~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் முக்கால் வாசி அழகு
ஆடைக்குப் பின்னே மறைந்து கிடக்கிறது.
மீதியும் இப்படி வெட்கத்துக்குப்
பின்னால் ஒளிந்து கொண்டால்
நான் என்ன செய்வது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ ராட்சசி என்றேன் – சிரித்தாய்.
நீ கோபக்காரி என்றேன் – சிரித்தாய்.
நீ அழகி என்றேன் – வெட்கப்பட்டாய்.
உண்மையைச் சொன்னால்தான்
வெட்கம் வருமோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னைப் பார்த்ததும்,
தலை குனிந்து, மெல்ல சிரித்து,
ஓடி ஒளிந்து கொள்கிறது என் காதல்!
அதுவும் அழகாய்த்தான் வெட்கப்படுகிறது…
உன்னைப்போல!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதேச்சையாய்
உன் காதில் என் உதடு படும்போது
உன் கன்னத்தில் பூக்குமே ஒரு வெட்கப்பூ…
அப்போது தானடி புரிகிறது
“எதுவாய் இருந்தாலும் ரகசியமாய் சொல்”
என நீ சொல்வதின் ரகசியம்!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் அண்ணனிடம்
என்னை அறிமுகப் படுத்துகையில்,
என் பெயரைச் சொல்லும்போது
கொஞ்சமாய் வெட்கப்பட்டாயே,
அதுவரை எனக்குத் தெரியாதடி
நீயும் என்னைக் காதலிப்பது!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாம் தனிமையில் இருக்கும்போது
இப்படி இடையில் வந்தமர்கிறதே…
உன் வெட்கத்துக்கு வெட்கமே இல்லையா?
eppadi ayya ungalall ippadi ellam mudigiradgu..neengal priyan and namm naveen moonu perum kadhal kavidaigalil tamilmanathai eppodhum
ReplyDeletesuvrasiya paduthgireergal..valthukal
பின்னறீங்க 50 பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஐம்பது அழகாயிருக்கிறது...!
ReplyDeleteவெட்கம் தொடர வாழ்த்துக்கள் !!!
//நாம் தனிமையில் இருக்கும்போது
ReplyDeleteஇப்படி இடையில் வந்தமர்கிறதே…
உன் வெட்கத்துக்கு வெட்கமே இல்லையா?//
//மீதியும் இப்படி வெட்கத்துக்குப்
பின்னால் ஒளிந்து கொண்டால்
நான் என்ன செய்வது?//
//உண்மையைச் சொன்னால்தான்
வெட்கம் வருமோ?//
வாவ் அருள் ஒரு வெட்க சாம்ராஜ்யமே நடத்திவிட்டீர்கள் :)) உங்கள் கவிதைகளால் காதலுக்கே வெட்கம் வந்துவிடப்போகிறது அருள் பார்த்து ;))
வாழ்த்துக்கள் தொடருங்கள் வெட்கத்தை !!
appu talai kuninthu, mella sirithu, oodi olinthu ragasiyamaai kadalai sonnal yella penkalum vetka padathane seivaargal.
ReplyDeleteungal vetkam --- rasithu sirithen.
todarattum ungal vetkam.
கார்த்திக்,
ReplyDeleteஎனக்கு காதல் கவிதை( மாதிரி எதையாவது ) தான் எழுதத்தெரியும்...
உங்களைப் போல காதலிக்க எல்லாம் தெரியலையே ;))
நன்றி கார்த்திக்!!!
( ஆனால் ப்ரியனும், நவீனும் எழுதுகிற அளவுக்கு நான் இன்னும் வ(ள)ர வில்லை!!! )
குமரன்,
ReplyDeleteவார்த்தைகளப் பின்னி தான கவிதை கோர்க்கனும்!!!
நன்றிங்க உங்களுடைய வாழ்த்துக்கு!!!!
முதல்ல 50வது பதிவுக்குப் பிடிங்க என் வாழ்த்துக்களை.
ReplyDeleteஉங்களுடைய இந்த 50வது பதிவு அசரடிக்கிறது... மெனமையானக் காதல் வரிகளில் மனம் தொடுகிறீர்கள்
கோவி.கண்ணன்,
ReplyDelete/ஐம்பது அழகாயிருக்கிறது...!
வெட்கம் தொடர வாழ்த்துக்கள் !!! /
நன்றி கண்ணன்!!!
வெட்கம் தொடருதோ இல்லையோ காதல் தொடரும் ;))
/வாவ் அருள் ஒரு வெட்க சாம்ராஜ்யமே நடத்திவிட்டீர்கள் :)) /
ReplyDeleteஅட நவீன்,
உங்"கள்" சாம்ராஜ்யத்தை விடவா???
/உங்கள் கவிதைகளால் காதலுக்கே வெட்கம் வந்துவிடப்போகிறது அருள் பார்த்து ;)) /
உங்கள் கவிதைகளால் காதலே இப்போது போதையில் இருப்பதாக கேள்வி! ;)
/வாழ்த்துக்கள் தொடருங்கள் வெட்கத்தை !! /
நன்றி நவீன்...
சுமதி,
ReplyDelete/ungal vetkam --- rasithu sirithen.
todarattum ungal vetkam./
நன்றிகள்...
அம்பதிலும் ஆசை வரும்.. இன்று வெட்கம் வந்தது, இது நாள்வரை காணவில்லையே என்று :)
ReplyDeleteமிகவும் ரசித்தேன் ருசித்தேன் சிரித்தேன்...
ReplyDeleteவெட்கத்தை விட்டு!
அன்புடன்
மிகவும் ரசித்தேன் ருசித்தேன் சிரித்தேன்...
ReplyDeleteவெட்கத்தை விட்டு!
அன்புடன்
ஓசை செல்லா
ஆகா இப்படியெல்லாம் இருந்(திருந்)தா எவ்வளவு நல்லா இருக்கும்னு தோணிச்சு!
ReplyDeleteஒரு சந்தேகம் வெட்கப்படற காதல் பெண்ணை பெண்ணாகவே இருக்க விட்டுக்கீங்களா? இல்லியா?
கற்பனை நல்லா கவிதை எழுத்தா வந்திருக்குங்க அருட் பெருங்கோ. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஹரிஹரன்
குறிப்பு:
ReplyDeleteபயர்பாக்சில் உங்கள் பதிவின் இடுகைத் தலைப்பு(மட்டும்) குழம்பித் தெரிகிறது. உங்கள் டெம்ப்ளேட்டின் ஸ்டைல்ஷீட்டில்
h3.post-title {
margin-top: 0;
font-family: "Lucida Grande", "Trebuchet MS";
font-size: 130%;
letter-spacing: -1px;
color: #f63;
}
இந்த இடத்தில் letter-spacing: -1px; என்ற வரியை நீக்கி விடுங்கள்.
அருட்பெருங்கோ,
ReplyDeleteஅருமை.
//உன் அண்ணனிடம்
என்னை அறிமுகப் படுத்துகையில்,
என் பெயரைச் சொல்லும்போது
கொஞ்சமாய் வெட்கப்பட்டாயே,
அதுவரை எனக்குத் தெரியாதடி
நீயும் என்னைக் காதலிப்பது//
மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
//முதல்ல 50வது பதிவுக்குப் பிடிங்க என் வாழ்த்துக்களை.//
ReplyDeleteநன்றிங்க தேவ்!!!!
//உங்களுடைய இந்த 50வது பதிவு அசரடிக்கிறது... மெனமையானக் காதல் வரிகளில் மனம் தொடுகிறீர்கள் //
உங்கள் பாராட்டும் என் மனம் தொடுகிறது!!!
மணியன்,
ReplyDelete/அம்பதிலும் ஆசை வரும்.. இன்று வெட்கம் வந்தது, இது நாள்வரை காணவில்லையே என்று :) /
ஐம்பதுக்குப் பிறகும் காதல் தொடர வேண்டும்தானே???
காதலும் வெட்கமும் இரட்டைக்குழந்தைகளைப் போல!! ;))
செல்லா,
ReplyDelete//மிகவும் ரசித்தேன் ருசித்தேன் சிரித்தேன்...
வெட்கத்தை விட்டு!
அன்புடன்
ஓசை செல்லா //
தாங்கள் ரசிக்கும்படி என் கவிதை அமைந்ததில் மகிழ்ச்சி!!!
"kaadhalithu par unakkum kavidhai varum" endra vaiyura muthu kavidai paditha podhu kadalikka asai vandhadhu. Anal indha kavidaigal kadhalaiye kadhalikka vaitthu vittadhu. vetkathukkum, kadhalukkum vayadhu yedhu? nenjai thotta kavidaikku nandri arul.
ReplyDeleteஹரிஹரன்,
ReplyDelete/ஆகா இப்படியெல்லாம் இருந்(திருந்)தா எவ்வளவு நல்லா இருக்கும்னு தோணிச்சு!/
:)) எனக்கும் அப்படித் தோணினதாலதான் கவிதையா எழுதிட்டேன்!!!
/ஒரு சந்தேகம் வெட்கப்படற காதல் பெண்ணை பெண்ணாகவே இருக்க விட்டுக்கீங்களா? இல்லியா? /
கற்பனைனு நீங்களே சொல்லிட்டு இப்படி கேட்கலாமா???
/கற்பனை நல்லா கவிதை எழுத்தா வந்திருக்குங்க அருட் பெருங்கோ. வாழ்த்துக்கள்./
ரொம்ப நன்றி ஹரி!!!
குறிப்பிட்டமைக்கு நன்றி வலைஞன்!!
ReplyDeleteஇப்போது சரி செய்து விட்டேன்!!
அருட்பெருங்கோ! அழகான கவிதைகளை இன்றுதான் படித்தேன்...
ReplyDeleteமேலும் நிறைய படிக்க வேண்டும் இது ஒரு உடனடி பதில்மடல்.. வாழ்த்துகள்.
அன்புடன்,
'shy' laja.!
//அருட்பெருங்கோ! அழகான கவிதைகளை இன்றுதான் படித்தேன்...
ReplyDeleteமேலும் நிறைய படிக்க வேண்டும் இது ஒரு உடனடி பதில்மடல்.. வாழ்த்துகள்.//
உடனடி பதில் மடலுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்...
நேரமிருக்கையில் முழுவதும் படியுங்கள்...
//அன்புடன்,
'shy' laja.! //
"shy" , "laj(j)a" - இரண்டுமே வெட்கத்தைத் தானே குறிக்கும்? :)
நல்லா இருக்குதுங்க :)
ReplyDelete/நல்லா இருக்குதுங்க :) /
ReplyDeleteநன்றி சேதுக்கரசி!!!
//மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
ReplyDelete50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். //
பாராட்டுக்கும் , வாழ்த்துக்கும் தாமதமான(:() நன்றிகள் வெற்றி!!!