Tuesday, April 08, 2008

மழ வருது மழ வருது நெல்லு வாருங்க

மழ வருது மழ வருது நெல்லு வாருங்க
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க
ஏரு ஓட்ற மாமனுக்கு எண்ணி வையுங்க
சும்மா இருக்கிற மாமனுக்கு சூடு வையுங்க

போன மாதம் முத்துலெட்சுமியக்காவோட பதிவ படிச்சதும் நினைவுக்கு வந்தது இந்த பாட்டுதான். இது பள்ளிக்கூடத்துல படிச்ச மாதிரி நினைவில்ல. மழை வரும்போது வீட்ல அம்மா சொல்லிக்கொடுத்ததுன்னு நினைக்கிறேன். பள்ளிக்கூடத்துல படிச்சதுனு எடுத்துகிட்டா இந்த பாட்டெல்லாந்தான் நினைவுக்கு வருது :

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப்போல நல்லார்
ஊரில் யார் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே நமக்கு வழியாம்

o0o

நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமீது ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவீட்டில் வை
நல்லதுதி செய்

o0o

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் என்னிடம்
பாதிப் பழம் உன்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

o0o

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
போகாத இடந்தனில் போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
சேராத இடந்தனில் சேர வேண்டாம்
செய் நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
….அதுக்கப்பறம் மறந்து போச்சு 

மறக்காம இருக்கிற இன்னும் சில பாட்டுகள் :

கொல கொலயா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா
கொள்ளயடிச்சவன் எங்க இருக்கான்?
கூட்டத்துல இருக்கான் கண்டுபுடி.

o0o

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபுடி ரே ரே
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா

o0o

டிக் டிக்
யார் அது?
திருடன்
என்ன வேண்டும்?
நகை வேண்டும்.
என்ன நகை?
கலர் நகை.
என்ன கலர்?
பச்ச கலர்.
…அப்பறம் எல்லாரும் பச்சக்கலர தேடி ஓடனும்!

o0o

for ( int i = 1 ; i <= no. of players ; i++)
{
Player.sing( i +“ குடம் தண்ணி ஊத்தி” + i + “பூ பூத்துது”);
}

கி கி கி இதுவும் சின்ன வயசில பாடினதுதான் ;)

நானும் மூனு பேரக்கூப்பிடனும்ல?
அண்மையில் அரைசதமடித்த
1. ஸ்ரீ மற்றும்
2. மெய் புங்காடன்
கண்ணாடி மழையில் நனைய வைக்கும்
3. எழில் பாரதி

13 comments:

  1. போட்டாச்சா நன்றி நன்றி .. உங்க பிசி ஷெட்யூலிலும் பதிவை போட்டதுக்கு நன்றி.. நான் கூப்பிட்ட மத்தவங்களூம் டைம் கேட்டு இருக்காங்க.. :)

    ReplyDelete
  2. நிறைய பாடல்கள் சிறு வயது விளையாட்டுக்களுடன் தொடர்புடையவை.. ஹூம்,,, அது ஒரு கனாக்காலம்!!

    @For Loop

    எப்டிங்க, இப்டில்லாம் யோசிக்க முடியுது!!! :-)

    ReplyDelete
  3. மறுபடியும் என்னை பள்ளிப்பருவத்திற்கு அழைத்துச்சென்றது.........;-)

    ReplyDelete
  4. / போட்டாச்சா நன்றி நன்றி .. உங்க பிசி ஷெட்யூலிலும் பதிவை போட்டதுக்கு நன்றி.. நான் கூப்பிட்ட மத்தவங்களூம் டைம் கேட்டு இருக்காங்க.. :)/

    அக்கா,
    பிசி செட்யூலா? அதெல்லாம் ஒன்னுமில்ல! அலுவலகத்துல ப்ளாக்கருக்கு தடை! அதான் காரணம்!

    ReplyDelete
  5. /நிறைய பாடல்கள் சிறு வயது விளையாட்டுக்களுடன் தொடர்புடையவை.. ஹூம்,,, அது ஒரு கனாக்காலம்!!/

    வாங்க வீரா ஒருதடவை போயிட்டு வரலாம் ;)

    /@For Loop

    எப்டிங்க, இப்டில்லாம் யோசிக்க முடியுது!!! :-) /

    அப்பறம் நானும் பொட்டி தட்டறவன்னு எப்படி நிரூபிக்கிறது?

    ReplyDelete
  6. /மறுபடியும் என்னை பள்ளிப்பருவத்திற்கு அழைத்துச்சென்றது.........;-)/

    ஆகா! நீங்களுமா ஸ்ரீ?

    ReplyDelete
  7. சென்னை மாநகரை விட்டு சிறிது நேரம் குழந்தையாகி ஊருக்கு சென்று திரும்பினேன்

    ReplyDelete
  8. :))

    நீ படிப்பாளின்னு நிருபிச்சிட்ட ராசா ;))

    ReplyDelete
  9. //ஆகா! நீங்களுமா ஸ்ரீ?//

    yes naanum intha mathiri games ellam cross pannithan vanthirukken....but ippo irukkara kidskellam antha mathiri life kidaikkala.......(en grandma kuda enga kuda vilaiyaduvanga...):-)
    veera sonnamathiri "Athu oru Kana kaalam" than....

    ReplyDelete
  10. //வாங்க வீரா ஒருதடவை போயிட்டு வரலாம் ;)//

    தாராளமா, போக முடிஞ்சா!! :-)

    ReplyDelete
  11. /சென்னை மாநகரை விட்டு சிறிது நேரம் குழந்தையாகி ஊருக்கு சென்று திரும்பினேன்/

    ம்ம்ம்ம்ம்… அப்பப்போ இப்படி போயிட்டு வரலன்னா பைத்தியம் பிடிச்சுடும் :)

    ReplyDelete
  12. /:))

    நீ படிப்பாளின்னு நிருபிச்சிட்ட ராசா ;))/

    ;-))) நன்றி குருவே!

    ReplyDelete
  13. /yes naanum intha mathiri games ellam cross pannithan vanthirukken....but ippo irukkara kidskellam antha mathiri life kidaikkala.......(en grandma kuda enga kuda vilaiyaduvanga...):-)
    veera sonnamathiri "Athu oru Kana kaalam" than..../

    ஆகா… பீல் பண்ணி கொசுவத்தி சுத்த வைக்கிறீங்களே!!!

    ReplyDelete