Saturday, May 20, 2006

+2 காதல் - 2

+2 காதல் முதல் பகுதி

ட்யூஷனில் பெண்களோடு சேர்ந்து படித்தால் ஒரே மாதத்தில் நாலைந்து பெண்களை மடக்கி விடுவோம் என சபதமேப் போட்டிருந்த மதனும், வினோத்தும் கூட +1 முடியும் வரை ஒரு பெண்ணிடம்கூட பேசவில்லை. பார்த்துக்கொண்டிருப்பதிலேயே அவர்களின் பாதி ஏக்கம் தீர்ந்து போனது.
எங்கள் எல்லோருக்குமே வீரம் எல்லாம் எங்களுக்குள் மட்டும்தான். ஒரு பெண் அருகில் வந்துவிட்டால் சம்பந்தமில்லாமல் உளறுவதும், பகலில் நட்சத்திரம் தேடுவதும் எங்கள் எல்லோருக்கும் அனிச்சையாய் நடக்கும் செயல்கள்.
அந்தப் பெண்களும் எங்களை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.எங்கள் ஐந்து பேரிலேயே கொஞ்சம் கலராக இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தது பாஸ்கரைத்தான். அவனுக்கே அவர்கள் வைத்திருந்த பெயர் கருவாயனாம். மீதி நான்கு பேரின் நிலைமையோ படு மோசம்.

ஒருவாறாக +1 தேர்வெல்லாம் முடிந்து மே மாத விடுமுறையில் ஊர் சுற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, ஞாயிறு தவிர எல்லா நாளும் கெமிஸ்ட்ரி ட்யூஷன் இருக்கிறது என குண்டை போட்டார் ஜோசப் மாஸ்டர். அவர் அப்படி சொன்னதும் மதனுக்கும் , வினோத்துக்கும் கொஞ்சம் சந்தோசம்தான்.

“மாப்ள இந்த ஒரு மாசந்தாண்டா நமக்கு ச்சான்சு..யார் யாரு, யார் யார் கிட்ட பேசனும்னு நெனைக்கிறீங்களோ இந்த ஒரு மாசத்துல பிக்கப் பண்ணிக்கோங்க…அப்புறம் ஸ்கூல் ஆரம்பிச்சுதுன்னா எல்லாவளும் சீரியஸா படிக்க ஆரம்பிச்சுடுவாளுங்கடா..அப்புறம் இங்க ட்யூஷன் சேர்ந்து இந்த ஆளுக்கு 1500 ரூபா தண்டம் கட்றதுக்கு ஒரு பிரயோஜனமே இல்லாமப் போயிடும்” எல்லாருக்கும் நன்றாகவே மந்திரித்து விட்டான், மதன்.

“அது சரிடா ஒரு எடத்துலேயேப் பார்த்தா எப்படி?? சீக்கிரம் physicsக்கும் எந்த வாத்திகிட்ட சேரலாம்னு சொல்லு”, வினோத் கொஞ்சம் அகலக் கால் வைத்தான்.

“ஆமாடா சொல்ல மறந்துட்டேன்..நாம physicsக்கு சபாபதி கிட்ட சேர்றோம்..அந்தாளு வீடு தான் சேரன் ஸ்கூல் கிட்ட இருக்கு..கண்டிப்பா சேரன் ஸ்கூல் புள்ளைக எல்லாம் அங்கதான் வருவாளுக”

“டேய் சேரன் ஸ்கூல் புள்ளைகளா…அது high class ஆச்சே??”

“ஏண்டா அலர்ற…நான் என்ன அவளுக உங்கிட்ட வந்து எங்கள லவ்வு பண்ணு லவ்வு பண்ணுனு உன் பின்னாடியே சுத்தப் போறாளுகன்னா சொல்றேன்…physics tution சைட்டடிக்க மட்டும்…chemistry tution கரைக்ட் பண்ண..”

“அப்ப maths tution?”

“அங்கேயாவது படிப்போம்டா”

மதனும் வினோத்தும் இப்படி தேடல் படலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, அந்தப் பக்கம் படிப்பாளிகளாகவே மாறிப் போயிருந்தார்கள் செல்வாவும், பாஸ்கரும்.
போன வருடம் +2 முடித்தவர்களின் நோட்ஸ், டெஸ்ட் பேப்பர் எல்லாவற்றையும் பழையப் பேப்பர் காரனைப் போல சுமந்து கொண்டு வந்தார்கள் இருவரும்.

“டேய்..இந்த நோட்ஸ் போன வருஷம் செண்டம் வாங்கினவனோடதுடா…அருமையா நோட்ஸ் எடுத்து வச்சிருக்கான்…வேணுங்கறவங்க ஜெராக்ஸ் எடுத்துக்கோங்க…” தான் உருப்படப்போவதை மறைமுகமாக சொல்லிக்கொண்டிருந்தான் செல்வா.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே அமைதியாக நடந்துகொண்டிருந்தேன் நான்.
நால்வரும் என்னைப் பற்றி ஏதோ கண்ணில் பேசினார்கள்.

“இவன் மட்டும் ஏண்டா இஞ்சி தின்ன பாஸ்கர் மாதிரி உம்முனு வர்றான்” – என்னைக் காட்டிக் கேட்டான் வினோத்.

“டேய்..அவனப் பத்திப் பேசும்போது என்ன ஏண்டா இழுக்கறீங்க…அவன் என்ன யோசிக்கிறான்னு தெரியாதா? சாரதாவும் சபாபதிகிட்ட தான் physics tution சேர்றா-னு சொல்லித் தொலையுங்களேண்டா!” – பாஸ்கர் ஆரம்பித்து வைக்க எல்லோரும் கோரஸ் பாடினார்கள்.

“அட.. நாய்களா…நான் maths-க்கு யார்ட்ட சேரலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்டா…நீங்கல்லாம் MMகிட்ட தான் போவீங்கனு தெரியும்..அந்த ஆள் வைக்கிற entrance testல 90% வாங்கினாதான் சேர்த்துக்குவானாம்…அந்த அளவுக்கு அறிவு இருந்தா நாம எதுக்குடா அவங்கிட்ட tuition சேர்றோம்? நான் எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒருத்தர்ட்ட சேரப் போறேன்.”

“நான்…நம்பிட்டேன்டா….நீங்க?” –மதன்.

“நாங்களும் நம்பிட்டோம்” – மீதி பேரும் கத்தினார்கள்.

“டேய் நான் சீரியஸாதான் சொல்றேன்…நான் MM கிட்ட வரல…சரி நாளைக்கு சபாபதியப் பார்க்கப் போலாம்… இப்பக் கெளம்புங்க” ஒரு வழியாக அவர்களைக் கலைத்து அனுப்பினேன்.

அடுத்த நாள் சபாபதி வீட்டில் ஐந்து பேரும் ஆஜரானோம். அன்று தான் tuition சேருபவர்களை அவர் வர சொல்லியிருந்ததால் நிறையக் கூட்டமாக இருந்தது.
ஆனால் அங்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி batch என்று சொன்னதால் வெறுத்துப் போனான் மதன்.
கோபத்தின் உச்சிக்கேப் போன வினோத் சபாபதிக் குடும்பத்தைக் கொஞ்ச நேரம் சேதப்படுத்திவிட்டு ஆசுவாசமானான்.

“இப்ப எதுக்கு டென்ஷன் ஆவறீங்க? ஸ்கூல் ஆரம்பிக்கிற வரைக்கும் நம்மள காலைல 9 to 10 வரசொல்லியிருக்காரு, பொண்ணுங்கள 8 – 9 வரசொல்லியிருக்காரு…பார்க்க முடியாமலாப் போயிடும்??” இருவரையும் சமாதானப் படுத்தினான் செல்வா.

“டேய் நீ படிக்கிறவனாட்டம் சீனப் போட்ட…இப்ப என்னடா இப்படிப் பேசற??” – செல்வா மீது பாஸ்கருக்கு சந்தேகம் வந்தது.

“ஆமா..அங்க அவளுக தாவணியப் போர்த்திக்கிட்டு வர்றாளுங்க..இங்க பாரு எல்லாம் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்…எல்லாம் எப்படி இருக்காங்க”

“அடப் பாவி குட்டப் பாவாடையப் பார்த்தவுடனே தாவணி எளக்காரமாப் போயிடுச்சா உனக்கு?” – தாவணிக்குப் பரிந்து பேசினான் மதன்.

அப்போதுதான் கவனித்தேன் அவளும் அங்கு வந்திருந்தாள். முன்பு பாஸ்கர் சொன்னபோது என்னைக் கிண்டல் பண்ணுவதற்காக சொன்னான் என்றே நினைத்தேன்.
ஆனால் உண்மையாகவே அவளும் physicsக்கு சபாபதியிடம் சேருவதற்கு வந்திருந்தாள்.

அந்த விடுமுறை முழுவதும் பள்ளிக்கு செல்வதுபோலவேக் கழிந்தது. காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால் physics tuition முடித்துவிட்டு library போய் விடுவோம். மீண்டும் மதியம் சாப்பிட்டுவிட்டு ஊர் சுற்றக் கிளம்பினால் திரும்பவும் மாலை chemistry tuitionக்கு நேராய் வந்து விடுவோம்.

இந்த ஒரு மாதத்தில் chemistry tuition-இல் நடந்த நான்கைந்து தேர்வுகளிலும் நான் முதல் மார்க்கும், அவள் இரண்டாவதும் வாங்கியிருந்தோம். ஆனால் எங்கள் இருவருக்கும் மார்க் வித்தியாசம் அதிகமிருந்தது.

ஒரு நாள் tuition முடிந்தவுடன் என்னிடம் வந்தவள் “உங்க test paper லாம் கொஞ்சம் தர்றீங்களா..பார்த்துட்டுக் கொடுத்திட்றேன்” என்றாள். நான் எதுவுமேப் பேசாமல் எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டவள் நோட்டுக்குள் வைத்துக்கொண்டு ,”நாளைக்குத் தர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.

அவள் போகும் வரை காத்திருந்த நான்கு பேரும், அவள் மறைந்தவுடன் ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். மதன் ஒரு படி மேலே போய் என் கன்னத்தில் ஒரு முத்திரையே பதித்து விட்டான்.
“டேய் கலக்கிட்டடா மச்சி…அவளையே வந்து பேச வச்சிட்ட…ம்ம்…பொண்ணு மடங்கிட்டா…இனி உங்காட்ல மழதான்!!” – என்னை உற்சாகப் படுத்தினான் மதன்.

“அடப் பாவிங்களா…அந்தப் பொண்ணு test paper வாங்கிட்டுப் போறா…அதுக்கு ஏன்டா இப்படி ஏத்தி வுட்றீங்க” – அவர்களிடம் அப்படி சொல்லித் தப்பித்துக் கொண்டேன்.

அடுத்து வந்த நாட்களில் படிப்பைப் பற்றி அடிக்கடிப் பேச ஆரம்பித்தாள். நான் “ஆமா” ,“இல்லை” யைத் தாண்டி பேசியதில்லை.

அடுத்த ஆண்டு பள்ளி ஆரம்பமானவுடன் tuition time எல்லாம் மாறிப் போனது. திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மாலை 5 -6 physics tuition இருந்தது.( அதே நாட்களில் 6- 7 அவள் வரும் batch க்கு இருந்தது). வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 5-6 எங்களோடு chemistry tuition –இல் ஒரே batch-இல் இருந்தாள்.

MM-இடம் மீதி நான்கு பேரும் maths-க்கு tuition சேர்ந்து போக ஆரம்பித்து இருந்தார்கள். நான் maths-க்கு என் வீட்டருகில் ஒருவரிடம் சேர்ந்திருந்தேன்.
பள்ளி ஆரம்பித்த முதல் வாரம் சுவாரஸ்யமாய் எதுவுமில்லாமல் ஓடியிருந்தது.

அடுத்த வாரம் ஒரு நாள் chemistry tuition-இல் மாஸ்டர் வரும் வரை மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தோம்.
“டேய்..சாரதா mathsக்கு MM கிட்ட வரலடா…வேற எங்க சேர்ந்திருப்பானுத் தெரியுமா??” என்னிடம் கேட்டான் மதன்.
“அவ எங்கப் போறா..எங்க வர்றானு எனக்கெப்படிடாத் தெரியும்?” – கொஞ்சம் கோபம் காட்டினேன்.
“ஏன் அவகிட்டயேக் கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டியதுதான?”
“அத நான் தெரிஞ்சிக்கிட்டு என்னப் பண்ணப் போறேன்?”
“அப்ப நீ எங்கப் போறேன்னு சொல்லு!”
“நாயே! நாந்தான் முன்னயே சொன்னேனே..எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஐயப்பனுனு ஒருத்தர்ட்ட போறேன்னு”
அன்று அதோடு என்னை விட்டு விட்டான் மதன்.

அடுத்த நாள் காலையில் நான் maths tuition-இல் இருக்கும்போது அங்கு வந்தாள், அவள்… maths tuition-இல் சேர்வதற்கு! (தொடரும்..)

அடுத்தப் பகுதி
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

18 comments:

  1. இரு பாகங்களும் இளவயது நினைவுகளை எண்ணிப்பார்க்க வைத்துவிட்டன.அடுத்த
    பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete
  2. ம்ம்ம் நடத்துங்க :)

    ReplyDelete
  3. துபாய் ராஜா,

    இளவயது மகிழ்ச்சிகளை அனுபவிக்கும்போது அவை மகிழ்ச்சிகளாகத் தெரியவில்லை...

    இப்போதுதானே உணருகிறோம்...

    அடுத்த பகுதியை விரைவில் பதிக்கிறேன்...

    அன்புடன்
    அருள்.

    ReplyDelete
  4. சிறீதரன்,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!!
    சீக்கிரமே அடுத்தப் பகுதியைப் பதிக்கிறேன்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  5. அட்டகாசம்.அடுத்த பகுதி எப்போ???

    ReplyDelete
  6. ஆற்றங்கரை நண்பரே! ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வாத்தியாரா? ஒங்க காட்டுல மழைதான் போங்க!

    ReplyDelete
  7. சுதர்சன்,

    இன்றிரவு அல்லது நாளை காலை பதித்து விடுகிறேன்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  8. அண்ணாத்த....எனக்கு இப்பவே மிச்ச பாகமும் வேணும்..... அய் யாம் நாட் கோயிங் எனி வேர்.... கீப் ரெஃபிரஸிங் திஸ் பேஜ்....

    ReplyDelete
  9. அருமையான நடை. நிச்சயம் அனைவரையும் ரசிக்க வைக்கும்.

    ஆம்.. அமராவதி ஆத்தங்கரையில் எந்த ஊர் உங்களது? உடுமலைப்பேட்டையில் தொடங்கி கரூர் வரை சேரன் ஸ்கூல் என்கிருக்கிறது என யோசித்துப் பார்க்கிறேன்.

    - குப்புசாமி செல்லமுத்து

    ReplyDelete
  10. jp,

    இப்படி அடம் புடிச்சா எப்படி??
    கவலைப் படாதீங்க..
    இன்னைக்கு அடுத்தப் பகுதியப் பதிச்சுடுறேன்...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  11. குப்ஸ்,

    //அருமையான நடை. நிச்சயம் அனைவரையும் ரசிக்க வைக்கும். //

    பாராட்டுக்கு நன்றிங்க..

    //ஆம்.. அமராவதி ஆத்தங்கரையில் எந்த ஊர் உங்களது? உடுமலைப்பேட்டையில் தொடங்கி கரூர் வரை சேரன் ஸ்கூல் என்கிருக்கிறது என யோசித்துப் பார்க்கிறேன்.
    //

    நம்ம ஊர் வஞ்சி மாநகர் தாங்க..

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  12. செயகுமார்,

    //ஆற்றங்கரை நண்பரே! ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு வாத்தியாரா? ஒங்க காட்டுல மழைதான் போங்க!//

    12வதுக்கு இப்படிதான எல்லாரும் ட்யூஷன் போனோம்!!

    மழையெல்லாம் இல்லீங்க தூறல்தான்!

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  13. Excellent flow.Looking forward to your next post:)

    ReplyDelete
  14. அருட்பெருங்கோ,

    மிக்க சுவை! மிக்க மகிழ்ச்சி! :)

    நான் இந்த பதிப்புகளை மின் அஞ்சலில் தான் படித்தேன்.

    உங்களுடைய ஐந்து மற்றும் ஆறாம் பகுதிகளையும் படித்தேன். ஆனால் இங்கு நான்கு பகுதிகள் மட்டும் தான் உள்ளன.

    ஒரு வேலை அதையும் திருட்டு விசிடி போல் எடுத்து விட்டார்களா??

    ReplyDelete
  15. கோபாலன்,

    //Excellent flow.Looking forward to your next post:)//

    ரொம்ப நன்றிங்க...
    அடுத்தப் பகுதியெல்லாம் பதிச்சாச்சே..

    அன்புடன்,
    அருள்

    ReplyDelete
  16. முருகானந்தம்,

    //நான் இந்த பதிப்புகளை மின் அஞ்சலில் தான் படித்தேன்.//

    ஆமாங்க இது என் நண்பர்களுக்கு மட்டும் நான் அனுப்பினது...அதை அவர்கள் அவர்களுடைய நண்பர்களுக்கு அனுப்ப இப்படியே சுற்றிக் கடைசியில் எனக்கே அதுத் திரும்பி வந்தது இன்னொருவரிடம் இருந்து...

    அதனால்தான் உடனே வலைப் பதிவில் ஏற்றி விட்டேன்....

    /ஒரு வேலை அதையும் திருட்டு விசிடி போல் எடுத்து விட்டார்களா?? /

    இல்லை இல்லை நான் தான் இன்னும் பதிக்க வில்லை...

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete
  17. ஓ!... அழகான அந்த நாட்களின் நினைவை அருமையாக நகர்த்திச் செல்லும் விதம் அருமை. அருமை.

    “அவ எங்கப் போறா..எங்க வர்றானு எனக்கெப்படிடாத் தெரியும்?” – கொஞ்சம் கோபம் காட்டினேன்..."

    ம்... பொய் சொல்லாதீங்கோ அருள். இது பொய் கோபம் தானே? உங்களுக்கு காதல் வந்திச்சு தானே?

    ReplyDelete
  18. சத்தியா,
    /ம்... பொய் சொல்லாதீங்கோ அருள். இது பொய் கோபம் தானே? உங்களுக்கு காதல் வந்திச்சு தானே?
    /

    வந்துச்சுதான்னு நெனைக்கிறேன் :))

    அன்புடன்,
    அருள்.

    ReplyDelete