Sunday, April 27, 2008

ரெண்டு வார்த்த

"என்னைப் பத்தி ரெண்டே வார்த்தையில் சொல்லத் தெரியுமா?"

"எத்தன வேணும்? சொல்..."

"தெரிஞ்ச வரைக்கும் சொல்லுப் போதும்... எனக்குப் பிடிச்சது கிடைக்குதான்னுப் பார்க்கறேன்"

நடக்கும் பூங்கா
ஒளிரும் இசை
கைவீசும் கவிதை
ஓய்வில்லா ஓவியம்
தென்றலின் தேகம்

இதயமுள்ள இரக்கம்
பகல் நிலா
கலவரக் கண்வீச்சு
புன்னகைப் பூங்கொத்து
அன்பின் தாய்

நிலவின் நிலவு
பூக்களின் பொறாமை
இரவின் வெளிச்சம்
சிணுங்கும் சிற்பம்
பேசும் மௌனம்

மழையின் மழலை
இசையின் குரல்
காதலின் காதலி
ஐந்தடி ஹைக்கூ
நடக்கும் நதி

அழகின் அகராதி
கொஞ்சும் கோபம்
கவிதைக் கருவூலம்

"இதுல எது உனக்குப் பிடிச்சிருக்கு?"

"ம்ஹும் ஒன்னும் இல்ல"

"ஒன்னுமே இல்லையா?"

"எனக்கு ரொம்பப் பிடிச்சது ஒன்னே ஒன்னு இருக்கு. ஆனா நீ அத சொல்லல"

"அப்படியா? அப்போ உனக்குப் பிடிச்சத நீயே சொல்லு..."

"உன் காதலி!"

25 comments:

  1. துர்காMarch 06, 2007 11:16 AM

    :) மொத்ததுல நாங்க என்ன எதிர்பார்க்கின்றோமோ அதை யாரும் சொல்ல மாட்டாங்க போல் இருக்கே.நல்ல சிந்தனை!

    ReplyDelete
  2. சேவியர்March 06, 2007 11:19 AM

    சிணுக்கும் சிற்பம் ! பலே.. பலே..

    ReplyDelete
  3. அருட்பெருங்கோMarch 06, 2007 11:42 AM

    வாங்க துர்கா,
    /:) மொத்ததுல நாங்க என்ன எதிர்பார்க்கின்றோமோ அதை யாரும் சொல்ல மாட்டாங்க போல் இருக்கே.நல்ல சிந்தனை! /

    “அப்படியா? அப்போ உனக்குப் பிடிச்சத நீயே சொல்லு…

    இதுக்காக தான் அவங்க எதிர்பார்க்கிறத மட்டும் சொல்லாம விட்றது!!! :-)))

    ReplyDelete
  4. அருட்பெருங்கோMarch 06, 2007 11:53 AM

    /சிணுக்கும் சிற்பம் ! பலே.. பலே../

    பாராட்டுக்கு நன்றி சேவியர்!!!

    ReplyDelete
  5. யாழினி அத்தன்March 06, 2007 1:43 PM

    நீங்க சினிமாவுக்கு கவிதை எழுதப் போன
    ரொம்ப successful-ஆ இருப்பீங்க.

    உங்க வார்த்தையில் சொன்னா

    வைரமுத்துக்கே வைரமாக
    வாலிக்கே ஜாலியாக

    All the best.

    ReplyDelete
  6. காதல் மாசம் முடிஞ்சாலும் காதல் வாசம் முடியாம ஓடுறது உங்க பதிவில்தான் :)))

    ReplyDelete
  7. கோபிநாத்March 07, 2007 1:31 AM

    அன்பு அருள்..

    அருமை அருமை...
    (நானும் யோசிச்சி பார்த்தேன்...ம்ஹும்..)

    ReplyDelete
  8. நவீன் ப்ரகாஷ்March 07, 2007 4:25 AM

    காதலின் காதலரே காதலி காதலிப்பது இதனைத்தானா??;)))))))

    ReplyDelete
  9. அருட்பெருங்கோMarch 07, 2007 5:00 AM

    //நீங்க சினிமாவுக்கு கவிதை எழுதப் போன
    ரொம்ப successful-ஆ இருப்பீங்க. //
    :-) இது வாழ்த்துதான? ;-)

    //உங்க வார்த்தையில் சொன்னா

    வைரமுத்துக்கே வைரமாக
    வாலிக்கே ஜாலியாக

    All the best.//

    அவங்க காதுல விழுந்துடப் போகுது சிரிச்சுடப் போறாங்க :)
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் இரமேஷ்!!!

    ReplyDelete
  10. அருட்பெருங்கோMarch 07, 2007 5:28 AM

    /அன்பு அருள்..
    அருமை அருமை.../

    நன்றி நன்றி!!!

    /(நானும் யோசிச்சி பார்த்தேன்...ம்ஹும்..)/

    என்ன கோபி அந்த ரெண்டு வார்த்த என்னன்னா? ;-)

    ReplyDelete
  11. அருட்பெருங்கோMarch 07, 2007 5:30 AM

    வாங்க நவீன்,

    /காதலின் காதலரே காதலி காதலிப்பது இதனைத்தானா??;))))))) /

    யாருடையக் காதலி? காதலிப்பது எதனை? தெளிவாகக் கேளுங்கள் நவீன் ;-)))
    நான் காதலின் காதலர்னா உங்கள என்னனு சொல்ல? ;)

    ReplyDelete
  12. யாழினி அத்தன்March 07, 2007 1:48 PM

    //நீங்க சினிமாவுக்கு கவிதை எழுதப் போன
    ரொம்ப successful-ஆ இருப்பீங்க. //
    :-) இது வாழ்த்துதான? ;-)

    சினிமாவுக்கு கவிதை எழுதறது அவ்வளவு சுலபமில்ல நண்பரே. கற்பனை நிறைய இருக்கனும்..மெட்டுக்கு பாட்டு எழுதனும். உங்க கவிதையை படிச்சா இது ரெண்டும் இருக்குதுங்கற்து என் கணிப்பு.. அதனால நிச்சயமா வாழ்த்துதான்....Enjoy!

    ReplyDelete
  13. claps claps!

    ReplyDelete
  14. சத்தியமாச் சொல்றேன்....படிக்கத் தொடங்குனதுமே..."என் காதலி"ன்னு சொல்லாம என்னென்னவோ ஒளறிக்கிட்டிருக்கானேன்னு நெனச்சேன். அது சரியாயிருச்சு. ராகவா, ஒனக்கும் கிட்னி இருக்குதுப்பா! :-)

    ReplyDelete
  15. "நீயென் உயிர்"

    : சில்மிஷி :

    ReplyDelete
  16. superb.........!! :-)

    ReplyDelete
  17. தீக்ஷண்யா,

    நன்றி.

    ராகவன்,

    ஒங்களுக்கு காதல் கிட்னிங்க! ;)

    சில்மஷி,

    அதுவும் சரிதான்!

    moon,

    பவரா?

    ReplyDelete
  18. ///காதல் மாசம் முடிஞ்சாலும் காதல் வாசம் முடியாம ஓடுறது உங்க பதிவில்தான் :)))///


    Ithuthan Unmaiiiiiiiiii...

    Good Kavithai's....

    ReplyDelete
  19. நன்றிங்க செந்தில்!

    ReplyDelete
  20. :) நல்லாருக்கு .. இதயமுள்ள இரக்கம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.. இதயம் இருப்பவங்களுக்கு தானே இரக்கம் இருக்கும்.. சரியா ?

    ReplyDelete
  21. ம்ம்ம் அந்த 'இரக்க குணத்துக்கு' உயிர் கொடுத்து ஓர் இதயமும் கொடுத்தா அதுதான் தலைவி னு தலைவன் சொல்றான் :)

    ReplyDelete
  22. //காதலின் காதலி
    ஐந்தடி ஹைக்கூ
    நடக்கும் நதி//

    எனக்கு பிடித்த வரிகள்...
    நல்லாருக்கு.....

    ReplyDelete