Monday, August 14, 2006

இதயத்தின் எடை 50300 கிராம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன்னால் தானடி நேர்முகத்தேர்வில்
நான் தோற்றுப் போனேன்!
அவன் உலக அழகி பெயர் கேட்டான்,
நான் உன் பெயரை சொல்லித் தொலைத்தேன்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மௌனத்தோடு மட்டுமேப்
பேசிக்கொண்டிருந்த என்னை
மரத்தோடு கூடப் பேச வைத்தவள் நீ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புத்தகத்தில்,கடிதத்தில்,
மின்மடலில் தான்
கவிதைகள் வரும்!
இப்படி சுடிதாரில் கூட
வருமா என்ன?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் எழுதியனுப்பியக்
கவிதையெல்லாம் அழகு என்றாய்!
அழகி, உன்னைப் பற்றி
எழுதியவை பின் எப்படியிருக்குமாம்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலா, பூமியைச் சுற்றுகிறதா?
அடிப்பாவி, பூமியில் இருக்கும் உன்னைத் தானே
அது ஓயாமல் சுற்றுகிறது!
என்னைப் போல..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொதுவாய்
இதயத்தின் எடை
300 கிராமாம்.
என்னுடையது
ஒரு 50000 கிராம்
அதிகமாக இருக்கும்!

23 comments:

  1. அழகான வரிகள்

    அனுபவித்து எழுதியது என நினைக்கிறேன்

    ReplyDelete
  2. ---புத்தகத்தில்,கடிதத்தில்,
    மின்மடலில் தான்
    கவிதைகள் வரும்!
    இப்படி சுடிதாரில் கூட
    வருமா என்ன?----

    அழகு...

    அது சரி...ஏதாச்சி காத்து கருப்பு அடிச்சிருச்சோ??

    ReplyDelete
  3. நன்றி சிவாஜி...

    முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்...

    ReplyDelete
  4. அனைத்து கவிதைகளும் அருமை!
    ரசித்தி எழுதி உள்ளீர்கள்!
    நானும் ரசித்துப் படித்தேன்,
    மிகவும் நல்லா இருக்கு நண்பா!

    தொடர்ந்து பதிவிடுங்கள்! வாழ்த்துக்கள்!!!


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  5. srivats,

    /அழகான வரிகள்/
    மிக்க நன்றி, அழகான பாராட்டுக்கு..

    /அனுபவித்து எழுதியது என நினைக்கிறேன்/

    அனுபவித்து எழுதியதுதான் , ஆனால் கற்பனையில்!!!

    ReplyDelete
  6. great ...
    so impressive...
    prakash

    ReplyDelete
  7. //புத்தகத்தில்,கடிதத்தில்,
    மின்மடலில் தான்
    கவிதைகள் வரும்!
    இப்படி சுடிதாரில் கூட
    வருமா என்ன?//

    அழகு மிக அழகு அருள் :))

    ReplyDelete
  8. சுதர்சன்,

    /அழகு.../
    நன்றிங்க...

    /அது சரி...ஏதாச்சி காத்து கருப்பு அடிச்சிருச்சோ?? /

    ஹி..ஹி.. ;)))

    ReplyDelete
  9. சரவணன்,

    /அனைத்து கவிதைகளும் அருமை!
    ரசித்தி எழுதி உள்ளீர்கள்!
    நானும் ரசித்துப் படித்தேன்,
    மிகவும் நல்லா இருக்கு நண்பா!/

    ரொம்ப நன்றி நண்பா...

    /தொடர்ந்து பதிவிடுங்கள்!/

    கண்டிப்பாக...




    /

    ReplyDelete
  10. நன்றாக ஊள்ளது. ரசித்து எழுதி உள்ளீர்கள்.

    ReplyDelete
  11. பிரகாஷ்,

    வாசிச்சதுக்கும், வாழ்த்தினதுக்கும் நன்றிங்க!!!

    ReplyDelete
  12. yal ahathian,

    /arul
    uannai -kavijan- akkiyathu -yaaroo-
    awalukku -nanum -nanry- solkeren/

    அப்படின்னா காதலுக்குதான் நன்றி சொல்லனும்!!! ;))

    //unmaijil- arul -mikavum -nalla -iruku- nanriyudan -yal_ahathian //

    நன்றிங்க...

    ReplyDelete
  13. நவீன்,

    /அழகு மிக அழகு அருள் :)) /

    உங்களுக்குத் தெரியாத சுடிதார் கவிதையா??? ;))

    ReplyDelete
  14. ஆராதனா,

    /நன்றாக ஊள்ளது. ரசித்து எழுதி உள்ளீர்கள். /

    நன்றிகள் ஆராதனா... ரசித்துப் படித்திருப்பீர்கள் என்று நானும் நம்புகிறேன்...

    ReplyDelete
  15. delphine,

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றிகள்...

    ReplyDelete
  16. கவிதை
    அருமையாக உள்ளது
    நன்றி

    ReplyDelete
  17. beautiful lines..enjoyes a lot

    ReplyDelete
  18. Very Beautiful...

    ReplyDelete
  19. /கவிதை
    அருமையாக உள்ளது
    நன்றி /

    வாங்க மின்னுது மின்னல்....

    உங்கப் பேரும் அருமையாதாங்க இருக்கு...

    வாழ்த்தியதற்கு நன்றி!!!!

    ReplyDelete
  20. //beautiful lines..enjoyes a lot //

    அனானி யாராக இருந்தாலும் பாராட்டியதற்கு நன்றிங்க :))

    ReplyDelete
  21. //Very Beautiful... //

    நன்றி நிரஞ்சனா!!!

    ReplyDelete