Monday, August 21, 2006

கொலுசே...கொலுசே... - 2

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கொலுசு அணியாத உன் கால்…
கவிதை சூடாத காதல் போல!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஊடல் நேரங்களில்
என்னிடம் பேசுவதைத் தடுக்கும் உன் கோபம்.
ஆனாலும் கொலுசொலி மூலமாகத் தூது விடும் உன் காதல்!
கொலுசைக் கண்டு பிடித்தவளு/னுக்குக் கோவில் தான் கட்ட வேண்டும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பள்ளி விடுமுறையில்
எந்த இசைப்பயிற்சிக்கு போகலாம்?
என்று கேட்கும் என் தங்கையிடம்,
உன்னைப்போல கொலுசில்
இசைக்கக் கற்றுக்கொள்
என்று எப்படி சொல்வது?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தெத்துப்பல் தெரிய சிரிக்கிறாய் நீ!
முத்துக்கள் அதிர சிரிக்கிறது உன் கொலுசு!
என்னைக்கொல்ல எதற்கிந்த இருமுனைத் தாக்குதல்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெள்ளிக்கொலுசு கறுத்துப் போகுமாம்.
உன் கொலுசு பொன்னிறமாகத்தான் மாறும்!
அணிந்திருக்கும் கால் அப்படி!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குளிக்கும்போது கொலுசைக் கழற்றிவைத்து விட்டுக் குளி!
நீ குளித்த நீர் பட்டு உன்னைவிட அழகாகிவிடப் போகிறது உன் கொலுசு!

11 comments:

  1. //தெத்துப்பல் தெரிய சிரிக்கிறாய் நீ!
    முத்துக்கள் அதிர சிரிக்கிறது உன் கொலுசு!
    என்னைக்கொல்ல எதற்கிந்த இருமுனைத் தாக்குதல்?//

    //அணிந்திருக்கும் கால் அப்படி!//

    உங்கள் ரசணை அழகு அருள் ! கொல்லும் கொலுசு !! :))

    ReplyDelete
  2. அருள்,அனைத்துமே அருமை.

    //ஊடல் நேரங்களில்
    என்னிடம் பேசுவதைத் தடுக்கும் உன் கோபம்.
    ஆனாலும் கொலுசொலி மூலமாகத் தூது விடும் உன் காதல்!//

    அந்த காட்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதால் இது மிகவும் அருமை.

    ReplyDelete
  3. அருமையான கற்பனை!வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. "தெத்துப்பல் தெரிய சிரிக்கிறாய் நீ!
    முத்துக்கள் அதிர சிரிக்கிறது உன் கொலுசு!
    என்னைக்கொல்ல எதற்கிந்த இருமுனைத் தாக்குதல்?"...

    சும்மா சொல்லக் கூடாது அருள்.
    கொலுசு ரொம்பத்தான் உங்களை கொல்லுது.

    பாராட்டுக்கள் அருள்!

    ReplyDelete
  5. நவீன்,

    /உங்கள் ரசணை அழகு அருள் ! கொல்லும் கொலுசு !! :)) /

    கொலுசு அணிகலனா இல்லை ஒரு கொலைகருவியா என்றுதான் தெரியவில்லை!!! ;))

    ReplyDelete
  6. /அருள்,அனைத்துமே அருமை./

    நன்றி ராஜா...

    /அந்த காட்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதால் இது மிகவும் அருமை. /

    தங்கள் அனுபவத்தைக் கண் முன் கொண்டு வந்து விட்டதோ??? ;)பாராட்டுக்கு மிகவும் நன்றி!!!

    ReplyDelete
  7. கார்த்திக்,

    /thalaivare kalakl ponga..eppadinga idhelam /

    என்னமோ கற்பனையிலேயேக் காலத்தை ஓட்ட வேண்டியதுதான்!!!

    ReplyDelete
  8. தமிழ்ப்பிரியன்,

    /அருமையான கற்பனை!வாழ்த்துக்கள் /

    வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி!!!

    ReplyDelete
  9. sowatbehappy,

    /superb!!! ella varigalum inimaiya irku padikka, ungal rasanayai polave.. /

    மிகவும் நன்றிகள்...

    ReplyDelete
  10. //சும்மா சொல்லக் கூடாது அருள்.
    கொலுசு ரொம்பத்தான் உங்களை கொல்லுது. //

    :(( ஆமாங்க!!

    //பாராட்டுக்கள் அருள்! //

    :)) நன்றிகள்!!!

    ReplyDelete