சித்திரை ஒன்று முதல் வேர்ட்பிரசில் பதியவேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. 2007 ஜனவரியில் google apps மூலமாக enom நிறுவனத்திடம் arutperungo.com தள முகவரியை பதிவு செய்துகொண்டு பிளாக்கரிலேயே பதிவெழுதிக்கொண்டு வந்தாலும், துவக்கம் முதலே வேர்ட்பிரஸ் மீது ஒரு காதல் இருந்தது. வேர்ட்பிரசுக்கு மாறவேண்டுமானால் சொந்தமாக வலையிடமும் இருக்க வேண்டும். அதற்கு ஆண்டுக்கு 3000 ரூபாய் செலவு செய்வது, மொக்கை கவுஜையெழுதும் நமக்கு கொஞ்சம் அதிகம் (கொஞ்சமா? அதிகமா?) என்று தோன்றியதால் அந்த காதல் அப்படியே காணாமல் போனது.
அண்மையில் நண்பனொருவன் dreamhost வழங்கும் promo code குறித்து சொல்லவும் அதைப்பார்த்தால், கழிவுகள் போக அதுவும் கிட்டத்தட்ட அதே செலவுதான் வந்தது. ஆனாலும் விளம்பரம் மூலம் இந்த செலவை ஈடுகட்ட முடியுமா என்று சோதித்து பார்க்க வலைப்பதிவில் விளம்பரங்கள் போட்டுப்பார்த்ததில் மாதம் இருநூறு ரூபாய் வந்தது. கணக்கு சரியாக இருக்குமென விளம்பரங்கள் மீது பாரத்தைப் போட்டு வலையிடமும் வாங்கிவிட்டேன்.
enom இடமிருந்து dreamhost க்கு தள முகவரியை மாற்றிக்கொள்ள ஐந்து நாட்களானது. அந்த சமயத்தில் dreamhostஇன் உதவி சேவை மிகச்சிறப்பாக இருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். எல்லா சந்தேகங்களுக்கும் அவர்களிடமிருந்து உடனடி பதில் மடல் கிடைத்தது.
dream host இல் வேர்ட்பிரஸ் நிறுவிக்கொள்வதும் எளிது. பொதுவாக வலையிட வழங்கிகள் தரும் cpanel வசதி இல்லையென்றாலும், அது மாதிரியான ஒரு panel முகப்பு dreamhost இல் உண்டு! மேகி நூடுல்ஸ் மாதிரி இரண்டே நிமிடத்தில் வேர்ட்பிரஸ் 2.5 நிறுவிக்கொள்ளலாம்.
முதலில் பரிசோதனைக்காக தற்காலிகமாக ஒரு தள முகவரியில் நிறுவிக்கொண்டு பிளாக்கரிலிருந்து வேர்ட்பிரசுக்கு பதிவுகளை இறக்கிப்பார்த்தேன். கரையோரத்தென்றல் பதிவுகள் ஒரு நிமிடத்தில் வேர்ட்பிரசுக்கு வந்துவிட்டன. அதே நம்பிக்கையில் அமராவதி ஆத்தங்கரை பதிவுகளை இறக்கினால், அப்போது வந்தது பிரச்சனை!
24 பதிவுகளை இறக்கியதும் வேர்ட்பிரஸ் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு மேல் நகரவில்லை. உதவி மன்றங்களில் தேடிப்பார்த்ததில் பதிவின் தலைப்பில் special character (தமிழில்?) இருந்தால் வேர்ட்பிரஸ் கோபித்துக்கொள்ளும் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்படி அந்த 25 –வது பதிவுக்கு என்னதான் தலைப்பு கொடுத்திருந்தேன் என்று பார்த்தால் நானும் ஒரு தெலுங்குப்படமும் – 2 என்று தான் கொடுத்திருந்தேன். இதில் எதுவும் special character இல்லையென்றாலும், தலைப்பில் அந்த ‘- 2’ என்பதை நீக்கினாலும் வேலை செய்யவில்லை. கடைசி முயற்சியாக பிளாக்கரிலிருந்து அந்த பதிவையே தூக்கிவிட்டு முயற்சி செய்தபோது 24 ஐ கடந்துபோனது! மகிழ்ச்சியில் விசிலடிக்க விரலெடுக்கும்போதே 59 வது பதிவில் மீண்டும் வேர்ட்பிரஸ் களைப்படைந்து விட்டது. 60 வது பதிவு என்னவென்று பார்த்தால் ‘அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு - 2’ இருந்தது. அநேகமாக என் கதைகளின் இரண்டாம் பாகம் மட்டும் வேர்ட்பிரசுக்கு பிடிக்கவில்லையென்று நினைக்கிறேன்.
உதவி கேட்டு வேர்ட்பிரஸ் கொ.ப.செ. வுக்கு ஒரு மடலனுப்பினேன். அவரும் நிறைய நேரம் போராடி பார்த்து விட்டு என்ன பிரச்சனையென்று புரியவில்லையே என்று வருத்தப்பட்டார். பாவம் வேர்ட்பிரசுக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாதே என்கிற கவலையும் அவருக்கு :) அப்படியே வேர்ட்பிரசுக்கு பிடிக்காத பதிவுகளையெல்லாம் நீக்கி கொண்டே வந்ததில் கடைசியாக 7 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தேன் ;) (7 பதிவுகள் நீக்கி 192 பதிவுகளை கடத்த முடிந்தது!)
ஆரம்பகட்ட சந்தேகங்களுக்கு ரவியின் விளக்கங்கள் உதவியாக இருந்தன. ஓரளவுக்கு பழக்கமானதும் நீட்சிகளைத் தேடி பயன்படுத்திப்பார்க்க ஆரம்பித்தேன். இந்த பதிவில் பயன்படுத்தப்படும் நீட்சிகளின் பட்டியல் Links என்று பக்கப்பட்டியில் உள்ளது.
அதில் எனக்கு மிகவும் பிடித்தது, Simple pie நீட்சியே. அதைப்பயன்படுத்தி உருவாக்கியதே பதிவகம். இதை செய்யும் வழிமுறையும் ரவி மன்றத்தில் இருக்கிறது.
இதுக்கு மேலயும் செய்தி வாசிக்கிற மாதிரியே என்னால பேச முடியலங்க. எப்பவும் போல பேசுவோம். வேர்ட்பிரசுக்கு மாறினதுல நான் பட்டு தெரிஞ்சிகிட்டது :
- பிளாக்கர்ல இருந்து வேர்ட்பிரசுக்கு மாறுவதா இருந்தா தள முகவரி, வலையிடம் ரெண்டுமே ஒன்னா வாங்கிட்டு மாறிக்கனும். முதல்ல தள முகவரி மட்டும் சொந்தமா வச்சிகிட்டு ரொம்ப நாளைக்கு பிளாக்கர் சேவையவே பயன்படுத்தவேணாம். பின்னாடி வேர்ட்பிரசுக்கு மாறும்போது இதுல கொஞ்சம் பிரச்சனையிருக்கு.
- ஒவ்வொரு இடுகைக்கும் இருக்கிற PermaLink பிளாக்கர்ல ஒருமாதிரியும் வேர்ட்பிரஸ்ல வேற மாதிரியும் இருக்கும். பிளாக்கர்ல இருந்த அதே permalink வச்சிக்க ஒரு நீட்சி இருந்தாலும் அதுவும் குழப்பம் பண்ணிடுது. ரெண்டு இடுகைக்கு ஒரே permalink கொடுத்து வச்சிடுது :(
- நீட்சி, வார்ப்புரு ன்னு எதுவா இருந்தாலும் முதல்ல பரிசோதிக்க நிரந்தரமா ஒரு தள முகவரி (testing.arutperungo.com மாதிரி ) வச்சிக்கிறது நல்லது. அதுல ஒழுங்கா வேல செஞ்சுதுன்னா அப்பறமா உண்மையான தளத்துல பயன்படுத்திக்கலாம். (UAT – Production environment மாதிரி!)
- உங்க பதிவ ஓடை மூலமா நெறைய பேர் வாசிக்கிறாங்கன்னா ஓடை மாறும்னு முன்னாடியே அறிவிப்பு கொடுத்துடறது நல்லது. ( Google reader மூலமா என்னோட பதிவ வாசிச்சுட்டு இருந்தவங்க 100க்கும் அதிகமானவங்க இன்னும் ஓடை முகவரிய மாத்திக்காம இருக்காங்க! )
இப்போதைக்கு இந்த மொக்க போதும். வேர்ட்பிரஸ் ஒரு கடல் மாதிரி கெடக்கு. இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுட்டு அப்பறமா வர்றேன்!
அடேங்கப்பா, தொழில்நுட்பப் பதிவா? ம்ஹீம், படிச்சு முடிக்கும்போது எனக்கே டயர்ட் ஆகிருச்சு. யாருப்பா, ஒரு சோடா குடுங்க
ReplyDelete:-)naan than first comment-a..?!?
ReplyDelete@பிரேம்குமார்,
ReplyDeleteதல, உண்மைய சொன்னா இதுல ஒரு நுட்பமும் கிடையாது. எல்லா தகவலும் இணையத்துல தேடினா கிடைக்கும். என்ன, முதல் முறை பயன்படுத்தும்போது கண்ண கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கும். அவ்வளோதான்!
@ஸ்ரீ,
ReplyDeleteஉங்களுக்கு முன்னாடி பிரேம் வந்துட்டாரே :) ஆனா உங்களோடதுதான் கடைசி மறுமொழியா இருக்கும்னு நெனைக்கிறேன். ஒரு வலைப்பதிவு துவங்கினா இதெல்லாம் முயற்சி பண்ணுங்க ;)
//உங்களுக்கு முன்னாடி பிரேம் வந்துட்டாரே //
ReplyDelete:-( m thats ok....!!
//உங்களோடதுதான் கடைசி மறுமொழியா இருக்கும்னு நெனைக்கிறேன்//
y?!?
//ஒரு வலைப்பதிவு துவங்கினா இதெல்லாம் முயற்சி பண்ணுங்க//
sure...!!!
ஸ்ரீ,
ReplyDeleteஇந்த மாதிரி நுட்பம் சம்பந்தமா எழுதினா வாசிக்கிறவங்க குறைவுதான. அதான் அப்படி சொன்னேன்!
naane vaasikka matten......:)
ReplyDeleteaana neenga konjam interesting-a solrathunala padichen...:)
இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் மட்டும் தான். ஆணி புடுங்கிட்டு வரேன். எப்படியா இவ்ளோ பெச்சா அடிக்கிற? படிக்கவே மூச்சு வாங்குது :)
ReplyDelete@ ஆங்கில ஸ்ரீ,
ReplyDeleteஇண்டரிஸ்டிங்கா சொல்றனா? எதுவும் நக்கல் இல்லையே? ;)
//ஆங்கில ஸ்ரீ,//
ReplyDelete:-)
nakkal illa unmai than....;-)
@தமிழ் ஸ்ரீ,
ReplyDeleteபதிவு பெருசா இருக்கா??? உள்ள சரக்கு இருக்கான்னும் பாக்கனும் மாப்ள :) (எழுத்துவாக்குல, நீ வேல பாக்கறதா ஒரு பொய்யும் சொல்லிட்ட?)
/nakkal illa unmai than.;-)/
ReplyDeleteநம்புகிறேன் :)
எச்சூஸ்மீ.... இங்கே என்ன நடக்குது?
ReplyDeleteஇங்க ஒரு உயர் தொழில்நுட்பம் குறித்த தீவிர விவாதம் நடந்துட்டு இருக்கு. வாங்க நீங்களும் கலந்துக்குங்க :)
ReplyDelete[...] மாறப்போறீங்களா? படிச்சுட்டு முன்னேற்பாடு செஞ்சுக்குங்க [...]
ReplyDeleteஎன்னுமொரு வேர்ட்பிரஸ் இரசிகர், வாங்க வாங்க.. கலக்கலாம்! ;)
ReplyDeleteவரவேற்புக்கு நன்றிங்க மயூரேசன்! :)
ReplyDelete