Saturday, April 19, 2008

கவிதை காதல் – வேர்ட்பிரசில் முதல் பதிவு!

‘எனக்கு உன்னைப்போல


கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.


எனக்கும்தான் உன்னைப்போல


கவிதை பேசத் தெரியாது!


 


*


 


கல்லூரியில் கூட


யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.


காதலில் மட்டும்


உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.


 


*


 


கவிதையெழுதுவதில்


என் விரல்களை வென்றுவிடுகின்றன


உன் இதழ்கள்!


 


*


 


நீ கையொப்பமிட்டு தரும்


எந்தப் புத்தகமும்


கவிதைப் புத்தகம்தான்!


 


*


 


இப்படி வாசிக்க…


ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.


நேசிக்க…நீ மட்டும்தான்!


 


*


ஒருவழியா வேர்ட்பிரசுக்கு மாறி ஒரு கவுஜைப் பதிவும் எழுதியாச்சு. ப்ளாக்கர் – வேர்ட்பிரஸ் மாற்றம் நடந்தபோதும், வேர்ட்பிரஸ் நீட்சிகளைப் பயன்படுத்தத் துவங்கியபோதும் சிரமமிருந்தாலும் எப்படியோ சமாளிச்சாச்சு! வேர்ட்பிரசுக்கு மாறினது குறித்த விரிவான பதிவு ஓரிரு நாளில் பதிக்கிறேன். புது வீடு எப்படியிருக்குனு சொல்லிட்டுப்போங்க :)

26 comments:

  1. சூப்பரா இருக்கு மாப்பி தளம் இப்போ. வாழ்த்துக்கள். கலக்கு :)

    ReplyDelete
  2. ம்ம்ம் நன்றி ஸ்ரீ! இன்னும் நல்லா பண்ணலாம். அதுக்கு வேர்ட்பிரஸ்கூட இன்னும் கொஞ்சம் சண்டை போடனும் :)

    ReplyDelete
  3. //‘எனக்கு உன்னைப்போல

    கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.

    எனக்கும்தான் உன்னைப்போல

    கவிதை பேசத் தெரியாது!//

    ஆரம்பமே அசத்தல்.........!!!!!!!

    அருமையான கவிதைகள்.....!!!

    ReplyDelete
  4. //கவிதை காதல் – வேர்ட்பிரசில் முதல் பதிவு!//

    சொன்ன மாதிரியே செஞ்சிட்டீங்க.........:-)

    ReplyDelete
  5. புதிய தளமும் கவிதைகளும் அருமை அருட்பெருங்கோ !! :)
    பிலாகரிலிருந்து வோர்ட்பிரஸ்கு மாற வழிமுறைகளை எங்களுக்கும் சொல்லித்தரலாமே ? :)

    ReplyDelete
  6. வழக்கம் போல அருமையான கவிதைகள் அருள்...
    வாழ்த்துகள் புதிய தளத்திற்க்கு.....


    Senthil,
    Bangalore

    ReplyDelete
  7. @ஸ்ரீ,

    நன்றிங்க! சொன்ன மாதிரி செஞ்சுட்டனா? செய்ற மாதிரி முன்னாடியே சொல்லிட்டேன் ;)

    ReplyDelete
  8. @தனசேகர்,

    நன்றிங்க தனசேகர்.
    கண்டிப்பா எழுதறேன். ஆனா நான் எழுதறது மொக்க கலந்துதான் இருக்கும் :)
    ரவி எழதியிருக்கிற வேர்ட்பிரெஸ் நிறுவுவது, இற்றைப்படுத்துவது எப்படி? ங்கற பதிவ படிச்சுப்பாருங்க!

    ReplyDelete
  9. @செந்தில்,

    நன்றிங்க செந்தில்!

    ReplyDelete
  10. Really fantastic.... My hearty Congrats....

    ReplyDelete
  11. //சொன்ன மாதிரி செஞ்சுட்டனா? செய்ற மாதிரி முன்னாடியே சொல்லிட்டேன்.//
    ம்ம்மம்......அடுத்த பதிவு எப்போ???:-)

    ReplyDelete
  12. @selna,
    really fantastic னு எத சொல்றீங்க? கவிதையவா? தளத்தையா? எதுவா இருந்தாலும் நன்றிங்க!!!

    @Sri,

    இது எதோ போட்டு வாங்கற மாதிரி இருக்கே :) அடுத்த பதிவு கவிதை கிடையாது. வேர்ட்பிரசுக்கு மாறினத பத்தி சாயுங்காலமா எழுதனும்!

    ReplyDelete
  13. yennathu poottu vangarena...!??!
    achachoo enakku athellam theriyathu....:-(

    ReplyDelete
  14. ஆகா, எதுக்கு சீரியசாகறீங்க? கூல்!

    ReplyDelete
  15. வீடு அழகா இருக்கு கோ. ஏகப்பட்ட அறைகள் இருக்குதே. சுத்திப் பாக்கவே நாள் ஆகும் போல!

    //இப்படி வாசிக்க…
    ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.
    நேசிக்க…நீ மட்டும்தான்!
    //

    அருமை... :) (ஆனா 'இப்படி' தேவையா?)

    //நீ கையொப்பமிட்டு தரும்
    எந்தப் புத்தகமும்
    கவிதைப் புத்தகம்தான்!
    //
    ஆகா கவித, கவித (சரி, காசோலை புத்தகம் கொடுத்தா?)

    ReplyDelete
  16. /வீடு அழகா இருக்கு கோ. ஏகப்பட்ட அறைகள் இருக்குதே. சுத்திப் பாக்கவே நாள் ஆகும் போல!/

    நன்றி தல! இதுல இன்னொரு வசதியும் இருக்கு. அறைகள என்னோட விருப்பப்படி வரிசை கட்டியிருக்கேன். அத உங்க விருப்பப்படியும் மாத்திக்கலாம். ஒரு அறையோட தலைய பிடிச்சி இழுத்து இன்னொரு அறைக்கு கீழ விட்டுப்பாருங்க ;)

    ஒரு அறையவே உங்களுக்கு பிடிக்கலன்னா அந்த பச்ச நிற பொத்தான அமுக்குங்க!

    /அருமை (ஆனா ‘இப்படி’ தேவையா?)/
    சரி தூக்கிடலாம்.

    /ஆகா கவித, கவித (சரி, காசோலை புத்தகம் கொடுத்தா?)/

    கி கி காச விட அந்த கையொப்பத்துக்கு மதிப்பு அதிகமில்லையா? :) :)

    ReplyDelete
  17. epavum pola.... nanbare...
    pinnitinga....
    vaazhuthukkal.....
    valarga inum....

    anbudan
    Maragathavalli

    ReplyDelete
  18. /epavum pola. nanbare
    pinnitinga
    vaazhuthukkal..
    valarga inum. /

    வாழ்த்துக்கு நன்றிங்க மரகதவல்லி!

    ReplyDelete
  19. அருமை
    உங்களது கவிதை மட்டும் இல்லை
    தள வடிவமைப்புத்தான்.....

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  20. @அபூபக்கர்,

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க அபூ. தள வடிவமைப்புக்கு நான் தனியா எதுவும் பண்ணலையே! எல்லாமே இணையத்துல இலவசமா கிடைக்கிறதுதான்!

    ReplyDelete
  21. all kavathi are super ......................

    ReplyDelete