நம் இருசாதிக் குடும்பத்துக்கும் இடையே
ஒரு சமாதானக் கொடியாய்ப் பறக்கும் என்று நினைத்திருந்தேனே!
வெள்ளை நிறத்தில் இருந்ததோ என் காதல்?
உன்னிடம் சொல்லிவிடத் துடித்த போதெல்லாம்
ஓடி ஒடி ஒளிந்து கொண்டதே!
அப்படி வெட்கப் பட்டு வெட்கப்பட்டு சிவந்து கிடந்ததோ என் காதல்?
எப்போதும் உன்னுடைய நினைவுகளை மட்டுமேப்
பசுமையாய் சுமந்து திரிந்ததே!
ஒரு வேளை பச்சை நிறமாய் இருந்ததோ என் காதல்?
உன் காதல் எவ்வளவு பெரியது என்று கேட்டவர்களிடமெல்லாம்
வானைப் போலப் பரந்தது என்பேனே!
நீல நிறமாயிருந்ததோ என் காதல்?
உன்னைப் பார்த்துப் பிறந்ததுதானே என் காதலும்?
ஒருவேளை உன்னைப் போல அதுவும் பொன்னிறமோ?
உன்னிடம் என் காதலைச் சொல்லும் வரை
அது எந்த நிறமென எனக்கும் சந்தேகம்தான்…
ஆனால் உன்னிடம் சொல்லியபின்தான்
நீ மறுத்துவிட்ட துக்கத்தை சுமந்து
எப்போதும் கருப்பாய்த் திரிகிறதடி என் காதல்!
என்னைப் போல…
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
மஞ்சள் நிறத்தையும் ஆட்டத்துல சேத்துக்குங்க அருள்...
ReplyDelete:))
ரவி,
ReplyDeleteகவிதை மங்களகரமா இருக்கனும்னு சொல்ல வர்றீங்க..
புரியுது புரியுது :))
அருள்,மொத்ததில் வானவில் போல்
ReplyDeleteமிளிர்கிறது கவிதை.
நிஷானி,
ReplyDeleteகாதல் தோல்வி பற்றி கவிதை எழுதினால் உடனே அனுபவமா என்று கலாய்ப்பதா?
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ;)
துபாய் ராஜா,
ReplyDeleteகவிதையைப் போல காதலும் வானவில்லாய் மிளிர்ந்தால் மகிழ்ச்சி!!
sowatbhappy,(எங்க இருந்துய்யாப் புடிக்கிறீங்க இந்த மாதிரி பேரெல்லாம்?)
ReplyDeleteவாசித்ததுக்கும், பாராட்டியதற்கும் நன்றிங்க....
Kavalaipadathinga arut
ReplyDeleteKarusiruthaigal eppavaum gannunu nikkanum!!!!
:)
/Kavalaipadathinga arut
ReplyDeleteKarusiruthaigal eppavaum gannunu nikkanum!!!!
:) /
என்னது கருஞ்சிறுத்தையா??? என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணலையே???
எந்த சிறுத்தையா இருந்தாலும் காதல் வந்துட்டா கன்னுனு நிக்க முடியாது "கண்ணே" ன்னு தான் நிக்கனும் ;))
ஆனால் உன்னிடம் சொல்லியபின்தான்
ReplyDeleteநீ மறுத்துவிட்ட துக்கத்தை சுமந்து
எப்போதும் கருப்பாய்த் திரிகிறதடி என் காதல்!
என்னைப் போல…
காதல் எப்பொளுதும் வெண்மையானது.. சுத்தமானது..வெளுத்துவிட்டீர்கள்....
ஆராதனா,
ReplyDelete//காதல் எப்பொளுதும் வெண்மையானது.. சுத்தமானது..//
முற்றிலும் உண்மையே...
//வெளுத்துவிட்டீர்கள்.... //
நன்றிகள் !!!
unga kavidhai pachai niramey paatoda second partaa..
ReplyDeletemigavum azhagaaga ullathu..
mannichukkonga arul.. ithuthaan naalaiku en kaadhalikku naan eluthanatha kodukka pora kavidhai..
//unga kavidhai pachai niramey paatoda second partaa..
ReplyDeletemigavum azhagaaga ullathu..//
நன்றி செந்தில்!!!
//mannichukkonga arul.. ithuthaan naalaiku en kaadhalikku naan eluthanatha kodukka pora kavidhai.. //
ம்ஹும்... அங்கேயும் இதே நிலைதானா??? :((