Tuesday, April 29, 2008

காதல் செ(ய்)வ்வாய்



அணிகலன் இல்லாத கோபத்தில்
என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
உன் இதழ்கள்.

*

கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.

*

"ஆயிரம் முத்தங்களுடன்,
_____"
என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
ஓர் இதழொப்பம் செய்.

*

கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
உன் முத்தச்சண்டையை விட
முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.

*
 
ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
"லூசு... குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்"

40 comments:

  1. //உன் முத்தச்சண்டையை விட
    முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.//

    அருமை..அருமை..தொடரட்டும் உமது முத்தச்சண்டை

    ReplyDelete
  2. கலக்குறீங்க பாஸ்!! காதல் சொட்டுது!!

    அதுலயும் கடைசி கவிதை முதல்ல புரியல.. புரிஞ்சப்பறம் ஆஹா!!!

    ReplyDelete
  3. தலைப்பும் கவிதைகளும் அழகு

    //அணிகலன் இல்லாத கோபத்தில்
    என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
    உன் இதழ்கள்.
    //

    வெகு அழகு

    //ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
    பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
    வெட்கத்துடன் சொல்கிறாய் -
    “லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்//

    ஆகா, என்னமா சிந்திக்கிறாங்கய்யா...

    ReplyDelete
  4. //ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
    பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
    வெட்கத்துடன் சொல்கிறாய் -
    “லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”//

    ஐ.. அந்தப் புள்ள ரொம்ப வெவரமா இருக்கும் போலருக்கே..

    ReplyDelete
  5. நந்தாApril 29, 2008 4:27 PM

    யோவ்வ்வ் இப்படி ஆளாளுக்கு கிளம்பிட்டா நாங்க எல்லாம் போனி பண்ண வேணாமா.... கடைசி கவிதை ஜூப்பரு................

    ReplyDelete
  6. @ஸ்ரீ,

    நன்றிங்க.

    @ராம்,

    நன்றி ராம். கவுஜ சண்டதான் தொடரும் :)

    ReplyDelete
  7. @வீரசுந்தர்,

    நன்றி சுந்தர். கடைசி கவிதை மொதல்ல எப்படி புரியும்? கடைசியிலதான் புரியும். ;)

    @பிரேம்,

    நன்றி தல. சிந்தனை செய் மனமே னு பாட்டெல்லாம் இருக்கே தெரியாதா?

    ReplyDelete
  8. @ஆழியூரான்,

    புள்ளைக எல்லாம் வெவரமாத்தாம்யா இருக்காங்க!

    @நந்தா,

    கி கி சமுதாயத்துக்கு ஏதோ நம்மாள முடிஞ்ச சேவை :) நன்றி.

    ReplyDelete
  9. :) நல்லாருக்கு ..வீர சுந்தருக்கு சொன்ன பதிலு சூப்பர்.

    ReplyDelete
  10. நன்றிங்க்கா.

    அந்த பதில் மொக்கதான் ;)

    ReplyDelete
  11. /அணிகலன் இல்லாத கோபத்தில்
    என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
    உன் இதழ்கள்./

    :))))))))

    ReplyDelete
  12. இதற்கு பெயர்தான் நட்சித்திர கவிதையோ... சூப்பர்

    ReplyDelete
  13. திகழ்மிளிர், அந்த சிரிப்புக்கு என்னங்க அர்த்தம்?

    அபூ, நட்சத்திர கவிதையா? புரியலயே. எதுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.

    ReplyDelete
  14. உங்களது கவிதைகளின் இடையே * வருதே.. அதான் சொன்னேன்.. ஆனால் அதற்கு வேரொரு அர்த்தம் உண்டு ‍‍ தமிழ் தளங்கள்
    என்ற விண்ணில்
    நட்சத்திரம் போல்
    மிண்ணுகிறது...
    உங்களது கவிதைகள்

    ReplyDelete
  15. அருள் கவிதைகள் அருமை!!!!!

    //அணிகலன் இல்லாத கோபத்தில்
    என் முத்தமெடுத்து அணிந்து கொள்கின்றன
    உன் இதழ்கள்.//

    சூப்பர்....

    //கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
    உன் முத்தச்சண்டையை விட
    முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.//

    *

    //ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
    பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
    வெட்கத்துடன் சொல்கிறாய் -
    “லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”//

    அருமையிலும் அருமை........

    ReplyDelete
  16. ஆகா.. அபூ ரொம்ப கூச்சமா இருக்கே!

    ReplyDelete
  17. ரொம்ப நன்றிங்க எழில்

    ReplyDelete
  18. //கடைசி கவிதை மொதல்ல எப்படி புரியும்//

    நான் கீழ இருந்து மேல வாசிச்சேன்!!

    (எப்படி!!!! :-) )

    ReplyDelete
  19. கீழ இருந்து மேல வாசிச்சா மேல இருக்கிற கவிதைதான கடைசி கவிதை? ;)

    ReplyDelete
  20. ஹீரோ டயலாக் சூப்பர்.

    (அட கவித நல்லா இருக்குன்னு அர்த்தம்பா)

    ReplyDelete
  21. நன்றிங்க சிவா.
    புதிய அர்த்தங்களை புரிய வைத்தமைக்கு! ;)

    ReplyDelete
  22. //கண்ணில் முத்தமிட வந்தேன்.
    இமை ம(ப)றித்துக்கொண்டது.//


    Kavithai Superrrrrrrruuuuuuuuuuuuuuuuu...


    Senthil,
    Bangalore

    ReplyDelete
  23. நன்றிங்க செந்தில்!

    ReplyDelete
  24. Superb Arul..

    Pattya Kelapunga...



    Ravi

    ReplyDelete
  25. கடைசி கவிதை நல்லாயிருக்குய்யா...... ;)

    ReplyDelete
  26. நன்றிங்க ரவி.

    இராம், நன்றிப்பா! அது ஏன்யா கடைசி கவிதையே எல்லாருக்கும் பிடிக்குது? ;)

    ReplyDelete
  27. chumma sollakoodadhu romba simple and uber.

    ReplyDelete
  28. //ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
    பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
    வெட்கத்துடன் சொல்கிறாய் -
    “லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”//

    superrrbb lines! i really enjoyed reading these lines. good one.

    ReplyDelete
  29. கருணாகரன், தமிழ்,
    இருவருக்கும் நன்றிகள்!!

    ReplyDelete
  30. superb...........................

    ReplyDelete
  31. That last one is superbbbbbbbbbbbbbbb.

    ReplyDelete
  32. amazing lines...especially the last four lines....gr8 arutperungo...

    ReplyDelete
  33. Rasikka... meendum pakkida... vaikkum vasana kavidhai.... eadhu ungalluku evvalavu neram... ippadi ellam kavidhai ezhudhuvadarku?!!!

    ReplyDelete
  34. "meendum padikka" endru vasikavum... thattachu pizhai... mannikka vendum kavi....

    ReplyDelete
  35. aaakaa.... arumaijilum arumai... amaisare... intha kavithai alitha kavi perasuku ean naaddil paatiyai ealuti tarukiren.. atatkaana eatpaadukalai ipoluthe seiyunkal amaisare...
    aakadum manna...

    ReplyDelete
  36. கேட்டதும் கிடைக்கும் முத்தம் யாருக்கு வேண்டும்?
    உன் முத்தச்சண்டையை விட
    முத்தத்துக்கான சண்டையே என் விருப்பம்.

    suppve nice ,,,

    ReplyDelete
  37. “ஆயிரம் முத்தங்களுடன்,
    _____”
    என்று கையொப்பமிட்ட கடிதங்கள் போதும்.
    ஓர் இதழொப்பம் செய்.


    ஒரு கவிதைக்கு ஒரு முத்தமென்றாய்.
    பேராசையில் நூறு கவிதைகள் நீட்டினேன்.
    வெட்கத்துடன் சொல்கிறாய் -
    “லூசு… குட்டி குட்டியா நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்”


    இந்த 2‍‍ம் அடிச்சுக்க ஆளே இல்ல.. அருள்

    ReplyDelete