Tuesday, August 08, 2006

என்னப் பார்வையடி அது?


உன்னைச் சந்தித்தால் பேசுவதற்கு
லட்சம் வார்த்தைகளைக்

கோர்த்து வைத்திருந்தேன்!
நீ பார்த்த ஒற்றைப் பார்வையில்
ஒவ்வொன்றாய் நழுவி

எஞ்சியிருந்த ஒரே வார்த்தை –“மௌனம்”
என்னப் பார்வையடி அது?


அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

20 comments:

  1. //ஒவ்வொன்றாய் நழுவி எஞ்சியிருந்த ஒரே வார்த்தை –“மௌனம்” //

    அப்புறம் “மௌனம்”பேசியதா அருள்?

    ReplyDelete
  2. அருமையான கவிதை,

    //எஞ்சியிருந்த ஒரே வார்த்தை –“மௌனம்”
    என்னப் பார்வையடி அது?//

    அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள்.
    வாழ்த்துக்கள்...

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  3. நவீன்,

    /:) அழகு அருள் !/

    நன்றிகள் பல..

    (உண்மைய சொல்லுங்க! நீங்க அழகு னு சொன்னது கவிதையையா? இல்ல புகைப்படத்தையா? ;) )

    ReplyDelete
  4. ராஜா,

    /அப்புறம் “மௌனம்”பேசியதா அருள்? /

    மௌனம் கண்டிப்பாய் என்றாவது ஒருநாள் உடைபடத்தானே வேண்டும்?

    நன்றி ராஜா...

    ReplyDelete
  5. /அருமையான கவிதை,

    அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள்.
    வாழ்த்துக்கள்...
    /

    நன்றி சரவணன்...வருகைக்கும் வாழ்த்துக்கும்!!!

    ReplyDelete
  6. தேவ்,

    இப்படி வெறுமனே சிரிச்சா என்ன அர்த்தம்?

    நல்லா இருக்குன்னு சிரிக்கிறீங்களா? இல்ல நக்கலுக்கு சிரிக்கிறீங்களா? ;)

    ReplyDelete
  7. yarumey kadasi varai pesa maatangala..illai neenga than ippadi eludhrerengalannu theriyalaiu

    ReplyDelete
  8. //(உண்மைய சொல்லுங்க! நீங்க அழகு னு சொன்னது கவிதையையா? இல்ல புகைப்படத்தையா? ;) )//

    ரெண்டு கவிதையையும்தான் சொன்னேன் அருள் ;)))))

    ReplyDelete
  9. கார்த்திக்,

    முதலில் வருகைக்கு நன்றி!!

    /yarumey kadasi varai pesa maatangala..illai neenga than ippadi eludhrerengalannu theriyalaiu /

    கண்ணுலயாவது பேசிக்குவாங்கனுதான் நானும் நெனைக்கிறேன்...

    அட காதலிக்கிறவங்க யாராவது சொல்லுங்களேம்ப்பா!!!

    ReplyDelete
  10. நவீன்,

    /ரெண்டு கவிதையையும்தான் சொன்னேன் அருள் ;))))) /

    ம்ம்ம்...ரசனையுள்ள ஆள்தான் நீங்க!!!! :))

    ReplyDelete
  11. அருட்பெருங்கோ,
    அருமை. நல்ல கவிதை. இப்படியான அனுபவம் எனக்கு நேர்ந்திருந்ததாலோ என்னவோ, இக் கவிதையைப் படித்துச் சுவைத்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. வெற்றி,

    /அருமை. நல்ல கவிதை. /

    நன்றிங்க...

    /இப்படியான அனுபவம் எனக்கு நேர்ந்திருந்ததாலோ என்னவோ, இக் கவிதையைப் படித்துச் சுவைத்தேன்./

    அதான் பேர்லேயே வெற்றி வச்சிருக்கீங்களே!!!
    எல்லாரும் நல்லா இருங்கப்பா ;)))

    ReplyDelete
  13. ஓ!... அழகான பார்வை அதற்கேற்ற கவிதை. ம்... இரண்டும் அற்புத்ஹமே.

    வாழ்த்துக்கள் அருள்.

    ReplyDelete
  14. /ஓ!... அழகான பார்வை அதற்கேற்ற கவிதை. ம்... இரண்டும் அற்புத்ஹமே.

    வாழ்த்துக்கள் அருள்./

    நன்றி சத்தியா...

    ( இரண்டில் ஒரு அற்புதம் மட்டுமே என்னுடையது ;)) )

    ReplyDelete
  15. //ஒவ்வொன்றாய் நழுவி
    எஞ்சியிருந்த ஒரே வார்த்தை –“மௌனம்”//

    மௌனம் பேசியதே...குளிர் தென்றல் வீசியதே...

    அப்புறம் அது "என்ன பார்வையடி அது?" என்று தானே வரணும் ??

    (ஹி..ஹி...பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கட்கு மத்தியில் யாம் பிழைகள் கண்டுபிடித்து பெயர் வாங்க முயற்சிப்பவர்)

    ReplyDelete
  16. சுதர்சன்,

    //மௌனம் பேசியதே...குளிர் தென்றல் வீசியதே...//

    யாருக்கு??? ;))

    //அப்புறம் அது "என்ன பார்வையடி அது?" என்று தானே வரணும் ??

    (ஹி..ஹி...பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்கட்கு மத்தியில் யாம் பிழைகள் கண்டுபிடித்து பெயர் வாங்க முயற்சிப்பவர்)//

    கவிதையில் பிழையிருக்கலாம், காதலில் பிழையிருக்கக்கூடாது என்று நம்புகிறவன் நான்!!!

    (ஹி..ஹி..எப்படி சமாளிச்சுட்டேன் பாத்தீங்களா??)

    ReplyDelete
  17. mounam kooda mounamaaga yetrukolla pattdha? kaadalil mounam kooda oruvidha azhgutaan.

    ReplyDelete
  18. /mounam kooda mounamaaga yetrukolla pattdha? kaadalil mounam kooda oruvidha azhgutaan. /

    அந்த நம்பிக்கையில் தானே கவிதைகள் எழுதப் படுகின்றன...

    மௌனம் அழகுதான் ஆனால் ஆபத்தான அழகு!!!!

    ReplyDelete