Tuesday, August 22, 2006

கொலுசே...கொலுசே... - 3

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசே... கொலுசே... - 1

கொலுசே... கொலுசே... - 2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வாசலில் பாண்டியாடும்போது கொலுசின்
திருகாணி தொலைந்ததால் அழுதுவிட்டாய் நீ!
தேடித் தேடித் தெருவையே உழுதுவிட்டேன் நான்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கொலுசுக்கும், தங்கக்கொலுசுக்கும்,
என்ன வித்தியாசம்? என்றாய்.
உன் கலகல சிரிப்புக்கும், அமைதியானப் புன்னகைக்கும்,
என்ன வித்தியாசம்? என்றேன்!
அமைதியாகப் புன்னகைத்து விட்டுப் போனாய்!
நீ தங்கக் கொலுசுக்கு மாறவிருப்பதை சொல்லாமல் சொல்லி…

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் பழையக் கொலுசு உனக்கெதற்கு? என்கிறாய்.
நான் கலைப் பொருட்கள் சேகரிப்பது உனக்குத் தெரியாதா?
‘தேவதை அணிந்த கொலுசு’ என்று பத்திரப் படுத்தத்தான்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ ஜீன்ஸ் அணியும்போது கொலுசைக் கழற்றி வைத்துவிடுவாயோ?
உன் புடவையிடம் புலம்பிக் கொண்டிருக்கிறது உன் கொலுசு!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீ நடந்து வரும்போது உன் கொலுசின் இசையைக் கேட்க
என் இதயத்தின் ‘லப் டப்’ ஓசை இடையூறாய் இருக்கிறதாம்…
துடிப்பதை நிறுத்த சொல்லி சண்டையிடுகிறது என் செவி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சத்தம் போட்டபடி உன் காலடியில் துள்ளுகிறது உன் கொலுசு!
சத்தமில்லாமல் என் மனசடியில் கொல்லுகிறது என் காதல்!

7 comments:

  1. //வாசலில் பாண்டியாடும்போது கொலுசின்
    திருகாணி தொலைந்ததால் அழுதுவிட்டாய் நீ!
    தேடித் தேடித் தெருவையே உழுதுவிட்டேன் நான்!//

    அருள்.ஆரம்பமே அருமை.அனைத்து
    கவிதைகளும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  2. மிகவும் நன்றாக இருக்கிறது.

    இப்போது தான் தெரிகிறது. "ஆர்யா" படத்தில் கொலுசுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுத்தாங்கன்னு.

    ReplyDelete
  3. எல்லாம் அழகான கவிதைகள் அருள். ஆனாலும்...

    "வாசலில் பாண்டியாடும்போது கொலுசின்
    திருகாணி தொலைந்ததால் அழுதுவிட்டாய் நீ!
    தேடித் தேடித் தெருவையே உழுதுவிட்டேன் நான்!"...

    இந்தக் கவிதையை மிகவும் ரசித்தேன்.
    பாராட்டுங்கள் அருள்!

    ReplyDelete
  4. துபாய் ராஜா,

    /அருள்.ஆரம்பமே அருமை.அனைத்து
    கவிதைகளும் நன்றாக உள்ளது. /

    நன்றி நண்பா...

    உங்க கொலுசுக்கதையையும் கொஞ்சம் எடுத்து விடுங்க ;))

    ReplyDelete
  5. /மிகவும் நன்றாக இருக்கிறது./

    மிகவும் நன்றி மணி!!!

    /இப்போது தான் தெரிகிறது. "ஆர்யா" படத்தில் கொலுசுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுத்தாங்கன்னு. /

    அப்படியா?? அந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கலையே :((

    ReplyDelete
  6. காண்டீபன்,

    //கொலுசும் கவிதைகளும்
    மிகவும் நன்றாக இருக்கிறது.//

    முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா!

    ReplyDelete
  7. சத்தியா,

    /எல்லாம் அழகான கவிதைகள் அருள். ஆனாலும்...

    "வாசலில் பாண்டியாடும்போது கொலுசின்
    திருகாணி தொலைந்ததால் அழுதுவிட்டாய் நீ!
    தேடித் தேடித் தெருவையே உழுதுவிட்டேன் நான்!"...

    இந்தக் கவிதையை மிகவும் ரசித்தேன்.
    பாராட்டுங்கள் அருள்! /

    நன்றி சத்தியா...

    ReplyDelete