~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவிழாவின் அத்தனைக் கொலுசு சத்தத்திலும்
எனக்கு மட்டும் தனியாகக் கேட்கும்
உன் கொலுசின் இசை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு.
கொலுசே...கொலுசே... - 2
நன்றாக இருக்கிறது கொலுசு கவிதை.
ReplyDelete//உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
ReplyDeleteஎனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!//
அனுபவித்து எழுதியிருப்பீர்கள் போலிக்கிறது அருள் ?;)) மனசுக்குள் ஜல்ஜல்...
//கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
ReplyDeleteதெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!//
இது ரொம்ப அருமையா இருக்குங்க, படிக்கும்போதே உணர்வுகளை தூண்டற மாதிரி இருந்தது.
அமுதன்,
ReplyDelete/நன்றாக இருக்கிறது கொலுசு கவிதை. /
பாராட்டியதற்கு ரொம்ப நன்றிங்க அமுதன்...
"வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
ReplyDeleteஉனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!...
மனதொன்றின் ஆழமான ஏக்கம்தான். அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.
பாராட்டுக்கள் அருள்.
நவீன்,
ReplyDelete/அனுபவித்து எழுதியிருப்பீர்கள் போலிக்கிறது அருள் ?;)) /
நீங்களும் இதையேதான் கேட்கறீங்க...நானும் அதையேதான் சொல்றேன்...கற்பனை...கற்பனையைத் தவிர வேறில்லை!!! ;)))
/மனசுக்குள் ஜல்ஜல்... /
அந்த ஜல்ஜல் யாருங்கோ??? (ஏதோ நம்மப் பங்குக்கு ஒரு கேள்வி!)
தம்பி,
ReplyDelete/இது ரொம்ப அருமையா இருக்குங்க, படிக்கும்போதே உணர்வுகளை தூண்டற மாதிரி இருந்தது. /
அப்படியா? மிக்க மகிழ்ச்சி!!!
பாராட்டியமைக்கு ரொம்ப நன்றிங்க...
சத்தியா,
ReplyDelete/மனதொன்றின் ஆழமான ஏக்கம்தான். /
:)))
/அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.
பாராட்டுக்கள் அருள். /
நன்றி சத்தியா...
/* கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
ReplyDeleteஅதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு */
/* கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ! */
மிகவும் ரசித்த வரிகள் .... வாழ்த்துக்கள் ...
./பழனி
very nice work.. all works are excellent .. shows a lot of feelings.. i feel some kind of thabhu shankar style .. am i right..!!!
ReplyDeleteபழனி,
ReplyDelete/மிகவும் ரசித்த வரிகள் .... வாழ்த்துக்கள் ... /
ரசித்து வாசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!!!!
முத்து,
ReplyDelete/very nice work.. all works are excellent .. shows a lot of feelings.. i feel some kind of thabhu shankar style .. am i right..!!! /
உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றிகள்!!!
தபூசங்கர் பாதிப்பு இல்லாமல் காதல் கவிதை எழுதவரவில்லையே என்ன செய்ய? அவருடையக் கவிதைகளை அதிகமாய் நான் ரசிப்பது காரணமாய் இருக்கலாம்...
//மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
ReplyDeleteமெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!//
ரசித்த வரிகள் :-) (ரொம்ப நாள் முன்னாடியே படிச்சிருக்கேன்.. ப்ரியன் அனுப்பியிருக்கார் :-))
En kadhaliku golusu vanga kelabbiten........Pena la ink irukkaa...illa Adilayum kadhal dhana......Unga kadhali kuduthu vaithaval !!
ReplyDeleteவாங்க கவிதை ப்ரியன்,
ReplyDelete/En kadhaliku golusu vanga kelabbiten........Pena la ink irukkaa...illa Adilayum kadhal dhana....../
நல்லது :) பேனாவெல்லாம் ஏதுப்பா? எல்லாம் இ-கலப்பை தான் ;)
/Unga kadhali kuduthu vaithaval !!/
அது அவங்கதான சொல்லனும் ;)
எல்லாமே சூப்பர் !
ReplyDelete/ எல்லாமே சூப்பர் !/
ReplyDeleteநன்றிங்க கோவி!
Very nice Poems, felt like an early morning gentle breeze's touch.
ReplyDeleteSrividhya
/Very nice Poems, felt like an early morning gentle breeze's touch.
ReplyDeleteSrividhya/
பாராட்டுக்கு நன்றிங்க ஸ்ரீவித்யா!!!