“தேவதாஸ்”..இல்ல…இல்ல…”தேவதாசூ” - இது தான் நான் முதல் முதல்லப் பார்த்த தெலுங்குப் படம். அந்த சுகமான சுமைய (சுமையான சுகத்த?) உங்ககிட்ட எறக்கி வைக்கதான் இந்தப் பதிவு! போனப் பொங்கலப்ப நான் ஹைதராபாத்ல இருந்தேன். எப்படிப் பொங்கலக் கொண்டாடறதுன்னும் தெரியல,பொங்கலக் கொண்டாடாம விட்டா எதாவது தெய்வக் குத்தமாயிட்டா என்னாகறதுன்னும் பயம்! சரின்னு யோசிச்சுட்டுப் பக்கத்துல இருந்த தியேட்டருக்குப் போயிட்டோம் செகண்ட் ஷோவுக்கு. அதுக்கு முந்தின வாரம் தான் தமிழ் படமான “கஜினி”யும்,”காதலு”ம் தெலுங்குலப் பார்த்தோம். அந்த ரெண்டு படத்துல வந்த காதல் சோக ஃபீலிங்ல எங்க ரூம்ல மூணு நாளா ஒரு பய கூட சாப்பிடல. இப்ப அடுத்தப் படத்தோட பேரே “தேவதாஸ்” – அதுவும் நேரடித் தெலுங்குப் படம்.
சரி நம்மலாம் சினிமாவுல தான் காதலப் பாக்க முடியும்னு மனசத் தேத்திக்கிட்டு அந்தப் படத்துக்கு போயிட்டோம்.
தியேட்டருக்குள்ள கூட்டம் அள்ளுது எப்படியோ எடத்தப் புடிச்சு உக்காந்தோம். இனி நான் அந்தப் படத்தோட கதைய சீன் பை சீன் சொல்லப் போறேன். அதனால வேற முக்கியமான வேல இருக்கிறவங்க போயி வேலையப் பாருங்க. இல்ல நானும் அந்தப் படத்த பார்ப்பேன்னு அடம்புடிக்கிறவங்க தொடர்ந்து படிக்கலாம். வி….தி……வ.லி..ய…து……..
பழைய தமிழ் படத்துல சென்னையக் காட்றதுன்னா மொதல்ல எல்.ஐ.சி கட்டம், அப்பிடியே அண்ணா சமாதி, பீச், இப்பிடி முக்கியமான லேண்ட்மார்க் லாம் காட்டுவாங்கல்ல! அது மாதிரி அமெரிக்க சுதந்திர தேவி சிலை, அப்புறம் இன்னும் முக்கியமான லேண்ட்மார்க்லாம் காட்டிட்டு அமெரிக்காவப் பத்தி ஒரு முன் குறிப்பு சொல்றாங்க. அப்புறம் கஜினியில சூர்யா வருவார் இல்ல ஒரு காரு – அது மாதிரி ஒரு காரக் காட்றாங்க – அதுக்கு முன்னாடி ஒரு கார் + பின்னாடி ஒரு கார் போகுது—அப்படியே ஒரு ஃபார்ம் ஹவுஸ் முன்னால போயி நிக்குது.
இப்ப காரோட கதவ க்லோஸ்அப்ல காட்றாங்க – ரெண்டு கால் கீழ எறங்குது அப்பிடியேக் கேமராவ மேலத் தூக்குனா நம்ம ஹீரோ நிக்கிறார்----னு நீங்க நெனச்சா அதான் இல்ல… கோட் சூட் போட்டுக்கிட்டு நம்ம பாரதியார் ( அதாம்ப்பா பாரதி படத்துல பாரதியாரா நடிச்சாரில்ல அவரு தான் ) நிக்குறாரு. அவரப் பத்தி ஒரு முன்னுரக் கொடுத்திட்டு வீட்டுக்குள்ளப் போகுது கேமரா. உள்ள ஒரு துளசி மாடத்த சுத்திக் கிட்டு இருக்காங்க நம்ம பாரதியாரோட அழகானப் பொண்ணு இல்ல – வயசான அம்மா.
அந்தம்மா, வீட்டு வேலக்காரர சத்தம் போட்டு கூப்பிடறாங்க – கேமரா இன்னும் உள்ள போகுது – போர்வையப் போத்தி அந்த வேலக்காரர் தூங்கிகிட்டு இருக்கார். ஒரு நாய் வந்து அந்த போர்வைய இழுக்குது - அவர் போர்வைய விடாம தூங்கறார். நாய் யோசிக்குது. டப்னு அவர் மூஞ்சியில உச்சாப் போயிடுது – அவர் எழுந்துடுறார் – இங்க தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்குது – நாங்களும் முயற்சி பண்ணோம் – மு..டி…ய….ல.
அடுத்த சீன் ஒரு கடலக் காட்றாங்க – கடலுக்குள்ள இருந்து ரெண்டு கை மட்டும் மேல வருது -- எல்லாரும் சீட் நுனிக்கு வர்றாங்க -- எதிர்பார்த்த மாதிரியே ஹீரோயின் அறிமுகம்! அவங்க கடல்ல சோப்புப் போட்டு குளிக்கறாங்க – கதைக்கு தேவப்படுதில்ல !! --- அப்புறம் ஒரு சங்க எடுத்து காதுல வக்கிறாங்க.. அதுல ஒரு ட்யூன் கேக்குது அவங்களுக்கு – அந்த ட்யூன்ல அப்பிடியே ஒருப் பாட்டு பாடறாங்க – ஆடறாங்க
இப்ப ஸ்க்ரீன்ல ஒரு ஸ்லைடு போடறாங்க
A sea shore – America 12 noon.
பாட்டுப் பாதியிலேயே கேமரா இந்தியாவுக்கு வருது ….
ஒரு ஓட்ட பைக்ல நம்ம ஹீரோ கித்தார (அதுக்கு பேரு என்னப்பா கித்தாரா? சித்தாரா?) வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கார். அப்பிடியே காத்துல எதையோ தேடறார் – புடிச்சிட்டார் – அமெரிக்காவுல இருந்து காத்துல வந்த அந்த ட்யூன கப்புனு புடிச்சு கபால்னு இவரு ஒரு பாட்ட பாடறார்
ஸ்லைடு போடறாங்க --
A slum Area – Hyderabad 12 midnight.
அப்புறம் ஸ்க்ரீன்ல பாதி அமெரிக்கா பாதி ஐதராபாத் --- அப்படியே கிராபிக்ஸ் வித்தையெல்லாம் காட்றாங்க. பாட்டு முடியுது.
அந்த சங்குல கேட்ட சங்கீதத்துல மயங்கின நம்ம ஹீரோயின் சங்கீதம் கத்துக்கிறதுக்காக அவங்க பாட்டிய சொல்லிக்கொடுக்க சொல்றாங்க.பாட்டி இந்தியாப் போன்னு ஐடியாக் கொடுக்கவும், அப்பா(பாரதியார்)கிட்ட பர்மிஷன் வாங்கி இந்தியா கெளம்புறாங்க, பாத்தியும் , பேட்டியும் ..ச்சீ… பாட்டியும் பேத்தியும்.
இப்ப நம்ம ஹீரோ குரூப்பக் காட்றாங்க ஒரு குட்டி சுவத்துல ஒரு அஞ்சு பேரு உக்காந்திருக்காங்க அதுல ஒருத்தர் ஹீரோ, இன்னொருத்தர் காமெடியன் – தெலுங்கு விவேக் –மத்தவங்க எடுபிடி….
நம்ம “காம”டியன் ஒரு பொண்ணக் கரக்ட் பண்றதுக்கு இரட்டை அர்த்தத்துல ஒரு வசனம் பேசி அடி வாங்கறார்….இப்பவும் தியேட்டரே குலுங்குது --- எங்களால மறுபடியும் முடியல….
அப்ப அந்த பக்கம் ஒரு சூப்பர் பைக்ல ஒரு ரெமோ வர்றார் – இந்த பக்கம் ஒரு சூப்பர் காஸ்ட்யூம்ல ஒரு சுமாரான பொண்ணு வந்து நம்ம ரெமோ பைக்ல ஏறி உக்கார்றாங்க – அத ஒரு 7 ஆங்கிள்ல காட்றாங்க --- அவரு உடனே நம்ம ஹீரோ குரூப்ப வெறுப்பேத்தறதுக்காக பைக்ல வீலிங் பண்றாரு --- வண்டி நின்ன எடத்துல முன்னாடி வீல் மட்டும் அப்படியே ஒரு 45 டிகிரி மேல தூக்குது ( கவனிக்க வேண்டிய விஷயம் வண்டிய அவர் இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல )….
அப்புறம் ரெமோ ஒரு லுக் விட்டுட்டு நம்ம ஹீரோ பைக்க இடிச்சுட்டு போகப் பாக்கறார்- அதுக்குள்ள பிரச்னையாயிடுது. சமாதானம் பேசற ரெமோவோட கேர்ள்ஃப்ரெண்ட் ஒரு பந்தயம் வக்கிறாங்க. அது - பைக் ரேஸ் – அந்த பைக் ரேஸ ஒரு 3 நிமிஷம் காட்றாங்க – அதுல ஹீரோ குரூப்ப ரெமோ குரூப் ஏமாத்தி ஜெயிச்சுடுது.
//ஹீரோ குரூப் – கவர்மெண்ட் காலேஜ் ரெமோ குரூப் – ப்ரைவேட் காலேஜ்
ஒருத்தங்க மத்தவங்க ஏரியாவுக்குள்ள வந்தா வெளி ஏரியா குரூப்காரங்க லோக்கல் ஏரியா குரூப் காரங்களோட ஷூவ தங்களோட கர்ச்சீப்ல தொடச்சிட்டு அதுல தங்களோட முகத்தத் தொடச்சிக்கணும் – இது அவங்களுக்குள்ள இருக்குற (இயக்குனரால்) எழுதப்பட்ட சட்டம்!!! //
அடுத்த சீன் ஒரு கோயில் – இந்தியாவுக்கு வந்த நம்ம ஹீரோயின் அந்த கோயிலுக்கு வர்றாங்க – கோயில்ங்கறதுன்னால ஹீரோயின் தாவணியில வர்றாங்க – பண்பாட்டக் காட்டனும்ல? அந்த தாவணில எவ்ளோ பண்பாட்டக் காட்டமுடியுமோ அவ்ளோக் காட்றாங்க. நம்ம ஹீரோவும் அங்க தான் சாமிக் கும்பிட்டுக்கிட்டு இருக்கார். அப்ப அவர் ஒரு தோட்ட கீழப் பாக்குறார். யாரோடத் தோடுன்னு தேடிப்பாக்குறார். அப்ப சைட் ஆங்கிள்ல நம்ம ஹீரோயின் காதப் பாக்குறார் அதே மாடல் தோடு இருக்கு. அப்ப அந்தப் பக்க காதுல இருக்க வேண்டிய தோட்டதான் அவங்க மிஸ் பண்ணிட்டாங்கன்னு இவரு அறிவுப்பூர்வமா சிந்திச்சுட்டு இருக்கும்போது ஹீரோயின மிஸ் பண்ணிடறார்.மறுபடியும் மூளையக் கசக்கிப் புழிஞ்சு யோசிச்சு – கோயில்ல மைக்ல பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தவர எழுப்பி விட்டுட்டு இவர் மைக்ல விஷயத்த சொல்றார் --- தேவதைத் தேடி வர்றாங்க - வெளக்கெல்லாம் அணைஞ்சுடுது - இரூட்டுலயே ரெண்டு பேரும் பேசிக்கறாங்க – போகும்போது ஹீரோயின் மனசுக்குள்ள very interesting character அப்பிடின்னு சொல்லிட்டுப் போறாங்க. ஹீரோ ஒன்னுமே நடக்காத மாதிரி கேஷுவலா போயிடறார் – ஹீரோ இல்லையா அந்த கெத்து வேனுமில்ல?
அடுத்த நாள் காலேஜ் ஏரியாவுல ஹீரோயினும் ரெமோவும் மீட் பண்றாங்க – ஹீரோயின் அமெரிக்காவுல இருந்து வந்தவங்க இல்லையா அதனால பசங்கத் தோள் மேலக் கை போட்டு பழகறத எல்லாம் சகஜமாவே எடுத்துக்குவாங்க --- ஆனா அதப் பாக்குற ஹீரோவுக்கு வயிறு வாய் எல்லாம் எறியுது.
அப்புறம் ஹீரோயினும் ரெமோ பைக்ல ஏறிடுவாங்களோன்னுட்டு பபிள் கம்ம எடுத்து ரெமோ பைக் சீட்ல ஹீரோ ஒட்டி வச்சிடறார். ஹீரோயின் அதனால பைக்ல ஏறாம அவங்க கார்ல போய்டறாங்க. ஹீரோவோட அந்த ஐடியாவுக்காக தியேட்டரே கை தட்டுது. நாங்க காறித்…… துப்ப முடியாததால முழுங்கிடறோம்.
அப்புறம் ரெமோ, வந்து ஹீரோயின ஒரு பார்ட்டிக்கு கூப்பிட்டுப் போயி தப்பா நடக்கப் பாக்கறார் – ஹீரோயின் அவனக் கன்னத்துல அறைஞ்சுட்டு மணிக்கு 1 கிலோமீட்டர் வேகத்துல ஓடறாங்க – பின்னாடியே ரெமோ மணிக்கு 950 மீட்டர் வேகத்துல தொரத்தறாரு…..எதிர்பார்த்த மாதிரியே ஹீரோயின் , ஹீரோக்கிட்ட போய் தஞ்சம் ஆகறாங்க – ஹீரோ ரெமோவ அடிக்காம அடுத்த நாள் காலேஜ்ல எல்லாரும் பாக்குற மாதிரி பைக் ரேஸ் ஏற்பாடு பண்ணச் சொல்றாரு….
அடுத்த நாள் ஒரு பெரிய கேலரியில பைக்ரேஸ் – ஹீரோ ஜெயிக்கறார் – ஹீரோயின் வந்து ஹீரோவோட ஓட்டபைக்ல உக்கார்றாங்க –அத ஒரு 8 ஆங்க்ள்ல காட்றாங்க --- ரெமோ மாதிரியே ஹீரோவும் வீலிங் வுட்டுக் காமிக்கிறார்…அப்புறம் அப்படியே ஹீரோயினத் தள்ளிக்கிட்டுப் போறார்.
ஹீரோ : நீ எதுக்கு இந்தியா வந்த
ஹீரோயின் : சுத்திப் பாக்க
ஹீரோ: நான் உனக்கு உண்மையான இந்தியாவ சுத்திக் காட்றேன்….
அப்படியே பைக் ல வயல்வெளி, ஆறு, கிராமம், எல்லாம் சுத்தறாங்க…
“லே பாபு ஏது சங்கதி ஹே ரைனா ஹே ரைனா” ன்னு தெலுங்கையும் இந்தியையும் மிக்ஸ் பண்ணி ஒரு பாட்டு இ…ழு…க்…க….றா….ங்…க…
அப்புறம் ஒரு தடவ ரெமோ ஏரியாக்குள்ள ஹீரோ வந்துடறார்…அவங்க ரூல்ஸ்படி ரெமொ ஷூவ தொடச்சி தன்னோட முகத்த தொடச்சிக்கிறார்…அதப் பாக்கற ஹீரோயினுக்கு ஹீரோ மேல ஒரு இது அதாங்க பரிதாபம் வருது….
அடுத்த சீன் :
ஹீரோ குரூப்ல ஒருத்தன் வேகமா பைக்ல வந்து விழுந்து எழுந்து ஹீரோக்கிட்ட ஏதோ சொல்லுவான்….
ஹீரோவும் கோபமா கெளம்பிப் போவார்…எதோ ஆக்ஷன் சீனுக்கு அஸ்திவாரம் போடறாங்கனுப் பாத்தா…
அங்க நம்ம மழை ஷ்ரேயா நின்னுட்டு இருப்பாங்க….
அதாவது ஒரு ஃபங்ஷனுக்கு டான்ஸ் ஆட வர்ற ஷ்ரேயா ரெமோ ஏரியாவுக்குள்ள ஆடப் போறாங்கங்கற செய்தி கேட்டு தான் ஹீரோ குரூப்ல இவ்ளோ பரபரப்பு…
கமெடியன் போயி ஷ்ரேயாவ சுண்டு வெரலால தொடுவாரு அப்பிடியே ஷாக் அடிச்சு கீழ விழுந்துடுவார்….சிரிப்பலையில் தியேட்டர் குலுங்குகிறது…
ஹீரோ பேசறதுல இம்ப்ரஸ் ஆகி ஹீரோ ஏரியாவுலயே ஆடறதுக்கு ஷ்ரேயா சம்மதிக்கிறாங்க…
அந்த எடத்துல ஒருக் குத்தாட்டம் ஆடிக்கிட்டு இருந்தவங்க அப்படியே ஃபாரின் போயிடறாங்க……..
அடுத்த நாள் தனியா வர்ற ஹீரோயின்கிட்ட ரெமோ வம்பு பண்றார்…ஹீரோயின் மெதுவா பின்னாடியே நடந்து போறாங்க…ரெமோ ஹீரோயின நெருங்கிப் போறார். அப்பப் பாத்து ஹீரோ குறுக்க வர்றார்.
ரெமோ: இது எங்கப் பிரச்ன நீ தலையிடாத…
ஹீரோயின் : இது அவங்க ஏரியா நீ எதுக்கு உள்ள வந்த?
அப்பதான் ஹீரோவோட ஏரியாவுக்குள்ள தான் வந்துட்டத ரெமோ பாக்குறார்….
தியேட்டர்ல எனக்குப் பக்கத்துல உக்காந்திருந்தவர் கையத் தொடைல தட்டி “அப்பிடிப் போடு”ன்னு உற்சாகமாகுறார்….
ஹீரோவோட ஷூவ தன்னோட கர்ச்சீப்பாலத் தொடச்சி ரெமோ தன்னோட முகத்துல தொடச்சிக்கறார். ஹீரோயின் ரெமோவ பழி வாங்குன சந்தோஷத்துல ஹீரோவோட பைக்ல ஏறி உக்காந்துக்குறாங்க…. பைக் அப்பிடியே அமெரிக்காப் போகுது…
“தெலுசே தெலுசா பிரேமம் தெலுசா”ன்னு ஒரு பாட்டு
பாட்டு முடிஞ்ச வுடனே ஹீரோயினக் கொண்டுவந்து அவங்க தங்கியிருக்குற ஹோட்டல் முன்னாடி விட்டுட்டு…திரும்ப எப்ப சந்திக்கலாம்னு ஹீரோ கேக்கறார்.
“நாளைக்கு காலைல 10 மணிக்கு”
“சரி”
பைக்ல திரும்பிப் போகும்போது கணக்குப் போடறார் இன்னும் 12 மணி நேரம் 12*60 நிமிஷம் 12*60*60 நொடி எப்படி ஹீரோயினப் பாக்காம இருக்கிறதுன்னு யோசீச்சுட்டு திரும்பி ஹோட்டல் வாசலுக்கு வர்றார்.
ஹீரோயினும் அதே மாதிரி கணக்குப் போட்டுட்டு அங்க வந்து நிக்கறாங்க.
ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாக்குறாங்க….பாக்குறாங்க….பாக்குறாங்க….
தியேட்டர்ல ஒருத்தர் சவுண்ட்வுட்டதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஹோட்டலுக்குள்ள போறாங்க.
ஹீரோயின் தூங்கறதப் பாத்துக்கிட்டே ஹீரோ உக்காந்துருக்கார் இஞ்சி தின்னக் கு......திரை (எதுக்கு வம்பு?) மாதிரி…
அப்ப பாத்து போன் அடிக்குது….ஆஃப் பண்றார்…மறுபடியும் அடிக்குது…எடுத்து கெட்ட வார்த்தைல திட்டிடறார்… (ஹீரோயின் தூக்கம் கெடுதாம்!!!)
அந்தப் பக்கம் யாருன்னா நம்ம பாரதியார்.
அடுத்த நாள் ஹீரோவும் ஹீரோயினும் பைக்ல எங்கயோப் போறாங்க …..மழைப் பெய்யுது….
கீழ எறங்கி ஒரு மரப் பொந்துல ஒதுங்கறாங்க……
திடீர்னு ஒரு இடி இடிக்குது….பயத்துல ஹீரோவ கட்டிப் புடிச்சிடறாங்க ஹீரோயின்….
ஹீரோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஹீரோயின் கன்னுத்துல ஒரு முத்தம் குடுத்திடறார்…..
ஹீரோயின் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு ஹீரோ கன்னத்துல “பொளேர்”னு அறையறாங்க….
“ச்சம்ப்ப்ர ராஸ்கல்” அப்பிடின்னு திட்டிட்டுப் போயிடறாங்க….
ஹீரோ பயங்கரமா ஃபீல் ஆகப் போறார்னு நெனச்சா அதான் இல்ல….
அடி வாங்குன கன்னத்த தொடச்சிட்டு ஸ்க்ரீனுக்கு குறுக்கால கைய வச்சி ஸ்க்ரீன ரெண்டா கிழிக்கிறார்….அதுல இத்தாலி தெரியுது…
அங்க ஹீரோவும் , ஹீரோயினும்
“ நாப் ப்ரேம்மம் நூக் கஷ்டம்….
நுவ்வண்டே நாக் கிஷ்டம்….”னு பாடிட்டு
ஜாலியா டான்ஸ் ஆடிறாங்க………..
தியேட்டர்ல நாங்க நாலு பேரு மட்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்….
எல்லாரும் எங்களையே ஒரு மாதிரி பாத்ததுனால நிறுத்திட்டு சிரிச்சி சிரிச்சி விழறோம்…
அப்புறம் ஹீரோ ஹீரோயின ஒரு எடத்துக்கு கடத்திட்டுப் போயி அவங்க கை கால கட்டிப் போட்டுடறார்…
அவங்க கண்ணையும் கட்டி வச்சிட்டு காதல் டயலாக் பேசறார்….
ஹீரோயின் அதெல்லாம் ஃப்ரெண்ட்ஷிப் அப்பிடிங்கறாங்க…
ஹீரோ, ஹீரோயின் பின்னால போயி கட்டிப் புடிச்சு இப்படிதானே பைக்ல உக்காந்த அது ஃப்ரெண்ட்ஷிப்பா? ன்னு கேக்கறார்.
ஹீரோயின் எதையும் யோசிக்க முடியாத மெய் மறந்த நிலைல இருக்காங்க!
“என்னமோ எம் மனசுல இருந்தத சொல்லனும்னு தோணுச்சி சொல்லிட்டேன் அவ்வளவுதான்” - ஹீரோ
( அதக் கொஞ்சம் எட்ட நின்னே சொல்லியிருக்கலாம்!)
அப்பிடியே கெளம்பிப் போகும்போது அமெரிக்காவுல ஹீரோயின் சங்குல கேட்ட ட்யூன விசிலடிச்சுக்கிட்டேப் போவார் ஹீரோ
அதக் கேட்ட வுடனே ஹீரோயின் மனசுல காதல் “பூம்”னு வெடிச்சு கெளம்பிடும்.
ஆனா அதுக்குள்ள ஹீரோ கெளம்பிப் போய்டுவார்.
அடுத்த நாள் ஒரு டீக்கடைல ஹீரோ உக்காந்திருப்பார். ஹீரோயின் அவர்கிட்டப் பேசப் போவாங்க…
விடு விடு ன்னு எந்திரிச்ச ஹீரோ அடுப்புல கொதிச்சிட்டு இருக்கட் டீய எடுத்து மட மடன்னு குடிச்சிடறார்
( நாங்கூட ரொம்ப பசியில இருந்திருப்பார் போலன்னு நெனச்சேன்….அதில்ல
ஹீரோயின் மேல அவ்ளோ கோபத்துல இருக்குறார்னு டைரக்டர் சொல்ல வர்றார்)
வருத்தத்தோட வீட்டுக்கு வர்ற ஹீரோயின் எப்படி அவர்கிட்ட காதல சொல்றதுன்னு யோசிச்சுட்டு ஒரு ஐடியாப் பண்ணுவாங்க….
ஒரு லெட்டர் எழுதி தன்னோட நாய்க்குட்டிகிட்ட குடுத்து அனுப்புவாங்க…
போன ஜென்மத்துல அந்த நாய் போஸ்ட் மேனா இருந்திருக்கும் போல…
கரெக்டா ஹீரோ வீட்டுக்குப் போய் லெட்டர சேத்துடும்….
லெட்டர பிரிச்சிப் பாப்பார் --- “91221” அப்பிடின்னு எழுதியிருக்கும்………..
இது என்னடா ஒன்னும் புரியலன்னு ஹீரோ மண்டையப் பிச்சி யோசிப்பார் 9 – I, 12 – L , 21 – U , ILU = I love You அப்பிடின்னு அத டீக்கொட் பண்ணி புரிஞ்சிப்பார்
( ரெண்டு பேரும்D a Vinci Code ஒவராப் படிச்சிட்டாங்கப் போல இருக்குது )
உடனே ஆஸ்திரேலியா கெளம்பிடுவாங்க………
ஒரு பாட்டு…….
இப்ப அமெரிக்காவுல இருந்து நேரா ஹீரோவோட வீட்டுக்கு வர்றார் பாரதியார்….
“உன்ன எனக்கு புடிச்சிருக்கு….
உனக்கே எம் பொண்ணக் கல்யாணம் பண்ணி வக்கிறேன்….”
இப்படியெல்லாம் பேசிட்டு நேரா ஹீரொயினும் பாட்டியும் இருக்கிற ஹோட்டலுக்கு வருவார்…
“இப்பதாம்மா தேவதாஸ(ஹீரோ)ப் பாத்துப் பேசிட்டு வர்றேன்…
நம்ம அமெரிக்காப் போய்ட்டு அடுத்த சம்மர் லீவுல இந்தியா வந்து உன்னோடக் கல்யாணத்த முடிச்சிடலாம்” அப்படினு சொல்லுவார்…
பானுமதிக்கு(ஹீரோயின் பேர்) சால ஆனந்தம்.
உடனே அமெரிக்காப் போகனும்னு சொல்லி எல்லா ஏற்பாடும் பண்ணிடுவார்….
கடைசியா காதலர்கள் சந்திக்கிறாங்க..
பானுமதி: நேனு அமெரிக்காப் போயிதே…நூக்கு பாதகம் லேதா?
தேவதாஸ் : பாதகம் லேது….சால ஆனந்தம்!
பானு:ஆனந்தமா?
தேவ்:ஆமா பானு தூரம் அதிகம் இருந்தா தான் காதல் திக்கா இருக்கும்!
பாரதியார் தேவ்க்கு ஃபோன் பண்ணி 9 மணிக்கு ஃப்ளைட் , ஏர்போர்ட் வந்துடுங்கறார்….
ஆனா 7 மணி ஃப்ளைட்க்கே கெளம்பறாங்க………
நம்ம ஹீரோ யாரு?அங்க 6 மணிக்கே வந்து உக்காந்துக்கறார்…..
தன்ன ஏமாத்தி பானுவ அமெரிக்கா கூட்டிட்டுப் போக பாரதியார் பண்ற ப்ளான புரிஞ்சிக்கிறார்………
பாரதியார்கிட்ட தனியாப் பேசுறார்:
“என்ன இங்க எதிர்பார்க்கல இல்ல”
“வந்து மட்டும் என்ன பண்ண முடிஞ்சது உன்னால”
“நீ பானுவ ஏமாத்திக் கூப்பிட்டுப் போற”
“நீயும் முடிஞ்சா அமெரிக்கா வந்து கூட்டிட்டுப் போ”
“அமெரிக்கா வர்றேன் ---- உன்னப் பாக்குறேன் --- பானுவக் கூட்டிட்டு வர்றேன்”
“லக லக லக லகா லகா லகா” ( ஒன்னும் இல்ல பாரதியார் சிரிக்கிறார்)
அப்ப பானு அங்க வர்றாங்க…
பானு: என்ன டாடி சிரிக்கிறீங்க
பாரதி:இல்லம்மா தேவ் ஒரு ஜோக் சொன்னார் அதான் சிரிக்கிறென்…லக…லக…
சரி பேசிட்டு வாம்மா டைம் ஆயிடுச்சி…
பானு: சரி போய்ட்டு வர்றேன்
தேவ்: (நீ)போ…..(நான்)வர்றேன் ( என்ன டயலாக்! தியேட்டரில் விசில் பறக்கிறது!!!)
(ஸ்சப்பா…..இப்பவேக் கண்ணக் கட்டுதே…..இருங்கப்பு நான் போய் ஒரு டீத்தண்ணியக் குடிச்சுட்டு வர்றேன்….நீங்க எங்கியும் போயிறாதீங்க….இன்னும் பாதி சுமையக் கூட எறக்கி வைக்கல….ந்தா வந்துட்றேன்….)
படத்தின் இரண்டாவது பாதி இங்கே
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
என்ன இப்படி பாதில நிறுத்திப்புட்டு பொயிட்டீங்க???? இப்ப பாருங்க மீதி கத தெரியாம எங்களுக்கு ஒரே டென்சன்!!!
ReplyDeleteஅட முழுப் படத்த தியேட்டர்லப் பார்த்தும் உசுரோடத் திரும்பி வந்ததே பெரும்பாடாப்போச்சு...
ReplyDeleteஇருங்கப்பு மனசத் தேத்திக்கிட்டு மீதியையும் எழுதிட்றேன்...
அன்புடன்,
அருள்.
கதை ரொம்ப நல்லா இருக்குங்க. நீங்க சொல்லுறதுனால அது நல்லா இருக்கோ என்னமோ?
ReplyDeleteமீதி கதையையும் சீக்கிரம் அடிங்க சார். என்னாச்சோன்னு, ஒரே டென்சனா இருக்கு.
எவ்வளவு நொந்து போயிருந்தா இவ்ளோ பெரிசா விலா வாரியா போட்டு இருப்பீங்க.
நான் இப்படி சொல்லுறதுனால, இரண்டாம் பாகத்தை சுருக்கிடாதீங்க..
//விடு விடு ன்னு எந்திரிச்ச ஹீரோ அடுப்புல கொதிச்சிட்டு இருக்கட் டீய எடுத்து மட மடன்னு குடிச்சிடறார்//
//பானுமதி: நேனு அமெரிக்காப் போயிதே…நூக்கு பாதகம் லேதா?
தேவதாஸ் : பாதகம் லேது….சால ஆனந்தம்!
பானு:ஆனந்தமா?
//
:))
ஐயையோ! உட்ருங்க சார்! தாங்கலை!!!
ReplyDeleteஸ்ருசல்,
ReplyDelete//கதை ரொம்ப நல்லா இருக்குங்க. நீங்க சொல்லுறதுனால அது நல்லா இருக்கோ என்னமோ?//
ஆமாங்க நான் கூட ஒரு தெலுங்கு படம் இயக்கலாம்னு இருக்கேன் :)
//எவ்வளவு நொந்து போயிருந்தா இவ்ளோ பெரிசா விலா வாரியா போட்டு இருப்பீங்க.
//
ஹே..ஹே..ஹைதராபாத்ல போயிக் கேட்டுப் பாருங்கப்பு..எத்தனத் தெலுங்கு படம் பார்த்து நொந்து போனாலும் ஒரு சவுண்ட் வெளிய வந்திருக்குமா??
சும்மா அரப் படத்த பாத்து(படிச்சு)ட்டு
ஃபீல் பண்றீங்களே... :)
இரண்டாம் பாகத்த நான் சுருக்கல...ஆனா அதப் படிச்சுட்டு யாரும் சுருண்டு விழாம இருந்தா சரி!!
அன்புடன்,
அருள்.
சுல்தான்,
ReplyDelete//ஐயையோ! உட்ருங்க சார்! தாங்கலை!!!//
இப்படியெல்லாம் கெஞ்சினா இடைவேளை முடிஞ்சவுடனே கதவத் தெறந்துவிட்டுவோமா??
நீங்க இருந்து முழுப்படத்தையும் பார்த்துட்டுதான் போகனும்... :)
அன்புடன்,
அருள்.
யப்பா, தாங்கலை :-)))))))))))))))))
ReplyDeleteஈரோ, ஈரோயினி யாருங்க? எப்படியும் விஜய் நடிச்சி, தமிழ்ல வரத்தான் போகுது.
எனக்கு முழு கதையும் கேட்க சால இஷ்டம் (இஷ்டமு ??).
ReplyDeleteஅருள், 'ஆனந்த்' , 'ஒக ஊரிலோ', 'அத்தடு' மாதிரி படங்கள பற்றியும் எழுதுங்கோ....
உஷா,
ReplyDeleteபடிக்கவேத் தாங்க முடியலையே..பார்த்திருந்தா என்ன ஆகியிருப்பீங்க???
தேவ் -> ராம், பானு -> இலியனா
தமிழ்ல விஜய், த்ரிஷா நடிப்பாங்களோ...என்ன இருந்தாலும் தெலுங்கு மாதிரி வராதுங்க!! :))
அன்புடன்,
அருள்.
தலை,
ReplyDeleteதமிழில் ஏற்க்கனவே வந்திடுச்சு மாமு...
நீங்க தப்பிக்கவே முடியாது...
"திருப்பதி" னு பேரு....
பெத்தராயுடு,
ReplyDeleteஎன்ன முழுசா காலி பண்ணாம விட மாட்டீங்க போல! :)
ஒரு படத்தோட கதை(?)ய எழுதி முடிக்கிறதுக்குள்ளேயே அந்தக் காட்சியெல்லாம் மனசுல வந்து ஒரு நிமிஷம் மூளை கலங்குது..
இன்னும் மத்தப் படத்துக்கும் எழிதினேன்னா அவ்வளுவுதான்.. :(
அன்புடன்,
அருள்.
jp,
ReplyDeleteஅஜித், விஜய் படமெல்லாம் தியேட்டருக்குப் போய்ப் பார்க்கிற பழக்கம் எனக்கு இல்லீங்க..அதனால நான் எஸ்கேப் :)
இன்னைக்கு தொலைக்காட்சியில திருப்பதி படத்து பாட்டு ஒன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்..கொஞ்ச நேரத்துல சேனல மாத்த சொல்லி தொலைக்காட்சிப் பெட்டியே என்னத் திட்டுதுங்க.. :)
அன்புடன்,
அருள்.
நான் மேல சொன்ன படங்களைக்கூட ஒரு கணக்கில சேர்த்துக்கலாம். இப்போ 'கோகிலா' அப்படின்னு ஒரு அட்டு படத்த பாத்திட்டு இருக்கேன். ஒரே ஆறுதல் நாயகி சலோனிதான்...
ReplyDeleteவிஜய் எல்லாம் நடிக்க மாட்டார். ஜெயம் ரவி தான் ஒரு 10 வருஷத்துக்கு டோட்டல் காண்ட்ராக்ட்.
ReplyDeleteவேற எதுக்கு. தெலுங்கு டப்பிங் படத்துல நடிக்கறதுக்குதான். :-)
கத டமாசா சொல்றீங்க.
///அடி வாங்குன கன்னத்த தொடச்சிட்டு ஸ்க்ரீனுக்கு குறுக்கால கைய வச்சி ஸ்க்ரீன ரெண்டா கிழிக்கிறார்….அதுல இத்தாலி தெரியுது…
அங்க ஹீரோவும் , ஹீரோயினும்
“ நாப் ப்ரேம்மம் நூக் கஷ்டம்….
நுவ்வண்டே நாக் கிஷ்டம்….”னு பாடிட்டு
ஜாலியா டான்ஸ் ஆடிறாங்க………..
தியேட்டர்ல நாங்க நாலு பேரு மட்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்….///
நானும்தான்... ஹ ஹ ஹா.. :))))
பெத்தராயுடு,
ReplyDeleteஉங்க அனுபவத்த "கோகிலாவின் கதை"னு போட்டு ஒரு பதிவா எழுதிடுங்க :)
படிக்கிறவங்க சந்தோசப்படட்டும்!!
இதுல கொடுமை என்னன்னா அந்தப் படம் நூறு நாள் தாண்டி இப்ப வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு.. :(
பிரபு ராஜா,
ஜெயம் படத்தையும் ஒரு தடவை தெலுங்குல பார்த்துத் தொலைச்சிட்டேன்..
அந்தக் கொடுமையெல்லாம் பின்னால சொல்றேன்...
அன்புடன்,
அருள்.
/ விஜய் எல்லாம் நடிக்க மாட்டார். ஜெயம் ரவி தான் ஒரு 10 வருஷத்துக்கு டோட்டல் காண்ட்ராக்ட்.
ReplyDeleteவேற எதுக்கு. தெலுங்கு டப்பிங் படத்துல நடிக்கறதுக்குதான். :-)
கத டமாசா சொல்றீங்க./
்பிரபு ராஜா ... நான் நொந்து போய் சொல்றேன்... உங்களுக்கு தமாசா இருக்கா? ;)
///அடி வாங்குன கன்னத்த தொடச்சிட்டு ஸ்க்ரீனுக்கு குறுக்கால கைய வச்சி ஸ்க்ரீன ரெண்டா கிழிக்கிறார்….அதுல இத்தாலி தெரியுது…
அங்க ஹீரோவும் , ஹீரோயினும்
“ நாப் ப்ரேம்மம் நூக் கஷ்டம்….
நுவ்வண்டே நாக் கிஷ்டம்….”னு பாடிட்டு
ஜாலியா டான்ஸ் ஆடிறாங்க………..
தியேட்டர்ல நாங்க நாலு பேரு மட்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறோம்….///
நானும்தான்... ஹ ஹ ஹா.. :))))/
:)))
யப்பா.. முழுசா படிக்க முடியலப்பா.. :(
ReplyDeleteஒத்துக்கறேன்.. என்னை விட நீங்க அதிகம் பாதிக்கப்பட்டிருக்கீங்க! பேசாம அரசாங்கத்துகிட்ட நிவாரண உதவி கேப்போமா?
காயத்ரி,
ReplyDelete/ யப்பா.. முழுசா படிக்க முடியலப்பா.. :(/
பாதி படிச்சதுக்கே இப்படியா??? நாங்க முழுசா பாத்தவங்க :)
/ஒத்துக்கறேன்.. என்னை விட நீங்க அதிகம் பாதிக்கப்பட்டிருக்கீங்க! பேசாம அரசாங்கத்துகிட்ட நிவாரண உதவி கேப்போமா?/
இதுக்கெல்லாம் நிவாரண உதவி கிடைச்சா நான் எப்பவோ லட்சாதிபதி ஆகியிருக்கனும்... வாரம் ஒரு படம் பாத்துட்டு இருக்கேன் ;)
ooooh.....Venam ...vitru ..aluthuduven .......idu comedy padama.... illa Kadhal padama ....ore tamasa irkku .... :) :)
ReplyDeleteபாதிப்பு கொஞ்சம் ஜாஸ்திதான் போல
ReplyDeleteமங்களூர் சிவா
கவிதை ப்ரியன்,
ReplyDelete/ ooooh.....Venam ...vitru ..aluthuduven .......idu comedy padama.... illa Kadhal padama ....ore tamasa irkku .... :) :)/
இது தேச பக்தி படம்ப்பா :)
இந்த வருசம் ஆகஸ்ட் 15 க்கு இந்த படம் தான் ஒரு தெலுங்கு சேனல்ல போட்டாங்க :)
/ பாதிப்பு கொஞ்சம் ஜாஸ்திதான் போல
ReplyDeleteமங்களூர் சிவா/
கொஞ்சமா? அதிகமா? சரியா சொல்லுங்க ;)