம் சாரதா..இதப் பத்தி இனிமேப் பேச வேண்டாம்” –

இதைத்தான் சொன்னேனா என்று தெரியாது, ஆனால் இதுமாதிரி தான் ஏதோ சொன்னேன்.

சொல்ல சொல்ல ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. அவள் அழ ஆரம்பித்திருந்தாள்.அதற்கு மேல் அங்கிருந்தால் என்னை மாற்றிவிடுவாளோ என பயந்து,அவள் கையில் அந்தக் கடிதத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பி விட்டேன்.அன்று நான் தேர்வு எழுதாமலே வீடு வந்து சேர்ந்தேன்.அவளும் எழுதியிருக்க மாட்டாள் என்று தெரியும்.

அதற்குப் பிறகு நடந்தவை எல்லாம் எனக்கு அதிர்ச்சியாய் இருந்தன. அவள் chemistry tuition வருவதை நிறுத்தி விட்டாள். அங்கு tuitionனே கிட்டத்தட்ட முடிந்து விட்டதால் நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை.ஆனால் அவள் physics tuitionனை விட்டும், maths tuitionனை விட்டும் நின்று விட எனக்குப் பயமாய் இருந்தது. நான் நடந்த விஷயத்தை என் நண்பர்களிடம் சொல்ல ஒவ்வொருவனும் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டான்.

“டேய் நீ என்ன லூசாடா? இவ்வளவு நாளா அவளப் பத்தி எழுதி வச்சது, எங்களுக்குத் தெரியாம அவ பின்னாடி சுத்துனதெல்லாம் அப்புறம் எதுக்கு? பெரிய இவனாட்டம் டயலாக் பேசிட்டு வந்திருக்க? “ – வினோத்.

“அது ஒன்னும் இல்லடா..அந்தப் பொண்ணே வந்து propose பண்ணியிருக்கில்ல..அதான் ஐயாவுக்கு ஏறிப் போச்சு…இவன் சொல்லி அந்தப் பொண்ணு மாட்டேன்னு சொல்லியிருந்தா அப்பப் புரிஞ்சிருக்கும்…” – செல்வா.

“ஏண்டா ஒன்னோட மொகரக் கட்டைக்கு அந்தப் பொண்ணு அதிகம்னு உனக்கேத் தெரியும்..அதுவே ஓக்கே சொல்லும்போது உனக்கென்னடா…மனசுல பெரிய மன்மதன்னு நெனப்பா…எல்லாம் first mark வாங்கறான் இல்ல அந்தத் திமிரு” – பாஸ்கர்.

மதன் மட்டும் அமைதியாய் இருந்தான்.

“ஏண்டா நீ மட்டும் சும்மா இருக்க நீயும் உன் பங்குக்கு ஏதாவது திட்டிடு” அவனைப் பார்த்து சொன்னேன்.

“மச்சி நீ சாரதாவ எந்தளவுக்கு லவ் பண்றனு எனக்குத் தெரியும்டா…அப்புறம் ஏண்டா மாட்டேன்னுட்ட?”

“நான் மட்டும் பிடிக்காமயாடா வேண்டாம்னு சொன்னேன்…அவ கேட்டப்பக் கூட நாளைக்கு சொல்றேன்னு சொல்லலாம்னு தான் நெனச்சேன்…ஆனா ஏதோ ஒரு பயத்துல பட்டுனு வேண்டாம்னு சொல்லிட்டேன்…அவங்க familyயும் நம்மள மாதிரி தான்டா…அவங்கப்பாக் கஷ்டப்பட்டுதான் படிக்க வச்சிட்டு இருக்கார்…எல்லா ட்யூஷன்லயும் அவ ஒரு installmentதான் fees கட்டியிருக்கா…அவள எஞ்சினியரிங் படிக்க வைக்கனும்னு அவங்கப்பாவுக்கு ஆசையாம்…அவளுக்கு ஒரு தங்கச்சி வேற இருக்கா…எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்தா நான் செஞ்சது சரிதான்னு இப்பத் தோணுது.”

“அதெல்லாம் சரி மச்சி…ஆனா இவ்ளோ நாளா ஆச காட்டிட்டு அவளே வந்து கேட்கும்போது மாட்டேன்னு சொன்னா அவளுக்கும் கஷ்டமாதான இருந்திருக்கும்”

“அவளுக்குக் கஷ்டமாதான் இருந்திருக்கும் எனக்கும் புரியுது….எனக்குப் பிடிச்சவ எங்கிட்ட வந்து propose பண்ணும்போது, ஆசையிருந்தும் மாட்டேன்னு சொல்லிட்டு நிக்குறேனே…என்னோடக் கஷ்டம் ஏண்டா உனக்குப் புரியல??”

“சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”

அவன் சொன்னதே நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவளை மறந்துவிட நினைத்தேன்.

ஆனால் எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுதானே மறுபடியும் மறுபடியும் நினைவுக்கு வந்து தொலைகிறது.

அவளையே நினைத்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் ஒரு எண்ணம் வரும். ஒருவேளை அவளும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாளோ என்று.

அப்போதெல்லாம் ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல எனக்கு உடல் பதறும்.

அவளைப் பற்றியே அதிகம் நினைத்துக்கொண்டிருந்ததால் படிப்பில் கவனம் குறைய ஆரம்பித்தது.ஏதோக் கடமைக்குப் படித்துக் கொண்டிருந்தேன்.பொதுத்தேர்வின் போதுகூட தேர்வுக்கு முந்தைய நாளிலும் நான் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இருந்தேன். எல்லாத் தேர்வுகளையும் ஆர்வமே இல்லாமல்தான் எழுதினேன்.

தேர்வு முடிவு வந்தபோது நான் எதிர்பார்த்த மாதிரியே என் வீட்டிலும்,பள்ளியிலும் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே மதிப்பெண் வாங்கியிருந்தேன்.

“என்னப்பா நீ centum வாங்குவேன்னு எதிர் பார்த்தா இப்படி மார்க் கொறஞ்சுடுச்சே” - மூன்று ட்யூஷனிலும் மாஸ்டர்கள் இதையே சொல்ல ஏண்டா அவர்களிடம் ரிசல்ட் சொல்லப் போனோம் என்று இருந்தது.

அப்புறம் வாங்கிய மார்க்குக்கு ஏதோ ஒரு காலேஜில் ஏதோ ஒரு க்ரூப் கிடைக்க அதில் சேர்ந்தேன்.

புது இடம். புது நண்பர்கள் என பழசை மறக்க ஆரம்பித்த சூழல் உருவாகியது.கல்லூரியிலும் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிவிடக்கூடாது என பெண்களிடம் பேசுவதையேத் தவிர்த்தேன்.

என்னைப் போலவே இருந்தவர்கள் ஒன்று கூட ஒரு சிறிய நட்பு வட்டம் உருவானது. அருமையான நினைவுகளோடு அதிவேகமாய்க் கரைந்துபோனது ஐந்தாண்டுகள். கல்லூரியின் பெயரால் இறுதியாண்டு படிப்பு முடியுமுன்பே ஒரு வேலையும் கிடைத்தது. வேலையில் சேர்ந்து ஒரு வருடம் வேலையில் மூழ்க அவளைப் பற்றி நினைப்பதுக் குறைந்தது. எப்போதாவது பழைய நண்பர்களிடம் தொலைபேசும்போது நினைவுபடுத்துவார்கள்.கொஞ்ச நேரம் மனம் பழைய நினைவில் மூழ்கினால் வேலை என்னை இழுக்கும். அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் இப்படி மறந்துகொண்டிருக்க, மறுபடியும் ஊருக்கு செல்ல ஒரு வாய்ப்பு வந்தது.

அண்ணன் திருமணத்திற்காக நான் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிற்குப் போயிருந்தேன்.

ஒரு நாள் மாலையில் , திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜோஸப் மாஸ்டர் வீட்டுக்குப் போயிருந்தபோது மாஸ்டருடைய மனைவிதான் இருந்தார். மாஸ்டர் இன்னும் வராததால் என்னை மேலேக் காத்திருக்க சொல்லி சொல்ல, நான் மேலே ட்யூஷன் ரூமுக்குள் நுழையப் போனேன்.

அப்போது மாடியில் இருந்து ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்.

(நிறைவுப்பகுதி )

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

31 comments:

  1. Ahhhh.When is the next part???

    ReplyDelete
  2. என்னதான் இருந்தாலும் நீங்க அப்படி சொல்லி இருக்க கூடாது. OK சொல்லி இருந்தா சென்டம் வாங்கி இருப்பீங்க.

    ReplyDelete
  3. பேசாம உங்க கதையை SriPriya கிட்ட கொடுங்க. சன் டிவி ஞாயிற்றுக்கிழமை 7.30 மணிக்கு அமராவதின்னு போட்டு 13 வாரம் ஒரு தொடர் போட்டுடவாங்க. ஒவ்வொரு எபிஸோடுலயும் ஓரு சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்க!

    ஏண்டா வேண்டாம்னு சொன்ன? ன்னு உரிமையோட திட்டிக்கிறேன்(!!!)

    ReplyDelete
  4. aha.. 5 varusham kalichi thirumbavuma

    ReplyDelete
  5. 1."எனக்குப் பிடிச்சவ எங்கிட்ட வந்து propose பண்ணும்போது, ஆசையிருந்தும் மாட்டேன்னு சொல்லிட்டு நிக்குறேனே…என்னோடக் கஷ்டம் ஏண்டா உனக்குப் புரியல??”.

    //புரியுது!!அருள் புரியுது!!.//

    2“சரி விடு மச்சி..அவளுக்கும் உன்ன விட நல்லவனா இன்னொருத்தன் கிடைப்பான்..உனக்கும் அவள விட நல்லவளா இன்னொருத்திக் கிடைப்பா”

    //நானும் இதைத்தான் கூறுகிறேன்.//

    3."ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல எனக்கு உடல் பதறும்."

    //காதலை மறுத்தால் காலமெல்லாம்
    கலங்கித்தானே ஆகவேண்டும்!!.//

    4."என் வீட்டிலும்,பள்ளியிலும் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகவே மதிப்பெண் வாங்கியிருந்தேன்."

    //மறுத்ததற்கு பழிவாங்கிவிட்டது
    காதல்.//

    5."எந்தப் பிரச்சினையிலும் மாட்டிவிடக்கூடாது என பெண்களிடம் பேசுவதையேத் தவிர்த்தேன்."

    //அனுபவமே சிறந்த ஆசான்.//

    6."ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்."

    //எதிர்பாராத திருப்பம்.படிக்கின்ற
    எனது வயிற்றிலே ஒரு 'ஜிலீர்'
    என்றால்,நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்??????.///

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  6. Superbbbbb twist.. Eagerly awaiting the next post

    ReplyDelete
  7. அடுத்த பகுதி சீக்கிரம்....

    ReplyDelete
  8. கோபாலன்,

    //Very Interesting .//

    நன்றிங்க...

    சுதர்சன்,

    /Ahhhh.When is the next part???/

    நாளைக்குள்...

    பிரபு,

    /என்னதான் இருந்தாலும் நீங்க அப்படி சொல்லி இருக்க கூடாது. OK சொல்லி இருந்தா சென்டம் வாங்கி இருப்பீங்க./

    அப்ப இந்த மாதிரி நான் யோசிக்கலையே :(

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  9. தயா,

    /பேசாம உங்க கதையை SriPriya கிட்ட கொடுங்க. சன் டிவி ஞாயிற்றுக்கிழமை 7.30 மணிக்கு அமராவதின்னு போட்டு 13 வாரம் ஒரு தொடர் போட்டுடவாங்க. ஒவ்வொரு எபிஸோடுலயும் ஓரு சஸ்பென்ஸ் வைச்சிருக்கீங்க!/

    கொடுத்துட்டாப் போச்சு..:))
    சஸ்பென்ஸ் எல்லாம் என்னோட நண்பர்களுக்கு அனுப்பும்போது ஒரு சுவாரசியத்திற்காக வைத்தது..

    /ஏண்டா வேண்டாம்னு சொன்ன? ன்னு உரிமையோட திட்டிக்கிறேன்(!!!)/

    பயம்..வேறென்ன??

    madee,

    /aha.. 5 varusham kalichi thirumbavuma/

    ஹி..ஹி..

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  10. துபாய் ராஜா,

    //நானும் இதைத்தான் கூறுகிறேன்.//
    நன்றி ராஜா...

    //காதலை மறுத்தால் காலமெல்லாம்
    கலங்கித்தானே ஆகவேண்டும்!!.//
    காதலை சொல்லுவதைக் காட்டிலும் கடினமானது காதலை மறுப்பது!!!

    //மறுத்ததற்கு பழிவாங்கிவிட்டது
    காதல்.//

    சே...ச்சே...காதல் மேல் பழி போட மனசு வரலீங்க...

    //எதிர்பாராத திருப்பம்.படிக்கின்ற
    எனது வயிற்றிலே ஒரு 'ஜிலீர்'
    என்றால்,நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்??????.///

    பொறுங்கள்...பொறுங்கள்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  11. ம்... என்ன சொல்ல? மனதுக்குள் ஏதோ ஓர் சோகம் வந்து ஒட்டிக் கொள்கிறது. ஏன் அருள் வேண்டாம் எண்டீங்கள்? சாரதா பாவம் இல்லியா? நீங்கள் கூட பாவம் இல்லியா? பாத்தீங்களா உங்கள் மனம் எவ்வளவு தவிச்சது எண்டு? அதே போல்தானே சாரதாவும் தவிச்சிருப்பாள்? காதலுக்குள் ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு?

    "அப்போது மாடியில் இருந்து ஒரு குரல் என் பெயர் சொல்லி அழைக்க, நிமிர்ந்து பார்த்தால் சாரதா நின்று கொண்டிருந்தாள்."

    ஓ!... மீண்டும் ஓர் சந்திப்பா? அடுத்து என்ன நடந்தது? அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது. தொடருங்கள் அருள்....

    ReplyDelete
  12. தேவ், பரணீ, வாழவந்தான்...

    அடுத்தப் பகுதி நாளை வரும்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  13. சத்தியா,

    /ம்... என்ன சொல்ல? மனதுக்குள் ஏதோ ஓர் சோகம் வந்து ஒட்டிக் கொள்கிறது.ஏன் அருள் வேண்டாம் எண்டீங்கள்? சாரதா பாவம் இல்லியா? நீங்கள் கூட பாவம் இல்லியா? பாத்தீங்களா உங்கள் மனம் எவ்வளவு தவிச்சது எண்டு? அதே போல்தானே சாரதாவும் தவிச்சிருப்பாள்? காதலுக்குள் ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு?/

    விடுங்க..விடுங்க..

    /ஓ!... மீண்டும் ஓர் சந்திப்பா? அடுத்து என்ன நடந்தது? அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது. தொடருங்கள் அருள்.... /

    நாளை சொல்கிறேனே...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  14. நண்பா உன் எழூத்துக்கள் அருமையாக உள்ளது..

    கடைசி இடுகை..க்காக காத்திருக்கேன்.

    ReplyDelete
  15. பிரபு,

    //நண்பா உன் எழூத்துக்கள் அருமையாக உள்ளது..//

    நன்றி பிரபு..

    //கடைசி இடுகை..க்காக காத்திருக்கேன்.//

    நாளை வரை...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  16. வந்ததுக்கு அடையாளம் இது... நாளை வரை காத்திருக்கலாம், தப்பில்லை... பாதி பேருக்கு இந்த கதை சொந்த கதைதான்...

    ReplyDelete
  17. நான் உங்க சைடுதான் தல..
    கோவையில் நான் படிச்சப்போவும் என் நண்பன் எனக்கு எதிர்பதமாக செயல்பட்டதால் வாழ்க்கையில் பல சோதனைகளை தாங்க வேண்டி இருந்தது .

    குமரன்@முத்தமிழ்மன்றம்

    ReplyDelete
  18. உதயகுமார்,

    /வந்ததுக்கு அடையாளம் இது... நாளை வரை காத்திருக்கலாம், தப்பில்லை.../

    வருகைக்கும், காத்திருப்புக்கும் நன்றிகள்..

    /பாதி பேருக்கு இந்த கதை சொந்த கதைதான்../

    :((

    அன்புடன்,
    அருள்

    ReplyDelete
  19. நாகராஜ்,

    /
    கோவையில் நான் படிச்சப்போவும் என் நண்பன் எனக்கு எதிர்பதமாக செயல்பட்டதால் வாழ்க்கையில் பல சோதனைகளை தாங்க வேண்டி இருந்தது .
    /

    விடுங்க நாகராஜ்...வந்தத வரவுல வைப்போம்..போனத செலவுல வைப்போம் (வலைப்பதிவுலதான் எங்கேயோப் படிச்சேன் :))

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  20. எங்கே இந்தக் கதை என்று தமிழ்மணத்திலும் தேன்கூட்டிலும்
    மாறி மாறித் தேடவே 3 நிமிடம் போய் விட்டது. முடிவுக்கு காத்திருக்கத் தொடங்கி விட்டேன். அருமை, அருமை.

    ReplyDelete
  21. அருள்,

    ஒரு பொண்ணு வந்து தன்னோட காதலை வெளிப்படுத்தும் போது, அதை மறுக்கிறதுக்கு ஒரு மனபலம் வேணும். அந்த வயசுல நீங்க அப்படி ஒரு முடிவு எடுத்தது ஆச்சர்யம் தான்!!

    வாய்ப்பு கிடைக்கும் போது காதலை வெளிப்படுத்த முடியாம போயி.. அப்புறம் காலமெல்லாம் வருத்தப்படுறவங்க நிறய பேரு!

    அது போல தான் உங்களுக்கும் இருக்கனும்!! இல்லையா??..

    ReplyDelete
  22. சீக்கிரம் மிச்சத்தையும் சோல்லிடுங்க. ஆவலுடன்

    ReplyDelete
  23. காதலைச் சொல்லிய பெண்ணுக்கு முன்னால் தைரியமா நீங்க மறுத்தீங்கன்னா

    1. அந்தப் பொண்ணு அழகா இல்லையா
    2. நீங்க வேற யாரையாவது லவ் பண்ணினீங்களா
    3. இல்லை சமூகத்தின் மீதான பயமா..


    முதல் பதில்தான் சரின்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  24. ஜெயபால்,

    தேடிவந்து படித்ததற்கு நன்றி!!

    சிங்கை சிவா,

    இது கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை!!

    வினோத்,

    விடுங்க..விடுங்க..

    நிலவு நண்பன்,

    3 ம் இல்லீங்க "படிக்கிற வயசுல என்னக் காதல் வேண்டிக் கிடக்கு?" இது அடிக்கடி எங்க வீட்ல கேட்ட வசனம்..நான் நல்ல வேலைக்குப் போகனும்ங்கறதுதான் தான் எங்க வீட்ல அப்போதைக்கு இருந்த பெரிய கனவு..அது கலைஞ்சுடக்கூடாதேன்னு ஒரு பயம்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  25. Ïè,

    ƒ¿—º‘à³°‘ò ŠþÌ Ä¢œ‘ ‰¹³ º±Ú€ãÉÅ º¦´³ æ´þ°ò.ù“Å,º€ÝÆ ¶€î¿½€ã Žã¿» ت§Ñè...ÿ›è mhss ‡òì ¶€î™Žþéò..µ‘—îÖÒ‘Å œ‘ÁÆ‘Ñ ÷”˜Ö..—º‘¯®› º¦™Žé ªÊõò þ°¦ ˆ™´þ°‘¥ €Ò¤œ—°ÖÒ‘Å ŠÏ Ý‘î —º‘퍑ÒÅ..

    ReplyDelete
  26. அனானி,

    தங்கள் கருத்து யுனிக்கோட் முறையில் இல்லை :((

    ReplyDelete
  27. nanpareee அருட்பெருங்கோ, sikkiram adutha pakuthi podunga....

    ennoda office la olla ellarum wait pannikittu irukkom, adutha pakuthi kathai padikka...

    ReplyDelete
  28. நண்பரே +2 காதல் நிறைவு பகுதி எப்போது வெளி இடப்படும்.... இந்த கதை மிகவும் நன்றாக உல்லது... நிறைவு பகுதி படிப்பதற்காக கடந்த நான்கு மாதங்களாக காத்து கொண்டு இருக்கிறேன்... வெகு விரைவில் இக்கதையின் நிறைவு பகுதியை எதிர் நோக்கி காத்திருக்கும் வாசகன்....

    ReplyDelete
  29. சுரேஷ்குமார், மற்றும் பிரேம்,

    மன்னிச்சுக்கோங்க இந்தக் கதையின் நிறைவுப்பகுதி அப்பவே போட்டாச்சு...

    லிங்க் கொடுக்கதான் மறந்துட்டேன்...

    இந்தாங்க லிங்க் நிறைவுப்பகுதி

    ReplyDelete